இடுகைகள்

நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

🌷நம் முன்னோர்கள் ஆசியுடன் ஐப்பசி அமாவாசை... ஞாயிற்றுக்கிழமை தாமரை மணி மாலை அணியும் ஓரைகள்🌹🌹

படம்
  🌷நம் முன்னோர்கள் ஆசியுடன் ஐப்பசி அமாவாசை... ஞாயிற்றுக்கிழமை தாமரை மணி மாலை அணியும் ஓரைகள்🌹🌹 ஐப்பசி அமாவாசையும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை வருகிறது. மறக்காமல், முன்னோர் வழிபாட்டைச் செய்வோம். பித்ருக்கள் குளிர்ந்து ஆசீர்வதிப்பார்கள்.  வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் உள்ளன என்கிறது சாஸ்திரம். தமிழ் மாதப் பிறப்பு, அமாவாசை, மகாளய பட்ச காலம், கிரகண காலம் என்று மொத்தம் 96 தர்ப்பணங்களைச் செய்ய வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். மனித வாழ்க்கையில், ஒவ்வொருவருக்கும் குலதெய்வ வழிபாடும் பித்ரு வழிபாடும் மிக மிக அவசியம். நம்முடைய தலையாயக் கடமை. அமாவாசை முதலான நாட்கள், முன்னோர் ஆராதனைக்கு உரிய நாட்கள். பித்ருக்கள் ஆசீர்வாதம் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கின்ற தருணம். எனவே எதைச் செய்யாவிட்டாலும் முன்னோர் ஆராதனையை, வழிபாட்டை, வேண்டுதலைச் செய்யவேண்டும். இதனால், நம் குடும்பமும் நம் சந்ததியும் சீரும் சிறப்புமாக வளரும்; நிம்மதியும் சந்தோஷமுமாக இனிதே வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இந்தநாளில் முன்னோரின் படங்களை சுத்தப்படுத்தி, பூக்களால் அலங்கரிப்போம். முன்...