🌍🌏🌎ஜீவன் செல்லும் பாதையில் பரதவித்தல்🌍🌎🌎

 

🌍🌏🌎ஜீவன் செல்லும்பாதையில் பரதவித்தல்🌍🌎🌎



🌍🌏🌎ஜீவன் செல்லும்
பாதையில் பரதவித்தல்🌍🌎🌎

சூதபுராணிகர் நைமிசாரணிய வாசிகளை நோக்கி, "திருமாலின் திருவடி மறவாத பக்தர்களே" என்று கூறலானார்.

கருடனுக்குத்திருமால்பின்வருமாறு கூறியதாவது:-

யமதூதர்களால் பாசக் கயிறால் கட்டுண்டும் அவர்களிடம் உதையுண்டும் செல்லும் ஜீவன், தன் மனைவி மக்களோடு பூமியில் வாழ்ந்த காலத்தில் அடைந்திருந்த இன்பத்தை நினைத்து நினைத்துத் துன்பமடைந்து, பசியாலும் தாகத்தாலும் மெலிந்து சோர்வுற்று, இளைத்து, மிகவும் ஈன ஸ்வரத்தோடு "ஐயகோ! நம்மோடு வாழ்ந்திருந்த மனைவி மக்கள் எங்கே? நம் பெற்றோரும் உற்றோரும் மற்றோரும் எங்கே? உறவினர்கள் எங்கே? நண்பர்கள் எங்கே? ஏவலாளர் எங்கே? எல்லோரும் நம்மைத் தன்னந்தனியாக இந்த யம் படர்களிடம் சித்திரவதைப்படும்படி விட்டு விட்டார்களே! பொய் ஓலை எழுதுதல் முதலிய தீய தொழில்களைப் புரிந்து, மாற்றார் பொருள்களை மதி நுட்பத்தால் கவர்ந்தோமே: அப்பொருள்களாவது இப்போது என்னிடம் இருக்கிறதா? ஊரையடித்து உலையில் போட்டோமே! உழைத்தவன் உழைப்பை உறிஞ்சி, உற்றாரையெல்லாம் சுகிக்க வைத்தோமே! பிறரை நயமாக வஞ்சித்து, அவர்களது பொருளைக் கவர்ந்து நம் குடும்பம் வாழ வேண்டும் என்று மனச்சாட்சிக்கு மாறாக நடந்து பொருள் சேர்த்துச் சுகத்தைக் கொடுத்தோமே!

அப்பொழுது சுகத்தை அனுபவிக்க நம்மோடு கூடிக் குலாவியவர்கள் ஆகிய நம் மனைவி மக்கள், சுற்றத்தார் இவர்களில் யாராவது ஒருவர், இப்போது என்னோடு வந்தார்களா? என்னைத் தனியே போக விட்டு, இந்த யம் படர்களால் அழைத்துச் செல்லப்படும் இத்தகைய கொடிய பாதைகளில் அவதிப்படும்படி என்னை விடுத்து, அவர்கள் மட்டும் நம் வீட்டிலிருந்து சுகம் அனுபவிக்க நாம் ஏன் பிறர் பொருளை வேண்டினோம். நாம் செய்த வஞ்சனையைச் சிறிதும் அறியாமல், நம்மை நல்லவன்


என்றோ. பிறர் உயர்ந்தவன் பொருளை உள்ளத்தைப் புரிந்து கொள்ளும் என்றோ நம்பிச் சீவாதாரமாகிய நம்மிடம் இழந்தோர்களுடைய வயிறு எவ்வாறு எரிந்ததோ, அதுபோல இப்போது நம் வயிறு பற்றியெரிகிறதே? இனிமேல் செய்வோம்? ஏது துடிப்பான். என்ன செய்வோம்" என்று அலறித்

அப்போது அவனை இழுத்துச் செல்லும் யமதூதர்கள், அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து, "அட மூடா! இப்போதுதான் உனக்குப் புத்தி வந்ததோ? உனக்குத்தான் உலகம்! உனக்குத்தான் மனைவி மக்கள்? உனக்குத்தான் உற்றார் உறவினர். உன் வாழ்க்கைதான் உலகில் வாழத்தக்கவன் வாழ வேண்டிய வாழ்க்கை! உன் மனைவி மக்களே உனக்கு நித்தியம் என்று அறஞ் செய்யாமல் அதர்மஞ்செய்து ஆடம்பரமாகப் பூவுலகில் வாழ்ந்தாயே? அத்தகையவர்கள் உனக்கு இப்போது செய்யும் உதவி யாதடா? நீ செய்த புண்ணிய பாவமே உனக்கு இவ்வுலகில் இன்பத்தையும் துன்பத்தையும் தர வல்லன! பூமியில் நீ வாழ்ந்த காலத்தில் தேய்த்தலிலும் துருத்துதலிலும் உன் உடலுக்கு மகிழ்ச்சியும் உன் உள்ளத்திற்கு இன்பத்தையும் தந்ததாக யார் யாரையோ போற்றி அவர்களுக்குப் பொருள் கொடுத்தாய்.

ஆனால் உழைத்தவன் தனக்குரிய ஊதியத்தை உன்னைக் கெஞ்சிக் கேட்டாலும் "மனிதாபிமான உணர்ச்சியோடு வர்த்தகம், தொழில்

முதலானவற்றையெல்லாம் இணைக்கக்கூடாது" என்று ஏதேதோ உனக்குத்தான் சாதுர்யமாகப் பேசத் தெரியும் என்று பேசி அவனை அனுப்பி, இச்சைக்குரியவள் எந்த நேரத்திலும் இவ்வுடலுக்கு இன்பந் தருபவள் என்றெல்லாம் விலைமகளை உன்னுடையவளாகவே நினைத்துப் போற்றிப் புகழ்ந்த உன் மனிதாபிமானம் மங்கையபிமானம் ஆயிற்றே. அதனை இணைத்துத் தொழில் புரிந்தாயே! அத்தகையவர்கள் இப்போது எங்களிடம் நீ படுகின்ற அடியின் தழும்புப் புண்களைத் தடவியாவது கொடுக்க முன் வந்தார்களா? பிறர் பொருளை அபகரித்தல் முதலிய அதர்மங்களைச் செய்யாமல் தர்மஞ்செய்தவனாயின் உனக்கேன் இப்போது இந்தக் கேடு வருகிறது? எங்கள் கைகளில் அகப்பட்டு நீயேன் விழிக்க வேண்டும்? நீ ஏன் இப்போது தவித்துத் துடித்துக் கதற வேண்டும்? இப்போது ஏன் எங்களை விழித்துப் பார்க்கிறாய்?" என்று பேரொலியுடன் கண்டித்து, மீண்டும் பாசத்தால் நையப் புடைத்து முசலத்தால் புடை புடையென்று புடைப்பார்கள்!

"கருடா! தீய தொழில் புரிந்தோர் அடையும் கதியைப் பார்! பிறகு அந்தச் சேதனன் சிறிது தூரம் காற்றின் வழியிலும் சிறிது தூரம் புலிகள் நிறைந்த வழியிலும் யமகிங்கரர்களுடன் சென்று ஓரிடத்தில் தங்கி, இறந்த இருபத்தெட்டாம் நாளில், பூமியிலுள்ள தன் புதல்வனால் செய்யப்படும் ஊனமாகிய சிரார்த்த பிண்டத்தைப் புசித்து முப்பதாம் நாளன்று யாமியம் என்ற நகரத்தைச் சேர்வான். அங்கு பிரேதக் கூட்டங்கள் கூட்டங் கூட்டமாகக் குடியிருக்கும். புண்ணிய பத்திரை என்ற நதியும் வடவிருட்சமும் அங்கு உள்ளன. சிறிதளவு நேரச் சிரமப் பரிகாரத்தை முன்னிட்டு, யமகிங்கரர்களின் உத்தரவுக்குப் பயந்து அவ்யாமியம் என்ற நகரத்தில் சிறிது காலம் தங்கியிருந்து விட்டு இரண்டாவது மாசிக பிண்டத்தை அருந்தி, இரவிலும் பகலிலும் யமகிங்கரர்களால் இழுத்துச் செல்லப்பட்டு, யாருக்கும் பயத்தை ஏற்படுத்தும் ஆரண்யத்தின் ஊடே சென்று, வழி நடக்கும் வேதனையோடு ஓவென்று ஓலமிட்டு அழுது, தூதர்கள் செய்யும் கொடுமையால் மிகவும் வருந்தித் துன்பமுறச் செல்லும் வழியில் திரைபக்ஷிக மாசிக பிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற அரசனுக்குரிய சௌரி என்ற நகரத்தைச் சார்ந்து, அங்கு மூன்றாம் மாசிக பிண்டத்தைப் புசித்து அப்பால் சென்று. வழியிலே பொறுக்கமுடியாத குளிரினால் மிகவும் வருந்துவான்.

அங்கு யமகிங்கரர்கள் பலர் ஒன்றாகச் சேர்ந்து, வருந்துகின்ற அந்த ஜீவனின் மீது கற்களை எறிவார்கள். அந்தக் கல்மழையினால் வருத்தம் அடைந்து குருரன் என்ற வேந்தனின் ஆளுகையில் இருக்கும் குருரபுரம் என்ற பட்டினத்தை அடைந்து அங்கு ஐந்தாவது மாசிக பிண்டத்தையுண்டு, அப்பால்நடந்து கிரௌஞ்சம் என்ற ஊரையடைந்து அந்த ஊரில் ஆறாவது மாசிக பிண்டத்தை உண்டு, அரை முகூர்த்தகாலம் வரை அங்கே தங்கியிருந்து. சிரமப்பரிகாரம் செய்து கொண்டு பிறகு யாவரும் பயப்படும்படியான பயங்கர வழியிலே செல்வான். அந்த வழியிலே போகும்போது முன்பு பூமியில் தான் வாழ்ந்ததையெல்லாம் நினைத்து நினைத்து வாய் விட்டுப் புலம்புவான். அப்போது யமபடர்கள் சினங் கொண்டு அவ்வாயிலேயே புடைப்பார்கள். அடுத்தடுத்து அந்த ஜீவன் யமகிங்கரர்களால் துன்பப்பட்டு வருந்திச் செல்லும் வழியில் அஞ்சத்தக்க ரூபமுடைய படகோட்டிகள் பதினாயிரம் பேர்கள் கூட்டமாக அவன் முன்பு ஓடிவந்து, தீப்பொறி பறக்க விழித்து "ஏ, ஜீவனே! உன்னைக் குறித்து எப்போதாவது வைதரணி கோதானம் என்ற தானத்தைச் செய்திருந்தாயானால், இனி நீ கடந்து செல்ல வேண்டிய வைதரணி நதியை நீ இனிதாகக் கடக்க, நாங்கள் உனக்கு உதவிசெய்வோம்.

இல்லாவிட்டால் அந்த நதியிலே உன்னைத் தள்ளிப் பாதாளம் வரையிலும்அழுத்தித் துன்பப்படுத்துவோம். "ஓ ஜீவனே! அந்த வைதரணி நதி,


நூறு யோஜனை நீளமுடையது. நதியென்றால் நீர் பாயும் என்று நினைத்துவிடாதே! அந்த நதியிலே தண்ணீரே இராது! இரத்தமும் சீழும், சிறுநீரும். மலங்களுமே நிறைந்து துஷ்ட ஐந்துக்களிலும் கொடிய நதியின் ஐந்துக்கள் வாழும் இடமாக இருக்கிறது. நாற்றம் அறியும் நாசியில்லாத பிராணியும் அந்த துர்நாற்றத்தைப் பொறுப்பது அரிது! ஜீவனே! நீ பூவுலகில் உடலோடு வாழ்ந்த காலத்தில் உன் கையால் கோதானம் செய்திருந்தாயேயானால், ஒரு பசுவானது என்பதற்கு இங்குவந்த உன்னை இந்த நதிக்கப்புறம் சேர்த்து விடும்படிச் செய்யவேண்டும் அடையாளமாக எங்களருகே வந்து நிற்கும். அத்தகைய தானத்தை நீ செய்திராவிட்டால் அந்த அடையாளப் பசுவும் வரமாட்டாது. நீ அந்த வைதரணி நதியிலே விழுந்து கிடந்து, நீண்ட நெடுங்காலம் மூழ்கித் தவிக்கவேண்டும்!” என்று ஓடக்காரர்கள் கூறுவார்கள்.

"ஓ, வைனதேயனே! அத்தகைய வைதரணி நதியை, பூவுலகில் வாழ்ந்து வாழ்நாள் முடிந்து இறந்து எமனுலகம் செல்லும் வழியில் கடக்கவேண்டிய நிலை ஒவ்வொரு ஜீவனுக்கும் இருப்பதால், பாரத வருஷத்தில் பிறந்து வாழ்கின்ற ஜீவன்கள் அந்த நதியைக் கடக்கும் பொருட்டு, அந்த வைதரணி கோதானம் என்ற தானத்தைச் செய்யவேண்டும். அந்த ஜீவன், பூவுலகில் வாழ்ந்த காலத்தில் செய்யாமற் போனாலும் அவனிறந்த பிறகு அவன் குலத்தில் பிறந்த அவன் மகனாவது அவனைக் குறித்துச்செய்யவேண்டும். அப்படிப்பட்ட வைதரணி கோதானத்தைச் செய்திருந்தால், அந்த ஜீவன், அந்த நதியைக் கடந்து நமனுக்கு இளையோனாகிய விசித்திரன் என்பவனது பட்டினத்தைச் சார்ந்து, ஊனஷானி மாசிகப் பிண்டத்தை உண்டு அங்கிருந்து புறப்படும்.

ஜீவன் ஏழாம் தானம் செய்யாத மாசிகப்பிண்டத்தை உண்ணும்போது சில பிசாசுகள் அவன் முன்பு பயங்கரத் தோற்றத்துடன் தோன்றி, அந்த ஜீவனைப்பார்த்து, “அடா மூடனே! நீ பூவுலகில் வாழ்ந்திருந்த போது உன்னைப் பெரிய மனிதன் என்று நம்பி வந்து, உன்னை யாசித்தவர்களுக்கு ஒன்றும் கொடுப்பதற்கில்லை என்று உன்
வாய்க்குவந்தபடி அனுப்பினாய் இழித்தும் பழித்தும் அல்லவா? இப்போது பசிக்கென்று, உனக்காக சிரார்த்தத்தைச் செய்து, உன் கைக்குக் கிடைத்து, நீ ஆவலோடும் பசியோடும் புசிக்கத் துடிக்கும் அன்னம் இந்த நீ பதற்கு உரியதல்ல. அதை எங் க ளி ட ம் கொடுத்துவிடு!" மாதந்தவறாமல் ..
எ ன் று பலவந்தமாகப் பிடுங்கிப் பறித்துக் கொண்டு சென்று விடும்.

"பறவைகளின் அரசே! ஒரு பொருளுமே இல்லாத வறிஞனாகப் பூவுலகில் வாழ்ந்தாலும் கூட தன்னை யாசித்தவர்களுக்கு இல்லை என்று பதில் சொல்லி அனுப்பாமல், தன்னால் இயன்றதையோ, தன்னால் செய்யக்கூடிய சிறு உதவியையாவது. தன்னை யாசித்தவனுக்குக் கொடுத்தேயாக வேண்டும். அப்படிக் கொடுக்க மறுத்தவன், யாசகம் கேட்டவனைக் குறை கூறிய ஜீவன், உலகில் மரித்து, இந்த விசித்திரம் என்னும் பட்டினத்திற்கு யமதூதர்களால் இழுத்து வரப்பட்ட சமயத்தில், பூமியில் அவன் புத்திரன் அவன் பொருட்டுக் கொடுக்கும் மாசிக பிண்டம், அவனுக்குச் சேராமல் பைசாசங்களின் கரங்களிலேதான் சேரும்.

பிறகு அந்த ஜீவன் பசியோடு இருந்து பேய்கள் பறித்த போது தன்கையிலிருந்து சிதறிய பிண்டத்தின் மிச்சத்தை உண்டு, "ஐயகோ! நான் பூமியில் உண்டு கொழுத்து, உணவுப் பொருள்களைப் பதுக்கி வைத்துக் கொண்டு, என்னிடம் யாசகம் கேட்டவர்களுக்கு, யாசகம் கொடுக்காமல் மறுத்த பாவத்தின் பயனோ இது? கடத்தற்கரிய வழியை யெல்லாம் கஷ்டமாகக் கடந்து வந்தேனே! அந்த வழியெல்லாம் நடந்து வந்தேனே! வயிறு பசிக்க,


நாக்கு வறள இப்போது நான் தவிக்கும் தவிப்பைக் கேட்பவர்கள் இந்த யமகிங்கரர்களையும் பிசாசுகளையும் தவிர, ஒருவருமில்லையே! "வயிறு பசிக்கிறது! ஏதாவது கொடுங்கள்!" என்று என்னைப் போன்ற ஒரு மனிதன் தன் சப்த நாடிகளையும் ஒடுக்கிக்கொண்டு பூமியில் பொருள் மிகுந்தவனாக வாழ்ந்த என்னை நவ்வியபோது. அவனுக்கு அரைவயிற்றுப் பசிதீரவாவது அன்னம் கொடுத்தேனா? சாக்காடு என்று ஒன்று நிச்சயமாக இருக்கிறது என்று புராணங்களில் படித்ததை நம்பினேனா! செத்த பிறகு என்ன கதிவந்தால் என்ன, இருக்கும்போது நமக்கு ஏன் கவலை!" என்று இறுமாந்திருந்தேனே! இப்போது இங்கு நான் படும் தொல்லையை யாரிடம் சொல்வேன்? என்னவென்று சொல்வேன்!" என்று துக்கப்படுவான்.

அப்போது அவனருகே இருக்கும் யமகிங்கரர்கள் அவனைப் பார்த்து "முழு மூடனே! பூமியில் பிறக்கும் வாய்ப்பைப் பெற்று, மனிதனாகப் பிறந்தவனது மானிட ஜன்மம் அரிது; அந்த ஜன்மம் ஜீவனுக்கு வேண்டியவற்றை எல்லாம் அளிக்கவல்ல கற்பகவிருட்சம் என்று சொல்லத்தகும். மானிடப் பிறவியைப் பெற்ற ஜீவனுக்கு அரியது எது? அவன், இம்மைக்கும் மறுமைக்கும், தருமங்களையும், தானங்களையும், பூஜைகளையும் ஏராளமாகத் தான் வாழ்கிற காலமெல்லாம் செய்து, புண்ணியங்களைக் கொள்ளை கொள்ளையாகச் சேர்த்திருக்கலாமே! அதைவிட்டு மறுமைக்குப் பயன்தராத பொருளைச் சேர்ப்பதிலேயே காலங்கழித்த மானிடனை என்னவென்று சொல்வது?

மானிடப் பிறவியில் மனிதனாகப் பூமியில்
வாழ்கின்ற காலத்திலேயே செய்கிற நல்வினைத் தீவினைப் பயன்களைத்தான், மனிதன் இறந்த பிறகு பிற உலகங்களில் அனுபவிக்கலாமேயல்லாமல், மனித உடலை இழந்து ஆவியுடனே மற்ற உலகங்களில் எதையுமே செய்ய இயலாது! உத்தம உலகத்தையடைந்து இன்பமடைதலும் அதமமான உலகத்தை அடைந்து துன்பத்தை அடைவதும், மண்ணுலகத்தில் வாகனாதிகளில் ஆடம்பரமாக, அகம்பாவமாக

ஓம்..

ஆனந்தமாகப் பெரியோரை மதிக்காமல் செல்வதும், அந்த வாகனத்தை ஓட்டுவதும், சிவிகை ஊர்தலும், சிவிகையைச் சுமத்தலும், உலுத்தன் உழைப்பாளியை உழைக்கச் செய்வதும், உழைப்பாளி, உலுத்தனிடம் உழைத்து உழைத்து உருக்குலைவதும். அந்தப் பூவுலகில் மனிதர்கள் செய்யும் புண்ணிய பாவங்களின் பயனேயாகும் இந்நிலையில் என்பதை உள்ள செய்குவை?" என்பார்கள். அறிவாயாக! அவற்றை நீ அறிந்து இனி என்ன

கருடனே! உதககும்பதானம் என்ற ஒருவகைத் தானமானது செய்யப்பட்டதாயின் ஜீவன், அந்த உதக கும்பத்திலுள்ள நீரைப் பருகியாவது சிறிதளவாவது தாகவிடாய் தீர்ந்து ஏழாம் மாதத்தில் அவ்விடத்தைவிட்டு மீண்டும் நடந்து செல்வான். பறவைகளுக்கு அரசே! ஜீவன் யமபுரிக்குச் செல்லும் வழியில், இதுவரை பாதி தொலைவைக் கடந்து விட்டவனாகையால், அம்மாதத்தில் அவனுக்குரியவர் பூவுலகில் அந்தணர்க்கு அன்னதானம் செய்யவேண்டும். பிறகு அந்த ஜீவன் பக்குவப்பதம் என்ற பட்டினத்தைச் சார்ந்து, எட்டாவது மாசிக பிண்டத்தை உண்டு, அங்கிருந்து நடந்து துக்கதம் என்ற ஊரையடைந்து, மஹா துக்கமடைந்து, ஒன்பதாவது மாசிக பிண்டத்தை ஆங்கு ஏற்று, அங்கிருந்து நீங்கி, நாதாக்கிராந்தம் என்ற பட்டினத்தை அடைந்து அங்கு தங்கி பத்தாவது மாசிக பிண்டத்தை உண்பான்.

விருஷோற்சனம் செய்யாமையால், அநேகம் ஜீவர்கள் பிரேத ஜன்மத்தோடு அப்பட்டினத்தில் கூட்டங் கூட்டமாகக் கூடி, "ஓ ஓ" வென்று ஓயாமல் ஓலமிட்டுக் கதறிக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு கதறும் அச் சீவர்களைப் பார்த்து அங்கு வந்த ஜீவனும் கத்திக் கதறிவிட்டு, அப்பால் நடந்து, அதப்தம் என்ற ஊரையடைந்து பதினொன்றாம் மாசிக பிண்டத்தை அவ்விடத்தில் தங்கியுண்டு, அங்கிருந்து சீதாப்ரம் என்ற நரகத்தை அடைந்து, அங்கு சீதத்தால் வருந்தி, பன்னிரண்டாவது மாதத்து வருஷாப்தியப் பிண்டத்தை உண்டு, அங்கிருந்து புறப்பட்டு நான்கு திசைகளையும் யமகிங்கரர்களையும் அந்த ஜீவன் பரிதாபமாகப் பார்த்து ஈனக்குரலில் "யமகிங்கரர்களே!

ஓம்..

 என்னோடு எந்நாளும் வாழ்வதாக உறுதியளித்த என் மனைவியைக் காணோமே! என்னைத் யாரையுமே ஏறிட்டும் பார்க்கமாட்டேன் காதற்கிழத்தியையும் காணோமே! உயிர் என்ற காப்பான் தோழன் என்று உலகம் புகழ்ந்து பாராட்டும் என் நண்பனைக் காணோமே! என் மனைவி ஒருவரையும் காணோமே! ஏழையேன் செய்வேன்?" என்பான். மக்கள் என்

அப்போது யமதூதர்கள், அந்த ஜீவனை நோக்கி, "முழுமூடனே! உன் மனைவி மக்கள் இங்குமா இருப்பார்கள்? அவர்கள் மேல் உனக்குள்ள ஆசை இன்னமும் உனக்கு ஒழியவில்லையோ? நீ செய்த புண்ணிய பாவங்களின் பயன்களைத்தான் இங்கு நீ காண்பாய்!'' என்று அறைவார்கள். ஜீவன் யமகிங்கரர்கள் கூறுவதைக் கேட்டு ''ஐயோ! முன்னமே நீங்கள் சொன்னதை மறந்தல்லவோ ஏதேதோ பிதற்றுகிறேன்" என்று தனக்குள் தானே துன்பமனுபவித்துக் கொண்டு, மனம் புழுங்கி நடந்து வைவஸ்வத பட்டினம் என்ற நகரத்தைச் சேர்வதற்கு முன்பே, ஊனாப்திக பிண்டத்தை அருந்தி, அந்தப் பட்டினத்தை யமபுரியாகும். அடைவான். அந்தப் பட்டினமே

அந்த யமபுரி நூற்றி நாற்பத்து நான்கு காதவழி அகலமுள்ள தாய், கந்தர்வ, அப்சரசுகளோடு கூடியதாய், எண்பத்து நான்காயிரம் பிராணிகள் வாழுமிடமாக இருக்கும். ஜீவர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிந்து, யமதர்மனுக்குத் தெரிவிக்கும் பன்னிரண்டு சிரவணர்கள் என்பவர்கள் அந்த நகரில் இருப்பார்கள். ஜீவர்கள் அனைவரும் அந்தப் பன்னிரு சிரவணர்களையும் ஆராதனை செய்ய வேண்டும். அச்சிரவணர்களை ஆராதித்தால், அந்த ஜீவன் யமபுரியை வந்து சேர்ந்தபோது, அவன் செய்த பாபங்களையெல்லாம் எடுத்து யமனுக்குச் சொல்லாமல், அவன் செய்த புண்ணியங்களை சிரவணர்கள் யமதர்மராஜனுக்கு எடுத்துரைப்பார்கள். ஆகையால், பன்னிரு சிரவணர்களை ஆராதித்து வருவது மிகவும் நன்மையை மறுமைக்குத் தரவல்லது" என்று திருமால் கூறியருளினார்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘