🌎🌏🌍இஷ்ட தெய்வ தியானம்🌎🌏🌍

🌎🌏🌍இஷ்ட தெய்வ தியானம்🌎🌏🌍 🌎🌏🌍இஷ்ட தெய்வ தியானம்🌎🌏🌍 ஓம் மந்திரமும் தியான யோகமும் தேவி பாகவதம், இராமாயனம். சிவ புராணம், பாகவத புராணம் ஆகிய நூல்களை படித்து சிந்தனை செய்து, தெய்வங் களை பற்றி நன்கு அறிந்து கொண்டு முன்பே மனதில் அந்த உருவங்களை பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அந்த தெய்வங்களின் பீஜ மந்திரங்களையும் அறிந்து கொள்ளலாம். புகைப்படம் எடுப்பதில் திறமையுள்ளவர்களும், ஓவியம் வரைபவர்களும் மிக சுலபமாக மனத்திரையில் அவர் நினைக்கும் காட்சிகளை காண முடியும். முதலில் உருவமுள்ள தெய்வத்தை தியானம் செய்து பழகிய பின் உருவமற்ற பரம்பொருள் தியான நிலைக்குச் செல்ல வேண்டும். உருவம் அல்லது அருவம் இரண்டிலும் எதை நினைத்தாலும் அது பரம்பொருளான ஒரே இறைவனிடம் கொண்டு சேர்க்கும். பரம்பொருள் பரமாத்மா சிந்தனைக்கு அப்பாற்பட்டவர் முடிவில்லா குணங்களுடன் அளவற்ற கருணையும் எல்லையற்ற மகிமையும் பொருந்தி சர்வ வியாபியாக சகல உயிர்களிலும் ஆத்மாவாக உறைந்து நிற்பவர், ஆதலால் அவர் சர்வ சொரூபமானவர். சுயம் ஜோதி பெற்று சர்வ சாட்சியாக எல்லாவற்றுக்கும் ஈசனாக மேலோனாக விளங்குகிறார். அனைத்தையும் அறிந்த சர்வக்ஞர், உயிர்களிடத்தி...