🌏🌎🌍கோவில்கள் தோன்றியது எப்படி?🌏🌎🌍

🌏🌎🌍கோவில்கள் தோன்றியது எப்படி?🌏🌎🌍 உலகில் மனித இனம் தோன்றிய போதே இறை ஞானமும் ஏற்பட்டு விட்டது. மனிதன் பரிணாம வளர்ச்சிப் பெற்று, ஆறு அறிவையும் பயன்படுத்தியபோது, கோவில்களுக்கான அவசியம் தானாகவே உருவாகியது. இறைவனை சரண் அடைய, சரியான இடம் கோவில்தான் என்பதை உணர்ந்தான். ஆனால் இந்த உணர்தல் என்பது நம் மூதாதையர்களிடம் உடனே ஏற்பட்ட ஒன்றல்ல. பழந் தமிழகத்தில் இயற்கையோடு இயைந்த வழிபாட்டு முறையே இறை வழிபாட்டின் தொடக்க நிலையாக இருந்தது. முதலில் சூரியன் உதிப்பதை கண்டு பயந்து அதை பார்த்து கையெடுத்து கும்பிட்டனர். பிறகு எதைப் பார்த்தாலும் புனிதமாக வணங்கத்தக்கவையாக கருதினார்கள். மலை, ஆறு, கடல், குளம், மரம், செடி, கொடி, சூரியன், சந்திரன், காற்று, தீ, வெயில், மழை, கால் நடைகள்... என எல்லாமே இறைவனது அம்சம் என்று நம்பினார்கள். இந்த இயற்கை வழிபாட்டின் பரிணாம வளர்ச்சியே, பிற்காலத்தில் பஞ்ச பூதத் தலங்களாக ஆங்காங்கே மாறின என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். நீர் நிலை ஓரங்களிலும், மலைகளிலும் அமைந்துள்ள ஆலயங்களில் அதிக சக்தி கிடைப்பதாக குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி மாணவிகள் ஆய்வு செய்து கண்டு பிடித்துள்ளன...