🌍🌍🌍நாளை போதாயன அமாவாசை சிறப்புகள்..🌍🌍🌍
🌍🌍🌍நாளை போதாயன அமாவாசை சிறப்புகள்..🌍🌍🌍 போதாயன சூத்திரம்: போதாயனர் என்று ஓர் மகரிஷி. விந்திய மலைக்கு தெற்கில் வாழ்ந்ததாக புராண இதிகாஸ நூல்களில் காணப்படுகிறது. இவரது வம்சத்தைச் சேர்த்தவர்களே போதாயன ஸூத்ரத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். "கோத்திரம் தெரியாவதர்களுக்கு காசியப கோத்திரம்; ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு போதாயன ஸூத்திரம்" போதாயன ஸூத்திரம் பற்றி காஞ்சி பெரியவர் மிக உயர்வாக கூறியிருக்கிறார். ஓம்.. போதாயன மகரிஷி: போதாயன சூத்ரம்' என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ஆபஸ்தம்பருக்கும் திதிகளை நிர்ணயம் செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆபஸ்தம்பர் குருவிடமிருந்து விலகி தனியாக சூத்ரம் இயற்றினார். இதுவே ஆபஸ்தம்ப சூத்ரம் எனப்பட்டது. இருவர் வழியிலும் வைதிகக் கிரியைகளைச் செய்யும் முறை இன்றளவும் உள்ளது போதாயன அமாவாசை: போதாயனரின் சீடரே ஆபஸ்தம்ப மகரிஷி என்றுகூட சொல்வதுண்டு. இந்த போதாயன ஸூத்ரத்தைச் சேர்ந்தவர்கள் அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளே போதாயன அமாவாசை என்று கூறப்படுகிறது. பொதுவாக மற்றவருக்கான அமாவ...