🌏🌍🌎கெட்டவர்கள்தவறு செய்யலாம்...🌏🌍🌎

🌏🌍🌎கெட்டவர்கள்தவறு செய்யலாம்...🌏🌍🌎 தேவதத்தன் என்ற பக்தன் தீவிரமாக நாராயண பூஜை செய்பவன். அவனிடம் பக்தி என்ற செல்வம் அளவுகடந்து இருந்தாலும் வாழ்வதற்குக் தேவையான செல்வம் இருக்கவில்லை. அதனால் அவனுடைய குடும்பம் வறுமையால் வாடிக்கொண்டிருந்தது தினந்தோறும் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி அர்ச்சனை அவன் செய்வது வழக்கம். அவள் மனைவிக்கு அவன் மீது ரொம்ப கோபம். அதனால், அவளும் தினமும் அவனிடம் தம் குறைகளை முறையிட்டு ஒரு சகஸ்ரநாம அர்ச்சனை செய்வது வழக்கம். தினமும் இதைக் கேட்டுவிட்டுக் கங்கை நதியில் நீராடப் போவான் தேவதத்தன். அங்கே நதியில் நீராடிய பிறகு விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லுவான். விஷ்ணுவின் பிம்பம் செய்து, வீட்டிலிருந்து கொண்டு வந்த சந்தனத்தை அதன் மீது தடவி பூஜை செய்வான். அன்று கோபம் தாங்கமாட்டாமல் தேவதத்தனின் மனைவி சுமித்ரா சந்தனத்தை எடுத்து ஒளித்து வைத்து விட்டாள். எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. அதனால் அடுப்பிலிருந்த கரியின் சாம்பலை மடியில் கட்டிக்கொண்டு தேவதத்தன் கங்கை நதிக்கரைக்கு வந்து சேர்ந்தான். கங்கையில் நீராடிவிட்டு, விஷ்ணுவின் சகஸ்ரநாமத் தைச் சொல்லியபடி பிம்பத்தைச் செய்து வைத்தா...