🌍🌏🌎திருமூலர் சித்தர் கரு உருவாதல் சிறப்புகள்...🌍🌏🌎
🌍🌏🌎திருமூலர் சித்தர் கரு உருவாதல் சிறப்புகள்...🌍🌏🌎
ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்சு
ஆக்குகின் றான்அவன் ஆதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை உள்ளிருந்(து)
ஆக்குகின் றான்அவன் ஆவ(து) அறிந்தே.
451 பாடல்கள்
ஆக்குகின்றான் - அனைத்தையும் உருவாக்குகிறான். ஆதி ஆதியாகிய பரம்பொருள். முன்பிரிந்த முன்பு உடலை விட்டு நீங்கிய, இருபத்தஞ்சு ஆக்குகின்றான் - பொறி ஐந்து, புலன் ஐந்து, பெரும் பூதங்கள் ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, மனம், புத்தி, சித்தம், அகங்காரம், ஆன்மா என இருபத்து ஐந்து. இந்த இருபத்து ஐந்து தத்துவங்களையும் எம் ஆதிப் பிரான்; 'கர்ப்பக் கொளகை உள் இருந்து - தாயாரின் கருப்பைக்குள் இருக்கும் உயிரோடு பொருந்தச் செய்து உதவுகிறான்.
ஆவது அறிந்தே - அந்தந்த உயிர்களுக்குத் தேவையானதை உணர்ந்து ஆக்கின்றான் அவை தோன்ற அருள் செய்கிறான். ஆக்குதல் உண்டாக்குதல். தோன்றச் செய்தல். கர்ப்பக் கொளகை தாயின் கர்ப்பப்பை
❤️பத்து மாதப் பாரம்❤️
அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துறை நாடப்
பறிகின்ற பத்தெனும் பாரம்செய் தானே.
452 பாடல்கள்
அறிகின்ற மூலத்தின் மேல் - தவயோகத்தால் உணர்ந்தறியக் கூடிய, மேல் அங்கி அப்புச் செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவி நெருப்பும் நீரும் கலந்த உயர்ந்த மூலாதாரத்தில் இறைவன் திருவடிகளை நெஞ்சிலும், நினைவிலும் பதிந்திருக்கச் செய்து, கருவில் உள்ள இன்னுயிரைப் பொறுமையுடன் காத்துப் பின் பத்து மாதங்கள் கழிந்து அதுவெளிப்பட வைத்துள்ளது பரமன் திருவருளாகும்.மூலம் மூலாதாரம். அப்பு தண்ணீர். கொளுவி - சேர்ந்து கலந்து. பொறை பொறுமை. இன்னுயிர் - அருமையான உயிர். போந்துற புக, நாடி விரும்பி. பறிதல் - வெளிப்படல். பாரம் கால அளவு.
❤️இறையருள் விதித்தது இல்லற வாழ்வு❤️
இன்புறு காலத்து இருவர்முன்(பு) ஊறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத்(து) அமைத்தொழிந் தானே.
453 பாடல்கள்
இன்புறு காலத்து இருவரும்'- இன்பம் அடைய விரும்பிக் கணவன் மனைவியாகிய இருவரும்; முன்பு ஊறிய துன்புறு பாசத் துயர்மனை - பிறவிதோறும் தொடரும், துன்பந்தரும் வினையாகிய பாசத்தில் சிக்கிட, வினைக்கிடமான உடம்பில், பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும் - உயிர்த்த உயிர் இந்த உலகில் வாழ வேண்டிய கால அளவையும் ஏற்க வேண்டிய வாழ்க்கை முறையையும், இறைவன் அன்புடைய அவ்விருவரும் இன்புறக் கூடிய காலத்திலேயே அமைய அருள் செய்து விட்டான். மனை - வீடு. வானுளன் - வானத்திலுள்ள வனான சிவன். பண்புறு காலம் வாழும் கால எல்லை. பார்-உலகம்.
கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்து மற்றோரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்தது
உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.
454 பாடல்கள்
சுருவை ஒழிந்தவர் · பிறவிச் சுமையை விட்டொழித்த ஞானிகள்; கண்ட உணர்ந்தறிந்த; நால் மூவேழ் (4+3 × 7 = 25) தத்துவங்கள் இருபத்தைந்தையும், (அவை விவரம் பாடல் 451 இல் காண்க) புருடன் ஆண்மகன்; உடலில் பொருந்து மற்று ஓரார் - உடலில் ஒன்று உருவாகி வருவதை வேறு எவரும் அறியமாட்டார்கள். திருவின் கருக்குழி தேடிப் புகுந்த - பெண்ணின் கருப் பைக்குள் புகுந்த அந்தக் கரு, உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே ஆண், பெண் என பிறப்பெடுக்கும். திரு இங்கே பெண். இரண்டாகப்
❤️ஈருடல் ஓருடலாய் ஒருயிர் பெற்றது ❤️
விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தோடு ஏறிப்
பொழிந்து புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே.
455 பாடல்கள்
விழுந்ததுலிங்கம் விரிந்தது யோனி உடலுறவில் கருவாய் விரிந்து லிங்கத்திலிருந்து சுக்கிலம் விழுந்தது. முன் பாடலில் சொன்ன இருபத்தைந்து தத்துவங்களும் நடைபெற ஐம்பூதங்களின் சேர்க்கையும் (பொழிந்த புனல் பூதம் போற்றும் கரணம்) நீங்கி உச்சித் தலையில் ஒளித்தது. (ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்தது) யோனி கருவாய். நுதல் - நெற்றி.
❤️உயிரைத் தழுவி உயிர்க்கும் மூச்சு ❤️
பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவும்
கூவி அவிழுங் குறிக்கொண்ட போதே.
456 பாடல்கள்
பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும் - பூவின் வாசனையுடன் சேர்ந்த காற்றும்; தாவி உலகில் தரிப்பித்தவாறுபோல் - உலகெங்கும் பரவி நிலைத்திருப்பதைப் போல; மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும்கருவில் இருக்கும் சிறிய உயிருக்கு உதவும் மெல்லிய மூச்சுக் காற்றும்; கூவி அவிழும் குறி கொண்ட போதே குறித்த காலத்தில் மெல்லிய ஒலியோடு உள்புகும். வாயு காற்று. தாவி -பரவி. தரிப்பித்த தரித்திருக்கிற, தங்கியிருக்கிற. நீள்வாயு - மூச்சுக் காற்று. கூவி ஒலி செய்து. அவிழும் புகும்.
❤️❤️மூச்சுக் காற்று முறை கெடின் முடியும் பிறவி❤️❤️❤️
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற் பன்றியு மாமே.
457 பாடல்கள்
போகின்ற எட்டும் - அருவமாய் உள்ள எட்டும்; புகுகின்ற பத்தெட்டும் - உள்ளே வருகிற பதினெட்டும்; மூழ்கின்ற முத்தனும் - இவற்றில் ஆழ்ந்து கிடக்கின்ற ஆண்மகனும், ஒன்பது வாய்தலும் - அவன் உடலில் அமைந்துள்ள ஒன்பது வாசல்களும், நாகமும் - பாம்புவடிவான குண்டலியும் (மூலாதாரம்) எட்டு நாலு புரவியும் எட்டும் நாலும், பன்னிரண்டு விரற்கிடை (கண்டத்துக்குக் கீழே எட்டு விரற்கிடை சாதாரண மனிதர்களுக்கும், கண்டத்துக்கு மேலே நான்கு விரற்கிடை யோகிர்க்கும்) ஓடிக் கொண்டிருக்கும் மூச்சுக் காற்றாகிய குதிரையும்; பாகன் விடான் எனில் பன்றியுமாமே - பாகனாகிய இறைவன் முறையாகக் கையாளவில்லை என்றால் பிறப்பு வீணே. போகின்ற எட்டாவது : சுவை, ஒளி,ஊறு,ஓசை,வாசம்,மனம்,புத்தி,அகங்காரம். புகுகின்ற பத்தெட்டு :பிராணன், அபானன், உதானன், வியானன். சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்ற பத்து வாயுக்களும்,காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம், துன்பம், அகங்காரம் என எட்டு விகாரங்களும் ஆகப் பதினெட்டு.
❤️கருவில் உருவாகும் பிறவியின் தன்மை❤️
ஏற எதிர்க்கில் இறையவன் தானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் தானாகும் நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரரசாளுமே.
458
ஏற எதிர்க்கில் இறையவன் தானாகும் - ஆண், பெண் கூடுதலின் போது, சுக்கிலம், சுரோணிதம் கலக்கும்போது, சுக்கிலம் எதிர்த்துச் செல்லுமானால், பிறக்கின்ற குழந்தை பரமேசுவரன் அம்சமாகும். மாற
எதிர்க்கில் அரியவன் தாளாகும் - மாறாக எதிர்த்து வரின் பிறக்கும் குழந்தை திருமாலைப் போலிருக்கும். நேரொக்க வைக்கில் நிகர்போதம் தானாகும் சுக்கிலம் சுரோணிதம் இரண்டும் சமமாகப் பொருந்தி நின்றால் பிறக்கும் குழந்தை பிரமனைப் போலிருப்பான். பேரொத்த மைந்தனும் பேரரசன் தானாமே - இந்த மூவரது தன்மையும் பொருந்திய குழந்தை பேரரசனாகச் சக்கராதிபதியாகத் திகழ்வான். அரி திருமால். போதத்தான் - பிரமன். ஞானத்த விநாமகள்கணவன் பிரமன். எனவே போதத்தான் என்று கூறப்பட்டது. இறையவன் பரமேசுவரன். பரமேசுவரன், திருமால், பிரமன் மூவரும் முறையே தாமச,சத்துவ, இராசத குணங்களைக் குறிக்கக் கூறிய உவமைகளாகும்.
❤️❤️தாயைத் தந்தையைப் போன்றதோர் சாயல்❤️❤️❤️
ஏய்அம் அலந்த இருவர்தம் சாயத்துப்
பாயும் கருவும் உருவாம் எனப்பல
காயம் கலந்தது காணப் பதிந்தபின்
மாயம் கலந்த மனோலயம் ஆனதே.
459 பாடல்கள்
ஏய் அங்கு அலந்து பல பிறப்புகள் எடுத்து, வருந்தி அலைந்து, இருவர் தம் சாயத்து தாய் தந்தையாகிய இருவருடைய சாயலில்; பாயும் கருவும் உருவாம் என - பாய்ந்த கரு குழந்தை உருப்பெறும். இப்படி உருவான உயிர்பல உடலில் பொருந்திப் பல பிறவி எடுத்த பின்பு, மாயம் கலந்து - மன மயக்கு அடைந்து. மனோலயம் ஆனதே மனம் ஒத்து இருந்தன. ஏய் பொருந்தி. அங்கு பல பிறவிகளில். அலந்து வாடி வருந்தி. சாயம் - சாயல். மாயம் - மயக்கம். மனோலயம் - மனம் பொருந்தி இருத்தல்.
❤️உயிர் பெறும் உணர்வும் நினைவும்❤️
கர்ப்பத்துக் கேவலம் மாயாள் கிளைகூட்ட
நிற்கும் துரியமும் பேதித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயேயம்
சொற்புறு தூய்மறை வாக்கின்ஆம் சொல்லே.
460 பாடல்கள்
கர்ப்பத்துக் கேவலம் கருப்பையிலே தனித்து இருக்கிற உயிருக்கு மாயாள்கிளை கூட்ட - மாயை தத்துவங்களைச் சேர்க்க. நிற்கும்துரியமும் பேதித்து நினைவெழ - கிடந்த தூக்க நிலையிலிருந்து விடுபட்டு, அவ்வுயிருக்கு நினைவுண்டாக (நினைவெழ) வலிமையை உடையகுணங்கள்; இச்சைகள் தூண்டப்பட்டு இயங்குகின்ற காரியங்கள் சொற்புறு தூய்மறை வாக்கின் ஆம் சொல்லே சொல்லோடு பொருந்தி வரும் வாக்கிலிருந்து வார்த்தைகள் உண்டாகும். கருவுக்கு உயிர், உணர்வு, நினைவு, குணம், சொல் தோன்றும் முறை சொல்லப்பட்டது. துரியம் தூக்கம். பேதித்து விடுபட்டு. வற்புறு வலிமையான. காமியம் ஆகாமியம் எட்டாவன : தருமம். ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதருமம், அஞ்ஞானம், அவைராக்கியம், அநைசுவரியம். சொற்புறு தூய்மறை - சுத்த மாயையில் தோன்றும் மறை மொழி, வாக்கு சொல்.
❤️தேடிச் சரண் அடைந்தேன் ❤️
என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலை செய்த
இறையோங்கும் நண்பால் ஒருவனை நாடுகின் றேனே.
461 பாடல்கள்
என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டி எலும்புகளால் நெருக்கமாகப் பின்னி, நரம்புகளாகிய கயிற்றைக் கொண்டு இறுசுக் கட்டி; செம்பால் இறைச்சி திருந்த மனை செய்து - இரத்தமும் சதையும் கொண்டு அழகியதாக இந்த உடம்பாகிய வீட்டை உருவாக்கி; இன்பால் உயிர் நிலை செய்த இறையோங்கும் நண்பால் - இன்பத்துக்கு இடமான உயிர் உடலைத் தந்தருளிய, பரம்பொருளிடம் கொண்ட நேசத்தால் ஒருவனை நாடுகின்றேனே உயிர் உடலைத் தந்தருளி ஒப்பற்ற ஒரு பெரும் பரம்பொருளைச் சரணடையவே விரும்புகின்றேன். மிடைந்த நெருக்கமாகப் பின்னி. வரிகட்டி - இறுக இழுத்து வரிந்து கட்ட செம்பால் - சிவந்த இரத்தம். மனை - இங்கு உடம்பு. நிலை செய்து தங்கச் செய்த. நண்பால் - நட்பால், நேசத்தால். நாடுதல் - இங் சரணடைதல்.
❤️சித்தம் கெடாது சீர் செய்யும் சிவன்❤️
பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன்
இதஞ்செய்யு மொத்துடல் எங்கும் புகுந்து
குதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே.
462 பாடல்கள்
ஆன்மாக்களை நல்வழிப்படுத்தும் (பதம் செய்யும்) பால் போன்ற வெண்ணீறணிந்த, திருமேனி (பால்வண்ணன் மேனி) சூரியனைப் போன்ற (பகலோன்) பேரொளி உடையவன் பொருளாகிய சதாசிவன்/ இதம் செய்யும் ஒத்துடல் எங்கும் புகுந்து உடலெங்கும் சீராகப் புகுந்து பரவி நன்மையைச் செய்வான். குதம் செய்யும் அங்கியின் கோபம் தணிப்பான் விதம் செய்யுமாறே விதித் தொழிந்தானே மூலாதாரத்தில் மூண்டெழும் கனலின் வேகத்தைக் குறையச் செய்வதற்கான; வகையில் அமைத்துள்ளான். உடல் வெப்பம் சீராக இயங்க உதவியுள்ளான். பதம் - நன்மை. இதம் சுகம். குதம் மூலாதாரம். பரம்
ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே
வழிபல நீராட்டி வைத்தெழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே.
463 பாடல்கள்
ஒழிபல செய்யும் வினை உற்ற நாளே - மண்ணில் பிறந்த உயிர்கள் துன்பவினைக்கிடமான பல செயல்களைச் செய்யும். அப்படிச் செய்கிற ஆன்மாக்களை, அவை அவ்வினைத் துன்பங்களில் இருந்து விடுபட வேண்டியவற்றை இறைவன் செய்வான்.வழிபல நீராட்டி வைத்தெழு வாங்கி - பல வழிகளிலும் அவ்வான்மாக்கள் இன்புற, அவற்றைத் தூய்மைப்படுத்தி, அவை ஈடேறி மேன்மை அடைய; பழிபல செய்கின்ற பாசக் கருவை - பழி பாவங்களைச் செய்வதை இயல்பாகக் கொண்ட, ஆசை வலைப்படும் உயிர்களை; சுழிபல வாங்கிச் சுடாமல் வைத்தானே மீண்டும் மீண்டும் பிறக்கின்ற, பிறவிக் கடல் அலையின் துயரச் சுழிகளில் சிக்கிப் பலமுறை பிறந்திளைக்கின்ற வருத்தத்தை நீக்கி, அழியாது காப்பாற்றி அருளினான். நீராட்டி - தூய்மைப்படுத்தி. வைத்தெழு வாங்கி - ஈடேறி மேன்மை பெறச்செய்து. சுழி - பிறவியாகிய சுழி. சுடாமல் கெட்டழியாமல்.
❤️எண் சாண் உடம்பு❤️
சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே.
464 பாடல்கள்
சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும் உண்டாகும் வெண்ணிறச் சுக்கிலமும், அக்கிரமத்தே - அதே விதமாக; இன்ப உறவில்
தோன்றும் அவ் யோனியும் கருப்பையில் தோன்றும் சுரோணிதமும்; புறப்பட்டு நால்விரல் புக்கிடும் எண்விரல் எட்டு விரற்கடை அளவு புறப்பட்டு நான்கு விரற்கடை அளவு உள்புகும். அப்போது, அக்கரம் எட்டு - எட்டு எழுத்துக்களின் குறியீடான எண் சாண் உடம்பு உருக்கொள்ளும். (அக்கரம் அட்சரம், எழுத்து. எட்டு எழுத்து என்பவை ஐந்து பூதங்களைக் குறித்த 'ல'கரம் (நிலம்) 'வ'கரம் (நீர்), 'ர'கரம் (நெருப்பு), 'ய'கரம் (காற்று, உயிர்) 'அ'கரம் (ஆகாயம்) ஆகிய ஐந்தும் ஓம் எனும் பிரணவத்தின் 'அ'கர 'உ'கர 'ம'கரம் என்று மூன்றும் ஆக எட்டு.
❤️அருட் கொடை ஆன்மாக்கள் உடம்பு❤️
போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆகம் கொணர்ந்த கொடைத்தொழில்
ஓகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து
மோகத்துள் ஆங்கொரு மூட்டைசெய் தானே.
465 பாடல்கள்
போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும் இன்பத்தில் பொருந்திய இறைவனும்; கோசத்தில் ஆகம் கொணர்ந்த கொடைத் தொழில் கருப்பையில் உயிரின் உயிர்ப்பைக் கொடைப் பொருளாகத் தந்த பரம்பொருள்; ஏகத்துள் - ஆண், பெண் ஒன்றுதலால் உண்டான இந்த உடம்புடன், இரண்டு எட்டு, (2x8=16;) மூன்றைந்து 3x5 = 15 ஆக 31) ஆக முப்பத்தோரு தத்துவங்கள் அவ்வுயிரோடு பொருந்த; மோகத்துள் அங்கொரு மூட்டை செய்தானே மோக மயக்கத்தில் இருவர் உறவால் கரு முட்டை தோன்றச் செய்தான். ஒளி உடல், உரு உடல், மனஉடல், வளிஉடல், அறிஉடல், ஆன்ம தத்துவம், வித்தியாதத்துவம் இவற்றோடு அன்ன கோசம், பிராண கோசம் முதலானவை சேர்ந்த தத்துவங்கள் முப்பத்து ஒன்று என்பர்.
❤️ஒடுங்கும் அனைத்தும் ஒடுங்கும் அண்டத்துள்❤️
பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலனைந்தும்
பிண்டத்தின் ஊடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே.
466 பாடல்கள்
பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலன் ஐந்தும் - பிண்டமாகிய இவ்வுடம்பில் உள்ளே இருக்கிற அறியாமை நிறைந்த ஐம்புலன்களும்; பிண்டத்தின் ஊடே பிறந்து மரித்தது உடம்புடனே தோன்றி,உடம்புடனேயே இறந்து பட்டன. அண்டத்தின் உள்ளுறு சிவனும் உடம்பின் உள்ளே தங்கியிருந்த உயிரும். அவ்வகை அண்டத்து நாதத்து அமர்ந்திருந்தானே அதே போல் உடல் இறந்தவுடன் உயிரும் அண்டப்பரப்பில் சென்று ஒன்றிவிடும். பிண்டம் உடம்பு. பேதைமை -அறியாமை. புலன் ஐந்து சுவை, ஒளி,ஓசை,ஊறு,நாற்றம் அண்டம் - ஆகாசம். நாதம் நாத வடிவம். என ஐந்து,
❤️ஒன்பது வாசல் உடைய கோட்டை❤️
இலைப்பொறி ஏற்றி எனதுடல் ஈசன்
துலைப்பொறி யிற்கரு ஐந்துடன் ஆட்டி
நிலைப்பொறி முப்பது நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே.
467 பாடல்கள்
இலைப்பொறி ஏற்றி எனதுடல் ஈசன் - இறைவன் எனக்கு இந்த உடலைத் தந்துள்ளான். இந்த உடல் அழியக் கூடியது. (இலைப்பொறி இல்லாது மறையும் உடம்பு). துலாக்கோல் (துலைப்பொறி) போன்ற தனது தத்துவ நியதியால் இந்த உடலுக்கு ஐம்பொறிகளை அமைத்துள்ளான். அதோடுகூட நிலையாக உள்ள (நிலைப்பொறி) முப்பது நீர்மை கொளுவி - முப்பது தத்துவங்களையும் பொருந்தச் செய்து; மனித சரீரமாகிய (உலைப்பொறி) உடம்பில்; ஒன்பது செய்தான் ஒன்பது வாசல்கள் வைத்துள்ளான். ஐம்பொறிகள் - மெய்,வாய்,கண், மூக்கு, செவி. முப்பது நீர்மை - முப்பது தத்துவங்கள். கொளுவி சேர்த்து. முப்பது தத்துவங்களாவன: ஆன்ம தத்துவம் இருபத்து நான்கு, வித்தியா தத்துவம் ஆறு.
❤️கருவி காரண உருவமானது❤️
இன்புற்று இருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே.
468 பாடல்கள்
இன்புற்று இருவர் இசைவித்து வைத்த மண்ஆணும் பெண்ணுமாகக் கூடி இன்புற்ற நிலையில் உண்டாக்கி வைத்த மண்பாண்டம் உடம்பு. துன்பக்கலசம் - துன்பத்திற்கு இடமான கலசம் ஆகும். அணைவான் ஒருவனே - இதில் சேருபவன் உயிராகிய ஆன்மாமட்டுமே. இந்த மண்பாண்டம், மட்குடம், உடம்பு, நீர் வழியும் பாதை ஒன்பதும், கருவிகள் (கலசம்) பதினெட்டும் உள்ளன. இவையெல்லாம் தாயாரின் கருப்பச் சூளையில் வெந்து வெளிவந்தவையே ஆகும். நீர்ச்சால் -நீர் வழியும் பாதை ஒன்பது. அவை கண்துளை இரண்டு, காதுத் துளை இரண்டு; மூக்குத் துளை இரண்டு, வாய் ஒன்று, சிறுநீர், மலப் பாதை ஒன்றொன்று என ஒன்பது. பதினெட்டுக் கருவிகளாவன : ஞானேந்திரியம் எட்டு, கன்மேந்திரியம் பத்து எனப் பதினெட்டு.
❤️பிறப்பின் பெருமை❤️❤️❤️
அறியீர் உடம்பினில் ஆகிய ஆறும்
பிறியீர் அதனிற் பெருகும் குணங்கள்
செறியீர் அவற்றினுட் சித்திகள் இட்ட(து)
அறிவீர் ஐந்தினுள் ஆனது பிண்டமே.
469 பாடல்கள்
அறியீர் உடம்பினில் ஆகிய ஆறும் இந்த உடம்பில் பொருந்தியுள்ள துன்பங்கள் ஆறு. அதை நீங்கள் அறிந்திருக்க வில்லையே! அதனால் உண்டாகும் அதன் குண இயல்புகளையும் பிரித்தறிந்து, அவற்றிலிருந்து விடுபடாமலும் இருக்கிறீர்களே (பிரியீர் அதன் பெருகும் குணங்கள்)! செறியீர் அவற்றினுள் சித்திகள் இட்டது இந்த உடம்பில் சித்திகள் புரியும் ஆற்றல் நிறைந்துள்ளதை உணர்ந்து அதில் ஈடுபடவும் மாட்டீர்கள். ஈரைந்தினானது பிண்டமே - இந்த உடம்பு ஈரைந்து பத்து மாதம் தாயார் சுமந்து பெற்றதல்லவா? இதன் பெருமை உணராது, மனிதர்களே! இதை வீணாகச் செய்யலாமா என்பது குறிப்பு. ஆறு துன்பங்களாவன: பிறப்பு, இழவு, துயரம்,பிணி,மூப்பு, சாக்காடு என ஆறு. சித்திகள் எட்டு -அவை அணிமா, மகிமா, கரிமா, இலகிமா,பிராத்தி, பிராகாமியம், ஈரத்துவம், வசித்துவம் என்பன.
❤️இறைவனோடு இரண்டறக் கலத்தல்❤️
உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.
470 பாடல்கள்
உடல் வைத்தவாறும் உடல் அமைக்கப்பட்டுள்ள விதமும், உயிர் வைத்தவாறும் - அதில் உயிர் பெய்து வைக்கப்பட்டுள்ள முறையுமமடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்து - தடுப்போடு கூடிய ஒன்பது வாசல்களும் அமைத்து; திடம் வைத்த தாமரைச் சென்னியும் உறுதியான ஆயிரம் இதழ்த் தாமரையோடு (சகஸ்ரதளம்) கூடிய தலையில், மூலாக்கினியைச் சுழுமுனை நாடி வழியாக மேலேற்றிச் சிரசில் தங்கச் செய்த; ஈசனைக் கை கலந்தேனே இறைவனை, இறைவனோடு நான் இரண்டறக் கலந்து நின்றேன். மடை - நீரோடும் பாதையில் உள்ள அடைப்பு. திறந்து மூட ஏற்றபடி அமைந்தது. ஒன்பது வாய்தல் - ஒன்பது வாசல். மெய்வாய் முதலானவை, திடம் - உறுதி.
❤️❤️இறைவனோடு இரண்டறக் கலந்தேன்❤️
கேட்டுநின்றேன் எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயமவன்
கூட்டுகின் றான்குழம் பின்கரு வைஉரு
நீட்டி நின்று/ஆகத்து நேர்பட்ட வாறே.
471 பாடல்கள்
கேடில் குற்றமில்லாத; பெருஞ்சுடர் - சோதிமயமான இறைவன்; மூட்டுகின்றான் முதல் யோனி மயன் அவன் கருவாயில் இருந்து உயிர்ப் படைப்பை அருளுகின்றான். மயன் - சிவபெருமான். கூட்டுகின்றான். குழம்பின் கருவை குழம்பாக உள்ள கருவைச் சீவனோடு சேர்ப்பவன் அவனே. உரு நீட்டி நின்று - கருக்குழம்பை உருவாக நீட்டித்து; ஆகத்து நேர்பட்டவாறே கேட்டு நின்றேனே உடம்பில் ஒன்றியிருக்கப் பெருமானிடம் நான் வேண்டிக் கொண்டேன்.
🌎🌏🌍நீர்க் குமிழி வாழ்க்கை🌎🌍🌍
பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபம் கலந்து பிறந்திடும்
நீரிடைநின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே.
472 பாடல்கள்
பூவுடன் மொட்டு பொருந்த அலர்ந்த பின் - பூப்போலும் பூமொட்டுப் போலும் இருக்கின்ற பிறப்புறுப்புகள் கூடிக் கலந்தபின்; காவுடைத் தீபம் கலந்து தோன்றிடும் - சுக்கிலமும் சுரோணிதமும் கலக்க ஒளிவடிவான சீவன் உயிர்ப்படையும். நீரிடை நின்ற குமிழி நிழலதாய் நீர்மேல் தோன்றி மறையும் நீர்க்குமிழி போல; பாருடல் எங்கும் பரந்து எட்டும் பற்றுமே - இந்த உடலில் உள்ள சீவ அணு எங்கும் பரவி . நிறைந்திருக்கும். எட்டு - அரு உடலாகிய நுண்ணுடல் கருவிகள்.
எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமு மாய்விடும்
ஓட்டிய பாச உணர்வென்னும் காயப்பை
கட்டி அவிழ்த்திடும் கண்ணுதல் காணுமே.
473 பாடல்கள்
முன் சொன்ன மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து இந்திரியங்களும், இந்த ஐம்பொறிகளுடன் இணைந்திருக்கிற மனம், புத்தி, அகங்காரம் என்னும் மூன்று அந்தக் கரணங்களும் சேர்ந்திருப் பதான, ஆசைகளுக்கு ஆட்படும் உணர்வுடைய இவ்வுடம்பைக் கண்ணுதல் - முக்கண் முதல்வன், கட்டி அவிழ்த்திடும் சேர்க்கவும். பிரிக்கவும் வல்லவன் என்பதை: காணுமே - மனிதர்களே! உணர்ந்தறியுங்கள். இந்திரியங்கள் - பொறிகள். கரணம் கருவி. காயப்பை - உடம்பு. கண்ணுதல் நெற்றிக் கண்ணுடைய சிவன்.
❤️வேதம் உரைத்த வித்தகன்❤️
கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீக்கிட
எண்ணிய வேதம் இசைத்த பரப்பினை
மண்முத லாக வகுத்துவைத் தானே.
474 பாடல்கள்
கண்ணுதல் நாமம் கலந்து நெற்றிக் கண்ணுடையசிவபெருமானின் பெயரோடு பொருந்திய 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தைக் கலந்து, உடம்பாயிடைப் பண்ணுதல் செய்து - அந்த நாத மந்திரம் உயிர்களின் உடல்களில் பொருந்தி இருக்கச் செய்து; பசு பாசம் நீங்கிட - சீவன்கள் பாவத் தொடர்பான ஆசைகளில் இருந்து விடுபட்டு நீங்கி நிற்க,வேதம் அருளிய இறைவன் மண்முதலாக விண்வரை எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான். கண்ணுதல் - நுதல் - நெற்றி, நெற்றியில் கண் உடையவன். நாமம் பெயர். நமசிவாய - பிரணவம். ஓம். பசு-உயிர். பாசம் - ஆசை. பற்று - இசைத்தல், சொல்லியருளுதல்.
❤️சக்தியும் சிவனும் சதாசிவன்❤️
அருளல்ல தில்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலி னாலோர் உயிர்க்குத்
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.
475 பாடல்கள்
அருள் அல்லது இல்லை அரன் அருளைத் தருகின்ற சக்தி இல்லாமல் சிவன் இல்லை. அவன் அன்றி அருள் இல்லை சிவன் சக்தி ஆன்மீக குழு இல்லாமல் சக்தியும் இல்லை. ஆதலின் ஓர் உயிர்க்குத் தருகின்றபோது - எனவே உயிர்க்கு உடம்பைத் தருகின்ற போது; இரு கைத்தாயர் இரு செவிலித் தாயார்களாகிய சிவ சக்தி அருள் பொருந்தி இருக்கச் செய்துள்ளான். அருள் - சக்தி. அரன் - சிவன். செவிலித்தாயார். கைத்தாயர் -
❤️வாழும் உயிர்க்கு வகுத்த விதி❤️
வகுத்த பிறவியின் மாது நல்லாளும்
தொகுத்துஇருள் நீக்கிய சோதி அவனும்
பகுத்து உணர்வாகிய பல்வகை எங்கும்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது ஆமே.
476 பாடல்கள்
வகுத்த பிறவியின் மாது நல்லாளும் - விதிக்கப்பட்ட மானிடப் பிறப்பில், உலகமாதாவாகிய சக்தியும்; தொகுத்து இருள் நீக்கிய சோதி அவனும் - படர்ந்துள்ள காரிருட்டை நீக்கிய ஒளி வடிவான பரம் பொருளும்; பகுத்து உணர்வாகிய பல்வகை எங்கும் - பலவகையினதாக உள்ள உயிர்க் குலத்தை எல்லாம்; வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது ஆமே - அவ்வுயிர்களுக்குக் காலமும் எல்லையும் வகுத்து. அவ்வுயிர்கள் உள்ளிருந்து, அவ்வுயிர்களை இயக்குவது, பெருமைக்குரிய மேலான பரம்பொருளே ஆகும். தொகுத்து - அடர்ந்து. மாண்பு - சிறப்பு.
❤️தாய் தந்தை போலவே குழந்தை❤️
மாண்பது ஆக வளர்கின்ற வன்னியை
காண்பது ஆண்பெண் அலிஎனும் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தான்அச் சோதிதன் ஆண்மையே.
477 பாடல்கள்
மாண்பது வாக வளர்கின்ற வன்னியை - பெருமைக்குரியதான பரம்பொருள் ஒன்றியிருக்கின்ற, இந்த உடம்பிலிருந்து வளர்கின்ற உயிர்ப்பான நெருப்பை; காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை ஆண் என்றும், பெண் என்றும், இரண்டும் அற்ற அலி என்றும், வேறுபடுத்திப் பிரித்தறிய முயலுவது வெறும் கற்பனையே ஆகும். பூண்பது மாதா பிதா வழி போலவே - அப்படி வளர்கின்ற உயிர்கள் அந்தந்த உயிர்களின் தந்தையின் தன்மைகளையே கொண்டிருக்கும்படி; ஆம் பதி செய்தான். அச்சோதி தன் ஆண்மையே (தாய் தந்தையின் சாயலில்) உடலைப் படைத்துள்ளது ஒளிவடிவமாகிய பரம்பொருளின் வல்லமையே ஆகும். வன்னி - நெருப்பு, ஒளி. பூண்பது -அடைவது. வழி - சாயல், தன்மை. ஆம்பதி - ஆகும்படி. ஆண்மை - வல்லபை
❤️❤️❤️ஆணும் பெண்ணும் ஆகின்ற முறைமை❤️❤️❤️
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூணிரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.
478 பாடல்கள்
உடலுறவின்போது, ஆண்மிகில் - ஆணிடம் தோன்றும் சுக்கிலம்அதிகமானால் பிறக்கின்ற குழந்தை ஆணாக இருக்கும் (ஆண்மிகும்). பெண் மிகில் பெண் ஆகும். பெண்ணிடம் உண்டாகும் சுரோணிதம் மிகுந்தால் பிறக்கின்றது பெண் குழந்தையாகும். இந்தச் சுக்கிலம் சுரோணிதம் இரண்டும் சமமாகக் கலந்து தோன்றினால் பிறப்பது அலியாகும். தாள் மிகுமாகில் தரணி முழுதாளும் ஆணின் முயற்சி கூடலின்போது அதிகமானால் உலகம் முழுதாளும் வல்லமை உடைய குழந்தை பிறக்கும். ஆணின் விந்து திண்மையதாகக் கெட்டிப் பட்டதாயின் அது வெளிப்பட்டுப் பெண்ணின் சுரோணிதத்துடன் சேர்ந்தும் பயனில்லை. அலி -ஆணும் பெண்ணும் அற்ற தன்மை தாண். தாள் முயற்சி. தரணி - உலகம். பாணவம் திண்மை.
❤️நூறாண்டு வாழ வழி❤️
பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் தவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே.
479 பாடல்கள்
உடலுறவில், சுக்கிலம் கருப்பையில் சேர்ந்த பிறகு (பாய்ந்தபின்), அஞ்சு ஓடில் ஐந்து மாத்திரைப் பொழுது பிராணவாயு ஓடினால், கருவுயிர்த்துப் பிறக்கிற குழந்தை நூறாண்டு வாழும். நாலோடில் நான்கு மாத்திரைப் பொழுது ஓடினால், பிறக்கிற குழந்தை உலகில் (பாரினில்) எண்பதாகும் - எண்பதாண்டு வாழும். இப்படிப் பாய்ந்திடும் மூச்சுக் காற்றை அளவறிந்து அதன்படி செலுத்தச் செய்கின்ற வலிமை யோகப் பயிற்சி உடைய யோகியர்க்கே கைவரக்கூடிய செயலாகும். நாலோடில் நான்கு மாத்திரை அளவு ஓடினால். பாய்ச்சல் - செலுத்துதல். மாத்திரைப் பொழுது என்பது கைநொடி அளவு அல்லது கண் இமைக்கும் நேரம். ஒரு விநாடி.
❤️நல்ல குழந்தை பெற....❤️❤️❤️
பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயுமா நடுப்படிற் ஊனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே,
பாய்கின்ற வாயு குறையில் குறள் ஆகும் முன்பாடலில் சொன்னபடி மூச்சுக் காற்று கருப்பையில் நான்கு கைநொடிப் பொழுதுக்குக் குறையப் பாயுமானால், பிறக்கின்ற குழந்தை குட்டையாக இருக்கும். இந்த மூச்சுக் காற்று அளவு மேலும் குறையுமானால் பிறக்கின்ற குழந்தை முடம் ஆகும். காற்றின் ஓட்டம் தடைப்பட்டால் (பாய்கின்ற வாயு நடுப்படின்), கூன் முதுகுடைய குழந்தை பிறக்கும். இப்படிப் பாயும் மூச்சுக் காற்றின் அளவு, ஆண் மகனுடையதைப் பற்றிச் சொன்னதே அல்லாமல், இந்த அளவும் முறையும் மாதர்க்கு இல்லை பெண்களுக்குப் பொருந்தாது. குறள் குட்டை. நடுப்படல் தடைப்படல். மாதர் பெண்கள். பார்க்கில் பார்க்கப் போனால்.
❤️கூன் குருடு நீங்கிய குழந்தை உண்டாக...❤️
மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.
481 பாடல்கள்
கருத் தரிக்கின்ற காலத்தில் தாயாரின் வயிற்றில் மலம் அதிகம் இருக்குமானால், பிறக்கின்ற குழந்தை மந்த புத்தி உடையதாக இருக்கும். மாதா வயிற்றில் சலம் மிகின் - தாய் வயிற்றில் நீர் மிகுந்து இருக்குமானால் பிறக்கும் குழந்தை ஊமையாக இருக்கும். மலம் நீர் இரண்டும் மிகுந்திருக்கும்போது கருத்தரித்தால், பிறக்கின்ற குழந்தை குருடாக இருக்கும். மாதா -தாய். உதரம் -வயிறு. மந்தன் - குறை அறிவுடை யவன்.சலம் -நீர்.மூங்கை - ஊமை. கண் - பார்வை. குழவி - குழந்தை.
❤️இரட்டைக் குழந்தைகள்❤️
குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே.
482 பாடல்கள்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
உடலுறவின்போது, ஆணுக்கும் பெண்ணுக்கும் மூச்சுக் காற்று வலது பக்க மூக்கு வழியாக வெளிப்பட்டால், பிறக்கின்ற குழந்தைஆணாகும். மூச்சுக் காற்று இருவருக்கும் இடப்பக்கம் வெளிப்பட்டால் பெண் குழந்தை பிறக்கும். அபானன் எதிர்க்கில் - (அபானன் மலக்காற்று) அபான வாயு எதிர்த்து வந்தால், சுக்கிலம் சிதறி இரட்டைக் குழந்தைகள் பிறக்கும். இருவருக்கும் இடப்பக்க மூச்சுக்காற்றும், வலப் பக்க மூச்சுக் காற்றும் சமமாக இருக்குமானால் குழந்தை அலியாகப் பிறக்கும். ஒக்கில் - ஒரே மாதிரியாக இருந்தால்.
❤️கோமளமான குழந்தை பெற❤️
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமள மாயிடுங்
கொண்டநல் வாயு இருவர்க்குங் குழறிடில் கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே.
483 பாடல்கள்
கொண்ட நல் வாயு இருவர்க்கும் ஒத்து எழில் உடலுறவு கொள்ளும் இருவருக்கும் மூச்சுக் காற்று ஒத்து இயங்குமானால்; கொண்ட குழவியும் கோமளமாயிடும் பிறக்கின்ற குழந்தை அழகுடையதாக இருக்கும். இருவருக்கும் அப்போது மூச்சுக்காற்று தடுமாறுமானால். அந்தப் பெண்ணுக்குக் கருத்தரிக்க இயலாது போகும். எழுதல் இயங்குதல். கோமளம் - அழகு. குழறுதல் தடுமாறுதல். கோல் வளையார் - திரண்ட வளையல் அணிந்த பெண்கள்.
❤️கருவில் உருவாகி வளர்ந்து ❤️
கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே.
484 பாடல்கள்
கோல்வளை - வளையல் அணிந்த பெண். உந்தி -கருப்பம். கொண்ட - ஏற்ற. ஒரு பெண் தன் கருப்பையிலே தாங்கிய குழந்தை; தால்வளை உள்ளே தங்கிய சோதியாம்-(தால்-மேல் அண்ணம். துளை உள்நாக்குப் பகுதி) உள்நாக்கில் ஒளிவிடும் சோதி ஒளி போலத் திகழும். பால் வளைந்துள்ளே பகலவன் பொன் உருப்போல் -(பால்-ஆண்பால் அல்லது பெண்பால்) இப்படிச் சோதி ஒளிபோலத் திகழும் குழந்தை. ஆணாகவோ பெண்ணாகவோ வளர்ந்து, சூரியனைப் போலப் பொன் உருப்பெற்று; வளர்ந்துள்ளே பொருந்து உருவாம் - கருப்பையிலே பொருந்தி வளர்ந்து முழு உருவம் பெறும்.
❤️பத்து மாதம் கழிந்து பிறக்கும்❤️
உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்
பருவம தாகவே பாரினில் வந்து
மருவி வளர்ந்திடு மாயையி னாலே
அருவம தாவதிங் காரறி வாரே.
485 பாடல்கள்
அருவம தாவதிங் காரறி வாரே. உருவம் வளர்ந்திடும் ஒண் திங்கள் பத்தில் முன்பாடலில் சொன்னபடி தாயின் கருப்பத்தில் குழந்தை பத்துமாதம் வளரும். இந்தப் பத்து மாதங்களில் கருப்பையில் வளர்ந்து உருவம் பெற்ற குழந்தை; பருவமதாகவே பாரினில் வந்திடும் பத்துமாத முடிவில் பூமியில் வந்து பிறக்கும். தாயார் வளர்க்க வளரும் அக்குழந்தை (மருவி வளர்ந்திடும்) மாயையினாவே மலமயக்கங்கள் சேர்வதாலே; அருவமதாவது இங்கு யாரும் அறிகிலார் அதன் உடலில் பொருந்தி உள்ள உயிர் கண்ணுக்குப் புலனாகாத அருவமாய் இருப்பதை யார் அறிந்து கொள்கின்றனர்? திங்கள் மாதம். அருவம் - உருவமற்றது.
❤️சிருட்டி இரகசியம் சிவனே அறிவான்❤️
இட்டார் அறிந்திலர் ஏற்றவர் கண்டிலர்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன்இம் மாயையின் கீழ்மையெவ் வாறே.
486 பாடல்கள்
இட்டார் - தாயின் கருப்பையில் கரு உயிர்க்கக் காரணமான தந்தையும்; ஏற்றவர் - அந்தக் கருவைத் தன் கருப்பையிலே ஏற்றவரான தாயாரும், அறிந்திலர் - குழந்தை பிறக்குமா, பிறக்காதா என்பதை அறியமாட்டார். (தந்தை இட்டவர்) ஏற்றதாயாரும், கண்டிலர் -தான் கருவுற்றதைக் கண்கொண்டு பார்த்ததில்லை. ஆனால், இதையெல்லாம் அறிந்த தட்டான் ஆகிய பிரமதேவன், இந்த இரகசியத்தை யாருக்கும் சொல்லாமல் இருக்கிறான். இந்த உண்மையை உணர்ந்தும் (பட்டாங்கு சொல்லும்) பரமனும் அங்கு உளன் பரம்பொருள் அந்த உயிரோடுதான் தங்கியிருக்கிறான். கெட்டேன் இம்மாயையின் கீழ்மை எவ்வாறே சிருஷ்டியின் இந்த மாய வினோதத்தை என்னவென்று புரியாமல் நானும் கெட்டேன். கெட்டேன் என்றது அறிய முடியாத தவிப்பை. கீழ்மை என்றது புரியாத புதிராக உள்ளதை. தட்டான் - தட்டு - தாமரை. தாமரைத் தட்டில் உள்ளதால் பிரமன் தட்டான் எனப்பட்டான். பட்டாங்கு உண்மை.
ஓம்..
❤️❤️பிறவித் துயர் கெடும் பெருமான் புகழ் பாட❤️❤️❤️
இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய
தொன்புற நாடிநின்று ஓதலும் ஆமே.
487 பாடல்கள்
இன்பம் அடைய விரும்பிய ஆணும் பெண்ணுமாகிய இருவரும் கூடி; துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்த பின் - துன்பந் தருவதாகிய பந்த பாசங்களில் சிக்கி, வினைத் தொடர்புகளோடு வளர்ந்து பின்னர்; முன்புற நாடி நிலத்தின் முன்தோன்றிய - இதற்கு முன் எடுத்த பழம் பிறவிகளைப் பற்றி ஆராய்ந்து அறிந்து; தொன்புற நாடி நின்று ஓதலும் ஆமே தொன்புற அநாதியான, பழம்பெருமை உடையதான இறைவனின் நமசிவாய மந்திரத்தை ஓதி உணர்ந்து, பிறவித் துயர் அழியச் செய்தலும் கூடும். தொன்புறுதொன்மையான.
❤️தாய் வயிற்றுப் பிள்ளை❤️
குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைதன் கூட்டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லைப் போக்கில்லை ஏனென்ப தில்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே.
488 பாடல்கள்
குயில் குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால் குயில் பறவைக்கு அடைகாக்கத் தெரியாது. எனவே அது தன் முட்டையைக் காக்கை கட்டியுள்ள கூட்டில் இட்டு விடும். என்றாலும், காகம் தன் முட்டையோடு குயில் முட்டையையும் வித்தியாசம் பாராமல் அடைகாத்து வளர்த்து வரும். அதுபோலத்தான் ஒரு தாயும் தன் வயிற்றில் வளர்கிற பிள்ளையைத் தனி இயக்கமோ, ஆக்கமோ, காரண காரிய ஆராய்ச்சியோ இல்லாமல், தன்னை அறியாமலே தானே வளர்க்கிறாள். மாயை - பந்தபாச மயக்கம். அயிர்ப்பின்றி - சந்தேகப்படாமல். ஏன் என்பது - காரண காரியம் அறிவது.
❤️அலகிலா விளையாட்டு❤️
முதற்கிழங் காய முளையாய் முளைப்பின்
அதற்புத லாய்ப் பலமாய் நின்றளிக்கும்
அதற்கது வாம்இன்ப மாவது போல
அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.
489 பாடல்கள்
முதற் கிழங்காய் - முதலில் கிழங்காகத்தான் தாவரங்கள் இருந்தன. முளைவாய் - பின்னர்க் கிழங்கு முளைவிட்டு வளர்ந்தது. முளைப்பின்
அதன் புதவாய் முளைத்த கிழங்கு பின் புதராகத் தழைத்து வளர்ந்து பலமாய் நின்றளிக்கும் - பிறகு பழங்கள் பழுக்கப் பயன் தந்து நிற்கும். அதற்கதுவாம் இன்பம் ஆவது போல அதற்கு, அந்தத் தாவரத்திற்கு இப்படிப் பயன் தருவதே இன்பமாக இருப்பதைப் போல; அதற்கு அதுவாய் நிற்கும் ஆதிப் பிரானே எல்லாவற்றையும் படைத்தளித்துக் காக்கின்ற பரம்பொருளுக்கும் இப்படி உயிர்களைப் படைத்தலும் காத்தலும்கூட ஓர் இன்ப விளையாட்டே.
❤️தவம் உடையார் தானே அறிவார்❤️
ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்மிறை
ஊனே சிறுமையுள் உட்கலந் தாங்குளன்
வானோர் அறியும் அளவல்ல மாதேவன்
தானே அறியும் தவத்தின் உள்ளே.
490 பாடல்கள்
ஏனோர் பெருமையன் ஆகிலும் எம் இறை ஏனோர் மற்றத் தேவர்கள். இவர்களை எல்லாம் விடப் பெருமை மிகுந்தவன் எம் இறைவன் சிவன். ஊனே சிறுமையுள் - ஊனுடம்பு இழிந்ததே என்றாலும், உட்கலந்து ஆங்கு உளன் - அந்த உடம்பினுள்ளே பொருந்தி, அவன் அங்கே தங்கி இருக்கிறான். வானோர் அறியும் அளவல்ல மாதேவன் - தேவாதி தேவனாகிய அப் பரம்பொருள் வானுலகத் தேவர்களால் அளந்தறியக் கூடியவனல்ல. தானே அறியும் தவத்தின் உள்ளே - அவன் மெய்த்தவம் புரியும் மேலான ஞானிகளுக்குத் தானே வெளிப்பட்டு அறியக் கூடியவனாவான். ஊன்உடல் -சதை உடம்பு.
❤️❤️திரும்பத் திரும்பப் பிறப்பது திருவருளாலே❤️❤️❤️
பரத்திற் பதிந்து பதிந்தநற் காயம்
உருத்தரித்து இவ்வுடல் ஓங்கிட வேண்டில்
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்தும் பிறக்குந் திருவரு ளாலே.
491 பாடல்கள்
பரத்தில் கரைந்து பதித்த நல்காயம் - பரம்பொருள் நினைவில் ஒன்றிக் கலந்தது இந்த உடம்பு; உருத் தரித்தது இவ்வுடல் ஓங்கிட வேண்டில் - மனித உருவெடுத்த இந்த உடம்பு மேன்மை நிலை அடைய; திரைக்கடல் உப்புத் திரண்டபோல அலைகடலின் உப்பு நீரைத் தேக்கிய பாத்திகளில் (உப்பளம்) நீர் ஆவியாகிப் போக உப்பு மட்டும் உலர்ந்து குவிந்திருப்பதைப் போல; திரித்துப் பிறக்கும் திருவருளாலே இந்த உடம்பு பிறக்கிறது, இறக்கிறது, மீண்டும் பிறக்கிறது, இறைவன் திருவருள் துணையாலே. கடல் நீர் ஆவியாகி மேலே போனாலும்,மீண்டும் மழையாய்ப் பெய்து கடலை அடைகிறது. அதுபோல மனிதர் பல பிறவி எடுப்பது ஒவ்வொரு பிறவியிலும் படிப்படியே உயர வேண்டும் இறைவன் திருவருள் துணையால், என்பதைக் குறித்தே. திரித்துப் பிறக்கும் என்றது, திரித்து மறுபடியும். பரத்தில் பரம்பொருள் நினைவில். கரைதல் - தோய்தல். காயம் உடம்பு. திரை - அலை.
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக