🌍🌏🌎'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்...'🌍🌏🌎
🌍🌏🌎'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்...'🌍🌏🌎
எந்த ஒன்றில் மனம் ஒன்றிப் பொருந்துகிறதோ அதில்தான் பூரண திருப்தி என்பதை அடைய முடியும். நமது மனம் விரும்பாத ஒன்று நம் மீது திணிக்கப்படும் போது அதில் எவ்வளவு ஆதாயங்கள் இருந்தாலும் அதில் நம்மால் ஈடுபட முடியாது. மனம் அதனை விரும்பி ஏற்றுக் கொண்டால் அதில் எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை நாம் பொருட்படுத்தவே மாட்டோம்.
அரசியல், கலை, இலக்கியம் போன்றவற்றில் வெற்றிக் கொடி நாட்டிய தலைவர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் போன்றவர்கள் அதில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். தடைகளே படிகளாக மாறி அவர்கள் புகழும், பொருளும், பதவியும் குவித்தனர். அவர்களின் நிர்ப்பந்தத்தால் உள்ளார்ந்த ஈடுபாடின்றி இத்துறையில் இழுத்து விடப்பட்ட அவர்களின் வாரிசுகளால் இதில் சோபிக்கவே முடியவில்லை.
உண்மையில் இந்த வாரிசுகள் தாங்களே இயல்பான ஆர்வுத்துடன் இத்துறையில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் இன்னும் பெரிய அளவில் ஜொலித்திருக்க முடியும். உள்ஈடுபாடு இல்லாமல் வெறும் தூண்டுதலால் எவ்வளவு தரம் ஒருவர் ஒரு துறையில் நீடிக்க முடியும்?.
எந்தத் துறையிலும் ஆழ்ந்து ஈடுபடும் போதுதான் நாம் நம்மையே மறந்து விடுகிறோம். தூக்கத்தில் கூட மனம் ஒன்றவில்லை என்றால், அரை மயக்கமும், அரை நினைவும், உணவுகளுமாக புரண்டு, புரண்டுப் படுக்கிறோம். சில சமயங்களில் மனம் உறக்கத்தில் ஒன்றிவிடும்போது, நேரம் போவது தெரியாமல் அடித்துப் போட்டாற் போல் தூங்குவோம். 'என்னை மறந்துத் தூங்கிவிட்டேன். ஆனந்தமான தூக்கம். எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று கூட தெரியவில்லை' என்று தூக்கம் கலைந்தபின் அதிசயமாகப் பேசிக் கொண்டிருப்போம்.
எந்தத் துறையிலும் மனம் ஒன்றி ஈடுபடும்போதுதான் மகத்தான, சாதனைகள் விளையும். கவிஞன் தன்னை மறந்து கவிதைகள் இயற்ற ஈடுபடுகையில் அற்புதமான கவிதைகள் பிறக்கும். பந்தயங்களில் தன்னை மறந்து ஈடுபடுபவர்கள் உலக சாதனை நிகழ்த்துகின்றனர்.
எனினும் கூட இவை எல்லாவற்றிலும் எவ்வளவு ஈடு பட்டாலும் மனம் அதிலிருந்து வேறுபட்டே காணப்படுகிறது. பாலில் கரைந்த சர்க்கரையாய் மனம் கரைந்து காணாமற் போய்விடுகிறது. பாலில் கலந்த இனிப்பு பாலுடன் சேர்ந்து விட்டது போல் ஐம்புலன்களும், மனமும் ஒன்றிப் பொருந்துவது இரண்டே இடங்களில் மட்டும்தான்.
ஒன்று காமத்திடம் பொருந்தும். காமத்தில் கலவியின் உச்சத்தில் சில விநாடிகளே யானாலும் தன்னை மறந்து ஐம்புலன்களும் ஒன்றுபடுகின்றன. அதனாலேயே மனம் மீண்டும், மீண்டும் காமத்தை நாடுகிறது.
மற்றொன்று கடவுளிடம் பொருந்தும். அதனாலேயே காமத்தை சிற்றின்ப வீடு என்றும் கடவுள் உணர்வை பேரின்பப் பெருவீடு என்றும் அழைக்கின்றனர். கடவுளிடம் லயிப்பதும் ஒருவகைக் காமமே. அதனால்தான் ஆண்டாள் 'மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!" என்று பாடுகிறார். 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' என்பது நாயன்மார் வாக்கு.
இப்பிறவியில் மட்டுமின்றி எல்லாப் பிறவிகளிலும் இறை வனுக்கே ஆட்பட்டு இருக்க வேண்டும் என்பது ஆண்டாளின் விருப்பம். அதனாலேயே அவர்,
"எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு
உற்றோமே ஆவோம், உமக்கே நாம் ஆட்செய்வோம்'
என்கிறார்.
இங்கே அவர் ஏழு பிறவி என்று மட்டும் கூறவில்லை. 'ஏழேழ் பிறவி' என்கிறார். அப்படியானால் 7x7=49 பிறவிகளா? இது என்ன கணக்கு?
'ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடங்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து' என்கிறார் வள்ளுவர்.
ஆமையானது தன் உடலை ஓட்டுக்குள் சுருக்கிக் கொள்வது போல், ஒருவன் ஐம்புலன்களையும் உள்ளிழுத்துக் கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வந்தால் அதுவே அவன் தனது ஏழு பிறப்பையும் வெல்வதற்குரிய வழி என்பது இதன் கருத்து.
காரைக்கால் அம்மையார் சிவனின் ஆனந்தத் தாண்டவத்தைக்
காண்கிறார். அவரிடம் இறைவன் "வேண்டும் வரம் யாது?” என்று
கேட்கிறார். அதற்கு புனிதவதியார்,
"பிறவாத வரம் வேண்டும்
பிரியாத வினையாலே, பிறந்தாக வேண்டின் - உனை மறவாத மனம் வேண்டும்' என்று பாடுகிறார்.
கேட்பவர் சர்வ வல்லமைபடைத்த ஈசன். அவரால் எதுவும் வழங்க முடியும். அவரிடம் பிறவாத வரம் வேண்டும் என்கிறார் காரைக்கால் அம்மையார். கூடவே ஒரு சந்தேகம். தனது முந்தைய பிறவிகளில் ஏதேனும் பழம் வினைகள் மிச்சமிருந்தால்? அதனை எங்கு கொண்டு சேர்ப்பது? ஆகவே அதற்குப் பிறவி எடுக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தால்? எனவேதான் பழைய கர்ம வினைகளைத் தீர்ப்பது தவிர வேறு எந்த சலனமும் மனத்துள் புகாதிருக்கும் படியாக' உன்னை மறவாத மனம் வேண்டும்' என்கிறார்.
உயிர்களின் படிப்படியான பரிணாம வளர்ச்சியின் உன்னத நிலை மானுடப் பிறவி மட்டுமே. உயிர்கள் பிறப்பதற்கு முன் உள்ளநிலையும் சரி, இறந்த பின்னர் எய்தும் நிலையும் சரி. இரண்டும் அசைவற்ற நிலைகள். அதிலிருந்து சுயமாக ஒரு இம்மி கூட அவற்றால் முன்னேற முடியாது. உதாரணமாக அளவற்ற புண்ணி யங்களை செய்த ஒருவன் நல்ல சுகங்களை அடைவானேயானால் அதன் பிறகு அவன் அதைத் தாண்டியும் செல்ல முடியாது. இதிலிருந்து கீழிறங்கவும் முடியாது.
சாதாரண செயல்களைப் புரிந்த ஒருவன் மரணத்திற்குப் பின்
அதற்கேற்ற நிலையை எட்டினால் அதிலிருந்து அவன் உயரவும்
முடியாது. அங்கிருந்து திரும்பவும் முடியாது. பூமியில் வசிப்பவன் மட்டுமே தனது செயல்களுக்கு ஏற்ப எத்தகைய உச்சத்தையும் எட்ட முடியும். சராசரி மனிதனாய்ப் பிறந்த ஒருவன் தனது தவத்தால், புலனடக்கத்தால் தேவர்களுக்கே தலைவனாக முடியும். அதே சமயம் பூமியிலிருந்து அவன் தேவ பதவிக்கு உயர்ந்து விட்டால், அத்துடன் சரி, பூவுலகில் தனது செயல்களால் தேவர் உலகுக்கு உயர்ந்தவன் தேவர் உலகில் தன் செயல்களால் வேறு எந்த உயர்வையும் எட்ட முடியாது.
அதேசமயம் பூமியில் தனது செயல்களில், மேலும் தீவிரமாக ஈடுபடும் ஒருவன் அனைத்தையும் தாண்டி பரம் பொருளாகவே ஆகிவிட முடியும். இதனையே ஆகமங்கள் சிவசாயுச்யம் அடைதல் என்கின்றன.
‘பரப்ரம்ம சொரூபணே நமஹ:' என்ற துதிகூட உண்டு. பூமியில் தவத்தில் ஈடுபடுபவன் மீது தேவர்களே பொறாமை கொண்டு அவன் தவத்துக்கு இடையூறு செய்வார்கள் என்ற கதைகள் இந்த நோக்கில்தான் கூறப்பட்டன.
அதனால் ஒளவையாரிடம் முருகப் பெருமான் 'அரியது எது?' என்று கேட்கும்போது 'மானிடராதல் அரிது' என்கிறார்.
எல்லா உலகங்களை விடவும் பூமியே உயர்ந்தது. பூமியிலுள்ள ஜீவன்களில் மானுட ஜீவனே மிகவும் உயர்ந்தது. மீனாய்ப் பிறந்த ஜீவன் தண்ணீரில் மட்டுமே வசிக்கும். பறவையாய்ப் பிறந்தவை மரங்களில் கூடு கட்டி வாழும். துருவங்களில் வசிக்கும் பனிவாழ் உயிர்கள் பாலைவனத்திற்கு வராது. பாலைவன ஜீவன்கள் பனிக்கண்டத்தில் உயிர் தரிக்காது.
Om
மனிதன் மட்டுமே பாலைவனத்திலும் வாழ்வான், பனியிலும் வாழ்வாள், நீரிலும் வாழ்வான், நிலத்திலும் வாழ்வான். அவனால் சைவமும் உண்ணமுடியும், அசைவமும் உண்ணமுடியும். அளவுக்கு மீறியும் உண்பான், அடியோடு உண்ணாமலும் இருப்பான்.'
மிருகங்களும்,பறவைகளும் வசந்த பருவத்தில் இணை கூடும். இதர காலங்களில் இயல்பாக இருக்கும். மனிதன் காமமாயினும், கோபமாயினும் இஷ்டப்பட்டால் செலுத்துவான். இல்லையேல் நிறுத்துவான்.
இறைவனை உணரக்கூடிய வாய்ப்பும், இறைவனை தரிசிக்கும் சந்தர்ப்பமும், இறைவனுடன் இரண்டறக் கலக்கும் வரமும் மனிதனுக்கு மட்டுமே உண்டு.
இத்தகைய மகத்தான மானிடப் பிறவியை பெற்றவர்கள் அதனை சரியானபடி செலுத்தினால் மட்டுமே பிறப்பின் மூலத்தை அறிய முடியும். அப்படி பிறவியின் மூலத்தை உணர்ந்தவர்கள் மட்டுமே பிறவித் தளைகளை அகற்ற முடியும்.
ஆதிசங்கரர் முதல் ராகவேந்திரர் வரை இந்த மண்ணில் ஆயிரமாயிரம் மகான்கள் தோன்றியுள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கடைத்தேற்றத்துக்கான வழிகளைக் கண்டறிந்துள்ளனர்.
அவர்கள் காலத்தில் அவர்களுக்கு சொல்லித்தர ஆட்களே இல்லை. அவர்கள் தாமே தீவிரமாக இறங்கி விழுந்து, எழுந்து இறுதியில் இலக்கை எட்டினர். நம்மைப் போல் ஆத்மதாகம் கொண்டு தேடித் திரிபவர்களுக்கு இத்தகைய இடையூறுகள் ஏற்படக் கூடாது என்று அவர்கள் எளிமைப்படுத்தப்பட்ட வழிகளை அளித்துள்ளனர்.
எப்படி அரசாங்கம் பள்ளிகளுக்கு வரையறுக்கப்பட்ட பாடத் திட்டத்தை அளித்துள்ளதோ, அதன்படி கல்வி கற்கும் ஒருவன் எப்படிப் படிப்படியாக உயர்ந்து இறுதியில் பட்டதாரியாக வெளி வருவானோ அதுபோலவே இந்த மகான்களால் அளிக்கப்பட்ட வழிபாட்டு முறைகளே ஆன்மீக பாடத்திட்டம் என்று கூறலாம்.
இவற்றைப் பின்பற்றும் ஒருவன், பள்ளிமாணவன் படிப்படியாக மேல் வகுப்புக்குச் செல்வதுபோல் ஆன்மீக
நிலையில் படிப்படியாக உயர்ந்து இறுதியில் உச்ச நிலையாகிய பிறப்பற்ற நிலையை எட்டுகிறான். கீதையில் அர்ஜுனனுக்கு மோட்ச சூத்திரத்தை விளக்கும் கிருஷ்ணன், "இப்படிப் படிப்படியான யோக சாதனைகள் மூலம் உயரும் ஜீவனானது இறுதியில் என்னை அடைந்து என்னுள் தங்கி
நிலைபெறுகிறது' என்கிறார். இந்தியாவின் மதங்கள் மட்டுமல்ல, உலகின் அனைத்து மதங்களிலுமே இது உண்டு. மலையின் மீது ஏறிச் சென்று அதன் உச்சி சிகரத்தில் கடவுளை நேருக்கு நேர் கண்டார் மோசஸ் என்கிறது யூத மதம். 40 ஆண்டுகள் வனாந்தரத்தில் திரிந்த மோசஸ் இறுதியாக இறைவனைக் காண்கிறார். தனக்குக் கிட்டிய வாய்ப்பு மற்றவர்களுக்குக் கிட்டுமா? அல்லது தன்னைப் போல் மற்றவர்கள் அலைந்து திரிய முடியுமா என்ற எண்ணத்திலேயே எல்லா மக்களுக்கும் ஏற்ற நெறிமுறைகளை கடவுளிடமே கேட்டுப் பெற்று ‘பத்து கட்டளைகள்' என மனித குலத்துக்கு அளிக்கிறார்.
இப்படி இறை நிலை பெற்ற ஒவ்வொரு மகானும் மனிதர்கள் வாழும் நெறி பற்றியும், பின்பற்ற வேண்டிய அறமுறைகள் பற்றியும் உபதேசித்துள்ளனர். நமது இந்தியத் திருநாட்டில் தோன்றிய நமது மூதாதையர் மனிதர்கள் வாழ வேண்டிய நெறிமுறைகள் பற்றி எண்ணற்ற வழிமுறைகளை வகுத்து வைத்துள்ளனர்.
மேலை நாடுகளில் ஒரு குறிப்பிட்ட மகானை மட்டும் பின்பற்றி, அவர் காட்டிய வழிமட்டும்தான் உயர்ந்தது என்றும், மற்ற வழிமுறைகள் அனைத்துமே தாழ்ந்தவை என்றும் கூறும் போக்கே மக்கள் நடுவே இன்றுவரை பரவியுள்ளது அதனாலேயே மத ரீதியான வன்முறைகள், தாக்குதல்கள், மதமாற்றம் போன்றவை பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டன.
நமது முன்னோர்கள் மிகுந்த விசாலமான இதயமும், பரந்த மனப்பான்மையும் கொண்டவர்களாக இருந்தனர். அதனால் எல்லாவற்றையும் ஏற்கும் உயர்ந்த பரிபக்குவம் அவர்களிடம் இருந்தது. தவிர மனிதர்கள் பலதரப்பட்டவர்கள். அவர்களது சூழ்நிலைகள், மனநிலைகள், வாழ்வு முறைகள் எல்லாடே பல்வேறு விதமானவை. அப்படி இருக்க அத்தனை மனித களையும் ஒரே வகையில் திணிப்பது சரியல்ல என்றும் அவர்கள்
கருதினர். அதனாலேயே வழிபாடுகளில் கூட எண்ணற்ற முறைகளை அவர்கள் கொணர்ந்தனர்,
இதில் முக்கியமானது என்னவென்றால் வழிபாடுகளின் நோக்கமே, ஆன்மீகத்தின் முக்கிய இலக்கே அலைபாயும் மனத்தை ஒரு குறிப்பிட்ட வழிக்குள் கொண்டு வருவதுதான். மனதை அடக்குவது என்பது எளிதான காரியம் அல்ல. ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்' என்பது போல் மனம் எந்த வழியை விரும்புமோ அந்த வழியில் சென்றுதான் அதனை அடக்குதல் வேண்டும்.
இதனாலேயே நமது முன்னோர் உருவ வழிபாட்டை விரும்புபவர்களுக்கு உருவ வழிபாட்டு முறைகளை அளித்தனர். கடவுளை தாயாக எண்ணி வழிபடுவோர் சக்தியையும், குழந்தையாக எண்ணி வழிபடுவோர் பால வடிவங்களையும், துன்பங்களி லிருந்து காப்பவனாக வழிபடுவோர் உக்கிர வடிவங்களையும் வணங்கும் வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.
இறைவனை எங்கும் பரவியிருக்கும் ஏகனாக எண்ணுபவர்கள்
வெட்டவெளி, உருவ வழிபாடு, ஜோதி வழிபாடு என நிகழ்த்தவும்
வழிவகைகள் செய்யப்பட்டன.
உருவமாகவும், அருவமாகவும் வணங்கும் அருவுருவ வழிபாடாக லிங்க வழிபாடு தோன்றியது. மேலும் தீவிரமான ஆன்மீக நாட்டம் உடையவர்களுக்காகப் பல்வேறு முறைகளும், அன்றாட குடும்பச் சுமைகளில் மூழ்கி அவ்வப்போது இடையிடையே இளைப்பாறலாக நாடுபவர்களுக்கு சில முறைகள் என பல்வேறு விதமான முறைகள் உண்டாக்கப்பட்டன.
இருக்கும் இடத்திலேயே இறைவனை வணங்குபவர்களுக்கு என யோக சாஸ்திர முறைகள் உண்டாயின. அதனை விரதம் போல் கடைப்பிடிப்பவர்களுக்கு என ருத்ராட்ச மணிகள், துளசி மாலை இவை ஏற்படுத்தப்பட்டன. இவர்கள் மணிகளை உருட்டியபடி 108 தடவை, 1008 தடவை என்று ஜெபம் செய்யத் துவங்கினர். இத்தகைய நியதிகளை விரும்பாதவர்கள் வெறுமனே இறைவனின் திருஉருவப் படத்துக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
தினமும் காலை, மாலை, ஆலயம் சென்று வழிபடுவதை சிலர் வழக்கமாகக் கொண்டனர். ஊர், ஊராகச் சென்று திருக்
கோயில்களை தரிசிப்பதை சிலர் விரும்பினர். புனித நதிகளில் நீராடுவது, புண்ணியத் தலங்களை தரிசிப்பது இப்படி பல்வேறு வகையான வழிபாடுகள் மக்கள் மத்தியில் பரவி நிலை பெற்றன. யார் யார் எந்த எந்த வழியைப் பின்பற்றுவதாக இருப்பினும் அதனை செம்மையாக செய்யும் முறைகளை மூதாதையர் தெளிவாக விளக்கி வகுத்து வைத்தனர்.
வேளா வேளைக்கு உண்டு உறங்கும் குழந்தையின் உடல் வளர்வது தெரியாமல் புஷ்டியாக வளர்வது போல் இவற்றின் மூலமாக மனிதனின் மனமும் அபார வளர்ச்சி பெற்று பிறவித் துயரிலிருந்து மீள வழி கண்டுபிடிக்கும் என்பதே அவர்களின் கருத்து. ஒளி என்பது எப்படி இருக்கும் என்பதை ஒளி தரும் வெளிச்சத்தின் மூலமே அறிவது போல் மனம் என்ற ஒன்றைக் கட்டுப்படுத்த அந்த மனம் மூலம் தான் முயற்சிக்க வேண்டும்.
மனிதனின் வாழ்வு நிலையானது அல்ல. இதில் முற்பிறவி என்பதோ மறுபிறவி என்பதோ நாமறியாதவை. இப்பிறவி ஒன்று மட்டும்தான் நிலையான உண்மை. இந்தப் பிறவியைக் கொண்டுதான் நாம் நமது கர்ம வினைகளையும் நீக்கியாக வேண்டும். இப்பிறவியின் மூலம்தான் மறுபிறவியை வென்றாக வேண்டும். இப்பிறவியின் மூலம் தான் முக்திக்கான வழியையும் தேடியாக வேண்டும்.
கபிலர் அகவல் நூலில் கபிலர் பாடுகிறார்.
"எப்போதாயினும் கூற்றுவன் வருவான்
அப்போது அந்தக் கூற்றுவன் தன்னை
போற்றவும் போகான்; பொருளொடும் போகான்;
நல்லார் என்னான்; நல்குரவு அறியான்;
தீயார் என்னான்; செல்வரென்று உன்னான்;
தரியான் ஒருகணம் தறுகணாளன் உயிர்கொடு போவான்; உடல்கொடு போகான்
ஏதுக் கழுவீர்? ஏழை மாந்தர்காள்!
உயிரினை இழந்தோ? உடலினை இழந்தோ?"
நாடு முழுவதும் ஞானியர் பலர் போற்றிப் பாராட்டிய பாடல்இது. இதில் அவர் கூறுகிறார்:
''காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது.நாட்கள் உருண்டு கொண்டே இருக்கின்றன. ஒருநாள் திடீரென எமன் வருவான்.
அவன் வரும் வேளைக்கு முன்னதாகவும் வரமாட்டாள். தாமதமாகவும் வரமாட்டான். முன்னறிவிப்பும் தரமாட்டான்' அவன் வந்த பின் அவனைப் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் போகமாட்டாள். நல்லவன், தீயவன், ஏழை, செல்வந்தன் என்று உடலை பேதம் பார்க்க மாட்டான். ஒரு கணமும் தாமதிக்க மாட்டான்' உயிரை மட்டும் கொண்டு போவான். உடலைச் சீண்டவும் மாட்டான். அறியாத பேதைகளே! எதற்கு என்று அழுவீர்?! விட்டு உயிர் போய் விட்டதே என்று அழுவீரா? அல்லது உயிரை உடல் விட்டு விட்டதே என்று அழுவீரா?'
அழியப் போகும் உடலுக்காக அழுவதோ, அல்லது உடலை விட்டு நீங்கிய உயிருக்காக அழுவதோ இரண்டுமே வீண்வேலை. உயிர் போவதும், உடல் அழிவதும் நிச்சயம் நடக்கப் போகும் உண்மை. ஆகவே உயிர் போன பின்பு, வருந்துவதை விட, இருக்கும் போதே மரணத்துக்கு அஞ்சுவதை விட வாழும் காலத்திலேயே எது உகந்ததோ அதனைச் செய்து விட வேண்டும்.
கபிலர் கூறிய புகழ் பெற்ற வரிகள்தான், 'ஒன்றே செய்க; ஒன்றும் நன்றே செய்க; நன்றும் இன்றே செய்க; இன்றும் இன்னே செய்க' என்பது ஆகும்.
நாளை என்று எதையும் தள்ளி வையாதே. நாளை என்பது
இல்லாமலே போகக் கூடும். உடனடியாக இப்போது செயல்படு
என்பதுதான் இதன் பொருள்.
இதனை எல்லா இடத்திலும் எல்லோரும் உபயோகப்படுத்தி உள்ளனர். கல்வியின் சிறப்பை வலியுறுத்துவோரும் கூறியுள்ளனர். இளமை போனால் திரும்பாது என்பதால் ஆக்கப்பூர்வமானவற்றை இப்போதே செய்ய வேண்டும் என்பதற்காகவும் கூறியுள்ளனர்.
உள்ளுக்குள்ளே இறைவனைத் தேடி அடைவது ஒருவகை. வெளியில் தேடி எல்லாப் பொருள்களுமே இறைவனின் ரூபம்தான் என்று கடைசியில் கண்டறிவது மற்றொரு வகை. ஒன்று உள்முகப் பார்வை. மற்றொன்று வெளிமுகப் பார்வை. இதில் வெளிமுகப் பார்வையாக 'தன்னைப் போல் பிறரையும் நேசி' என்பது ஏசுவும், 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பது அப்பர் பெருமானும் காட்டிய வழியாகும்.
எல்லாப் பொருள்களுமே ஒன்றில் இருந்துதான் தொடங்கின. எல்லாமும் அந்த ஒன்றிலேயே இறுதியில் நிலை பெறுகின்றன.
ஓம்..
இதில் நான் என்பது எது? நீ என்பது எது? அது, இது, அவன், இவன் எல்லாமே அந்தக் காணாப் பொருளின் பல்வேறு காணும் வடிவங்களே.
இப்படிப்பட்ட பார்வை வெளிமுகப் பார்வை. இந்த வெளிமுகப் பார்வையை அடைய ஆலய வழிபாடு போன்றவைதான் உசிதமானவை. ஆகம விதிகளின்படி எழுப்பப் பெற்ற உயர் அதிர்வுகளுடன் கூடிய ஆலயங்களை தரிசித்தல், தீர்த்த யாத்திரை செய்தல், புனிதத் தலங்களை தரிசித்தல் போன்றவை இவற்றில் அடங்கியவை.
தவிர நமது மனம் எந்த ஆலயத்தில் மிகவும் ஒன்றுகிறது என்றறிந்து அந்த ஆலயத்தில் காலை, மாலையோ, அல்லது காலை அல்லது மாலை என ஏதாவது ஒரு வேளையோ தினமும் சென்று வணங்கி வழிபட்டு வலம் வருதல் ஒரு வகை. தினந்தோறும் குறிப்பிட்ட ஆலயம் சென்று வழிபாடு செய்ய, மனமானது படிப்படியாக ஒன்ற ஆரம்பிக்கும்.
உள்முகப் பார்வை என்பது கண்களை மூடிப் புலன்களை அடக்கி தன்னுள் தானே அமிழ்ந்து தேடுதல். இதற்கு அந்தக் கரணம் என்று பெயர். பெரும்பாலும் சித்தர்கள் கண்ட வழி இது. பிரம்மச்சாரிகளுக்கு உகந்த பாதை இது. அதே சமயம் இல்லறம் நடத்தும் கிரகஸ்தர்களுக்கு இந்த வழி அவர்களது அன்றாட வாழ்வில் குடும்ப ரீதியான பிரச்சனைகளையும், சிக்கல்களையும் உண்டாக்கும் என்பதால் மனைவி, மக்கள் என குடும்பம் நடத்துபவர்கள் வெளிமுகப் பார்வையை மட்டுமே உகந்தது என்பர்.
இல்லறம், துறவறம் இரண்டிலுமே சிறப்புக்களும் உண்டு. சங்கடங்களும் உண்டு. எனினும் இரண்டுமே சிறந்த வழிகள்தான். எனவேதான் இரண்டுமே அறம் என்ற அடைமொழியுடன் போற்றப்படுகின்றன.
எல்லோருக்கும் தெரிந்த கதை ஒன்று உண்டு. சிறந்த விஷ்ணு பக்தர் நாரதர். திரிலோக சஞ்சரியான அவர் எந்தப் பலனையும் எதிர்பாராது பக்தி செலுத்துபவர். எப்போதுமே அவரது வாயிலிருந்து உதிரும் சொல் 'நாராயணா' என்பதுதான். மூச்சுக்கு முப்பது தடவை நாராயணனின் நாமத்தை ஜபிப்பவர் அவர்.
ஒருமுறை நாரதரின் மனத்தில் லேசான கர்வம் மூண்டது. 'என்னை விட சிறந்த விஷ்ணு பக்தன் எவனும் இல்லை' என்ற எண்ணம் அவருள் ஓடியது. அவர் மனத்துள் தோன்றிய எண்ணத்தை அறிந்த கிருஷ்ணர் சிரித்தார். ஒரு சிறிய கிண்ணம் நிறைய எண்ணெய்யை வரவழைத்த கிருஷ்ணர் அதை நாரதரின் கையில் கொடுத்தார்.
"நாரதா! இந்தக் கிண்ணத்திலிருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட சிந்தக் கூடாது. இதனைக் கையில் ஏந்தியபடி மூன்று உலகங்களையும் ஒருமுறை சுற்றி வா" என்றார்.
கையில் எண்ணெய்க் கிண்ணத்தை ஏந்தியபடி நாரதர் மூன்று உலகையும் மெல்ல அடிமேல் அடி வைத்தபடி வலம் வந்தார். அவர் சுற்றி முடித்த பின்னர் அவரை அழைத்த கிருஷ்ணர் கேட்டார்.
"என்ன நாரதா? மூவுலகையும் வலம் வந்தாயா?"
"வந்தேன்" என்றார் நாரதர்.
"எண்ணெய் சிந்தாமல் வலம் வந்தாயா?" "ஒரு பொட்டு கூட சிந்தவில்லை. ஜாக்கிரதையாக மெல்ல அடிமேலடி வைத்து வந்தேன்.''
"நல்லது, நீ வலம் வந்தபோது எத்தனை முறை என் பெயரை உச்சரித்தாய்?"
திகைத்துப் போனார் நாரதர். “கையிலிருக்கும் எண்ணெய் சிந்தக் கூடாது என்பதில் என் முழு கவனமும் அடங்கி இருந்ததால் எனக்கு நாராயண நாமத்தை உச்சரிக்கவே தோன்றவில்லை."
"என்ன நாரதா இது? ஒரு சிறு கவலை வந்ததும் என்னையே மறந்து விட்டாயே!” என்ற கிருஷ்ணர், "சரி, நீ பூலோகம் போய் யமுனை நதிக் கரையில் வசிக்கும் விவசாயி ஒருவனின் ஒருநாள் செயல்களைக் கவனித்து வா" என்றார்.
நாரதரும் பூமிக்கு வந்தார். கண்ணுக்குத் தெரியாமல்,காற்றோடு
இருந்தபடி கிருஷ்ணன் சொன்ன அந்த விவசாயியைக் கவனித்தார்.
மிகப் பெரிய குடும்பஸ்தனான அந்த விவசாயியின் வீட்டில் தாய், தந்தை, மகன், மகள், மருமக்கள், பேரன் - பேத்திகள் என ஏராளமானவர் இருந்தனர். நாள் முழுவதும் சண்டையும், கூச்சலும் நிம்மதியற்ற பூசலும்தான் அந்த வீட்டில் இருந்து வந்தது. விவசாயிகாலையில் நிலத்தில் வேலை செய்யக் கிளம்பிய போது 'நாராயணா' என்றான் ஒரு முறை. பிறகு இரவு படுக்கப் போகும்போது ஒருமுறை 'நாராயணா' என்றான். அவ்வளவே.
நாரதர் திரும்பி வந்தார். "மொத்தம் இரண்டே இரண்டு முறைதான் அவன் உங்கள் பெயரை உச்சரித்தான்" என்றார். இதைக் கேட்ட கிருஷ்ணர் சிரித்தபடி, “அன்றாடம் ஆயிரம் கவலைகளில் உள்ள அவன் தினமும் இரண்டு முறை என்னை நினைக்கிறான். எந்தக் கவலையும் இல்லாத நீ எண்ணெய் சிந்தக் கூடாது என்ற ஒரே ஒரு கவலையில் என்னை மறந்து விட்டாய்" என்றாராம்.
நியம, நிஷ்டைகளுடன் கூடிய துறவிகளை விட வெறும் பெயரை உச்சரிக்கும் குடும்பஸ்தன் உயர்ந்தவன் என்பதை விளக்க இது போன்ற கதைகள் பலவும் கூறப்பட்டுள்ளன.
குடும்பஸ்தர்களுக்காகவே ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட்டன. ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று' 'கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டா' என்பன போன்ற தத்துவங்களும், பழமொழி களும் இதற்காகவே உண்டாயின. அதிகாலை எழுந்து நீராடி ஆலய தரிசனம் செய்வது, மாலையில் கோயிலுக்கு செல்வது போன்ற வழக்கங்களும் ஏற்பட்டன.
ஆலய வழிபாட்டு முறைகள் வேதங்களிலும், தர்ம சாஸ்திரங் களிலும், ஆகமங்களிலும் விவரிக்கப்பட்டு 'வேதாந்தங்கள்' என்று பெயர் பெற்று விளங்கின.
இல்லறவாசிகள் வெளிமுகப் பார்வை என்று இறைவனை அடைய நேரும் போது துறவிகள் புலன்களை அடக்கி, உணவையும், நீரையும் கூட படிப்படியாக கைவிட்டு உள்ளே அவனைக் காண முயன்றனர். இந்த உள்முகப் பார்வை 'அந்தக் கரணம்’ ‘அந்தர்முகம்' எனப்பட்டது.
இத்தகைய முயற்சிகளில் வெற்றி கண்டவர்கள் சித்தர்கள்எனப்பட்டனர். இவர்களால் கற்பிக்கப்பட்டவை சித்தாந்தம்
எனப்பட்டது. கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில்,
"தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் - அது தெரியாமற் போனாலே வேதாந்தம்"
என்று பாடுகிறார்.
தெளிவாக வரையறுக்கப்பட்டதுதான் சித்தாந்தம், எதை, எப்போது எப்படி துவங்குவது? எப்படி நடத்துவது? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்று தெளிவாக விவரித்து சித்தாந்தங்கள் கூறியுள்ளன.
வேதாந்தங்கள் அப்படி தெளிவாக வரைமுறையுடன் இருப்பது
இல்லை. மேம்போக்காகவே அவை விவரிக்கும். எஞ்சியவற்றை
அவரவர்க்கு ஏற்றபடி பயன்படுத்த விட்டுவிடும்.
ஆலய வழிபாடு செய் என்று வேதாந்தம் கூறும். செய்யா விட்டால் வற்புறுத்தாது. நவக்கிரகங்களை ஒன்பது முறை வலம் வரலாம் என்று கூறுவர். 'நேரமில்லை. ஒரே ஒரு சுற்றுதான் சுற்றினேன்" என்றால் 'பரவாயில்லை' என்று கூறுமே தவிர தவறு என்று கண்டிக்காது.
சித்தாந்தங்கள் வளைந்து கொடுக்காது. வேதாந்தம் வளைந்து கொடுக்கும். சித்தாந்தங்களில் சட்ட திட்டங்கள் முக்கியம். வேதங்கள் மனிதனை மதிப்பவை. மனித மனம் அலைபாயக் கூடியது. அதனால் ஓரிரு தவறுகள் ஏற்படுவது சகஜம் என்று ஏற்றுக் கொள்ளும்.
கண்டிப்பான பேர்வழிகளை 'முரட்டு சித்தாந்தவாதி' என்று கூறுவதையும், கண்டிப்பு காட்டாதவர்களை 'வெறும் வரட்டு வேதாந்தி' என்று கூறுவதையும் இயல்பாகக் காண முடியும்.
சித்தாந்தம்-வேதாந்தம் இரண்டையும் ஹோமியோபதி அலோபதி சிகிச்சைகளுடன் ஒப்பிடலாம். ஹோமியோபதி சிகிச்சை நோயின் வேர் வரை சென்று நிரந்தர நிவாரணம் தரக் கூடியது. ஆனால் உணவுக் கட்டுப்பாடு, பத்தியம் என இதற்கென்று சில நிபந்தனைகள் உண்டு. மீறினால் பக்க விளைவுகள் உண்டு.
அலோபதி, நோய்க்கு எதிரான பொருளை கொணர்ந்து சேர்க்கும் முறை. இதில் நிபந்தனைகள் இல்லை. எதையும் சாப்பிடலாம். பக்க விளைவுகள் அற்றது. துரித நிவாரணமே தரும். ஆனால் அடிக்கடி நோய் வரலாம். வராமல் இருக்க மருந்தை அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.
சித்தர்களின் வழி பின்பற்றக் கடினமானது. எனினும் அது நிரந்த மீட்சி அளிப்பது. இதில் யோகம், தவம் பல கட்டுப்பாடுகள் உண்டு. பிரம்மச்சரியம், உணவில் ருசிகளை தவிர்த்தல் எனஏராளமான சட்டதிட்டங்கள் உண்டு. சித்தர்கள் ஆலய வழிபாடு செய்வதில்லை. புனிதத் தலங்கள் என்று எதையும் இவர்கள் கருத மாட்டார்கள்.
'உயிரே இறைவன்; உடம்பே ஆலயம்' என்பது அவர்களது சித்தாந்தம், உடலின் உள்ளே உறையும் ஆன்மாதான் இறைவன். உடலே இறைவனின் ஆலயம். ஆலயம் பாழடைந்தால் அதனுள் இருக்கும் இறைத் தன்மை வெளியேறும். எனவே இறைவன் இருக்கும் ஆலயத்தைத் தூய்மையாக பராமரிக்க வேண்டும். தேவையற்ற உண(ர்)வுகளை தவிர்த்து தூய எண்ணம், தூய சொல், தூய செயல் என இறைவன் வசிக்க ஏற்றதாக உடல், உள்ளம் என்னும் இரண்டையும் பரிசுத்தமாக வைத்து இருந்தால் உள்ளே இறை ஒளி சுடர்விடும்.
இத்தகைய சித்தாந்த வழியை பின்பற்றுபவர்கள் நதி நீராடல், ஆலய தரிசனம் ஆகியவற்றை நாடமாட்டார்கள். ஆசனம், தியானம், நியம - நிஷ்டைகள் என்று அதிகம் ஈடுபடுவர். அவர்கள் 'இருக்கும் இடத்திலேயே இதயப்பூர்வமாக
செய்யும் பூஜை இறைவனை எட்டும். புறப் பொருட்களால் ஆகக்
கூடியது எதுவும் இல்லை' என்பார்கள்.
இத்தகைய பூஜை ஆத்ம பூஜை, மானஸ பூஜை என்று பல
பெயர்களில் வழங்கப்படும்.
எனினும் இந்த உள்முக மற்றும் வெளிமுகத்தேடல் என்னும் இரண்டையுமே நமது தர்ம சாத்திரங்கள் அங்கீகரித்துள்ளன. இரண்டிற்குமான வழிமுறைகளை சிறப்பாக விவரித்துள்ளன.
ஆலய வழிபாடு செய்பவர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? திருவிளக்கு ஏற்றும் முறைகள் எவை எவை? பூஜைக்கு உகந்த மலர்கள் யாவை? இவற்றையெல்லாம் இல்லறவாசிகளுக்காக தர்மசாத்திரங்கள் விவரித்துக் கூறியுள்ளன.
அதேபோல் தியானத்தில் ஈடுபடுவோர், யோகாசனம் பயில்வோர் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளும் தர்ம சாத்திரங்களால் விவரிக்கப்பட்டுள்ளன.
முதலில் ஆலயங்களில் அடங்கியுள்ள ஆன்மீக ஆற்றல் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக