🌎🌍🌏ஜீவ சமாதிசித்தானந்த சுவாமி சித்தர்🌎🌍🌏
🌎🌍🌏ஜீவ சமாதிசித்தானந்த சுவாமி சித்தர்🌎🌍🌏
கடலூர்மாவட்தர வண்பூ ப்பாயம் என்னும் கிராமம் - அந்த கிராமத்து பகுதியில் குடியிருந்த அந்த பெண்மணி அவசர அவசரமாக தம் அருகே, தட்டிலிருந்த பூக்களை மாலையாகத் தொடுத்துக் கொண்டிருந்தாள்.
மாலை கட்டி அதை திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீசுவரர் கோயிலுக்குக் கொடுத்தாக வேண்டும். அங்கே குருக்கள் பூஜைக்காக காத்துக் கொண்டிருப்பார்- என்று எண்ணியவளின் விரல்கள் விரைந்து செயல் பட்டுக் கொண்டிருந்தன.
இதோ மாலைகள் கட்டியாகிவிட்டது. எல்லாம் தயார். பூமாலைகளை எல்லாம் ஒரு பூக்குடலையில் போட்டு தன் மகனை அழைத்தாள்.
"சித்தானந்தா... மகனே.." தாயின் குரல் கேட்டு ஓடோடி வந்தான் அந்தச்சிறுவன்.
“என்னம்மா?"
"இந்தா இந்த மாலைகளை எல்லாம் கொண்டு கோயில் குருக்களிடம் கொடுத்துவிட்டு வா. வானம் இருண்டு விட்டது. சீக்கிரம் போய்க் கொடு" என்றவள் பூக்குடலையை மகனிடம் கொடுக்க, "சரிம்மா" என்று குடலையை வாங்கிக் கொண்டு ஓடோடிச் சென்றான்.
சித்தானந்தனின் தாய் தினமும் திரிப்பாதிரிப்புலியூர் பாடலீசுவரர் ஆலயத்துக்குப் பூமாலை கட்டிக் கொடுக்கும் திருப்பணியைச் செய்து வந்தாள்.
அன்றும் அப்படித்தான்.. வழக்கம் போல் தாய்மாலை கட்டிக் கொடுத்து அனுப்பினாள் சித்தானந்தனிடம்.
சிறுவன் பூக்குடலையுடன் கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. வானம் இருண்டு போய் அடைமழை விடாமல் பெய்தபோதும் சிறுவன் மழையில் நனைந்த வண்ணம் ஓடினான். எப்படியாவது உரிய நேரத்தில் மாலையைக் கொண்டு போய் ஆலயத்தில் சேர்த்துவிட வேண்டும், அங்கே குருக்கள் காத்துக் கொண்டிருப்பார் என்று ஓடினான்.
மாலை 4 மணிக்கு பெய்ய ஆரம்பித்த மழை இரவு 9 மணியாகியும் நின்றபாடில்லை. விடாமல் தொடர்ந்து பெய்த வண்ணம் இருந்தது. எங்கும் ஒரே வெள்ளக்காடு. கும்மிருட்டு வேறு. கோயில் இருக்குமிடமே தெரிய வில்லை. அவன் எப்படியோ மனத்தை திடமாக்கிக் கொண்டு அந்த வெள்ளத்தில் நீந்திச் சென்று கோவிலை அடைந்தான். கோயிலை அடைந்த போது சற்று நேரத் திற்குள் மழை நின்று போய்விட்டது.
அங்கே இறைவனுக்கு சாத்துவதற்கு மாலைகள் வரும் என்று இரவு 9 மணி வரை காத்திருந்த குருக்கள் யாரும் வராததால் கோயிலைப் பூட்டிக் கொண்டு வீட்டிற்குப் போய்விட்டார்.
ஓம்..
சித்தமெல்லாம் நிறைந்த சித்தர்கள்
கோயிலுக்குள் ஓடிவந்தசிறுவன் அங்கே நடைசாத்தப்பட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். 'இப்போது என்ன செய்வது? ஒருவேளை மாலைகள் சூட்டாமலேயே ஆண்டவனுக்கு அபிஷேகம் நடந்து விட்டதோ?'
மனத்திற்குள் எதையோ நினைத்தவனுக்கு சட் டென்று அந்த எண்ணம் உதித்தது.
கையிலுள்ள பூக்குடலையை கோயில் கதவு கொக்கியில் மாட்டிவிட்டு “இறைவா.. பாடலீசுவரா! என் பூ உனக்குத் தேவைன்னா நீயே வந்து எடுத்துக் கொள்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு பழையபடி சென்று விட்டான்.
மறுநாள் காலை
கோவிலுக்கு பூமாலை வந்து சேராதது குறித்து மிகவும் வருத்தப்பட்ட கோயில் குருக்களிடம், சிறுவனின் தாய், "கோபித்துக் கொள்ள வேண்டாம் சாமி. நேற்று பலத்த மழை என்பதால் சரியான நேரத்தில் பூமாலையை சேர்க்க முடியவில்லை" என்றவள் மகனை அழைத்தாள்.
"நேற்று பூ கொடுக்கவில்லையா?"
நடந்த விவரத்தை எல்லாம் கூறி, கோவிலுக்கு போக நேரமாகி விட்டதை தெரிவித்து, பூட்டியிருந்த ஆலயத்துக் கதவு கொக்கியில் பூக்குடலையை மாட்டியதையும், தேவையானால் இறைவனே வந்து எடுத்துக்கொள்ளட்டும் என்று கூறிவிட்டு வந்ததையும் சொன்ன சிறுவன், "ஆதலால் அவரே வந்து எடுத்து அணிந்து கொண் டிருப்பார் என்றான்" வெகு இயல்பாக.
இதைக் கேட்ட அந்த தாய்க்கு சிரிப்பு வந்து விட்டது. கோயில் குருக்கள் பக்கம் திரும்பியவள், "கோபம் வேண்டாம் குருக்கள் ஐயா- பூமாலைக்கான கட்டணத்தை குறைத்துக் கொள்கிறேன். இன்று சரியாக 3 மணிக்கே பூக்களைக் கொடுத்து அனுப்புகிறேன். இறைவனுக்கு சூட்டி விடுங்கள்" என்று சொன்னவள் கட்டி வைத்த மாலையை குருக்களிடம் கொடுத்து கூடவே அவர் பின்னாலேயே சித்தானந்தனையும் அனுப்பி வைத்தாள்.
ஓம்..
குருக்களும், சிறுவனும் வெள்ளத்தில் நீந்தி கோவிலை அடைந்த போது அதன் வெளிக்கதவு தாளிடப்பட்டிருந்தது. சிறுவன் சித்தானந்தன் வைத்ததாக சொன்ன பூக்குடலையை காணவில்லை. தாயிடம் பயந்து போய் சிறுவன் பொய் சொல்லி விட்டிருக்கிறான் என்று நினைத்து கதவைத் திறந்த குருக்களுக்கு ஒரே ஆச்சரியம்! அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை.
ஆகா! என்ன அற்புத விந்தை இது! அங்கே ஆலயக் கருவறையிலிருந்த மூலவருக்கு அலங்கரிக்கப்பட்டு.. சித்தானந்தன் கொண்டு போன பூமாலைகள் அணி விக்கப்பட்டிருந்தன.
எப்படி இது சாத்தியம்?
நம்பியாண்டார் நம்பி விநாயகப் பெருமான் முன்பு பிரசாதத்தை வைத்து சாப்பிட்டு விட்டு போகச் சொன்னதை கணபதி ஏற்றுக்கொண்டதைப் போல் இந்த பாடலீசுவர ஈசனும் சிறுவன் சித்தானந்தன் கூறியது போல் அவனது கோரிக்கைக்குச் செவி சாய்த்து விட்டாரோ?
'இரவு 9 மணிவரை தான் எதுவும் ஆண்டவ
னுக்கு அலங்காரம் செய்யவில்லை. பூமாலையும் வர
வில்லை. கோவில் சாவியோ என்னிடம் உள்ளது. அப்படி
இருக்கையில் யார் வந்து சாமிக்கு பூமாலை சாத்தியிருக்க
முடியும்?.. அதுவும் இவ்வளவு நேர்த்தியாக!' பல்வேறு
சிந்தனைகளுடன் குழப்பம் தோன்றி அங்கு என்ன நடந்தது
என்று யூகிக்க முடியாமல் சிறுவனின் முகததை கேள்விக்
குறியோடு பார்த்தார் குருக்கள்.
குருக்களின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட சிறுவன், "என்ன பார்க்கிறீங்க? நான் சொன்னேனா இல்லையா- இறைவனுக்கு என்னுடைய மாலை தேவையா இருந்தா..அவரே எடுத்துப்பார்னு. அதான் நேற்று இரவு கதவில் மாட்டி இருந்த மாலையை அவரே வந்து எடுத்து அணிந்து கொண்டிருக்கிறார்" என்றான்.
குருக்களுக்கு அவன் பேச்சைக் கேட்டு நம்பவும் முடியவில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை. என்ன அதிசயம்! இறைவனின் திருவிளையாடலை எண்ணி உள்ளம் பூரித்துப் போன அந்த பூசாரி திடீரென சிறுவனின் கால்களில் விழுந்தார். விழுந்தவர் கண்களில் கண்ணீர் வழிய அவனை வணங்கி நின்றார்.
இதைப் பார்த்த அச்சிறுவன் ஒன்றும் பேசாமல் சிரித்துக் கொண்டே அமைதியாக அங்கிருந்து வெளி யேறினான். இந்தச் செய்தி காட்டுத்தீ போல் அவ்வூர் முழுக்க பரவியது. காண்போரிடமெல்லாம் சிறுவனின் அற்புத சக்தியையும், மகத்துவத்தையும் தெரிவித்த குருக்கள் இவன் ஒரு சித்தனாகத்தான் இருக்க வேண்டு மென்று கூறினார். விளைவு? விஷயம் கேள்விப்பட்ட ஊர் மக்கள் சிறுவனைக் காண விழைந்தனர். அவனை தரிசிக்க பெருங்கூட்டம் அலைமோதியது.
அந்தச் சிறுவன் சித்தானந்தன் வேறுயாருமல்ல இந்த நூற்றாண்டின் கடைசியில் தோன்றிய அற்புத சித்தர் பெருமான்தான் அந்தச் சிறுவன்!
தென்னார்க்காடு மாவட்டம் கடலூர் வண்டிப்பாளையம் என்னும் ஊரில் பிறந்த தெய்விகக் அருகே குழந்தை! திருவருளோடு பிறந்த குழந்தை! இவர் பிறந்தவுடன் வீட்டில் லக்ஷ்மிகடாட்சம் மிளிர்ந்திருக்கிறது. இவர் பிறந்த வீட்டை பிள்ளையார் வீடு என்று அப்பகுதி மக்கள் அனைவரும் அழைத்திருக்கின்றனர்.
இவரது தாய் தினமும் பூ கட்டி சித்தானந்தனிடம் கொடுத்து கடலூர் பாடலீசுரவர் கோயில் குருக்களிடம் சேர்ப்பதுண்டு. சித்தானந்தன் தினமும் பாடலீசுவரரை சென்று வழிபடுவது.. ஆலயத்து நந்தவனத்தில் பூக்கள் பறித்து கொடுப்பது போன்ற இறைபணிகளை செய்து வந்தான்.
ஒருநாள் சித்தானந்தன் ஆலயத்தில் படுத்து கண் ணயர்ந்து கொண்டிருந்த வேலையில்.. சர்வேச்வரனாகிய பாடலீசுவரர் சிவபெருமானின் அருட்பார்வையும், அம்பிகையின் அருட்பார்வையும் கிடைக்கப் பெற்றான். தம் எதிரே காட்சி தந்து தரிசனம் தந்த பாடலீசுவரர் பெரியநாயகியை அம்மையப்பனாகக் கண்ட சித்தன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வடிய, தமக்கு ஜீவன் முக்தியை அளிக்கும்படி வேண்ட, அதன்படியே அவருக்கு ஜீவன் முக்தியை வழங்கி விட்டு மறைந்தனர் இறைவனும் இறைவியும்!
அன்று முதல் சித்தானந்தருக்கு சித்துக்கள் கைகூடின. தொட்டதும் நோய்கள் யாவும் பறந்தன. சொன்ன வார்த்தைகள் அனைத்தும் அப்படியே ஒன்று விடாமல் பலிக்க ஆரம்பித்தன.
தன்னை தரிசித்து வணங்க வந்தவர்களிடம், என்னை வணங்குவதை விட்டு விட்டு இறைவனை போய் வணங்குங்கள் என்றார்.
சித்தானந்தரின் வாய்ச் சொற்கள் பலித்ததும், கை பட்டவுடன் நோய்கள் தீர்ந்த அற்புதமும் நாளடைவில் பெருக.. பெருக.. இவருடைய புகழ் பக்கத்து மாநிலமான புதுச்சேரிக்கும் பரவியது.
புதுவை முத்தியால் பேட்டையைச் சேர்ந்த முத்துக் குமாரசாமிப் பிள்ளை என்னும் சிவபக்தரின் மனைவி அன்னம்மாள் என்னும் அம்மையாருக்கு தீராத வயிற்று வலி. எந்த வைத்தியராலும் அவருடைய நோயை குணப் படுத்த முடியவில்லை. இதனால் மனம் வருந்திய பிள்ளை கடலூரில் இருக்கும் சித்தானந்தரால் மட்டுமே இந் நோயை குணப்படுத்த முடியும் என்று கேள்விப்பட்டு திரிப்பாதிரிப்புலியூர் வந்து சித்தர் பெருமானை உள்ள முருக வணங்கி நிற்கிறார். கண்களில் கண்ணீர் பெருகு கிறது. இவருடைய உள்ளக்கிடக்கையை புரிந்து கொண்ட சித்தர் பெருமான் முத்துக்குமாரசாமி பிள்ளையிடம் எதுவும் சொல்லாமலேயே எல்லாவற்றையும் புரிந்து கொண்டு, "வா போகலாம்" என்று கோவிலில் இருந்து அவருடன் புறப்பட்டு புதுச்சேரிக்கு வந்தார். புதுச்சேரி எல்லையை மிதித்ததுதான் தாமதம். அவருக்குள் எல்லையில்லாத ஒரு ஆனந்த பரவசம்.. புதுச்சேரி அந்த ஞான வள்ளலை அன்போடு இருகரம் நீட்டி வரவேற்றது.
நேரே பிள்ளையவர்கள் வீட்டிற்குப் போய் இச்சித்தர் காலடி எடுத்து வைத்த அடுத்த கணமே அன்னம்மாளின் நோய் இருந்த இடம் தெரியாமல் மறைந்து பூரண குணம் அடைந்தார். இது கண்டு மகிழ்ந்த தம்பதியினர் இரு வரும் அவரது கால்களில் விழுந்து பணிந்து அவரைத் தங்கள் இல்லத்திலேயே தங்கியிருக்கும்படி வேண்டினர். அதற்கு விருப்பம் தெரிவித்த சித்தர் அவர் வீட்டில் தங்கிஇருந்தபோது ஏராளமானோர் அங்கு வந்து அவரை வணங்கி அருளாசி பெற்றுச் சென்றனர்.
ஓம்..
சித்தருடைய மசுத்துவம் பற்றி கேள்விப்பட்டு மனத்துயருடன் வந்தவர்கள் தங்கள் மனச்சஞ்சலங்கள் நீங்கிச் சென்றனர். சிலருக்கு மருந்துகள் கொடுத்து அவர்களுடைய நோயை தீர்த்து வைத்தார் சித்தர். ஒரு சிலரின் விருப்பத்திற்கும், வேண்டுகோளுக்கும் இணங்கி அவர்களது வீட்டிற்கும் சென்றார்.
புதுச்சேரிக்குச் சென்று அங்கு தலைசிறந்த சித்தராக விளங்கிய இவர் ஏராளமான அற்புதங்களை புரிந்தார். தமது ஜீவ சமாதியையும் அங்கேயே அமைத்துக் கொண் டார். மக்கள் அவரை அன்போடு சித்தானந்த சுவாமிகள் என்று அழைக்கத் தொடங்கினர். தினமும் அங்கே இறைவன், இறைவியை தரிசனம் செய்து தியானத்தில் ஆழ்ந்தார்.
ஒருநாள் மாலைப் பொழுது
சித்தர் பெருமான் முத்துகுமாரசுவாமி பிள்ளையுடன் கருவடிக்குப்பம் வழியாக அவருக்குச் சொந்தமான தோட்டத்தின் பக்கமாக சென்று கொண்டிருந்த போது, பிள்ளையவர்கள் சித்தானந்தரிடம், "இது நம்முடைய தோட்டம்" என்று சொல்ல, அதைக் கேட்ட சித்தர், "அப்படியா வா போய்ப் பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு அவரது எந்தவித பதிலையும் எதிர்பாராமல் உள்ளே சென்றார். விறுவிறுவென்று அங்கே சென்றவர் ஓர் இடத்தை ஆழ்ந்து உற்று நோக்கினார். அடுத்த வினாடி அப்படியே சிந்தனையில் ஆழ்ந்து அங்கேயே உட்கார்ந்து விட்டார். பிள்ளையால் அவரது மௌனத்தை கலைக்க முடியவில்லை.
வெகுநேரம் கழித்து திடீரென்று கண்விழித்த சித்தர் ஒரு இடத்தைப் பார்த்து, "இது இங்குதான் இருக்கப் போவுது" என்று தம் உடலையும், அந்த இடத்தையும் மாறி மாறி மூன்று முறை சுட்டிக் காட்டினார்.
பின்னர் இன்னொரு இடத்தைச் சுட்டிக் காட்டி விட்டு பிள்ளையின் மனைவி அன்னம்மாளின் சமாதியும் இங்குதான் அமையப் போகிறது என்றார். இது கேட்டு
முத்துக்குமாரசாமி ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும்ஆழ்ந்தார்.
ஒருமுறை - சித்தானந்தரின் சீடர் முத்தையா முதலியார் தன் மனைவி பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருப்பதாக சித்தானந்தர் இருக்கும் இடத்தைத் தேடி ஓடோடி வந்தார். இதைக் கண்ட சித்தர் சிரித்துக் கொண்டே முதலியாரிடம், "பிரச்சினை இல்லை உனக்கு ஆனந்தம் தரும் ஆண்மகன் ஆனந்தன் பிறந்து விட்டான். போ, உடனே வீட்டுக்குப் போய்ப் பார்" என்றார். அதன் படியே வீட்டிற்குச் சென்று பார்த்த முதலியாருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. மகிழ்ச்சிப் பெருக்குடன் சித்தர் இருந்த திசை நோக்கி இருகரம் கூப்பி வணங்கி னார். அக் குழந்தைக்கு ஆனந்தன் என்றே பெயர்சூட்டி வளர்த்து மகிழ்ந்தார்.
சித்தானந்த சித்தர் பெருமான் மனித நிலையைக் கடந்தவர். பசி, தாகம், தூக்கம் எல்லாம் அவருக்கு இரண்டாம் பட்சம்தான். இப்போது சித்தானந்தர் கோயில் இருக்கும் இதே இடம் மாந்தோப்புக்கள் அடங்கிய தோட்டமாக இருந்திருக்கிறது. இங்கே அமர்ந்து தினமும் தியானம் செய்து எம்பெருமானையும், தேவியை யும் வழிபட்டு வந்திருக்கிறார் இவர்.
இவரது பெருமையையும், புகழையும் கேள்விபட்ட புதுவையில் வாழ்ந்திருந்த மகாகவி பாரதியார் சித்தரைப் பற்றி தம்முடைய பாடல்களில் புகழ்ந்து எழுதியுள்ளார். பாரதியார் குயில் பாட்டு பாடியதுகூட இத்தோப்பில் இருந்துதான்.
சித்தர் பெருமான் இலையிலோ, தட்டிலோ சாப்பிடுவது கிடையாது. கருங்கல் மீதுதான் சாப்பிடுவது வழக்கம். யாராவது வற்புறுத்தி சாப்பிடக் கூப்பிட்டால் மட்டுமே அவர்கள் வீட்டிற்குச் சென்று சாப்பிடுவார். சித்தர் பெருமான் புதுவையில் தங்கி இருந்த போது கருங்கல்லில்தான் அவருக்கு உணவு படைக்கப்படும். பெரும்பாலும் அவருக்கு விருப்பமான பச்சைப்பயறு, பாயசம், உளுந்து வடை, சுண்டல் போன்றவை படைக்கப்படும்.
ஓம்..
அவர் உண்பதற்கு பயன்படுத்திய அந்தக் கருங்கல் மிகவும் விசேஷம் வாய்ந்தது. பிரசவ வலி வேதனை அதிகம் உள்ள பெண்கள் அந்தக் கல்லின் மீது சிறிது நேரம் உட்கார்ந்தாலே போதும். உடனே அவர்களின் பிரசவவலி குறைந்து சுகப்பிரசவம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அவர் சாப்பிட்ட அந்தக் கல் இன்றும் ஒரு பக்தர் வீட்டில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இச்சித்தர் பெருமான் எங்கு எது நடந்தாலும் அதைத் தெளிவாக உணரும் ஆற்றல் உடையவராக இருந்தார். ஒருமுறை சித்தர் பெருமான் குயவர் குப்பத்தைச் சேர்ந்த முத்துசாமி பத்தர் என்பவரது வீட்டிற்குச் சென்று விட்டு நெல்லித் தோப்பு வழியாக வந்து கொண்டிருக்கையில்.. மிகவும் போதையிலிருந்த ஒரு குடிகாரன் அவரை வழிமறித்து தகராறு செய்து வம்புக்கு இழுத்தான்.
"சாமி சாராயம் குடிக்குமா?"
சித்தர் மௌனமாயிருந்தார். "என்ன சாமி அமைதியாகிட்டே... ஏன் அப்படி பார்க்கிறே” என்றவன் சாராய புட்டியை அவரிடம் நீட்டி, "இந்தா சும்மா குடி இதைக் குடிச்சா.. இந்த உலகமே ஆனந்தமாக தெரியும்.. இந்தா புடி.." என்று சாராய பாட்டிலை கொடுத்து சித்தரைக் குடிக்கச் சொன்னான். அதோடில்லாமல் சாராயக்கடை முதலாளியிடம், "இந்த சாமியாருக்கு வேண்டிய மட்டும் குடு" என்றான்.
சித்தரோ, அவனுக்குத் தக்க பாடம் புகட்ட எண்ணியவராய் மிகவும் புன்னகையோடு அவனிட மிருந்த சாராயத்தை வாங்கிக் குடித்தார். திரும்பத் திரும்ப வாங்கிக் குடித்தார். அக் கடையில் இருந்த பீப்பாய் சாராயம் முழுவதும் காலியாகி விட்டது. இதைக் கண்ட கடைக்காரன் ஆச்சரியப்பட்டுப் போனான். கூடவே வெல வெலத்தும் போனான். இவ்வளவு சாராயம் குடித்தும்கூட இவர் கொஞ்சம்கூட தள்ளாடாமல், தடுமாறாமல், கீழே விழுந்து விடாமல் அப்படியே இருக்கிறாரே, என்ன வித்தை இது என்று அவன் மலைத்துப் போய் நின்றான்.
ஆனால் அங்கு நடந்ததோ வேறு..
சித்தர் இங்கே குடிக்க... குடிக்க.. அங்கே அருகில் இருந்த குடிகாரனுக்கு போதை தலைக்கேற ஆரம்பித்து விட்டது. தலை சுற்றி அப்படியே மயங்கி கீழே விழுந்தான். இது கண்டு நடுங்கி பயந்து போன கடைக்காரனோ ஓடோடி வந்து சித்தரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். சித்தர் மௌனமாய் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அடுத்த நொடிக்குள் அப்பகுதி முழுவதும் இச் செய்தி பரவிவிட்டது. இந்தச் செய்தியை கேள்விப்பட்டு கிண்டல் செய்த குடிகாரனின் உறவினர்கள் ஓடோடி வந்தனர். அனைவரும் வந்து சித்தரின் காலில் விழுந்து மன்னிக்கும்படி வேண்டினர். பேச்சு மூச்சில்லாமல் கீழே கிடந்த குடிகாரன் மீது விழுந்து புரண்டு அழுது கதறியவர்கள் மறுபடியும் சித்தரின் கால்களில் விழுந்து அறியாமல் போதையில் அவன் செய்த செயலை பொறுத்தருளும்படி வேண்டிக் கதறினர்.
இதைக் கேட்டு சித்தர் மனமிரங்கி அவனை நோக்கி கையை காட்ட... கீழே விழுந்து கிடந்த குடிகாரன் தூங்கி எழுந்தவன் போல் எழுந்து வந்தான். நேரே வந்து சித்தரின் பாதங்களில் விழுந்து தம்மை மன்னிக்கும்படி அழுது புலம்பினான்.
சித்துக்கள் பல கைவரப்பெற்றிருந்த இச் சித்தர் புதுச்சேரியில் பல சித்தாடல்களைப் புரிந்தார். தம் தவ வலிமையால் பக்தர்களிடம் ஆன்மிக உணர்வை ஏற் படுத்தினார். குழந்தைகளுக்கு மாயாஜால சித்து விளை யாட்டுகளை நிகழ்த்திக் காட்டினார். கீழே இறைந்து கிடக்கும் கூழாங்கற்களை எடுத்து அவர்கள் கையில் கொடுத்து கையை மூடச்சொல்லி பின் திறந்ததும் அவைகளை மிட்டாய்களாக ஆக்கிக் காட்டினார். மணலை அள்ளிக் கொடுத்தால் அவைகள் சர்க்கரையாக மாறிப் போயிருக்கும்.
அதே போல் அவர்களை இருந்த இடத்திலேயே கண்ணை மூடச் சொல்லி மயிலம் கோவில் திருவிழாக் காட்சியை அவர்கள் கண்மூடிய நிலையிலேயே காணச் செய்து அற்புதம் நிகழ்த்தி இருக்கிறார்.
ஓம்..
முத்தையா முதலியார் மகன் ஆனந்தனுக்கு திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாக் காட்சியை அங்கிருந்தபடியே தம் தவவலிமையால் காட்டி இருக் கிறார்.
சித்தரின் கைராசி புதுச்சேரி முழுவதும் பரவி இருந்தது. இவர் கடைவீதி வழியாக சென்று கொண் டிருக்கும்போது ஏதாவது ஒரு பழக்கடைக்கு முன்னால் போய் நின்று அங்குள்ள பழக்கூடையிலிருந்து மூன்று பழங்களை எடுத்துக் கையில் வைத்துக் கொள்வார். அதை யாரும் தடுக்க மாட்டார்கள். இரண்டு பழங்களைப் பிச்சைக்காரர்களுக்கு கொடுத்துவிட்டு ஒரு பழத்தைத் தனக்கு எடுத்துக் கொள்வார். அன்றையப் பொழுது சித்தர் பெருமான் கைநீட்டி எடுத்த பழக்கடையில் அமோக வியாபாரம் நடக்கும்.
புதுச்சேரியில் குயவன் ஒருவன் சித்தர் மீது அன்பும், பக்தியும் கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் சித்தரை தன் இல்லத்திற்கு வந்து உணவு உண்ணுமாறு அன்புடன் விருந்துக்கு அழைக்க... சித்தரும் அவன் அழைப்பை ஏற்று இன்முகத்தோடு அவன் இல்லத்திற்குச் சென்றார். அவரை அன்புடன் வரவேற்ற குயவனின் குடும்பத்தினர் சித்தரை வெகுவாக உபசரித்து மகிழ்ந்தனர். அவர்களின் அன்பின் அடையாளமாக அக்குயவன், சித்தர் பெருமான் ஆழ்ந்த யோகத்தில் இருப்பது போன்ற களிமண்ணாலாகிய சித்தர் உருவச்சிலை ஒன்றை செய்து அவருக்கு அதை அன்பளிப் பாக கொடுத்தான். கையில் அக்கமாலை- குத்துக் காலிட்டு (ஐயப்ப சுவாமிகள் போல்) அமர்ந்த கோலம்... போன்ற அழகிய வடிவில் பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் வெகு நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்டிருந்தது அச்சிலை. அந்தச் சிலை இப்போது சித்தானந்த சித்தர் கோவில் முகப்பு மண்டபத்தினை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது இப்போது, இதேபோல் இன்னொரு மாதிரி வடிவச்சிலை ஒன்று இராஜ கோபுரத்தை அலங்கரித்துக் கொண்டிருக் கிறது.
சித்தருக்கு வயது 60 நிரம்பியபோது 1837-ஆம் வருடம் மே 28-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று சித்தர் பெருமான் இப்பூமிக்கு வந்த நோக்கம் முடியப் போவதைஇறைவனின் திருவருட் குறிப்பால் உணர்ந்தார். தம் பக்தர்களை அழைத்து தாம் இந்த உடலைவிட்டு புறப் படும் நாள் நெருங்கி விட்டது என்றவர், தான் முக்தி யடையப் போகும் நாளை முன்னதாகவே அவர்களுக்கு அறிவித்துவிட்டு பிறகு மௌனமானார்.
முத்துக்குமாரசாமி பிள்ளையை அழைத்து ஹேவிளம்பி வருடம் வைகாசி 28-ஆம் தேதி வெள்ளிக் கிழமை அன்று தனக்கு கல்யாணம் நடக்கப் போகிறது. இதனை எல்லோருக்கும் சொல்லி விடுங்கள் என்றிருக் கிறார். இது 10 நாளைக்கு முன்பு நடந்திருக்கிறது.
அதோடன்றி சித்தர் தாம் உபயோகித்து வந்த கைக்கடிகாரம் மற்றும் பாதக் குறடு இரண்டையும் சொக்கலிங்கம் பிள்ளை என்பவரிடம் கொடுத்து, பக்தர் களிடம், தம்முடைய சமாதி பூசைகளை எப்படி செய்ய வேண்டும் என்ற முறைகளை விளக்கினார்.
1837-ஆம் வருடம் மே மாதம் 28-ஆம் தேதி வெள்ளிக் கிழமை சித்தானந்தர் முத்தியால்பேட்டையிலுள்ள சிங்காரத் தோட்டத்திற்கு வந்து அமர்ந்தார்.
பத்மாசன நிலையில் அமர்ந்த சித்தருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு கற்பூர தீபம் காட்டப்பட்ட போது, தீபச்சுடர் உயர்ந்து எரிந்து மிளிர்ந்தது. அத் தீப ஒளியில் சித்தரின் திருவுருவை தரிசித்த பக்தர்கள் மெய்ம் மறந்து போய் தங்களையுமறியாமல் கைகூப்பித் தொழுதனர். ஆராதனை வழிபாடுகள் எல்லாம் முடி வடைந்த போது சித்தர் சமாதி நிலையை அடைந்திருந்தார்.
சித்தர் பெருமான் சமாதியடைந்த செய்தி புதுச்சேரி
மற்றும் அதன் சுற்றுவாழ் மக்களிடையே வேகமாக
பரவியது. அனைவரும் வந்து அவரை தரிசித்து வணங்கினர்.
சமாதியடைந்த சித்தருக்கு அபிஷேக ஆராதனைகள்
செய்யப்பட்டு அவரது திருமேனியை சமாதிக்கு கொண்டு
செல்கையில்... யாருமே எதிர்பாராத நேரத்தில் அந்த
அற்புதம் நிகழ்ந்தது.
கோடி சூரிய பிரகாசத்தையும் விஞ்சும் வண்ணம் அதீத ஒளியுடன் திடீரென சித்தர் கண் விழித்தார். மக்களைப் பார்த்தார். பக்தர்கள் அனைவரும் வணங்கியகரங்களுடன் சோகத்தோடு கண்ணீர் மல்க நின்றிருக்க... சித்தர் அவர்களிடம், தாம் சமாதி அடைவதற்கு முன்பு கூறிய அபிஷேக ஆராதனைகள் முறையாக கடைப் பிடிக்கப்படவில்லை என்றும், அதை மீண்டும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் விளக்கமாகக் கூறி மீண்டும் கண்களை மூடினார். பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போய் நின்றிருந்தனர்.
பின்னர் ஒருவாறு மனத்தைத் தேற்றிக்கொண்டு சித்தர் சொன்னடிபயே எல்லாவற்றையும் முறையாக செய்தனர். முத்தியால்பேட்டை வெள்ளாள வீதி (இப் போதைய பாரதிதாசன் வீதி) வழியாக சித்தரின் திருமேனியை ஊர்வலமாக கொண்டு சென்று புதுச்சேரிக்கு வடக்கே இருக்கும் கருவடிக்குப்பத்தில் முத்துக்குமாரசாமி பிள்ளைத் தோட்டத்தில் சமாதி வைத்தனர்.
முத்துக்குமாரசாமி பிள்ளை தமக்குச் சொந்தமான 1 காணி 30 குழி அளவுக்கான நிலத்தை சித்தர் பெயருக்கு எழுதி வைத்து அதோடு பெரிய மடம் ஒன்றையும் அதனை ஒட்டி ஒரு சிறு கோவிலும், ஒரு கிணறும், தெப்பக் குளமும் அமைத்துக் கொடுத்தார்.
குரு சித்தானந்த சுவாமியின் முதன்மை சீடரும், இக்கோவில் நிலத்துக்குச் சொந்தக்காரருமான முத்துக் குமாரசாமி பிள்ளையை அடக்கம் செய்த இடத்தில் அங்கே சுந்தர வினாயகர் ஆலயம் எழுப்பப்பட்டு, அவர் சமாதி மீது ஓங்காரப் பிள்ளையார் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.
சித்தானந்தர் வாழ்ந்த காலத்தில் புதுச்சேரியில் வேதாந்த பாடம் கற்பிப்பதில் பிரசித்தி பெற்ற வல்லுநரான நாராயணசாமி வாத்தியார் சமாதிக்கு மேல் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி ஆலயம் உள்ளது.
சித்தரின் கருவறைக்குப் பின்னால் உள்ள கட்டடம் சித்தரின் சீடர் முத்துக்குமாரசுவாமி பிள்ளையின் மனைவி அன்னம்மாளின் உடலை சமாதி வைத்த இடம் என் கின்றனர்.
ஓம்..
܀இன்றும் இங்கு நடக்கும் ஒரு அதிசயம்
ஒவ்வொரு அமாவாசை அன்றும் (அமாவாசை அன்று மட்டும் தான்) இந்தச் சித்தர் கோவிலிலுள்ள அரசமரத்தில் இருந்து ஒரு காசும் கீழே இறங்கி வந்து அம்மரத்தை மூன்று முறை வலம் வந்து மரத்தின் பின்புறமாக ஏறிச்சென்று மறைந்து விடுவதாக நேரில் பார்த்தவர்கள் கூறும் செய்தி!
புதுவையிலுள்ள மற்ற சித்தர் பீடங்கள் எல்லா வற்றிலும் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது சான்றோர்களால் புகழப்படுகிறது இச்சித்தர் சமாதிக் கோவில்! என
பக்தர்களிடையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாக போற்றப்படும் இச் சித்தர் கோவிலில் எத்தனை சிக்கலான பிரச்சினை மற்றும் மனஉளைச்சல் இருப்பினும், இங்கு வந்து தியானத்தில் அமர்ந்தால்... உள்ளத்தில் அமைதி ஏற்படுகிறது என்பது கண்கூடான நிகழ்ச்சி.
இச் சித்தர் கோவிலின் தனிச் சிறப்புகள்
வைகாசி மாதம் 15 வெள்ளிக்கிழமை சித்தானந்த பெருமாள் ஜீவன் முக்தி அடைந்த நாள் குருபூஜையாக இக்கோவிலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இக்கோவிலிலுள்ள பிள்ளையாருக்கு தேங்காய் முடி பூசை செய்வதால், திருமணமாகாத ஆண், பெண் அனைவருக்கும் திருமணம் கைகூடுகிறது.
பக்தர்கள் பிரதோஷ தினத்தன்று ஒரு துண்டுசீட்டில் தமது கோரிக்கைகளை எழுதிக் கொண்டு போய் சேர்த்து நந்தியின் காதில் சொல்லிவிட்டால் நிச்சயம் நிறைவேறும்.
இங்குள்ள அரசமரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால் ஒரு வருடத்திற்குள் குழந்தைப் பேறு வரம் நிறைவேறும்.
இச்சித்தரை வேண்டிக் கொண்டு அவரது பேரருளால் பிறக்கும் குழந்தைகளுக்கு பக்தர்கள் ஆனந்தன். ஆனந்தி, சித்தானந்தன் என்றெல்லாம் பெயரிட்டு தங்கள் நன்றிக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
வியாபாரிகள் வியாபாரம் நன்கு நடைபெற தங்கள் கடைக்கு சித்தானந்தர் பெயரை சூட்டுகின்றனர்.
மனநிலை மாறுபட்டோர், மருத்துவர்களால் கைவிடப் பட்ட நோயாளிகள், செய்வினை - பேய் - பிசாசு இவைகளால் பாதிக்கப்பட்ட ஆண், பெண் ஆகியோர் இங்கு வந்து இங்குள்ள இறைவனை (சித்தர் பெருமானை) வேண்டி குணமடைந்து செல்கின்றனர்.
பாரதியின் படைப்பிலக்கியங்கள் உருவாக இந்த சித்தர் ஆலயப் பகுதி வளாகமே காரணமாக இருந்திருக்கிறது. இச் சித்தர் இன்றும் இந்த சமாதியில் இருந்து
கொண்டு தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு மானசிக
வடிவில் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.
சித்தர் சித்தானந்தரின் சமாதி புதுச்சேரிக்கு வடக்கில் முத்தியால் பேட்டையை அடுத்த கருவடிக்குப்பத்தில் பாத்திமா மேல்நிலைப்பள்ளிக்கு எதிரில் அமைந்துள்ளது.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக