🌍🌏குபேரன் இத்தலத்திற்கு வந்து காளியை வழிபட்டபிறகுதான்அவன்பெருஞ்செல்வங்களைப் பெற்றான் என்று புராணங்களில் சொல்லப்படுகிறது. சென்னை ஸ்ரீ காளிகாம்பாள்🌎🌍🌏

 

🌍🌏குபேரன் இத்தலத்திற்கு வந்து காளியைவழிபட்டபிறகுதான்அவன்பெருஞ்செல்வங்களைப் பெற்றான் என்று புராணங்களில் சொல்லப்படுகிறது. சென்னை ஸ்ரீ காளிகாம்பாள்🌎🌍🌏


சென்னை ஸ்ரீகாளிகாம்பாள்

வட சென்னைப் பகுதியில் தம்புச்செட்டித் தெருவில் உள்ளது ஸ்ரீகாளிகாம்பாள் ஆலயம்.

கயிலாயத்தில் ஒருநாள் சிவபெருமாள் தவம் செய்து கொண்டிருக்கும் நேரம் அன்னை பார்வதி தேவி அருகில் வந்தாள். அன்னைக்கு ஏனோ இறை வனுடன் விளையாட வேண்டும் போல் இருந்தது. தம் திருவிளை யாட்டால் இறைவனின் தவநிலை கலையுமே என்று சிந்தித்துப் பார்க்கவில்லை. விளையாட்டாக இறைவனின் கண்களைத் தன் மலர்க்கரங்களால் பொத்தினாள்.

அந்த ஒரு கணத்தில் அண்ட சராசரங்களும் இருண்டன. பஞ்ச
பூதங்களின் இயக்கங்களும் ஸ்தம்பித்துப் போய்விட்டன. எங்கும் ஒரே இருள். உலகில் எந்த ஓர் இயக்கமும் நடைபெறவில்லை. இறைவியின் கைகளை மெல்ல எடுத்த ஈசன் அவளது செயலால் உலகங்கள் இருண்ட நிலையைக் கூறினார்.

புகழ்மிக்க காளித் திருக்கோயில்கள் |

இறைவி விளையாட்டாகச் செய்த சிறு தவறால் ஏற்பட்ட விபரீதத்தை உணர்த்தி அவளது செயலுக்குத் தண்டனையாக அவள் பூலோகம் சென்று தவமியற்றி அதன்பின்னர் இறைவன் துணையை அடையுமாறு கட்டளையிட்டார். இறைவனின் கட்டளையை ஏற்று இறைவி தவம் புரிந்த இடங்களுள் இந்த சென்னை நகர காளிகாம்பாள் தலமும் ஒன்று என்று அந்த ஆலய வரலாறு கூறுகின்றது.

இத்தலத்து இறைவியை வியாசர், பராசரர், அகத்தியர், ஆங்கிரேசர், புலத்தியர், வருணர் முதலிய தேவர்களும் குபேரனும் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர்.

குபேரன் இத்தலத்திற்கு வந்து காளியை வழிபட்ட பிறகுதான் அவன் பெருஞ்செல்வங்களைப் பெற்றான் என்று புராணங்களில் சொல்லப்படுகிறது.

இந்த காளிகாம்பாள் ஆலயம் முன்பு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைப் பகுதியினுள்ளே அமைக்கப்பட்டிருந்தது. கோட்டையினுள் காளி கோயில் இருப்பது ஆங்கிலேயர்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியமையால் இந்த ஆலயத்தைத் தம்புச் செட்டித் தெருவில் அமைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து விட்டார்களாம்.

அன்று முதல் காளிகாம்பாள் ஆலயம் தம்புச் செட்டித் தெருவில் அமைந்து அருள் பாலித்து வருகின்றது.

கோட்டைக்குள் வாசம் செய்து வந்த இந்தக் காளியம்மனை 'கோட்டையம்மன்' என்ற பெயரால் அழைத்து வந்த பக்தர்கள் அன்னையின் திருமேனியில் குங்குமம் பூசி வழிபாடு


செய்யப்பட்டு வந்த காரணத்தால் 'சென்னம்மன்' என்றும் அழைத்து வந்தனர். இந்த சென்னம்மன் என்ற பெயரில் காரணமாகத்தான் சென்னை என்ற பெயர் இந்த இடத்திற்கு ஏற்பட்டதாகவும் கூறுவர்.

காளிகாம்பாள் கோயிலில் இருக்கும் கமடேஸ்வரருக்கு 'சென்னப்பன்' என்ற பெயரும் வழக்கில் இருந்ததால் சென்னைக்கு அப்பெயர் ஏற்பட்டதற்கு ஸ்ரீகாளிகாம்பாள் திருக்கோயில் தெய்வங்கள் மூலவித்து என்று கூறப்படுகிறது.

மராட்டிய சக்ரவர்த்தியானசத்ரபதி சிவாஜி 3.10.1677 அன்று அன்னை காளிகாம்பாள் திருக்கோயிலுக்கு வருகை புரிந்துள்ளார் என்பது இத்தல வரலாற்றாலும் எஸ்.டி.லவ் எழுதிய சென்னை வரலாறு நூலினாலும் அறிந்து கொள்ள முடிகிறது.

சத்ரபதி சிவாஜி இத்திருக்கோயிலுக்கு வருகை தந்தபோது கோயிலைச் சுற்றி குடியிருந்த விசுவகர்ம வகுப்பினரும் பேரிச்செட்டிமார்கள் மரபினரும் தங்கள் இல்லங்களை மராட்டிய வீரர்களுக்கு அளித்து உதவி புரிந்தனர்.

பழங்காலத்திலிருந்து அன்னை காளிகாம்பாள் கோயிலை நிர்வகித்து வந்த விசுவகர்மா வகுப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்கி மராட்டிய மன்னன் சிவாஜி, காளிகாம்பாளின் வழிபாட்டுக்கு வகை செய்தார். அத்துடன் இக்கோயிலுக்குப் பல மானியங்களையும் அவர் வழங்கினார்.

காளிகாம்பாள் திருக்கோயிலைச் சீரமைக்க விசுவகர்மா வகுப்பினர் சத்ரபதி சிவாஜி மூலமாகப் பெருமுயற்சி செய்து திருப்பணிகள் செய்தனர். சுமார் 500 ஆண்டுகட்கு முற்பட்ட பழமையுடையதான கிண்ணித்தேர் சிவாஜியின் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு திருவீதி உலாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மகாகவி பாரதியார் சென்னையில் தங்கியிருந்தபோது தினசரி இத்திருத்தலத்திற்கு வந்து அன்னை காளிகாம்பாளைபாடித் துதிப்பாராம். "யாதுமாகி நின்றாய்- காளி" என்ற காளியின் பாட்டும் காளி ஸ்தோத்திரமும் இத்தலத்து காளி மீது இயற்றியதாகக் கூறப்படுகிறது.

மேற்கு நோக்கியத் திருக்கோயிலில் கருணை பொழியும் விழிகளுடன் அமர்ந்த அழகிய திருக்கோலமாய் காளிகாம்பாள் விளங்குகின்றாள். வலது மேற்கரத்தில் அங்குசம், வலது கீழ்க்கரத்தில் கிளிமேலர்மர்ந்த தாமரை மலர், இடது மேற்கரத்தில் பாசம், இடது கீழ்க்கரத்தில் கரும்பினை ஏந்தி காளிகாம்பாள் காட்சி தருகின்றார்.

காளிகாம்பாளின் திருப்பாதத்திற்கு அருகில் ஸ்ரீசக்கரம் (அர்த்தமேரு) வடிவமைக்கப்பட்டுள்ளது. இஃது ஆதிசங்கரரால் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இவ்வாலயத்தில் காளிகாம்பாள் ஸ்ரீசக்கர மந்திர சொரூபினியாகவும் காட்சி தருகின்றார்.

இந்தக் காளிகாம்பாள் கோயிலில் கமடேசுவரர், அருணாச லேசுவரர், நடராஜர் ஆகியோர் சன்னதிகள் காணப்படுகின்றன. நடராஜர் சன்னதியில் பிருங்கி முனிவர் மூன்று கால்களுடன் எலும்பும் தோலுமான உடலுடன் காட்சியளிக்கிறார்.

சக்தியை அவமதித்து சிவனை மட்டும் போற்றியதால் வந்த பரிசு இது என்று கூறுவர். ஆனால் அன்னை அவருக்கும் நல்லருள் வழங்கியதாகக் கூறப்படுகிறது. பிருங்கி முனிவருக்குச் சக்தியெல்லாம் இழந்த நிலையில் உமையின் சம்மதத்துடன் மூன்றாவது கால் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கும், வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கும் ஸ்ரீகாயத்ரி தேவிக்கும், தனித்தனி சன்னதிகள் காணப்படுகின்றன.

விநாயகப் பெருமான் சித்திபுத்தி விநாயகர் என்றும். முருகன் வடகதிர்காம திருமுருகன் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவையேயன்றி ஸ்ரீவீரபத்திரர் ஸ்ரீவிராட்விஸ்வ பரபிரம்மம், நாகேந்திரர் ஆகியோர் சன்னதிகளும் இத்திருக்கோயிலை அலங்கரிக்கின்றன.


இத்தல தீர்த்தமாக கடலும், தலவிருட்சமாக மாமரமும் அமைந்துள்ளன. இத்திருக்கோயிலில் சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரி விழாவும், வைகாசி மாதத்தில் பிரமோற்சவமும், புரட்டாசி மாதத்தில் நவராத்திரிப் பெருவிழாவும், மார்கழி மாதத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தாரின் கூட்டு வழிபாடும், தை மாதம் பொங்கல் திருவிழாவும், பூச்சொரிதல் விழாவும், மாசி மாதத்தில் மாசித் தீர்த்த விழாவும் (கடற்கரையில் தீர்த்தமாடி வருதல்) பங்குனியில் உத்திர நட்சத்திரத்தன்று திருக்கல்யாண் வைபவமும் இப்படி வருடம் முழுவதும் திருவிழாக்கோயிலாக இக்காளிகாம்பாள் கோயில் திகழ்கின்றது.

சித்திரை விழாவின்போது கிண்ணி ரத உற்சவமும், தை மாதம் நூற்றியெட்டு திருவிளக்கு பூஜையும், கோபூஜையும் இத்தலத்திற்கு உரிய சிறப்பு வழிபாடுகளாகக் கூறப்படுகின்றன. கோபூஜையின்போது சிறுமி ஒருத்தியை காளிகாம்பாளாக அலங்காரம் செய்வித்து பூஜை செய்விப்பது சிறப்பானதொரு காட்சியாகும்.

மறைந்த காஞ்சி பெரியவர் சந்திரசேகர சுவாமிகள் சென்னை வரும் போதெல்லாம் இந்தக் காளிகாம்பாளை அவசியம் தரிசித்து விட்டுச் செல்வார். இப்போது அருட்பணி ஆற்றிவரும் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஜெயேந்திர சுவாமிகளும் அன்னை காளிகாம்பாள் திருக்கோயிலுக்கு வந்து இராஜகோபுரம், கருங்கல் பத்ம பீடம் ஆகிய திருப்பணிகளைத் தொடங்கி வைத்தார். திருப்பணிகள் முடிந்து 2001-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனுதினமும் அன்னை காளிகாம்பாளைத் தரிசித்து ஆனந்த வாழ்வினைப் பெறுகின்றனர்

புகழ்மிக்க காளித் திருக்கோயில்கள்

இந்த ஆலயத்தில் திருவிளக்கு பூஜை மிகச்சிறப்பாகச் செய்யப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், கல்யாணம் தள்ளிப் போனவர்கள் இந்த அம்மனை வழிபட்டு அவள் சந்நிதியில் நெய் விளக்கு ஏற்றி வைத்தால், குழந்தைப்பேறும், திருமணமும் கைகூடும் என்கிறார்கள்.

இங்கு இராகு காலத்தில் நடைபெறும் சிறப்பு பூஜைக்குக் கூட்டம் அலைமோதுகிறது. கோர்ட் வழக்களில் நிம்மதியிழந்து தவிக்கும் அன்பர்கள் இந்த ராகு கால பூஜையில் கலந்து கொண்டால் விரைவாகவே நல்ல தீர்ப்பு கிடைக்குமாம்.

ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு முதல் நாள் இரவு 12.00 மணிக்கு ஆரம்பமாகும் அன்னதானம்,மறுநாள் இரவு 12.00 மணி வரைத் தொடர்ந்து நடைபெறுகிறது. அம்மனைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உள்ளூர் அன்பர்கள் தரும் இந்த அன்னதானம் தவிர, மாதந்தோறும், வாரந்தோறும் குறிப்பிட்ட சில கிழமைகளில் அம்மன் பக்தர்கள் தொடர்ந்து அன்னதானம் வழங்குகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் சுதந்திரத் திருநாளன்று இத்திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், சமபந்தி போஜனமும் நடைபெறுகிறது.

பக்தர்கள் தேர் உற்சவம் நடத்துவதற்காகவே 125 கிலோ எடையுள்ள வெள்ளி ரதம் ஒன்றும் இக்கோயிலில் இருக்கிறது. ரூபாய் 501/- செலுத்தி பக்தர்கள் யார் வேண்டுமானாலும் அம்மன் சந்நிதியில் வெள்ளித்தேர் இழுக்கலாம்.

இவ்வாலயத்தில் உறையும் காளிகாம்பாள் மீது கவிஞர் சக்திதாசன் ஸ்ரீகாளிகாம்பாள் கவசம் ஒன்று பாடியுள்ளார். இந்தக் காளியின் மீது பூச்சொரியும் பாமாலை ஒன்றும் உயிரெழுத்தில் காளிகாம்பாள் மலர் வழிபாடும், காளிகாம்பாள் பதிகங்களும் பாடியுள்ளார். இந்தக் காளியம்மன் மீது வேறு சில தனிப்பாடல்களும் பாடப்பட்டுள்ளன


காளிகாம்பாள் மீது மகாகவி பாரதியார் பாடிய காளிப்பாட்டு🌹

1.

"யாது மாகி நின்றாய் காளீ

எங்கும் நீ நிறைந்தாய்

தீது நன்மை யெல்லாம் - காளீ

தெய்வ லீலை யன்றோ?

பூத மைந்து மானாய் - காளீ

பொறிக ளைந்து மானாய்

போத மாகி நின்றாய் - காளீ

பொறியை விஞ்சி நின்றாய்"

2“இன்ப மாகி விட்டாய் - காளீ

என்னுள்ளே புகுந்தாய்

பின்பு நின்னை யல்லால் - காளீ

பிறிது நானு முண்டோ?

அன்ப ளித்து விட்டாய் - காளீ

ஆண்மை தந்து விட்டாய்

துன்ப நீக்கி விட்டாய் - காளீ தொல்லை போக்கி விட்டாய்"

🌹காளி ஸ்தோத்திரம்🌹

"யாது மாகி நின்றாய் காளீ

எங்கும் நீ நிறைந்தாய்

தீது நன்மையெல்லாம் - நின்றன்

செயல்க ளன்றி யில்லை.

போது மிங்கு மாந்தர்-வாழும்

பொய்மை வாழ்க்கை யெல்லாம்

ஆதி சக்தி தாயே - என்மீ

தருள்பு ரிந்து காப்பாய்

"எந்த நாளு நின்மேல்- தாயே

இசைகள் பாடி வாழ்வேன்.

கந்தனைப் பயந்தாய் - தாயே

கருணை வெள்ள மானாய்!

மந்த மாருதத்தில் வானில்

மலையி னுச்சி மீதில்

சிந்தை யெங்கு செல்லும் - அங்குன் 

செம்மை தோன்று மன்றே!"

ஓம்..

கர்ம யோக மொன்றே - உலகில்

காக்கு மென்னும் வேதம்,

தர்ம நீதி சிறிதும் - இங்கே

தவற லென்ப தின்றி

மர்ம மான பொருளாம் - நின்றன்

மலரடிக் கணெஞ்சம்

செம்மை யுற்று நாளும்-சேர்ந்தே

தேசு கூட வேண்டும்

"என்ற னுள்ள வெளியில் - ஞானத்

திரவி யேற வேண்டும்

குன்ற மொத்த தோளும்-மேருக் கோல மொத்த வடிவும்

நன்றை நாடு மனமும் - நீயெந்

நாளு மீதல் வேண்டும்

ஒன்றை விட்டு மற்றோர் - துயரில்

உழலு நெஞ்சம் வேண்டா"

"வான கத்தி னொளியைக் - கண்டே

மன மகிழ்ச்சி பொங்கி

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘