புதுச்சேரியில் காணப்படும் 46,சித்தர்களின் சமாதிகள் ஜீவசமாதிகள்🌹
🌹புதுச்சேரியில் காணப்படும்
46,சித்தர்களின் சமாதிகள்
ஜீவசமாதிகள்🌹
1.அரவிந்தர்
இவர் 15.8.1872-ல் கல்கத்தாவில் பிறந்தார். இவர் ஒரு தேவி உபாசகர். பிராணாயாமம் பயின்றவர். சிவ ஐக்கியமான தினம் 5.12.1950-ல். இவருடைய ஜீவ சமாதி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ளது.
2. அன்னை
இவர் பாரீஸ் நகரத்தில் 21.12.1878-ல் பிறந்தார். இளம் வயதிலேயே யோகம், கீதை, தியானம், பயின்றவர். இவர் பரிபூரண நிலை அடைந்தது 17.11.1973-ல். இவரது சமாதியும் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருக்கிறது.
அரவிந்தரின் சமாதியில் 3 அறைகள் உள்ளன. முதல் அறையில் அரவிந்தரின் புனித உடலும், 2வது அறையில் அன்னையின் புனித உடலும், 3வது அறையில் மணலும் உள்ளது.
3. மகான் படே சாயபு
புதுச்சேரி மாநிலத்திலிருந்த திருக்கானூரில் சில காலம் தங்கியிருந்தார் இவர்.
இவர் சமாதி அடைந்தது 12.2.1868 மாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று. பக்தர்களுக்கு விபூதி கொடுத்தே அவர்களது நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவர். இவரது சமாதி சன்னதியில் இந்து முறைப்படி விபூதியும், துளசி தீர்த்தமும் - இஸ்லாமியர் முறைப்படி மயில் இறகால் உச்சந்தலையில் வைத்து தடவும் வழக்கமும் இருந்து வருகிறது.
இவர் சமாதிக்குப் போக வேண்டுமானால், வில்லியனூர் - புதுச்சேரி சாலையில் இருந்து 18 கி.மீ.
தொலைவில் இருக்கும் கண்டமங்கலம் வந்து 2 கி.மீ. தூரம் ஆட்டோ மூலம் சின்னபாடி சமுத்திரம் வந்து சேரலாம்.
4.ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள்
இவர் கடலூர் அருகேயுள்ள வண்டிப்பாளையத்தில் பிறந்தார்.
இவரது சமாதி புதுச்சேரி முத்தியால் பேட்டையைஅடுத்த கருவடிக் குப்பத்தில் பாத்திமா மேல்நிலைப் பள்ளிஎதிரில் உள்ளது.
5. யாழ்ப்பாணம் கதிர்வேல் சுவாமிகள்
இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் இவர் என்பதால் பிறந்த ஊரை ஒட்டி இவருக்கு அடைமொழிப் பெயர் வழங்கப்படுகிறது. பாரதியாருக்கு குண்டலினி யோகத்தை அறிமுகப்படுத்தி வைத்தவர் இவர்.
6.ஏம்பலம் அப்பார் சுவாமிகள்
சைவத்தில் பற்று கொண்ட சித்தர்கள் ஏழு பேர்கள் ஈழத்தில் இருந்த சமயம் இறைவன் அருள் ஆணைப்படி சிதம்பரம் சென்று அம்பலத்தாடும் மடத்தை அடைந்து குருமூர்த்திகள் சன்னிதானம் சென்று வழிபட்டு வணங்கி நின்றனர். இந்த 7 சித்தர்களும் அப்பார் சுவாமிகளைப் போல் எல்லோருக்கும் தந்தை போல் அறிவுரை கூறி நல்வழி காட்டியதால் அப்பா என்று இவர்கள் அழைக்கப் பட்டு நாளடைவில் அது திரிந்து அப்பார் என்றும் வழங்கப் பட்டது.
அந்த ஏழு சித்தர்கள்: நல்லம்பல அப்பார், சிற்றம்பல அப்பார், பேரம்பல அப்பார், திருவம்பல அப்பார், பொன்னம்பல அப்பார், அம்பலத்தாடும் அப்பார், ஆடியபாத அப்பார்.
7.நல்லம்பல அப்பார்
நல்லம்பல அப்பார் ஸ்ரீசைலம் சென்று அங்கேயே சமாதியடைந்தார். இவர் சமாதி இருக்கும் இடம் அங்கே நல்லம்பல அப்பார் குகை என்று கூறப்படுகிறது.
சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகள்
ஓம்...
8.சிற்றம்பல அப்பார்
இரண்டாவது ஈழச் சித்தரான சிற்றம்பல அப்பார் புதுச்சேரியில் உள்ள திருப்புவனை என்ற இடத்திற்கு வந்து தொண்டு புரிந்து அங்கேயே சமாதியடைந்தார். அவருடைய சமாதி இன்றும் அப்பார் சந்நிதி என்று கூறப்படுகிறது.
9. பேரம்பல அப்பார்
மூன்றாமவரான பேரம்பல அப்பார் நாகப்பட்டினம் வந்தடைந்து, நாகைக் கடற்கரை ஓரத்தில் தமக்கென கட்டப்பட்ட மடம் ஒன்றில் சமாதி அடைந்தார். இவர் சமாதி இருக்குமிடம் பேரம்பல அப்பார் சன்னிதி என்று பலரால் போற்றப்பட்டு வருகிறது.
10. திருவம்பல அப்பார்
11.பொன்னம்பல அப்பார்
நான்காவது சித்தரான திருவம்பல அப்பாரும் ஐந்தாவது சித்தரான பொன்னம்பல அப்பாரும் இணைபிரியாமல் இருந்து பல சித்திகளை பல இடங்களிலே புரிந்து பிறகு புதுவையில் உள்ள திருவகீந்திரபுர மடத்தில் சமாதியாகினர். அது அப்பர் சந்நிதி என்றும், உப்பு மடமென்று அழைக்கப்படுகிறது.
12.அம்பலத்தாடும் அப்பார்
13. ஆடியபாத அப்பார்
இவர்களைப் போலவே ணைபிரியாது தொண்டு புரிந்து புதுச்சேரியில் உள்ள ஏம்பலம் (ஏக அம்பலம்) என்றும் கிராமத்திற்கு வந்தவர்கள் அம்பலத்தாடும் அப்பார் (6வது சித்தர்) மற்றும் ஆடியபாத அப்பார் (7வது சித்தர்) ஆவார்கள்.
இவர்கள் ஏழு பேருக்கும் குருவாக இருந்தவர் சிதம்பரத்திலே இருந்த ஆறாவது சித்தரான ஆடியபாத அப்பார் ஏம்பலம் மடத்தில் சமாதி அடைந்தார். இவரது சமாதி இங்கு உள்ளது. இறுதிச் சித்தராகிய அம்பலத்தாடும் அப்பார் ஏம்பலம் மடத்தில் சமாதியில் இருந்து சிவத்தோடு கலந்து ஒன்றிய அதே சமயம் சிதம்பரத்திலிருந்த குருவின்
ஒருவடிகளில் அம்பலத்தாடும் அப்பார் வணங்கி அவருடன் ஒன்றிய அதிசயத்தை அனைவரும் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கிப் போயினர்.
இன்றும் அம்பலத்தாடும் அப்பார் ஏம்பலத்தில் புரட்டாசி 15-ஆம் தேதி சமாதியான இடத்தில் விபூதி சிவ லிங்கமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுப் பூஜிக்கப்படுகிறது.
ஏம்பலம் அப்பார் சுவாமிகளின் சமாதிக் கோவிலில் இருந்து சிதம்பரத்திற்கு ஒரு சுரங்கப்பாதை செல்வதாகவும், அங்கிருந்து அவருடைய குரு, இவருடைய குரு பூசை தினத்தன்று (புரட்டாசி 15) இங்கு வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. காலப்போக்கில் இந்த மடம் இருந்த இடம் அழிந்து, சுரங்கப்பாதை மூடிக் கொண்டிருந்த இடம் தெரியாமல் இருப்பதால் இப்போது இங்கு இருப்பது விபூதி லிங்க பீடமான சிறு கோவில் மட்டுமே என்கின்றனர் விபரம் தெரிந்த சிலர்.
சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகள்
14. ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள்
இவர் சமாதியடையப் போகும் நாளை தமது சீடர்களுக்கு உரைத்து, தமது மூத்த சீடருக்கு தமது பட்டத்தை அளித்து பீடத்தில் அமர்த்தி மூன்றாம் நாள் யோகத்தில் அமர்ந்து தியான நிலையில் சமாதி கூடினார். இவரது சமாதி புதுச்சேரியில் உள்ள வேதபுரத்துக் கடற்கரையோரமுள்ள மடத்தில் காணப்படுகிறது. இந்த இடம் இருக்கும் தெருவிற்கு ஐயர் மடத்து தெரு என்று அரசு பெயர் சூட்டியுள்ளது.
நாகலிங்க சுவாமிகள் ஒரே நேரத்தில் சிதம்பரத்தில் உள்ள அம்பலத்து ஐயர் மடத்திலும், புதுச்சேரியில் உள்ள அம்பலத்தாடும் ஐயர் மடத்திலும் சமாதியடைந்ததாக கூறப்படுவதால் அந்த இரு இடங்களிலும் அவருக்கு ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது.
15.இராம பரதேசி சுவாமிகள்
இவருக்குப் பூர்வீகம் ஆந்திர மாநிலம் என்றும், ஞானத்தைத் தேடி புதுவைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஓம்..
புதுச்சேரியிலிருந்து வில்லியனூர் செல்லும் சாலையில் சுல்தான்பேட்டை திருப்பத்தில் வலப்புறம் காணப்படும் ஒரு சிறு மண்டபத்தில் இவரது சமாதி இருக்கிறது.
16.குருசாமி அம்மையார்
புதுச்சேரியில் நடமாடிய பெண் சித்தர்களுள் இவரும் ஒருவர். இவரது தோற்றம் - சமாதியடைந்த நிகழ்ச்சி... இவை குறித்து சரிவர எந்தத் தகவலையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. புதுச்சேரியிலுள்ள அரியூரில், பாண்டிச்சேரி . விழுப்புரம் சாலையில் வலப்புறம் காணப்படும் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்றும் ஆர்ச் அமைக்கப்பட்டு இருக்கும் கட்டடத்தில் இந்த அம்மையாரின் ஜீவசமாதி காணப் படுகிறது.
17. மண்ணுருட்டி சுவாமிகள்
இராமகிருஷ்ணர் என்னும் இயற்பெயரைத் தமிழ் நாட்டில் கொண்டிருந்த இவர் புதுச்சேரிக்கு வந்ததும் மண்ணுருட்டி சாமியார் என்று அழைக்கப்பட்டார். இவர் தனிமையில் தவத்தில் இருக்கும்போது மனத்தைக் கட்டுப் படுத்துவதற்காக ஒரு கையில் தன் கட்டை விரலை அல்லது மண்ணை வைத்தும் உருட்டிக் கொண்டிருந்ததால் இவருக்கு மண்ணுருட்டி சாமியார் என்று பெயர் வந்ததாகக் கூறுவர். இவர் 1965, ஜனவரி 16-ஆம் தேதி சமாதியடைந்தார். இவரது சமாதி புதுச்சேரி காட்டன் மில் எதிரில் உள்ள கோவிந்தசாமி முதலியார் தோட்டத்தில் காணப்படுகிறது.
18. சடைத் தாயாரம்மாள்
இவர் பாக்கமுடையான்பட்டு என்னுமிடத்தில் வாழ்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இவரது தலைமுடியில் சடை விழ, இதனால் இவர் சடைத் தாயார் என்று அழைக்கப் பட்டார் என்றும், பக்தர்களிடம் தாயைப் போல் அன்பாகப் பேசியதால் தாயாரம்மாள் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுவர். இவர் புதுச்சேரியை அடுத்த வளவனூரில் சமாதி ஆனதாகக் கூறப்படுகிறது. வேறு சிலர், புதுச்சேரியில் உள்ள பேட்டையான் சத்திரம் என்னும் இடத்தில் ஆசிரமம்
அமைத்து அங்கே சமாதி அடைந்ததாகவும், அவரது சமாதிக் கோயில் தற்போது சடையப்பர் கோவில் என்று அழைக்கப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகள்
19. தட்சிணாமூர்த்தி சுவாமிகள்
இவரது பூர்விகம் பற்றிய தகவல் எதுவுமில்லை. இவரது பெயர் தட்சிணாமூர்த்தி என்றும் அவர் சொல்லக் கேட்டது தானாம். இவர் சௌமிய வருடம் ஆனி மாதம் 26-ஆம் தேதி (7.7.1909) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சமாதி அடைந்ததாகக் கூறப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் நேர்வழிப் பாதையில் உள்ள பள்ளித் தென்னல் கிராமத்தில் ஐயனார் கோயிலுக்கு வடக்கே உள்ள குளக்கரையில் இவரது சமாதி உள்ளது.
20.ஸ்ரீ தொள்ளைக்காது சித்தர்
இவரது பூர்வீகம் மதுரை அல்லது திருநெல்வேலி மாவட்டம் என்று கூறப்படுகிறது. புதுச்சேரிக்கு வந்து நகரப் பகுதிக்கு அருகில் இருந்த மணற்குள விநாயகர் ஆலயத்திற்கு வந்து அமர்ந்தார். சித்துகள் கைகூடி வரப்பெற்றார். முத்துமாரியம்மன் கோவிலுக்குச் சென்று அம்மன் தரிசனம் பெற்றவர். இவருடைய சமாதி வர் வணங்கிய மணக்குளவிநாயகருக்குப் பின்புறத்தில் கோவில் கருவறைக்கு அருகில் காணப்படுகிறது.
21.கம்பளி ஞானதேசிக சுவாமிகள்
எப்போதும் கறுப்புப் போர்வையைப் போர்த்தி யிருந்ததால் இவருக்குக் கம்பளிச் சாமி, கம்பளிபூச்சி சாமி, கம்பளி ஞானதேசிக சுவாமிகள் என்ற பெயர்கள் ஏற்பட்டன. இவரது பூர்விகம் சென்னை. இவரது சமாதி புதுச்சேரிக்கு மேற்கே தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையின் வடக்கே உள்ளது.
22. அக்கா பரதேசி சுவாமிகள்
இவர் எல்லோரையும் அக்கா... அக்கா... என்று அழைப்பதைப் பார்த்து எல்லோரும் இவரை அக்க சாமியார் என்றும், அக்கா பரதேசி என்றும், அக்கா சித்தஎன்றும் அழைக்க ஆரம்பித்தனர். இவர் பிரமோதூத ஆண்டு, ஆனி மாதம் 1872 ஜூன் மாதம் ஜீவசமாதி அடைந்தார். இவரது சமாதி புதுச்சேரி முத்தியால்பேட்டை வாழைக்குளம் பகுதியில் உள்ள குதிரைக்குளம் அருகே உள்ளது. இவரது சமாதிக் கோயில் சித்தர் பீடம் என்று கூறப்படுகிறது. இந்த சமாதி உள்ள தெருவுக்கு அக்கா பரதேசி வீதி என்று பெயர்.
23. வாழைப்பழச் சுவாமிகள்
புதுச்சேரியில் உள்ள சாரம் என்னும் பகுதியில் (தற்போது சத்யா நகர் என்று கூறப்படுகின்ற இடத்தில்) சில வருடங்களுக்கு முன் இவர் அருள் வழங்கி நடமாடி வந்ததாகக் கூறப்படுகிறது. தினமும் காலையில் பசுவிற்கு வாழைப்பழம் அளித்து வந்ததால் இவருக்கு வாழைப்பழச் சாமியார் என்று பெய இவரது பூர்விகமும் தெரியவில்லை. இவர் சமாதி பற்றிய விபரமும் இல்லை. இவர் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை. இவர் இருந்த அந்தப் பகுதி இப்போது சக்தி நகர் என்று அழைக்கப்படுகிறது.
24. தேங்காய் சுவாமிகள்
இவரைப் பற்றிய பூர்விக வரலாறு எதுவும் தெரியவில்லை. புதுவை ஒழுகரை என்று கூறப்படுகின்ற உழவர் கரையில் ஓர் அன்பர் வீட்டுத் திண்ணையில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு, முழுத் தேங்காய் ஒன்றை வாங்கி வரச் செய்து அதை உடைத்து அதன் இரு மூடிகளையும் அருகில் வைத்துக் கொண்டு அதில் தெரியும் காட்சிகளைக் கொண்டு இறைவன் கட்டளைகளை அவர்களுக்குச் சொன்னதால் இவருக்குத் தேங்காய் சுவாமிகள் என்று பெயர்.
தேங்காய் மூடியால் பக்தர் குறை தீர்த்ததால் இவரை தேங்காய் சித்தர் என்றும், தேங்காய் சுவாமிகள் என்றும் அழைத்தனர். தேங்காயை சிவலிங்கமாகக் கருதி பூசை செய்து வந்ததால் இவருக்கு தேங்காய் சித்தர் என்று பெயர் வந்தது என்றும் கூறுவர். வில்லியனூர் தட்டாஞ்சாவடி தோப்பு ஒன்றில் வில்வமரத்தடியில் இவர் சமாதி இருக்கிறது.
ஓம்..
சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகள்
25. திருக்காஞ்சி சுவாமி
இந்தச் சித்தரின் பெயர் வியோமா முனிவர் என்கிற ஞானி. புதுச்சேரிக்கு மேற்கே 12 கி.மீ. தூரத்தில் உள்ள வில்லியனூர் கோவில் மாநகர் இருக்கும் இடத்தில் திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றுக்குச் செல்லும் மண் சாலையில் கணுவாப் பேட்டைக்கு அருகில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் இவரது சமாதி காணப்படுகிறது. இது பாழடைந்த நிலையில் மேற்கூரையின்றி காணப்படுகிறது. இவரது ஆசிரமம் இங்கு இருந்ததற்கான பெரிய கட்டடம் இருக்கிறதே தவிர (அதிலும் பல குடித்தனங்கள் காணப் படுகின்றன) இவருடைய வரலாறு பற்றிய விவரம் முழுமை யாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
26. கழுவெளிச் சித்தர்
புதுவைக்கு மேற்கே 10 கல் தொலைவில் உள்ள இடும்பை மாகாளம் என்னும் சிற்றூரில் இருக்கும் மாகாளீச்வரர் ஆலயத்திற்கு கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வந்து சேர்ந்தவர் இவர். அவ்வூரின் மன்னனது அவையோரின் கேலிப் பேச்சுக்கு ஆளான சித்தர் பெருமான் "கல்லும் பிளந்து கழுவெளியாகக் கடவது" என்று சிவலிங்கத்தைப் பார்த்து சாபமிட, மாகாளீச்வர லிங்கம் மூன்று துண்டு களாக வெடித்துச் சிதறியது. அனைவரும் தம் தவற்றை உணர்ந்து வருந்தி மன்னிப்புக் கேட்க, சாபத்தை மாற்றிக் கொள்ளாத சித்தர் இறைவனை நோக்கிப் பாட, உடைந்த துண்டுகள் மீண்டும் வந்து கூடின. இன்னும் அந்த ஆலயத்தில் சிவலிங்கத்தின் பாணம் உடைந்து கூடியிருப்பதையும், பாணம் செப்புப் பட்டையினால் சுற்றி இருப்பதையும் அங்கு சென்றால் நாம் காணலாம்.
முனிவரின் சாபத்தினால் இடும்பை மாகாளத்தைச் சுற்றியுள்ள ஐந்தாறு மைல்கள் விளைச்சலுக்குத் தகுதியற்ற நிலமாக மாறிவிட, பக்கத்திலுள்ள பகுதி கழுவெளி என்று பெயர் பெற்று விட்டது. இதனால் இவருக்கு கழுவெளி. சித்தர் என்ற பெயர் ஏற்பட்டு விட்டது.
ஓம்..
27. சிவஞான பால சித்தர்
10 வயது பாலகனாக இவர் காணப்பட்டதால் அனைவரும் இவரை பாலசித்தர் என்று அழைத்தனர். மக்களுக்கு சிவஞானத்தைப் போதித்து வந்ததால் சிவஞான பாலசித்தர் என்ற பெயர் வந்தது. அஷ்டமா சித்திகளிலும் வல்லவராயிருந்தார் இவர். மயிலம் முருகனையே குருவாகப் பெற்றவர். மயிலம் முருகன் சன்னிதானத்தின் தென் பகுதியில் இவரது சமாதி உள்ளது. இவர் மிதுனம் திருவாதிரை நட்சத்திரத்தில் சமாதியானார். 3000 ஆண்டுகள் வரை வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
28. சிவஞான பாலைய சுவாமி
சுமார் 500 அடி உயரத்தில் உள்ள பாழடைந்த கோட்டை மலை உச்சியில் உள்ளது பருமுக்கல் மலை. இங்கே உலவி வந்தவர் இந்த 10 வயது தோற்றமளித்த சித்தர். தம் வாழ்நாள் முழுவதும் பாலையே பருகியவர். திருநீறு மூலமாகவே சித்தாடல்கள் பல புரிந்தவர். இவர் 500 ஆண்டுகள் வாழ்ந்தவரென ஒரு கருத்து நிலவுகிறது. 18-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவர் சமாதி அடைந் திருக்கலாம் என்று கூறுவோரும் உண்டு. இவர் வைகாசி மாதம் விசாக நட்சத்திரம் பௌர்ணமி திதி அன்று சமாதி அடைந்தார். புதுவைக்கு வடக்கே 6 கல் தொலைவிலுள்ள சிவஞான பாலதேசிகர் மடத்திலுள்ள குகையில் இவரது சமாதி விபூதி லிங்கமாய் காட்சியளிக்கிறது. 29. சிவப்பிரகாச சுவாமி
32 வயதில் 32 தெய்விகத் தத்துவங்களை செந்தமிழில்
அளித்தவர் குமாரசாமி தேசிகர். காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர். இவருக்குப் பிறந்தவர்தான் இந்த சிவப்பிரகாச சித்தர் சுவாமி. தமது 32-ஆவது வயதில் புரட்டாசி மாதம் பௌர்ணமி திதியில் சமாதி கண்டார்.
30. சாந்தாநந்த சுவாமி
ஆனந்த வருஷம் மார்கழி மாதம் டிசம்பர் 1854-ல் மிருகசீரிஷ நட்சத்திரம் சுக்ல பக்ஷம் ஞாயிற்றுக்கிழமைஅன்று சென்னையில் அவதரித்தார். இவருடைய இயற் பெயர் ஸ்ரீநிவாசலு நாயுடு. இவர் சமாதி ஆனது பிலவ வருடம் ஆடி மாதம் 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, உத்திரட்டாதி நட்சத்திரம் ஜூலை 1901 அன்று. சென்னையில் சித்தியடைந்த இவரது சமாதி புதுவையில் இருக்கும் எல்லைப் பிள்ளைச் சாவடியில் ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் அமைந் துள்ளது.
சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகள்
31.கோவிந்த சுவாமிகள்
இறைவனை அன்பினாலேயே அடைய முடியும் என்பதை தம் அனுபவத்தில் அறிந்து அதனை அடுத்தவருக்கு அழகாய் அறிவுறுத்தியவர். இரமண மகரிஷியைப் போலவே தமது மரண அனுபவத்தை நேரிலேயே பெற்றவர் இவர். புதுவையிலே அவதரித்த ஞானி. பாரதியாரின் ஆத்மார்த்த குரு.1910-1918 ஆண்டுகளில் புதுவையில் இவர் நடமாடி யதாக வரலாறு. அதன் பின்னர் எங்கு சென்றார் என்பதைப் பற்றிய தகவலே இல்லை.
32.சுப்பிரமணிய அபிநவ சச்சிதானந்த பாரதி சுவாமி
1870-ல் கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர் இவர். இவருக்கு 16 வயது இருக்கும்போது ஸ்ரீ சிருங்கேரி சிவகங்கா மட பீடாதிபதி ஸ்ரீ அபிநவ கங்காதர பாரதி சுவாமிகள் 1886-ல் இவருக்கு சந்நியாசம் வழங்கினார்கள். அம்பாளை நேரில் காணும் பேறு பெற்றவர் இவர். இவர் ஸ்ரீவித்யா உபாசகர். இதுபோன்று கோடியில் ஒருவர்தான் இருக்க முடியும். தமது ஆத்ம சாதனைகளை எல்லாம் முடித்துக் கொண்டு கடைசியாக பெங்களூருவிலிருந்து புதுவைக்கு வந்தார் இந்த ஞானி.
சுவாமிகள் 1918-ல் அக்டோபர் 13-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு 10 மணிக்கு விதேக முக்தியடைந்தார்.
புதுவையில் கலவை சுப்புராயச் செட்டியாருக்குச் சொந்தமான இடத்தில் எல்லப்பிள்ளைச் சாவடி என்னும் இடத்தில் இவரது சமாதி உள்ளது.
ஓம்..
33. ஞானகுரு குள்ளச் சுவாமி
புதுச்சேரியிலே 15 ஆண்டுகள் நடமாடி வந்திருக்கும் ஞானகுரு இவர். இவர் ஞானதேசிகன், மாங்கொட்டைச் சாமி, மூட்டைதூக்கிச் சாமி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். முக்காலத்தையும், அனைத்தையும் காணும் அருள் பெற்றவர் இவர். மகாகவி சுப்பிரமணிய பாரதி இவரைத் தரிசனம் கண்டு இவரிடம் உபதேசமும் பெற்றுள்ளார். இவரது ஊர், பெயர் விபரம் எதுவும் இல்லை. புதுவையில் பரம்பொருளோடு கலந்து விட்டதாக தகவல் பெற முடிந்தது. 34. சட்டிச் சுவாமி
சுமார் 43 வருடங்களுக்கு முன்பு புதுவையில் உலவிக் கொண்டிருந்தவர். கையில் ஒரு பெரிய சட்டியை வைத்திருப்பதால் அதனை முன்னிட்டு இவருக்குச் சட்டிச் சுவாமி என்று பெயர். சட்டியைத் தலையிலே கவிழ்த்துக் கொண்டு திரிவார். பரம்பொருளோடு இவர் எப்போது கலந்தார் என்பது இன்று வரை எவருக்கும் தெரியாத செய்தி.
35. ஓம்ஸ்ரீ சித்தர் சுவாமிகள்
இந்தச் சித்தர் 1904 மே மாதம் 18-ஆம் தேதி குரோதன ஆண்டு வைகாசி 4-ஆம் தேதி அமாவாசை, கார்த்திகை கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று கும்பகோணத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் நாராயணசாமி. வெகு தொலைவில் நடப்பதையும், பிறர் மனத்தில் இருப்பதையும் தெளிவாக உணரும் திறன் பெற்றவர் இவர். கும்பகோணம் பாடகாச்சாரி இவரது நண்பராவார். 7 கோடி மந்திரங் களில் சித்தி பெற்றவர் இந்தச் சித்தர்.31.8.1964 அன்று காலை 7.28 மணிக்கு ஜீவசமாதி அடைந்தார் இந்த ஞானி. தற்போது இவரது சமாதி இருக்கும் இடத்திற்கு வேலாயுத ஈஸ்வரர் ஆலயம் என்ற பெயரில் வேலாயுதத் தோப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரவிந்தர் தெருவில் இவர் வேதாந்த சொற்பொழிவு நடத்திய இடம் இன்று ஒரு அரிய கல்விக் கூடமாகத் திகழ்ந்து வருகிறது.
ஓம்..
சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகள்
36. மௌலா சாகிப்
தமிழ்நாட்டில் ஆற்காடு என்னும் ஊரில் பிறந்தவர். இவரது சொந்தப் பெயர் தெரியவில்லை. ஒரு முஸ்லிம் பெரியவரால் கவரப்பட்டு அவருடன் மெக்கா சென்றவர் திரும்பி வரும்போது ஒரு முஸ்லிமாக மாறியிருந்தார் இந்த ஞானி. (மௌலா என்பது ஒரு உருதுச் சொல். இதற்கு பிற மதத்திலிருந்து முஸ்லிம் மதத்திற்கு வந்தவர் என்று அர்த்தம்) இவர் 17-ஆம் நூற்றாண்டில் சமாதி அடைந்தார். இவரது சமாதி புதுச்சேரியில் முல்லா வீதியில் உள்ள (பாலியே வீதி) மசூதிக்கு அருகில் உள்ளது. அதன்மீது ஒரு தர்காவும், பள்ளிவாசலும் அமைக்கப்பட்டன. இன்றும்கூட மௌலா சாகிப் இந்த சமாதி இருக்குமிடத்தில் தம் சூக்ஷ்ம உடலுடன் உலவி வருவதாகக் கேள்வி.
37. அப்பா பைத்திய சித்தர்
இவரது பூர்விகம் பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூர் என்கிற கிராமம். மிகப்பெரிய ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். பழனி அழுக்குச் சித்தரின் சீடர். அடிக்கடி பீடி பிடிக்கும் பழக்கம் இருந்ததால் இவருக்கு பீடி சாமியார் என்ற பெயரும் உண்டாயிற்று. 11.12.1999 வெள்ளி இரவு 9 மணிக்கு தமது 144-ஆவது வயதில் இவர் சமாதியடைந்ததாகக் கூறப் படுகிறது. புதுவை கருவடிக்குப்பம் பாரதி நகரில் இவரது சமாதி உள்ளது.
38. லட்சுமண சுவாமி
இவரது பூர்விகம் பற்றிய தகவல் ஏதும் சரிவர தெரிந்து கொள்ள முடியவில்லை. என்றாலும் புதுச்சேரிக்கு மேற்கே யுள்ள மீனாட்சி பேட்டையில் இருந்து பக்தர் குறை போக்கி வந்தவர் இவர். அம்மன் பக்தர். பின்னர் முத்தியால்பேட்டை இவரது இருப்பிடமாக மாறியது. முத்தியால்பேட்டையின் வடக்கே உள்ள காலாப்பட்டுவை அடுத்த புதுப்பட்டில் உள்ள ஐயனார் கோவிலில் இவரது ஜீவசமாதி உள்ளது.
ஓம்..
39. வேதானந்த சுவாமி
புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் ஆண்ட காலத்தில் ஆசிரமம் அமைத்து வேதாந்த பாடங்களைப் பக்தர்களுக்கு உபதேசித்த ஸ்ரீ அரவிந்தருக்குப் பிறகு அந்தத் தொண்டை செய்து வந்தார் இந்தச் சித்தர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் தாண்டவராயன். தமிழ்நாட்டில் திருமருகலில் 1872-ல் பிறந்தவர். வேதாந்த சொற்பொழிவுகளில் இவருக்கு இருந்த திறமையைக் கண்டு வியந்த மக்கள் இவரை வேதாந்த சாமியார், வேதானந்த சுவாமிகள் என்று அழைக்கத் தலைப்பட்டனர். 17.9.1962 அன்று பகல் 3 மணி அளவில் இவர் இறைவனுடன் கலந்தார். புதுச்சேரி முத்தியால்பேட்டையில் அம்பிகா தியேட்டர் எதிரே செல்லும் சாலையில் வசந்த் நகர் எதிரே முத்துக்குமாரசாமி முதலியார் தோட்டத்தில் இவரது சமாதி காணப்படுகிறது.
40. அழகப்ப சுவாமிகள்
புதுச்சேரி-விழுப்புரம் செல்லும் சாலையில் (அதாவது புதுச்சேரிக்குத் தென்மேற்கில் நல்லாத்தூருக்கும், தூக்கினாம் பாளையத்திற்கும் நடுவிலுள்ள ஏரிக்கரையில்) உள்ள தென்னம்பாக்கம் என்னும் சிற்றூரில் உள்ள ஐயனார் கோவில் ஆலமரத்தடியில் தங்கினார், வெளியூரிலிருந்து வந்த இந்த அழகப்ப சுவாமி சித்தர். இவரது பூர்விகம் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இவரது காலம் 1800-1840 ஆக இருக்கலாம் என்றும், இவர் சமாதி அடையும்போது இவருக்கு வயது 40 இருந்திருக்கும் என்றும் கருதப்படுகிறது.
இச் சித்தர் பெருமான் ஆலய கிணற்றில் தினமும் இறங்கி தியானம் செய்வது வழக்கம். இறுதியில் சுவாமிகள் இந்தக் கிணற்று நீரினுள்ளேயே இறங்கி சமாதியாகி விட்டார். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை முதல் திங்கட் கிழமை அன்று அந்தப் புனிதக் கிணற்றுக்கு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. தென்னம்பாக்கம் சென்றால் இவரது சமாதி கிணற்றைக் காணலாம். இவருடைய பிரதான சீடரின் சமாதி ஏம்பலம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் உள்ளது.
ஓம்..
சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகள்
41. ஸ்ரீ சுப்புராயப் பரதேசி
முருகப் பக்தர் இவர். புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் கிழக்குத் திசையில் காணப்படும் மயிலம் என்ற ஊரிலுள்ள முருகன் மலைக் குன்றிலிருந்து மக்கள் குறை போக்கி வந்தார். இதுதான் சங்ககால பழைய மயிலம் கோவில். இப்போது நாம் காணும் மயிலம் முருகன் கோவில் அல்ல. இவர் ஜீவசமாதி அடைந்தது பங்குனி உத்திரத்தன்று. தற்போது காணப்படும் புதிய மயிலம் முருகன் கோவில் மூலவர் இருக்குமிடம் சுப்புராய பரதேசி சித்தர் ஜீவசமாதி என்கின்றனர். முருகன் சந்நிதிக்கு வலப்புறத்தில் சிவஞான பாலைய சுவாமிகளின் சமாதி இருக்கிறது. சுப்புராய பரதேசி சித்தர் அமர்ந்து அருள் பாலித்து வந்த பழைய மயிலம் முருகன் கோயில் இன்று பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது.
42.சக்திவேல் பரமானந்த சுவாமி
இவரது பூர்விகம் கடலூர். பராசக்தியின் பக்தர். புதுச்சேரிக்கு வந்து முதலியார் பேட்டை காராமணிக் குப்பம் என்ற இடத்திலுள்ள தென்னந்தோப்பு ஒன்றில் அமர்ந்து தியானம் மேற்கொண்டார். தினமும் தேவியை அரூப நிலையில் தரிசித்தவர் இவர். ஆடி மாதம் 23ஆம் நாள் சமாதியானார் இவர். இவர் இருந்த தென்னந் தோப்பில் இவரது சமாதி குருபூஜை நடத்தப்பட்டு வருகிறது. இவரது காலம் வள்ளலார் வாழ்ந்த காலம் என்று கருதப்படுகிறது.
43.தேவராசு சுவாமிகள்
புதுச்சேரியில் 1935 முதல் 1948 வரை மக்கள் மத்தியில் நடமாடிய சித்தர் இவர். சித்தர்களின் தலைமை இடமான புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் உலவி மக்களுக்கு ஞானஅருள் பொழிந்தவர். வாழ்வின் பெரும்பகுதியைட் பெரும்பாலும் மௌனமாகவே கழித்த இவர் முத்தியா பேட்டை நாலுமூலை சுமைதாங்கி அருகே அதாவது மிளகாய்ப் பழச் சாமியார் கட்டிய முருகன் கோவி அருகே அமர்ந்திருப்பார். இவர் 22.6.1948 அன்று ஆனிமாதம் பூராட நட்சத்திரத்தன்று பிற்பகல் 3.30 மணிக்கு சமாதி அடைந்தார். மதுராந்தகம் தாலுகா சூணாம்பேடு கிராமத்துக்கு 2 மைல் தூரத்திலுள்ள வன்னியநல்லூர் கிராமத்தில் இவரது சமாதி உள்ளது. இந்த மகானுக்கு விளக்கேற்றி வழிபட்டால் மனத்துயர் விலகி மண் குடிசையில் இருப்போர் வீடுகளில் எல்லாம் பொன் விளையும் என்பது அந்தக் கிராமத்து மக்களின் நம்பிக்கை.
44. முருகனடிமை பச்சையம்மாள்
பச்சிலை மூலிகை வைத்தியத்தின் மூலம் மக்களின் குறை போக்கியவர் இந்த அம்மையார். 19.6.1927 அன்று பிறந்தவர். மிகச் சிறந்த முருகப் பக்தை. 1.11.1981 அன்று சமாதியானார். முத்தியால்பேட்டை கருவடிக்குப்பம் மயானத்தில் இவரது சமாதிக் கோயில் இருக்கிறது.
45. பவழக்கொடி சாமி
இவரது இயற்பெயர் யாருக்கும் தெரியாது. தமது சித்துகளுக்கும், மருத்துவத்திற்கும் பவழக்கொடி என்கிற மூலிகையை பயன்படுத்தியமையால் இவருக்கு பவழக் கொடி சித்தர் என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல் கிறார்கள். இவர் 150 வயது வரை வாழ்ந்ததாகக் கூறுவர். தை மாதம் விசாக நட்சத்திரத்தில் இவர் சமாதி அடைந்தார். புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் சோம்பட்டு ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு பாழடைந்த கட்டடத்தில்தான் இவரது சமாதி இருக்கிறது.
46.பெரியவர்களுக்குப் பெரியவர்
இத்தெய்விகத் திருஒளி மனித உருவத்தில் இக்கலி யுகத்தில் புதுவைக்கு அடுத்த தட்டாஞ்சாவடியிலே சஞ்சரித்து இருக்கிறது. இவர் 14.7.1967 ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதியில் சுமார் 10 மணி அளவில் சமாதியானார். இவரது திருமேனி ஞானதேசிக கம்பளி சுவாமிகளின் சமாதிக்குப் பின்புறம் காணப்படும் மயானத்தில் தகனம் செய்யப்பட்டிருக்கிறது.
வரும் வியாழக்கிழமை பார்ப்போம் நாடறிந்த சித்தர்களின் ஜீவ சமாதிகள்.
ஓம்..
வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் 🌏
ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ சமாதி, மந்திரங்கள், முத்திரைகள் 27 நட்சத்திரக் கோயில்கள் பற்றி நம் குரூப்பில் நீங்கள் அறிந்துகொள்ளலாம் ஒரு குரூப்பில் இணைந்தவர்கள் மறு குரூப்பில் இணைய வேண்டாம் நாம் குரூப்பில் ஒரே பதிப்புகள் தான் வரும்
நமது யூடியூப் சேனலில்.
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக