🌍🌎🌏குட்டிச் சாத்தான் வசிய பூஜை🌍🌎🌏

 

🌍🌎🌏குட்டிச் சாத்தான் வசிய பூஜை🌍🌎🌏

குட்டிச் சாத்தாள் வசிய பூஜை செய்பவர்கள் மன உறுதியோடும், குலதெய்வ பக்தியோடும் இருப்பவராக இருக்க வேண்டும். மெழுகினால் அல்லது பச்சரிசி மாவினால் ஓர் ஆண் உருவ பொம்மை செய்து கொள்ள வேண்டும். இப்பொம்மையை நிற்க வைக்க வசதியாகச் செய்து கொள்ள வேண்டும்.

நடு நிசி 12 மணி வெள்ளிக்கிழமை அமாவாசை அல்லது சந்திர கிரகண நாளாக இருக்க வேண்டும். அத்தகைய நாளில் நடு வீட்டில் பீடம் அமைத்து வேப்ப எண்ணொய் வீட்டு மண் அகலில் விளக்கேற்றி வைக்க வேண்டும். அவ் விளக்கிள் அருகே பொம்மையை நிற்க வைத்து அதன் அருகே எல்லா தேவதைகளுக்கும் வசிய பூஜை செய்ய, முன் குறிப்பிட்டுள்ளது போல் காரீயத் தகட்டில் வசிய சக்கரம் எழுதி வைக்கவும்.

இச்சக்கரத்தின் அருகில் செக்கடி மண், குயவன் வீட்டு மண், பாழடைந்த வீட்டின் மண், சுடுகாட்டுச் சாம்பல் இவைகளை கலந்து தூவ வேண்டும். சுறுப்பு


நூலினால் மாலை செய்து பொம்மை கழுத்தில் மாலை போட்டு, தகட்டிற்கும் விளக்கிற்கும் செவ்வரளி மலர் சாத்த வேண்டும்.

 நிவேதனப் பொருளாக கருங்கோழிக் கறி, கருவாடு,மாமிசம், கஞ்சா அல்லது கள், அல்லது ஏதாவது மதுவகை வைத்து சுகந்தப்பொடி, ஜவ்வாது ஆகியவற்றை
தூபம் போட்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

 வாயும் ''ஓம் குட்டிச் சாத்தான் ஓடி வா வா! கூறிய பல்லும் கூறிய நாவும் மீறிய பார்வையும் அரிய சர்வ சக்தி செம்பட்டை மயிறும் சிவந்த இதழும் கறுப்பு வண்ண ஆடையும் கொண்டவனே! ஓடி வா! பெற்றவனே! ஓடி வா! மகா வல்லமை படைத்தவனே! குட்டி சாத்தானே ஓடி வா! தடையில்லாமல் ஓடி வா! தடியுடன் ஓடி வா! வா வா! கோமய இல்லத்தானே வா! வா! சிரித்தபடி ஓடி வா! சீறியபடி வா! வா! உன்மேல் ஆணை. என் மேல் ஆணை. எட்டு திசை மீது ஆணை, எல்லாம் வல்ல இறைவன் மீதாணை. ஓடி வா! ஓடி வா! உடனே வா! சுவாஹா!"

எனக்கூறி கற்பூர தூப தீபம் காட்டி வணங்க வேண்டும். இதே போல 48 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். அல்லது ஒரே நாளில் முன் சொன்ன மந்திரத்தை ஒரு லட்சம் தடவை உருப்போட்டு வணங்க குட்டிச் சாத்தான் வசியமாகும்.

இப்பூஜை செய்யும்போது பல இடையூறுகள், பயமுறுத்தல்கள், அச்சமூட்டும் குரல்கள் ஏற்படும். இவற்றைக் கண்டு அஞ்சாமல் பூஜையைத் தொடர்ந்து செய்ய வேண்டும். மூன்று அங்குல உயரமே உள்ள குட்டிச் சாத்தானைக் கண்டால்தான் சித்தி என்று கருத வேண்டும்.

ஓம்..


குட்டி சாத்தான் வரும் முன்னே பசுமாட்டின் கோமிய வாடை வீசும். குட்டி சாத்தான் வசியமான பிறகு நற் காரியங்களுக்கு மட்டுமே பயன் படுத்தினால் செல்வம் கொழிக்கும். தீய காரியங்களுக்குப் பயன் படுத்தினால் தரித்திர நிலை ஏற்படும். கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

ஓம்..


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘