இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

🌹பெண்கள் தேவிக்கு பொங்கல் படைக்க வேண்டுமா?🌹🌹

படம்
 🌹பெண்கள் தேவிக்கு பொங்கல் படைக்க வேண்டுமா?🌹🌹 நம் கோயில்களில் வருடம் தோறும் கொண்டாட்டத்துடன் நடத்தும் ஓர் சடங்கு பொங்கல். கோயிலில் மட்டுமல்ல விசேஷ நாட்களில் வீட்டு முற்றத்திலும் பொங்கல்படைக்கின்றனர். கான்கிரீட் வீடுகளும் வளர்ந்து நாடு "சைபர்சிடி" யாக மாறிவரும் காலத்தில் இது குறைந்து வருகின்றது. பக்தி வெளிப்படுதலால் தேவீ நாமங்கள் சொல்லிக்கொண்டே பக்தர்கள் தேவதைகளுக்கு பொங்கல் படைக்கின்றனர். ஜகத் மாதாவான பராசக்தியை பூஜிக்கும் போது மாதாவுக்கு முன் அந்த சத்சொரூபத்தை இதன் வாயிலாக சமர்ப்பிக்கின்றனர்.இருளை அகற்றி ஒளிக்காக வேண்டுவதே இச்சடங்கின் முக்கிய விசுவாசம். மேலும் தங்கள் வெற்றி தோல்விகளையும், ஆசைகளையும், விவரித்து ஆறுதலடைவது இதனால் பெறும் பயன். திராவிட மக்களில், பய பக்தியுடன் விசுவாசத்துடனும் பெண்கள் பொங்கல் படைக்கும் போது, பானைகளில் கொதித்துப் பொங்கிமறிவது அகம் என்றே நம்பிக்கை. அகம் அழிந்து கடைசியில் அது நிவேத்யமாக மாறுகின்றது. கடும் வெப்பம், மூச்சுத்திணற வைக்கும் புகை, ஓசை நிறைந்த சூழ்நிலை முதலியவை பெண்களில் அன்றாட வாழ்க்கையின் சோதனை களையும் இக்கட்டான நிலைகளையும் சமா ளிக்கு...

❤️சிரிப்பு மருந்து❤️❤️❤️

படம்
 ❤️சிரிப்பு மருந்து❤️❤️❤️ தென்கச்சி கோ. சுவாமிநாதன் நான் ஒண்ணு சொல்றேன்!  அதை நீங்க செஞ்சிங்கன்னா உங்க உடம்புக்கு ரொம்பநல்லது.  நான் சொல்றதை நீங்க செஞ்சீங்கன்னா உங்க உடம்புலே என்னென்ன நடக்கும் தெரியுமா? இதை நான் சொல்றது இருக்கட்டும். டாக்டர்கள் சொல்றதை கேளுங்க.  சுவாசப்பையிலே பிராணவாயு அதிகமா நிரம்புது. உடம்புலே ரத்தம் வேகமாப் பரவுது. ஈரலையும் வயிற்றுத் தசைகளையும் தட்டி எழுப்புது, தேகப்பயிற்சி செய்யறப்போ உடம்பு தசையெல்லாம் அசைஞ்சு பலப்படுதுல்லே! அதே மாதிரி பலம் சேரும்!  'ரத்தத்துலே சக்தியைக் குடுக்கிற சர்க்கரைப் பொருளை பாய்ச்சுது! ஆகையினாலே இதைவிட சிறந்த 'டானிக்' வேறே எதுவும் இல்லே!  எது தெரியுமா? இப்ப நான் சொல்லிக்கிட்டு வந்த இவ்வளவும் உங்களுக்கு வேணும்னா நீங்க வேறே ஒண்ணும்செய்ய வேண்டாம்! வாய்விட்டுச் சிரிச்சா போதும். வாய்விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப் போகும். அப்படின்னு சொல்லுவாங்கள்லே! அது ரொம்பவும் உண்மைன்னு டாக்டர்களே சொல்றாங்க! ஆகையினாலே காசில்லாமே டானிக் வேணும்னா கலகலன்னு சிரிங்க. அது போதும்! "சிரிக்கறதுக்கு நாங்க தயார்...ஆனா சிரிப்புவரமாட்டேங்குதே. ...

🌹வெள்ளைப்படுதலுக்கு விடுதலை!🌹

படம்
 🌹வெள்ளைப்படுதலுக்கு விடுதலை!🌹 பெண்களின் பிறப்புறுப்பின் வழியே வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம். சில சமயம் அந்தப் பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும். சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்: கீழாநெல்லி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து 10 நாட்கள் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் உண்ணலாம். அம்மான்பச்சரிசி இலையை அரைத்துச் சுண்டைக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து பருகலாம். பொடுதலை இலையுடன், சம அளவு சீரகம் சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம். கைப்பிடி அளவு வெள்ளருகுடன் 5 மிளகு, ஒரு பல் பூண்டு சேர்த்து அரைத்து மோரில் கலந்து அருந்தலாம். இரண்டு செம்பருத்தி பூவுடன், சிறு துண்டு வெண்பூசணி சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, சர்ககரை சேர்த்து அருந்தினால் ரத்தத்தோடு கூடிய வெள்ளைப்படுதல் குணமாகும். ஜவ்வரிசியை வேகவைத்துப் பால் சேர்...
படம்
 🌹உலகை உலுக்கிய வாசகங்கள்🌹 . 🔥பகுத்தறிவின் இலக்கணம் சாக்ரட்டீஸ் எனக்கு எதுவும் தெரியாது என்பது தெரியும்.🔥 இந்த நூலும் எழுதாத ஒரு மனிதன், உலகில் இன்றும் பகுத்தறிவின் இலக்கணமாக உதார ணம் காட்டப்படுகிறார் என்பதும், எல்லாவற் றையும் கேள்விக்குட்படுத்திய முதல் மனிதர் அவரே என்பதும், நினைக்கையில் சிலிர்க்க வைப்பது. கிரேக்கத்தில் விழுந்த அந்த விதை மேற் கத்திய சிந்தனை மரபை விருட்சமாக விரி வாக்கியது. சாக்ரடீஸின் தந்தை பெயர் ஸோப்ரோ சாக்ரடீஸ் னிஸ்கஸ், தாய் பேனரைட். அவர் கட்டுமான வேலை சய்து வயிறு வளர்த்ததாகத் தகவல் உண்டு. அவர் ராணு வப் பணிகளிலும் ஈடுபட்டதாக பிளோட்டோ குறிப்பிடுகிறார். சாக்ரடீஸ், ஏதென்ஸ் நகரம் அரசியல் ரீதியாகச் சிக்கலைச் சந் தித்துக்கொண்டிருந்த நேரத்தில், அவர் மக்களாட்சி முறையைக் கேள்விக்குட்படுத்தினார். அவருடைய சித்தாந்தங்கள் அன்றிருந்த அரசியல் நெறியோடும், சமூக அமைப்போடும் நெற்றிக்கு நெற்றி மோதுவதாக இருந்தது. அவருடைய பேச்சுகள், தளர்வடைந்திருந்த ஏதென்ஸ் மக்களை உசுப்பி விடுவதாக இருந்தது. சாக்ரடீஸின் பாணி அலாதியானது. அவர் கேள்விகளை மட்டும் முன் வைப்பார். பதிலை சொல்ல மாட்டார். கிட...

🌍அருளுடைமையின் ஞானம் வருதல்🌏

படம்
 🌹திருமந்திரம்🌹 🌍அருளுடைமையின் ஞானம் வருதல்🌏 புண்ணிய பாவம் இரண்டுள பூமியில்  நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்  எண்ணி இரண்டையும் வேரறுத் தப்புறத்து  அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வீரே. விளக்க உரையுடன். திருவடியுணர்வு மறவர் நல்லோராகிய சிவஞானிகள் நிலவுலகில் தோன்றும்பொழுது புண்ணிய பாவமாகிய இருவினைகளையும் அறிவர்.  அத்தகைய நல்லோர் நற்றுணையால் பிறப்புக்கு வித்தா புண்ணிய பாவ மிரண்டனையும் வேரறுத்து,  முப்பத்தாறு மெய்யும் கடந்து அப்பாலுள்ள அருள்வெளியே செப்பமுற விளங்கும் அண்ண லாகிய சிவபெருமான் இடம்.  அதுவே நாம் அடையவேண்டிய நல்லிடம் என்று உணர்ந்துகொள்வீர்.  (அ.சீ.) இம் மந்திரம் புண்ணியத்தையும் பாவத்தையும் இரண்டையும் ஒழிக்கவேண்டு மென்றது.  அஃதாவது இரண்டிலும் பற்றற இருக்கும் நிலை. ஓம்.. வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம்  🌏 ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ சமாதி, மந்திரங்கள், முத்திரைகள் 27 நட்சத்திரக் கோயில்கள் பற்றி நம் குரூப்பில் நீங்கள் அறிந்துகொள...

🌏எதிரிகளை வெல்ல வேண்டுமா? மயிலாப்பூர் வாலீஸ்வார்

படம்
 🌏எதிரிகளை வெல்ல வேண்டுமா?  மயிலாப்பூர் வாலீஸ்வார்🌍 "வாலீஸ்வரர் கோயில் எங்கே இருக்கிறது?" "மயிலாப்பூர் கோலவிழியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில், ஆல் இந்தியா ரேடியோ அருகில் அமைந்துள்ளது." "தரிசன நேரம்?” "6-12, 5-9" "என்ன சிறப்பு?" "நீங்கள் ‘வாலிபன் ஆவீர்கள்! எதிரி பயம் நீங்கும்.” ஆ வுடையாரின் மேலே அமைந்த சிவலிங்கத்தைத்தான் நீங்கள் எல்லாக் கோயில்களிலும் தரிசனம் செய்திருப்பீர்கள். ஆனால் ஆவுடையாரின் மேல் பால விநாயகர் 'ஜிங்'கென்று அமர்ந்திருக்கும் அபூர்வக் காட்சியைக் காண வேண்டு மென்றால். அஷ்டலிங்கக் கோயில்களுள் ஒன்றான மயிலை பெரியநாயகி உடனுறை வாலீஸ்வரர் ஆலயத்திற்குத்தான் நீங்கள் செல்லவேண்டும். அது மட்டுமல்ல, இந்தக் கோயிலின் உள்ளேநுழைந்தவுடனேயே பஞ்ச லிங்கங்களின் அருட்காட்சி உங்களுக்குக் கிடைக்கும். அந்த ஐந்து லிங்கங்களையும் வணங்கி அண்ணாந்து பார்த்தால் கோபுரத்தில் 22 சித்தர்களின் தரிசனம் கிட்டும். மகிமைமிக்க சித்தர் ஒருவர் இந்த ஆலயத்தில் ஜீவசமாதி ஆகியிருக்கிறார் என்பதற்கான அடையாளம்தான் பஞ்சலிங்கக் காட்சி. ராமாயணம், மகாபாரதத்திற்கு விஞ்சி...

🌹தடைப்பட்ட புத்திர பாக்கியம் கிடைக்க ஸ்ரீ கிருஷ்ண பகவானே வந்து பிறக்க உன்னத மகா மந்திரம்🌹

படம்
 🌹தடைப்பட்ட புத்திர பாக்கியம் கிடைக்க ஸ்ரீ கிருஷ்ண பகவானே வந்து பிறக்க உன்னத மகா மந்திரம்🌹 "ஓம் தேவகீ ஸுத கோவிந்த  வாஸுதேவ ஜகத்பதே  தேஹீமே தனயம் க்ருஷ்ணத்  வாமஹம ஸரணம் கத:” இந்த புத்திரபாக்கிய மந்திரத்தை மலடிப் பெண்களாக இருந்தாலும் அதிகாலையில் நீராடி ஆலம் இலையினால் தொன்னை செய்து, தொன்னையில் தண்ணீரை நிரப்பி வாய்க்கு அருகில் வைத்துக் கொண்டு 108 முறை இந்த மந்திரத்தை ஜெபம் செய்து பின் அந்த நீரை அருந்தி வந்தால் 10 மாதங்களில் ஸ்ரீ கிருஷ்ண பகவானாய் - விக்ரகமாக குழந்தை பிறப்பான். இது உறுதியான மந்திரம். ஓம்.. புத்திர பாக்கியம் உண்டாக ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்.. புத்திர பாக்கியம் இல்லாமல் வருத்தப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரத்தை முறைப்படி கூறி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். சந்தான பிராப்தி இந்த மந்திரத்தின் குறிக்கோளாகும். புத்திர தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்து வைக்கலாம். உபதேசம் செய்து வைப்பவர் இந்த மந்திரத்தை பாராயணம் செய்திருக்க வேண்டும். தனுர் ராசி உபாசகர்களுக்கு மிக்க பலன் தரும் மந்திரம். முதலில் 18...

🙏தீராத நோயையும் தீர்த்து வைக்கும் திருமால் மந்திரங்கள்! 🙏

படம்
  🙏தீராத நோயையும் தீர்த்து வைக்கும் திருமால் மந்திரங்கள்! 🙏 🙏தீராத நோயையும் தீர்த்து வைக்கும் திருமால் மந்திரங்கள்! 🙏 🌍இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்..🌍🌏🌎 🌷சர்வம் சிவார்ப்பணம்... 🐉சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.. 💯ஓம்.. 🌹 இன்று! பிலவ வருடம், கார்த்திகை 15, புதன்கிழமை, 1.12.2021, தேய்பிறை, துவாதசி திதி இரவு 8:30 வரை, அதன்பின் திரயோதசி திதி, சித்திரை நட்சத்திரம் மாலை 4:12 வரை, அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்தயோகம். நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை. எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை சூலம் : வடக்கு பரிகாரம் : பால் சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி பொது : விஷ்ணு வழிபாடு, முகூர்த்த நாள் தீராத நோயையும் தீர்த்து வைக்கும் திருமால் மந்திரங்கள்!  மகாவிஷ்ணு காயத்ரியைச் சொல்லி வழிபட்டு வந்தால், பிரார்த்தித்து வந்தால், விரைவில் குணமாவார்கள். கணவன்மார்களின் ஆயுள் கூடும். தாலி பாக்கியம் நிலைக்கும் என்று சிலிர்ப்பு...

❤️காயகல்பப் பயிற்சி❤️

படம்
 ❤️காயகல்பப் பயிற்சி❤️ மனிதன் உண்கின்ற உணவு இயற்கையில் அமைந் துள்ள உடலியக்கச்சிறப்பால் ஏழு தாதுக்களாக மாறுகின்றது. உடலில் அமைந்துள்ள ஒரு சிறப்பான அமிலம் (Hydrochloric Acid), உணவோடு சேர்ந்து திரவமாக மாறி அதிலிருந்து இரசம் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த இரசத்தோடு சிலவகை இரசா யனத் துளிகள் சேர்ந்து இரத்தமாக்கப்படுகிறது. இரத்தத்தில் ஒரு பகுதி சதையாக்கப்படுகிறது. சதைகளிலிருந்து எண்ணெய் பிரிக்கப்பட்டுக் கொழுப்பாக மாறுகின்றது. கொழுப்பிலிருந்து சுண்ணாம்புச்சத்து பிரிக்கப்பட்டு எலும்பாக மாறுகிறது. எலும்பாகக் கெட்டிப்பட்ட பகுதிபோக மீதமுள்ள திரவம் மஜ்ஜை என்கின்ற எலும்புக்குள்ளாக அமைகின்ற மூளையாக மாறுகிறது. மஜ்ஜை எனும் தாது விலிருந்து சக்தி வாய்ந்த அணுக்கள் பிரிக்கப்பட்டு விந்து, நாதம் என்ற தாதுவாக மாறுகிறது. இந்தத்தாதுக்கள் முறையோடும், அளவோடும் அமைந்து இயங்கினால்தான் உடல் நலமாக இருக்கும். தொடர்ந்து வருகின்ற சந்ததிகளும் உடல்நலம், மனவளம் பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த ஏழு தாதுக்கள் உருவாகி, அளவுமுறையோடு இயங்குவது ஏதோ ஒரு காரணத்தினால் முறை பிறழ்ந்தால் உடல் நலம் குறைந்து, மூளையின் இயக்க ஆற்றல் சீர...