🌏🌍🌎உழைப்பே குறுக்கு வழி🌏🌍🌎
🌏🌍🌎உழைப்பே குறுக்கு வழி🌏🌍🌎
எந்தப் பிரச்சினையை அலசுவதாயிருந்தாலும் சரி, நாளை எந்த உயர் பதவிக்கு நாம் போவதாகத் திட்ட மிட்டாலும் சரி, நாம் நம்மை அதற்கேற்பத் தயார் செய்து கொள்ள வேண்டும்; நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமது தகுதிகளை உயர்த்திக்கொள்ள வேண்டும். இல்லா விட்டால் அவ்வுயர் பதவி எதிர்பாராத விதமாய்க் கிடைத்தாலும் நாம் அருகதை அற்றவர்களாய் போய், நமது அறிவும் அனுபவமும் பற்றாக்குறையாய் நின்று, நம்மைக் காட்டிக் கொடுத்துவிடும்.
பலரைப் படிக்காத மேதை என்று புகழ்கிறோம். அந்த மேதைகளும், உண்மையில் பள்ளிப் படிப்பு என்ற கட்டடத்தில் ஏறி இறங்கியிருக்க மாட்டார்களே ஒழிய, துறையில் நல்ல பூரண ஞானம் பெற்றவர்களா யிருப்பார்கள். "தமிழ்நாட்டில் எந்த ஊரில் எந்த ஆறு ஓடுகிறது, எந்த ஊருக்குக் கட்டை வண்டியில் போக வேண்டும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். இதெல்லாம் பூகோளப் பாடமில்லை என்றால் நான் படிக்காதவன்தான்" என்றார் திரு. காமராஜ், ஒரு வெளிநாட்டுப் பத்திரிகை யாளரிடம். அரசியல் என்ற உலகில் எவ்வளவு அறிவும் அனுபவமும் கொண்டவராக இருந்தார் அவர் என்பதை எண்ணிப் பாருங்கள். 'இதனை அவன்கண் விடல்' என்று ஒரு தலைவனின் குணங்களைபற்றி அற்புதமாக விளக்கும் குறளுக்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர் திரு. காமராஜ். தொண்டனாகத் துவங்கி, சத்தியமூர்த்தியிடம் பயிற்சி
எண்ணங்கள்
ஓம் ரவிக்குமார்.
பெற்று, பல காலம் பின்னணியில் இருந்து தன்னைத் தயார் செய்து கொண்டார். அதுபோலவே எதை ஆசைப்படுகிறோமோ அதை அடைய, அதைப் பற்றிய, பூரா நாம் விவரங்களையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
அறிஞர்களுடன் அத்துறை
நூல்களைப் படிப்பதன் மூலம் நம்மை நாம் தயார் செய்துகொள்ளலாம். வல்லுநர்களுடன் பழகுவதன்மூலம் நம்மை நாம் தயார் செய்துகொள்ளலாம். பல மைல் தூரம் நடந்து சென்று, சட்டப் புத்தகங்களை இரவல் வாங்கிப் படித்து வழக்கறிஞரானார் ஆபிரகாம் லிங்கன்.
அதிவேகமாகச் செல்லும்
நாளைக்கு ஒரு விமானத்தைக் கண்டுபிடிக்கப்போகும் ஒரு மனிதன் பொறியியல் பற்றி ஏதும் அறியாமல் திடீரென்று எதையும் கண்டுபிடித்துவிட முடியாது. 'தூங்கும்போது யாரும் ஞானியாகி விடுவதில்லை' என்கிறது ஒரு பழமொழி. தியானம் புரிவோர் தூங்குகிறாற்போல இருந்தாலும், அவர்கள் மனத்தை ஒருமுகப்படுத்துவதில் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது பழமொழி.
இரவோடிரவாக ஒரு விதை, மரமான கதையை நாம் கேட்பதில்லை. அதுபோலவேதான் ஆசைப்படும் ஒரு மனிதன் இரவோடிரவாக, ஒரு விஞ்ஞானியாகவோ ஒரு கலைஞனாகவோ, ஒரு தலைவனாகவோ மாறுவதில்லை.
ஒரு மனிதன் ஒரு பாறையைப் பிளக்க அதன்மீது சம்மட்டி கொண்டு அடிமீது அடியாக அடித்துக் கொண்டிருந்தான். கடைசியில் நூறாவது அடியில் பாறை பிளந்தது. பாறை உடைப்பவன் சொன்னான்; "நூறாவது
அடியில்தான் பாறை பிளந்தது. ஆனால் எனக்குத் தெரியும் அதற்குமுன் அடித்த 99 சம்மட்டி அடிகளும் அந்தப் பாறை பிளப்பதற்குக் காரணமாக இருந்தன என்பது.'' உழைப்பின் பலன் பல சமயம் உடனடியாகத் தெரியாது. அதற்காக நாம் உழைக்கத் தயக்கம் காட்டக்கூடாது.
பொது மக்களுக்கு பாடுபட எவ்வளவு தூரம் நேரு தம்மைத் தயார் செய்துகொண்டிருந்தார் என்பதை நமது சுதந்திர வரலாறு கூறும். நாட்டில் அரசியல் மறு மலர்ச்சியையும் ஒரு விழிப்பையும் ஏற்படுத்த மகாத்மா காந்தி எப்படித் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் என்பது அவரது 'சத்திய சோதனை' யைப் படிப்போருக்கு விளங்கும்.
தன்னைத் தயார் செய்துகொண்ட
மனிதன் குறிக்கோளை அடையத் திட்டம் வகுக்கிறான். ஆனால் வெற்றியோ, திட்டத்தை நிறைவேற்றும் செயல் திறனைப் பொறுத்திருக்கிறது.
பலருக்கும் ஆசையிருக்கிறது; லட்சியம் இருக்கிறது; திட்டமிருக்கிறது. ஆனால் அதைச் செயல்படுத்த வரும்போது தான் மனிதர்கள் வித்தியாசப்படுகிறார்கள். சிலர் சோம்பலடைந்து செயலை ஒத்திப் போடுகின்றனர். சிலருக்குத் தங்கள் எண்ணத்தின்மீதே அவநம்பிக்கை பிறக்க ஆரம்பிக்கிறது. இந்நிலையில் மனித மனம் காரியங்களைச் செய்யாமலிருக்க ஒரு தகுந்த சமாதானத்தைத் தேடுவதில் முனைகிறது; இவர்களும் ஒரு வகை முடவர்களே!
இதைத்தான் பலரும் 'சோடா பாட்டில் உற்சாகம்' வேடிக்கையாகக் குறிப்பிடுவதுண்டு. சோடா பாட்டிலைத் திறந்தவுடன் அது நொங்கும் நுரையுமாய்ப் பொங்கிப் பிரவகிக்கும். ஆனால், சிறிது நேரத்தில் எல்லாம்
எண்ணங்கள்
அடங்கி, பாட்டிலில் பாதி அளவில் வெறும் தண்ணீராய் அது நிற்கும். சோடாபாட்டில் உற்சாகம் கொண்டவர்கள் ஆரம்ப சூரர்கள்.
இவ்வுலகில் நிகழும் எதுவும் காரணகாரியத் தொடர்பில் நிகழ்கின்றன. இது உலக நியதி. ஆகவேதான் ஆசைப்படுபவர்கள் அதற்கு ஈடாகத் தங்கள் உடல் உழைப்பையோ பொருளையோ கொடுத்தாக வேண்டும். பலரும் நினைப்பதுப்போல் இவ்வுலகில் இனாமாக எதுவும் கிடைப்பதில்லை.
சிந்தனையும் உழைப்பும் சேரும்போதுதான் அங்கே ஒருமித்த பலன்கள் கிடைக்கின்றன. தனியாக ஒன்று மட்டும் எந்த சிறந்த பலனையும் அளிப்பதில்லை.
எழுது" என்றார் ஞானி: " ஏன் என்றால், எழுது முன் சிந்திக்கின்றாய். எழுதிய பின் எழுதியடி நடக்க முயல்கிறாய். ஆகவே எழுது. ''உலக மனிதர்களை நாம் இரண்டு விதமாகப் பிரிக்கலாம், பேசுபவர்கள் என்றும் செய்பவர்கள் என்றும். 'செய்பவர்'களாலேயே இவ்வுலகம் முன்னேறி வருகிறது. உழைப்பாளிகளின் கைவண்ணமே நமக்கு உணவாகவும், உடையாகவும் வீடாகவும் அமைகிறது.
ஆசிரியர் மகன் ஆசிரியர் என்றோ அல்லது அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதி என்றோ ஒரு கையாலாகாத . இனம்தோன்றும் என்று தான் எண்ணுவதுண்டு
துரதிருஷ்டவசமாக நமது நாட்டில் நாம் உழைப்பை கேவலமாக எண்ணி வருகின்றோம். உழைப்பைக் கேவ மாய்க் கருதும் இனம் எங்கே உழைத்துப் பொருளுற்பத்தி செய்யப்போகிறது? உழைக்க வேண்டியவர்கள் வேறு
எண்ணிக்கொண்டிருக் கின்றோம். கல்லூரிகளில் கல்வி பயில்வது
பள்ளிகளில், யாரோ, நமக்குக்கீழ் உள்ள மனிதர்கள் என்று நாம் “நமது அறிவை உபயோகித்துப் பிழைக்கத்தான்' என்று நாம் திடமாக நம்பிக் கொண்டிருக்கின்றோம். உழைப்பைப் பற்றிய நமது மனோபாவம் திருந்தாதவரை நமது நாடு ஏழை நாடாக இல்லாத நாடாக- இரந்து வாழும் நாடாகத்தான் இருக்கப் போகிறது.
தஞ்சை மாவட்டத்தில், எங்கள் ஊரில் விடியற்காலை நேரத்தில் காற்றில் மிதந்து வரும் நாதசுர இசை எங்களை விழிக்கச் செய்யும். நாதசுரம் கற்றுக் கொள்ளும் மாணவர்கள் விடியற்காலையில் எழுந்து கொண்டு சுமார் இரண்டு மணிநேரம் திரும்பத் திரும்ப நாதசுவரம் வாசிக்கும் கடும் பயிற்சி செய்வது இன்னும் என் நினைவில் நிற்கிறது. அந்த இசை மன்னர்கள் எத்தனை காலம் கடும் பயிற்சிக்கு உழைப்புக்குத் தங்களை ஆளாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது பலருக்குத் தெரியாது.
அதேபோல் அடுப்படியில் புகுந்த எந்தப்பெண்ணும் முதல் நாளே பெரிய சமையல் நிபுணராக வெளிவந்ததில்லை.
"மேதைத்தனம் என்பதெல்லாம் ஒரு சதம் உத்வேகமும் 99 சதம் கடும் உழைப்பும்தான்' 'என்றார் ஒரு மேதை.
வெற்றிக்கு, உழைப்புத்தான் குறுக்குவழி.
டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி
கருத்துகள்
கருத்துரையிடுக