🌍🌏🌎திருமுறைத் தலங்களின் தெய்வீக மரங்கள் வில்வம்🌍🌏🌎

 

🌍🌏🌎திருமுறைத் தலங்களின்தெய்வீக மரங்கள் வில்வம்🌍🌏🌎


🌍🌏🌎திருமுறைத் தலங்களின்
 தெய்வீக மரங்கள் வில்வம்🌍🌏🌎

வில்வம்

தெய்வீக மரங்களில் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பது வில்வ மரமாகும். ஏனெனில் இது சிவனுக்கு மிகவும் உகந்த தாகும்.

யாவர்க்குமாம் இறை வற்கொரு பச்சிலை' என்பது திருமூலர் வாக்கு. அவ்வாறு திருமுலர் போற்றுவது வில்வமே என்பதில் ஐயமில்லை. புலிக்குப் பயந்து ஒரு மரத்தின் மேலே ஏறிய ஒரு குரங்கு அங்கிருந்து அந்த வில்வமரத்தின் இலை களைப் பறித்து கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது போட, தன்னையறியாமல் செய்த பூசையின் பலனாக மறுபிறவியில் முசுகுந்தச் சக்ரவர்த்தியானது என்பது புராண வரலாறு.

சிவஸ்துதி என்னும் மந்திரத்தில் 'ஏக வில்வம் சிவார்ப் பணம்' என்று வருகிறது. அதனால்தான் சிவ பூசைக்கு முதற் பொருளாக இன்றளவும் வில்வம் விளங்குகின்றது. சிவபூசையில் சிறப்பைப் பெற்ற வில்வம் சங்க இலக்கியங்களில் கூவிளம் எனப் பெயர் பெற்றது.

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம்

குறிஞ்.65

என்று குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிடப்படுகிறது. இங்கு கூவிளம் என்பதற்கு நச்சினார்க்கினியர் வில்வப்பூ என உரை கண்டுள்ளார்.

ஏழுபெரும் வள்ளல்களில் ஒருவனான எழினி என்பான் தன் அடையாளப் பூவாக வில்வப் பூவைச் சூடினான் என்பதைப் புறநானூற்று அடிகள் கூறும்.

ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல் கூவிளங் கண்ணிக் கொடும் பூண் எழினி

புறநா. 158-8-9

சிதம்பர ரகசிய அறையில், பொன்னால் வில்வமாலை தொடுக்கப்பட்டு வணங்கப்படுகின்றது.

ஓம்..

தாவரவியல்

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட வில்வமரம் தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படுகிறது. இது இலையினை உதிர்க்கும் வெப்ப மண்டல தாவரமாகும். கூரிய முட்கள் கொண்டு 12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. வில்வ மரத்தின் தாவர வியல் பெயர் Aegle marmelos Corr. என்பதாகும். Rutaceae என்ற தாவரக் குடும் பத்தைச் சேர்ந்தது. இதே குடும் பத்தைச் சேர்ந்த யாவரும் அறிந்த மற்றொரு மரம் விளா மரமாகும். வில்வம் வடமொழியில் 'பில்வா' என்று அழைக்கப் படுகிறது.

சிறிய முட்களுடன் கூடிய வலிமையான மரம். இலைகள் மூன்று சிற்றிலைகள் கொண்ட கூட்டிலையாகும். கூட்டிலையில் நுனி சிற்றிலை நீண்ட காம்பினை உடையது. இலைகள் முட்டை வடிவம் முதல் நீண்ட வால் வடிவம் வரை உள்ளவை. இலைகள் நறுமணமுடையவை.

ஐந்து இலைகள் கொண்ட வில்வமரம் மகாவில்வம் எனப்படுகிறது. கயிலையங்கிரிக்கு உரியது எனவும், காசிக்கு உரியது எனவும் கருதப்படுகிறது. பசுமை வெள்ளை வண்ணம் கொண்ட பூக்கள் இலைக் கோணத்தில் அமைந்திருக்கின்றன. மலர்கள் இருபாலானவை. பழம் பெரிதாகப் பேரிக்காய் போன்று உருண்டை வடிவத்தில் 10 செ.மீ முதல் 12 செ.மீ வரை விட்டம் கொண்டவை. வெளியுறை கெட்டியான ஓடு கொண்டது. சாம்பல் கலந்த மஞ்சள் வண்ணம் உடையவை. உள்சதைப்பற்றில் பல எண்ணிக்கை கொண்ட விதைகள் உள்ளன. சதைப்பற்று ஆரஞ்சு வண்ணத்தில் இனிப்பு சுவை கொண்டிருக்கும். விதைகள் சிறிது தட்டையாகவும் பசைத் தன்மை கொண்டும் உள்ளன.

ஓம்..




வளர்ப்பு முறை

வில்வம் அனைத்து வகை மண் பகுதிகளிலும் வளரக் கூடியது. இருந்தாலும் வடிகால் வசதியுள்ள இருமண் வாகு ஏற்றது. வில்வத்தை நாற்று விட்டு வளர்க்க வேண்டும். எனவே, மரத்தில் நன்கு முற்றி கனிந்த பழங்களைப் பறித்து உடைத்து, பழச்சதையை நன்கு நீரில் கழுவி, விதைகளைச் சேகரிக்க வேண்டும். விதைகளை நிழலில் உலர்த்தி உடன் விதைக்க வேண்டும். விதைகளை அதிக நாட்கள் சேமிக்க இயலாது. முளைப்புத் திறன் வேகமாகக் குறைந்துவிடும்.

நிலத்தில் மேட்டுப் பாத்தி அமைத்து 20 செ.மீ. இடைவெளியில் 1 செ.மீ. ஆழத்தில் வரிசையாக விதைக்க வேண்டும். முளைக்க இரு வாரங்கள் ஆகும். கூடுமானவரை நிழலான இடத்தில் விதைப்பது நல்லது. 45 நாட்கள் வளர்ந்த நாற்றை மண் நிரப்பிய தொட்டிகளில் பறித்து ஊன்ற வேண்டும். ஓரளவு வளர்ந்த நாற்றினைப் பின்னர் 4 மீட்டர் இடைவெளியில் நடலாம். விதை முளைப்புத் திறன் 60% வரை இருக்கும்.

தலவிருட்சம்

மக்களால் தெய்வமென போற்றி வணங்கப்படும் வில்வம்
பல திருமுறைத் தலங்களின் விருட்சமாக விளங்குகின்றது. திருக்கழிப்பாலை, திருவைகாவூர், திருவையாறு, திருப்பாற்றுறை, திருக்கற்குடி, திருமுக்கீச்சுரம் (உறையூர்), திருவெறும்பூர், திருப் பூந்துருத்தி, திருக்கண்டியூர், திருவேதிகுடி, திருத்தென்குடித் திட்டை, திருவலஞ்சுழி, திருநீலக்குடி, திருக்கடவூர், திருஅரிசிற்கரைப் புத்தூர், திருப்பறியலூர், திருமீயச்சூர், சிறுகுடி. திருநன்னிலத்துப் பெருங்கோயில் (நன்னிலம்), திருக் கோண்டீச்சுரம், திருக்கோள்ளம்பூதூர், திருஇடும்பாவனம், திருநல்லூர், திருவேடகம், திருவாடானை, திருவல்லம், திருமாற்பேறு, திருவக்கரை, திருக்கோவலூர், நெடுங்களம் ஆகிய 30 தலங்களில் விருட்சமாக விளங்குகிறது.

திரு ஓமாம்புலியூர் தல புராணத்தில் வேடன் செய்த வில்வ பூசை சம்பந்தமான புராணக் கதை உள்ளது. இத்தலம் பதரிகாரண்யமாக (இலந்தை மரக்காடாக) இருந்த ஒரு காலத்தில் வேட்டையாடிக் கொண்டிருந்த வேடன் ஒருவன், புலிக்குப் பயந்து இங்கிருந்த வில்வமரம் ஒன்றில் ஏறிக்கொண்டான். இரவுப் பொழுது வந்தும் புலி அவ்விடத்தை விட்டு அகல வில்லை. வேடன் உறக்கம் வராமல் இருப்பதற்காக வில்வ இலைகளைப் பறித்துப் போட்டுக் கொண்டிருந்தான். அன்று மகா சிவராத்திரி. வில்வமரத்டியில் துயரந்தீர்த்த நாதர் சிவ லிங்கத் திருமேனியில் எழுந்தருளியிருந்தார். இரவு முழுவதும் வேடன் பறித்துப் போட்ட வில்வ இலைகள் சிவனுக்கு அருச்சனையாயிற்று. மகா சிவராத்தியன்று நான்கு யாமமும் உறங்காமல் பூசை செய்த பலனாய் இறைவன் வேடனுக்கு வீடுபேறு அளித்தார். புலிக்கும் அவ்வாறே அருள் செய்தார். 

திருமுறைத் தலங்களின் தெய்வீக மரங்கள்

மருத்துவப் பயன்கள்

மரத்தின் பட்டையை எடுத்து மேல்பட்டையை சீவி நீக்கிவிட்டு, உள்பட்டையை நன்கு இடித்து நீர்விட்டுக் காய்ச்சி கசாயம் செய்து அருந்திட காமாலை நோய்க்கு சிறந்த நிவாரணியாகும்.

வில்வ இலை குளிர்ச்சியைத் தரக்கூடியது. சர்க்கரை நோயாளிக்கு வில்வ இலைப் பொடியினை தினமும் அரை தேக்கரண்டி அளவு இரண்டுவேளை கொடுத்துவர நோய் மட்டுப்படும். வில்வஇலை மூன்று இலையுடன் சிறிது மிளகு சேர்த்து எடுத்துகொள்ள சுவாசகாசம் பீனிசம் குணமாகும். செரிமானத் தூண்டியாகவும் செயல்படும்.

மரத்தின் இலைகள், வேர், பட்டை கனிகள் என அனைத்துப் பகுதிகளும் மருத்துவப் பயன் கொண்டவை. இலைகளைச் சாறு பிழிந்து அதில் சிறிது மிளகு சேர்த்துக் கொடுக்க மஞ்சள் காமாலை, சோகை நோய்களுக்கு நல்லது. இலைகளில் அஜிலைன் என்ற ஆல்கலாய்டு உள்ளது. இது ஆஸ்துமாவை குணப்படுத்தும் திறன் கொண்டது. இலைகளை நீர் விட்டு அரைத்துப் பற்றுப் போட (poultice) கண்வலி, தலை பாரம், மார்புச் சளி, வீக்கம் ஆகியவை குணமாகும். இலையைச் கசாயம் (decoction) செய்து அருந்திட இருதயத்தைச் செயல்படவைக்கும் திறன் (cardiotonic effect) ஏற்படும். காலரா நோயிலி ருந்து மீள்பவர்களுக்கும் நல்லது.

வேர், வேர்ப்பட்டை மற்றும் தண்டின் மேல் பட்டையிலி ருந்து கிடைக்கும் வடிநீர் (decoction) விட்டுவிட்டு வரும் சுரம் குறையவும், மற்றும் இதயத் துடிப்பைச் சீர் செய்யவும் நல்லது. மன உளைச்சலால் ஏற்படும் பாதிப்புகளையும் சரிசெய்ய வல்லது. ‘தசமூல' என்ற ஆயுர்வேத தயாரிப்பில் வில்வ வேர் பயன்படுகிறது. பூக்களை வடிநீர் செய்தோ அல்லது உலர்த்திப் பொடியாகவோ உட்கொண்டால் மந்தம் சரியாகும்.

வில்வ மரத்தில் கனிகளே மிக அதிகப்பலன் தருபவை. மருத்துவக் குணங்கள் மிகுந்து காணப்படும். பழங்களில் சத்துக்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன. 100 கிராம் பழச்சதையில் நீர், 61.50 கிராம், புரதம் 1.80 கிராம், கொழுப்பு 0.30 கிராம், மாவுப்பொருள் 31.80 கிராம், நார்ப்பொருள் 2.90 கிராம் ஆகியவையும், கனிமச் சத்துக்களான, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு முதலியவையும், உயர்ச்சத்துக்களான தையாமின், ரிபோஃபிளேவின், நியாசின், ஆக்ஸாலிக் அமிலம், வைட்டமின் சி, கரோடின் ஆகியவையும் உள்ளன. எனவே சத்துள்ள உணவாகும். கிடைக்கும் சக்தி 137 கிலோ கலோரியாகும்.

இளம் பிஞ்சினை எருமைத் தயிரில் கலந்து உட்கொள்ள வயிற்று உபாதைகள் நீங்கும்.

காயை பசுவின் பால் விட்டு நன்கு அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளித்திட மண்டைச்சூடு, கண்ணெரிச்சல் ஆகியவை நீங்கும். காயுடன் இஞ்சி, சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து குடிநீர் செய்து அருந்த மூல நோய் குணமாகும்.

முதிர்ந்த கனிகளை உடன் பறித்து உண்ணும்போது மலமிளக்கியாகச் செயல்படுகிறது. மாறாக முதிராத கனிகள் தசைகளை சுருங்கச் செய்யும் தன்மையும் செரிமானச் சக்தியைத் தூண்டும் குணமும், வயிற்று வலியைக் குறைக்கும் தன்மையும், மலம் கட்டும் தன்மையும் கொண்டுள்ளவை. எனவே காயை வெட்டி, வெயிலில் உலர்த்திப் பொடி செய்து தினமும் இருமுறை உட்கொண்டால் வயிற்றுப் போக்கு, சீதப்போக்கு குணமாகும்.

முதிராத பழங்களை உடைத்து சிறிது நேரம் வறுத்து பின்னர் பழத்துடன் வறுத்த சோம்பினைச் சேர்த்து வெந்நீருடன் கலந்து ஆறவைத்து வடிக்கட்டி, வடிநீரை மூன்று வேளை உட்கொள்ள வயிற்றுப்போக்கு மட்டுப்படுவதோடு வலியும் நிவாரணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வர குடலுக்கு வலுவாகும்.

வில்வப்பழம் மணமுடன் கூடியது. இனிப்புச் சுவை கொண்டது. உடலுக்குக் குளிர்ச்சியூட்டி, மலமிளக்கும் தன்மை கொண்டது. வில்வப் பழத்திலிருந்து சர்பத், ஜாம், ஸ்குவாஷ் எனப் பலவும் தயாரிக்கலாம். வில்வப் பழச்சதையின் எடையில் பாதியளவு நீர் எடுத்து அதனை 70 செல்சியஸ் வெப்ப அளவிற்கு சூடுபடுத்திக் கொண்டே பழச்சதையை இட்டுக் கிளற வேண்டும். பின்னர் இதனை வடிகட்டி உடனடியாகக் குளிர வைக்க வேண்டும். இதனுடன் சர்க்கரை சிரப் சேர்த்து பானமாகத் தயாரிக்கலாம். பழரச பானம் ஊட்டச்சத்து மிக்கது. உடலுக்கும் வலுவேற்றும் திறன் கொண்டது. மலக்கட்டும் நீங்கும். பழத்தில் மாரிலோசின் என்ற முக்கிய வேதிப் பொருள் உள்ளது.

பிறபயன்கள்

புதிதாகப் பறித்த இலைகளிலிருந்து மாமலோசின் என்ற நறுமணத் தைலத்தை காய்ச்சி வடிகட்டுதல் மூலம் பிரித் தெடுக்கலாம். இத்தைலத்திற்கு பூசணத்தைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது. எனவே, செடிகளில் ஏற்படும்வாடல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

மரத்திலிருந்து பிசின் எடுத்து மருத்துவத்துக்கு பயன் படுத்தலாம். மரப்பட்டையில் 11.58% டானின் சத்து உள்ளது. இது சாயமேற்றவும் தோல் பதனிடவும் பயன்படும். வில்வப் பழக்குழம்பை வண்ணப் பொடிகளுடன் கலந்து படம் வரைய படத்துக்கு நல்ல தோற்றம் அமையும். வில்வ பழச் சதையை உடலுக்குத் தேய்த்து குளித்து வர உடல் பளபளப்பு கூடும்.

ஓம்..

தலைக்கும் குளிர்ச்சியானது. மரத்தின் உட்புறபகுதியிலிருந்து பெறப்படும் கூழ், தடித்த அட்டைகள் தயாரிக்கட்டப்ப பன்படும். 

சிறுமர வேலைகளுக்கு உகந்தது எனினும், பொதுவாக வில்வமரத்தை வெட்டுவதை மக்கள் பாவமாகக் கருதுவர். விதையினைச் சுற்றி இருக்கும் பிசின் போன்ற திரவத்திலிருந்து வார்னிஷ் மற்றும் பசை முதலிய பொருட்கள் தயாரிக்கலாம். வில்வ மரம் சிவனுக்குரியதாகும். இதனை மக்கள் தெய்வமாகவே வழிபடுவர். கூர்ம புராணத்தில், மகாலட்சுமி தெய்வப் பசுவாகப் பிறந்ததாகவும், அதன் கோசலத்திலிருந்து வில்வம் உதித்த தாகவும் கூறப்படுகிறது. அதனால் இதற்கு ஸ்ரீவிருட்சம் எனப் பெயர் வந்தது எனவும் கூறப்படுகிறது. இதன் மூன்று இலைகள் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய இறைவனின் மூன்று தொழில்களை உணர்த்துவதாகவும் எனவே புனிதமாகவும் கருதப்படுகிறது. இதன் இலைகள் சிவனுக்கு அர்ச்சிக்கப் பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

தெய்வ முக்கியத்துவம் பெற்ற வில்வமரத்திற்கு பால் மற்றும் மலர்கள் இட்டு மக்கள் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள் ளனர். திங்கட்கிழமையிலும், சதுர்த்தி, அட்டமி, நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி, அமாவாசை திதியுள்ள நாட்களிலும் வில்வத்தைப் பறித்தல் கூடாது. ஒரு நாளில் கொய்து வைத்த வில்வத்தை ஆறுமாதம் வரை வைத்திருந்து பூசை செய்யலாம். புழுக்கடி இல்லாத வில்வ இலைகளையே பயன்படுத்த வேண்டும். ஒரு தடவை இறைவனுக்கு அர்ப் பணித்த வில்வத்தை நீரில் கழுவி மறுபடியும் பயன்படுத்தலாம். இவ்வாறெல்லாம் வில்வம் பற்றி புட்பவிதி என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வில்வம் நட்டு வினைப்பயன் நீங்கி வீடு பேறு பெறலாம்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘