🌎🌍🌏கணவன் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்றுநினைக்கும் மனைவிகள் இந்த துதியை காரடையான் நோன்பு அன்று துதித்தால் மாங்கல்ய பலம் பெறலாம்.🌎🌍🌏

 

🌎🌍🌏கணவன் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்றுநினைக்கும் மனைவிகள் இந்த துதியை காரடையான்நோன்பு அன்று துதித்தால் மாங்கல்ய பலம் பெறலாம்.🌎🌍🌏



🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎

🌹சர்வம் சிவார்ப்பணம்...

🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...

🌹 ஓம்..

🌹இன்று! சுபகிருது வருடம், பங்குனி 1, புதன் கிழமை, 15.3.2023, தேய்பிறை அஷ்டமி திதி மதியம் 3:24 மணி வரை...

அதன்பின் நவமி திதி, கேட்டை நட்சத்திரம் அதிகாலை 4:36 மணி வரை, அதன்பின் மூலம் நட்சத்திரம் நாளை அதிகாலை...

நல்ல நேரம்: காலை 9:00 - 10:30 மணி. ராகு காலம்: மதியம் 12:00 - 1:30 மணி. எமகண்டம்: காலை 7:30 - 9:00 ம...
குளிகை: காலை 10:30 - 12:00 மணி. சூலம்: வடக்கு...

பரிகாரம்: பால் சந்திராஷ்டமம்: ரோகிணி பொது: பங்குனி மாதப்பிறப்பு, காரடையான் நோன்பு, தேய்பிறை அஷ்டமி...

சந்த்ராபீடாம் சதுரவதனாம் சஞ்சலா பாங்கலிலாம்

 குந்தஸ்மேராம் குசபரநதாம் குந்தளோத்தூத ப்ருங்காம் 

மாராராதே: மதனஸிகினம் மாம்ஸளம் தீபயந்தீம் 

காமாக்ஷிம் தாம் கவிகுலகிராம் கல்பவல்லீமுபாஸே

பொதுப்பொருள்: சந்திரனைத் தன் தலைமேல் ஆபரணமாகத் தரித்தவளே, அழகிய திருமுகத்தையுடையவளே, சஞ் சலமடைந்தோர் மனவேதனையைக் கடைக்கண் பார்வையால் விலக்குபவளே, குந்தபுஷ்பம் போல் பேரழகுடையவளே, ஸ்தனபாரத்தினால் வணங்கிய சரீரத்தைக் கொண்டவளே, மன்மதனை சாம்பலாக்கிய ஈசனுக்கு காமாக்னியை விருத்தி செய்கிறவளே, கவிஞர் கூட்டத்தின் வாக்கிற்கு கல்பவல்லியாய் திகழ்பவளே, காமாக்ஷி தாயே நமஸ்காரம்.

(இந்தத் துதியை காரடையான் நோன்பு அன்று துதித்தால் மாங்கல்ய பலம் பெறலாம்.)

🙏பைரவர் அருள் தரும் ஒன்பது முக ருத்ராட்சம்🙏🙏🙏

👍ஒரிஜினல் ஒன்பது முக ருத்ராட்சம் தேவை என்பவர்கள் அணுகவும்.👍

      ❤️ +91 7550334350 ❤️

பைரவ வழிபாடு செய்யும்போதும், பைரவ ஜபம் செய்யும் போதும் ஒன்பது முக ருத்ராட்ச மணி அணிந்து கொள்வது சிறந்த பலனைத் தரும். ஏனெனில் ஒன்பது முக ருத்ராட்சம் பைரவரின் அருள் பெற்றதாகும்.

இந்த மணி அனைத்துவித பாவங்களையும் போக்கும். அச்சமின்றியும், மன உளைச்சல் இன்றியும் வாழ வழி வகுக்கும். ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையைத் தரும். மனிதர்களைப் பீடிக்கும் பாவங்களை எரிக்கும் அக்னியாக இந்த ருத்ராட்சம் செயல்படுகிறது.

ருத்ராட்ச ஜாபலா உபநிஷதம் இந்த மணி ஒன்பது வித சக்திகளைப் படைத்ததாகக் கூறுகிறது.

இதை அணிபவர்க்கு அகால மரணமோ, துர்மரணமோ நிகழாது. மரண பயம் உட்பட பலவித அச்ச உணர்வுகளைக் கொண்டவர்கள் இதை அணிந்தால், அச்ச உணர்வு மாறும்.

இதனுடன் பத்து, பதினொரு முக மணிகளைச் சேர்த்து அணிந்தால் சகலவிதப் பாதுகாப்பும் உண்டாகும். சகல வளமும் தரக்கூடியது.

கணவன், உறவினர், குழந்தைகளால் வாழ்வில் பிரச்சனைகள் உள்ள பெண்கள் இதைத் தனியாகவோ மற்ற முக மணிகளோடு சேர்த்தோ அணிந்தால் பிரச்சனைகள் விலகும்.

ஓம்..




நானும் குறையாகச் சொல்லலே, ரொம்ப நாளாகப் பார்த்துக்கலியேங்கற ஆதங்கம்தான்... மாமி அந்தக் குறைபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

 "மாமி, என்ன இன்னிக்கு ஸ்பெஷலா பளிச்சுனு இருக்கீங்க? என்ன விசேஷம்?" தீபா கேட்டாள். இந்த வயசிலும் மாமிஎவ்வளவு தீட்டா, அழகாக இருக்கிறார்!

“இன்னிக்கு காரடையான் நோன்பு," மாமி சொன்னாள்.

"அது என்ன காரா புரான்னுகிட்டு...?" கிருத்திகாவுக்குப்புரியவில்லை.

"சும்மா இருடி, நோன்பு தெரியாதா உனக்கு?" புவனேஸ்வரிதன் மகளை அடக்கினாள். 

புவனேஸ்வரிக்கும் அவ்வளவாக அந்த நோன்பு பற்றித் தெரியாது என்பதை பவானி மாமி புரிந்துகொண்டாள்."அது மாங்கல்ய பலம் தரும் அற்புதமான நோன்பு'' என்றாள்
கிருத்திகாவைப் பார்த்து. 

அது ஏதோ கல்யாண சமாச்சாரம் என்பது ஒருத்திகாவுக்குப் புரிந்தது. உடனே லேசான சிகப்பு அவள் முகத்தில் படர்ந்தது.

“இப்பவே எல்லா வெட்கத்தையும் பட்டுவிடாதே." மாமி கிண்டலடித்தாள். "இது பெரும்பாலும் கல்யாணமானவங்க
கடைபிடிக்கற நோன்பு..."

 "சொல்லுங்க மாமி, சொல்லுங்க," என்று ஆவலுடன் கேட்டபடிமுன்வந்தாள் புவனேஸ்வரி,

"தீர்க்க சுமங்கலியா இருக்கணும்கறதுதானே எல்லா கல்யாணமான பெண்களுக்கும் ஆசை?" கேட்ட மாமி. தொடர்ந்தாள். "அந்த பாக்கியத்தை அடையறதுக்காக சுமங்கலிப் பெண்கள், ஏன், கிருத்திகா, உன் மாதிரி கல்யாணம் ஆக வேண்டிய பெண்களும் மேற்கொள்ள வேண்டிய நோன்புதான் இது."

"எப்படி இந்த விரதத்தை மேற்கொள்றது?"

''முதல்ல இந்த நோன்பு, அதான் விரதம், கடைப்பிடிக்கப்பட்டு வந்ததற்கு ஒரு கதை இருக்கு, அதைச் சொல்றேன் கேளுங்க."

"ஹை! கதை..." தீபா குதித்தாள்.

"அது சரி, என்ன சாப்பிடறீங்க? லெமன் ஜூஸ் பிழிந்து தரவா?" மாமி கேட்டாள். 

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம் மாமி, கதையச் சொல்லுங்க,"தீபா, மாமியை அவசரப்படுத்தினாள்.

ஓம்..

ஆமாம் மாமி, நமக்குள்ளே என்ன சம்பிரதாயம்? உங்ககிட்ட விஷயம் தெரிஞ்சுக்கறதுதான் முக்கியம்." புவனேஸ்வரி மகளை ஆமோதித்தாள்.

சரி, ஒரு டம்ளர் தண்ணியாவது குடியுங்க," என்று சொல்லி உபசரித்த மாமி, கதையைச் சொல்ல ஆரம்பித்தாள். "அஸ்வபதின்னு ஒரு ராஜா இருந்தார். அவரோட பொண்ணு சாவித்ரி. அவளுக்குக் கல்யாணம் பண்ணிவைக்க ராஜா முடிவு

பண்ணினார். அந்தக் காலத்திலே சுயம்வரம், இளவரசிக்கேத்த மாப்பிள்ளை தேர்வுன்னு கொஞ்சம் சங்கடமான ப்ரோஸீஜர்.. "இப்ப மட்டும் என்ன வாழுதாம்...?" என்றாள் புவனேஸ்வரி. "மாமி, நீங்க கதையைச் சொல்லுங்க, அம்மா இப்படித்தான்;" கிருத்திகா, அம்மாவைக் கடிந்து கொண்டாள்.

“ஆச்சா, அந்த சாவித்ரிக்கு எந்த மாப்பிள்ளையையும் பிடிக்கலே. சுயம்வரத்துக்கு வந்த இளவரசர்களும் நாம இவளுக்கு சமமாக மாட்டோம்னு ஒதுங்கிட்டாங்க. ஆனா, அப்பா அஸ்வபதிக்குதான் மனசு கேட்கலே. பொண்ணைப் பெத்தாச்சு, யாராவது நல்ல பையனா, அவளைக் கண் கலங்காம பார்த்துக்கறவனாகப் பார்த்து...." "ஆமாம். அந்தக் காலத்லேதான் டிவியும் சீரியலும் கிடையாதே.."

தீபா ஜோக்கடித்தாள்.

"சும்மா இருடி, கிண்டல் பண்ணிகிட்டு..." புவனேஸ்வரி மகளை அடக்கினாள். 'யாருமே சரிப்பட்டு வராத நிலையிலே, சாவித்ரி தனக்கேற்ற

மணாளனைத் தானே தேடிக்கொள்ளப் புறப்பட்டாள்..."

"அட! அந்தக் காலத்திலேயேவா?" வியந்தாள் தீபா.

ஆமாம், ஆனா அவளோட உள்ளுணர்வு அவளை வழி நடத்திச்சு. அதன்படி அவ அந்த ராஜ்யத்தின் காட்டுப் பகுதிக்குப் போனாள். அங்கே சத்யவான்னு ஒருத்தன் மரம் வெட்டிக்கிட்டிருந்தான். அவன்தான் தனக்கேத்த கணவன்னு சாவித்ரி தீர்மானிச்சுட்டான்..."

அட, மரம் வெட்டறவனையா? அப்பவே ஜாதி மதம்பார்க்காத சமுதாயம் இருந்திருக்கா?" வியந்தாள் கிருத்திகா.

"விஷயத்தைக் கேளு. மாமி கிருத்திகாவை அமைதிப்படுத்தினாள். "அந்த சத்தியவான் சால்வ நாட்டு மன்னனோட மகள். எதிரிகள் நாட்டைக் கைப்பற்றியதால மன்னன், தன் மனைவி, குழந்தை சத்யவானோட காட்டுக்குத் தப்பி ஓடிவந்து இங்கேயே வாழ்ந்துகிட்டிருக்கான். மகள், தான் சத்யவானைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னபோது அஸ்வபதி முதல்ல.


ரொம்ப சங்கடப்பட்டான், அப்புறம், அவனோட கதையைத் தெரிஞ்சுகிட்டு, ராஜ பரம்பரைதான்னு நிம்மதியாக அவனுக்கே சாவித்ரியை கல்யாணம் பண்ணிக்கொடுக்க முன்வந்தான்...." “ராஜபரம்பரைதான்னாலும், இப்ப மரம் வெட்டறவன்தானே;

சாவித்ரிக்குதான் எவ்ளோ பெருந்தன்மை!" வியந்தாள் தீபா.

“ஆனா, இந்தக் கல்யாணத்திலேயும் ஒரு இக்கு இருந்தது..."

மாமி கொஞ்சம் தயங்கினாள்.

“ஏன் மாமி, என்னாச்சு?" பெண்கள் மூவருமே பதறினார்கள். “அதாவது, சத்யவான் இன்னும் ஒரு வருஷம்தான் உயிரோட இருப்பான்னு ஒரு முனிவர் சொல்லிட்டுப் போயிட்டார். அவர் அந்த அரச குடும்பத்தின் ஆஸ்தான குரு. அவர் தீர்க்கதரிசனமாகச் சொன்னது எல்லாமே சரியாக நடந்து வந்துகிட்டிருந்தது." “அடப்பாவமே!"

“ஆனாலும் சாவித்ரி தன்னோட முடிவை மாத்திக்கத் தயாராக

இல்லே, ராஜாவும் வேற வழியில்லாம அந்தக் கல்யாணத்துக்கு

சம்மதிச்சார். கல்யாணம் நடந்தது. சம்பிரதாயப்படி மனைவி

கணவனோடதானே தங்கணும்? அதனால் சாவித்ரி, கணவனுடன் காட்டுப் பகுதிக்கே போய் வசிக்க ஆரம்பிச்சாள்." “என்ன சோதனை அம்மா இது! பாவம் அந்தக் குழந்தை..

புவனேஸ்வரி ரொம்பவும் பரிதாபப்பட்டாள். “அம்மாவுக்கு டிவி சீரியல் பார்க்கற டென்ஷன் வந்திருச்சு" தீபா அம்மாவைக் கிண்டலடித்தாள்.

"காட்டுப் பகுதிக்குப் போய் வாழற இந்த அரசகுமாரிக்கு எந்த சௌகரியமும் கிடைக்காதே. அதோட கணவன் இன்னும் ஒரு வருஷம்தான் உயிரோட இருப்பான்ங்கற சங்கடமும் நாளுக்கு நாள் உறுத்திக்கிட்டே இருக்குமேன்னு எல்லாரும் பயந்தாங்க, ஆனா சாவித்ரி தீர்மானமாகச் சொன்னாள். 'எனக்கு எந்தக் குறையும் ஏற்படாது. எல்லாரும் தைரியமா இருங்க' அப்படீன்னா. மத்தவங்களும் ஒரு மாதிரியா சமாதானமாயிட்டாங்க..."

"அப்புறம் என்னாச்சு மாமி? முனிவர் சொன்னது நடந்துட்டுதா என்ன?" இந்த முறை பதறியவன் கிருத்திகா.

"ஆமாம், சரியா ஒரு வருஷம் ஆச்சு. சத்யவான் உயிரை எடுக்க யமன் வந்திட்டான். பொதுவாகவே யார் கண்ணிலேயும். படாமதான் அவன் வருவான்னு சொல்வாங்க. ஆனா, அவன் வர்றது சாவித்ரிக்குத் தெரிஞ்சுபோச்சு. அவன் தன் கணவரை தன்னிடமிருந்து நிரந்தரமாகப் பிரிக்கத்தான் வந்திருக்கான்ங்கறதும் தெரிஞ்சுபோச்சு. உடனே, அவ தயாராயிட்டா. எமன்
சத்யவானோட உயிரை எடுத்துகிட்டு வானுலகம் போக ஆரம்பிச்சபோது, சாவித்ரியும் கூடவே ஓடிவந்தா.”

"அம்மாடி எவ்ளோ தைரியம்!" தீபா வியந்தாள். "யமன் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் சாவித்ரி விடலே.

சரி, இவளுக்கு ஏதாவது வரம் கொடுத்து இப்போதைக்கு இவகிட்டேயிருந்து தப்பிச்சுப்போம்னு நினைச்சான். 'இதோ பார். நீ கேட்கற வரத்தை நான் தர்றேன். ஆனா ஒண்ணு, உன் கணவனோட உயிரை மட்டும் திரும்பக் கேட்காதே'ன்னான். உடனே சாவித்ரியும், ரொம்ப சரி, எனக்கு ஒரே ஒரு ஆசைதான். என் குழந்தையை என் தந்தையார் தன் மடியில் போட்டுக் கொஞ்சுவதை நான் பார்க்கணும்'னு கேட்டா.'நல்லவேளை, நம்மோட கடமையிலே இவ குறுக்கே வரலே'ன்னு நினைச்சுகிட்ட யமன், சரி அப்படியே ஆகட்டும்னான். 'அப்படியா, அப்ப என் கணவனை எனக்குத் திருப்பித்தா'ன்னு கேட்டா சாவித்ரி. 'அதெப்படி முடியும். நான் ஒரு உயிரை எடுத்துகிட்டா திருப்பித் தர முடியாதே'ன்னான். 'அப்படின்னா நீ கொடுத்த வரத்தைத் திருப்பி எடுத்துப்பியோ?'ன்னு கேட்டா சாவித்ரி. 'நிச்சயமா மாட்டேன், னான் யமன். 'உன் வரம் பலிக்கணும்னா எனக்குக் குழந்தை பிறக்கணும். எனக்குக் குழந்தை பிறக்கணும்னா எனக்குக் கணவன் வேணுமே!'ன்னா சாவித்ரி, அவ்ளோதான், யமன் க்ளீன் போல்டு."

"சூப்பர் மாமி. செம ட்ரிக்!" பாராட்டினாள் தீபா.


வேற வழியில்லாம சத்யவானைத் திரும்பக் கொடுத்தான் யமன். எமலோகத்து சட்டத்திலே ஏதாவது ஓட்டை இருக்காதா அதிலே இந்த கேஸைப் பொறுத்தவரை எப்படியாவது தப்பிச்சுக்கலாம்னு நினைச்சுகிட்டான் போலிருக்கு" மாமி சிரித்தபடி சொன்னாள்.

"அதெப்படி சாவித்ரிக்கு இவ்ளோ தைரியம் வந்தது, சாமர்த்தியம்

வந்தது?" புவனேஸ்வரி கேட்டாள்.

“அப்படிக் கேளு. இதுக்குக் காரணம், அவ மேற்கொண்டிருந்த காரடையான் நோன்புதான்," மாமி பதில் சொன்னாள்.

"ஓஹோ!" பெண்கள் மூவரும் வியந்து மாமியைப் பார்த்தார்கள். ஆமாம். முனிவர் சத்யவான் ஆயுள் பற்றி சொன்னாரில்லையா, அப்போ சாவித்ரி தனியாக அவர்கிட்டப் போய், இதுக்கு மாற்று எதுவும் கிடையாதான்னு கேட்டா. முனிவர் அவளுக்கு காரடையான் நோன்பு பற்றி விவரம் சொல்லி, அதை ஒரு வருஷம் தீவிரமாகக் கடைப்பிடித்து வா. உனக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்னு ஆசீர்வதிச்சார்..."

"அட, நல்ல முனிவராக இருக்காரே!" பாராட்டினாள் புவனேஸ்வரி. "ஆமாம். அந்த விரதத்தை சாவித்ரி முறையாகக் கடைப்பிடிச்சு தன் மாங்கல்ய பலத்தைக் காப்பாத்திகிட்டா. அதிலேர்ந்து தன்னோட கணவனோட ஆரோக்கியத்துக்கும் ஆயுளுக்கும் எந்தக் குறையும் வரக்கூடாதுன்னு வேண்டிகிட்டு சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம், அவங்களுக்கு வாய்க்கும்

கணவனும் அவளுடன் நீண்டநாள் வாழ்ந்து நல்ல குடும்பத்தைநடத்துவான்..." மாமி முடித்தாள்.

"அந்த விரதத்தைப் பத்திச் சொல்லுங்களேன் மாமி," புவனேஸ்வரி கேட்டாள்.

 "அதுக்கு முன்னாலே ஆளுக்குக் கொஞ்சம் லைம் ஜூஸ்சாப்பிடுங்க" உபசரித்தாள் மாமி.

பரபரவென்று குடித்து முடித்து காலி தம்ளரைக் கீழே வைத்தார்கள் அந்தப் பெண்கள். "சொல்லுங்க மாமி, விரதம் பற்றிச் சொல்லுங்க" என்று மேலும் பரபரத்தார்கள்.

"இந்த விரதத்தை காமாட்சி விரதம்னும் சொல்லுவாங்க." மாமி கூடுதல் தகவல் தந்தாள்.

"அட, இதுவும் நல்லாயிருக்கே!" கிருத்திகா சொன்னாள். “அது என்ன சமாசாரம்?"

'காஞ்சி காமாட்சியம்மன் சிவனை வழிபட்டாள். எப்படி? மணலாலான சிவலிங்கம் ஒண்ணைப் பிடிச்சு வெச்சா. எங்கே? கம்பா நதிக்கரையிலே..."

"நம்ம மெரினா பீச்லே மணல் சிற்பம் செய்வோமே அதுமாதிரி..."

தீபா குறுக்கிட்டாள்.

"ஆமாம். ஆனால் காமாட்சிக்கு பயம் வந்துட்டுது. எங்கே நதி பெருக்கெடுத்து வந்து தான் பிடிச்சு வெச்ச லிங்கத்தை அழிச்சுக் கரைச்சுடுமோன்னு விசனப்பட்டாள். உடனே, காரடையான் நோன்பு விரதத்தை மேற்கொண்டாள்." "அட! காமாட்சி தெய்வமே விரதம் மேற்கொண்டதா!

ஆச்சர்யமாக இருக்கே!" புவனேஸ்வரி வியந்தாள். "ஆமாம், தெய்வங்கள்ளாம் மனித ரூபத்திலே இப்படி விரதங்களை மேற்கொண்டு மனிதர்களுக்கு வழிகாட்டியிருக்காங்க. ஆச்சா, அந்த விரதத்தை காமாட்சி மேற்கொண்ட பிறகு அந்த மகிமையால் சிவலிங்கம் காப்பாற்றப்பட்டது. ஆமாம், நதி வெள்ளமாய்ப் பெருகி வந்தபோதும், சிவலிங்கத்தை நெருங்காம இருந்தது. விரதத்தை முடித்த அவள் முன்னால சிவபெருமான் தோன்றி அவளைத் திருமணம் செய்துகொண்டார். இது காமாட்சி

விரதம்." "ஓஹோ சரி. இந்த விரதத்தை எப்படிச் செய்யறதுன்னு சொல்லுங்களேன்," கிருத்திகா கேட்டாள்.

சொல்றேன். முதல்ல சுமங்கலிப் பெண்கள்லாம் காரடையான் நோன்பு அன்னிக்கு அதிகாலையிலேயே எழுந்து குளிச்சிட்டு நெற்றியிலே திலகம் இட்டுக்கணும். பூஜையறையிலே முதல்ல அந்த விரதம் நல்லபடியாக நடந்தேறணும்னு விநாயகனை வேண்டிக்கோங்க. அப்புறமா ஒரு சொம்பை எடுத்து அதை நல்லா சுத்தம் பண்ணிக்கோங்க. அதுக்குள்ள நல்ல நீரை விட்டு நிரப்பிக்கோங்க. ஒரு தேங்காயை எடுத்து, அதுக்கு மஞ்சள் பூசி, அழகா ஒரு குங்குமப் பொட்டையும் வையுங்க. அப்புறம் சொம்பின் வாய்க்குள்ளே மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவே இந்த தேங்காயை குடுமி மேல பார்த்தபடி வையுங்க. இதுதான் பூஜைக் கலசம். பூஜையறையிலே ஒரு கோலம் போட்டு

அதுக்கு மேலே இந்தக் கலசத்தை வைக்கணும்..." "ஆஹா, சொல்லும்போதே அப்படியே பரவசமா இருக்கு..." புவனேஸ்வரி நெகிழ்ந்தாள்.

"இதுதான், இந்த உணர்வுதான் எந்த ஆன்மிக சேவைக்கும் வேணும்,” என்று பாராட்டிய மாமி தொடர்ந்து சொன்னாள். "ஆச்சா, இப்ப கலசத்துக்குப் பூ போட்டு, மஞ்சள் குங்குமம்


வையுங்க. ஒரு நூலை எடுத்து அதுக்கும் மஞ்சள் தடவி

வெச்சுக்கோங்க..." “எந்த மாதிரி நூல் மாமி?" புவனேஸ்வரி சந்தேகம் கேட்டாள்.

“கழுத்திலே கட்டிக்கறா மாதிரி சுமாரான தடிமனுள்ள கயிறு. மஞ்சள் குங்குமம், பூஜா திரவியங்கள் விற்கக்கூடிய கடைகள்லே கேட்டாலும் கிடைக்கும். சில புரோகிதர்களும் வெச்சிருப்பாங்க..." "சரி, அப்புறம்?" கிருத்திகா ஆவலுடன் கேட்டாள். அந்தக் குடும்பத்தில் அவளுக்குக் கல்யாணத்துக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனால் அது சம்பந்தமான எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்வதில் அவளுக்கு ஆர்வம்

மேலோங்கியிருந்தது. மாமி அவனைப் பார்த்து அர்த்தத்துடன் புன்னகைத்தபடி தொடர்ந்தான். "வீட்ல இருக்கற சுமங்கலிப் பெண்கள் மற்றும் கன்னிப் பெண்கள் எண்ணிக்கையில் ஆளுக்கு ஒன்றாக இப்படி மஞ்சள் சரடைத் தயார் பண்ணி வெச்சுக்கலாம். ஒவ்வொரு சரடு நடுவிலேயும் ஒரு பூவை வைத்துக் கட்டிக்கொள்ளணும், அப்புறமா இந்த வீரதத்துக்கு நைவேத்யமாக காரடையைத் தயார் செய்து, கூடவே வெண்ணெயையும் வைக்கணும்." "காரடையா அதை எப்படி செய்யறது?" புவனேஸ்வரி

கேட்டாள்.

"சொல்றேன். பச்சரிசி அரை கிலோ எடுத்துக்கோங்க. அரை கிலோ வெல்லம். ஒரு மூடி தேங்காய், கொஞ்சம் ஏலக்காய் எடுத்துக்கோங்க. இதை முந்தின நானே தயார் பண்ணிக்கலாம். ஒருவேளை நோன்பு நேரம் சாயங்காலமாக வர்றதுன்னா அன்னிக்குக் காலையிலே இப்படி தயார் பண்ணி வெச்சுக்கலாம்.''

"ம்... அப்புறம்?"

"இப்படி சலிச்சு எடுத்துகிட்ட மாவை வாணலியிலே போட்டு வறுத்து எடுத்துக்கோங்க. சிவப்பா வறுபடறது நல்லது. தனியாக காராமணியையும் வாசனை வர்ற அளவுக்கு வறுத்து எடுத்துக்கோங்க. தேங்காயையும் சின்னச் சின்னப் பல்லாக நறுக்கி வெச்சுக்கோங்க. ஏலக்காயையும் பொடி பண்ணிக்கோங்க. வெல்லத்தை நல்லா தூள் பண்ணி, ஒரு பாத்திரத்திலே தேவையான அளவு தண்ணீர் விட்டு இந்த வெல்லத்தை அந்தத் தண்ணியிலே போட்டுக் கொதிக்கவிடுங்க. இந்த வெல்லக் கரைசல்ல வறுத்து வெச்ச காராமணி, ஏலக்காய்ப் பொடி, தேங்காய்ப் பல்லு எல்லாத்தையும் போட்டு ஒரு கிளறு கிளறிக்கோங்க. இப்ப அரைச்சு வெச்சிருந்த அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமா வெல்லக் கரைசல்ல இடது கையால போட்டுகிட்டே வலது கையால் கிளறி விட்டுகிட்டே இருங்க. மாவு நல்லா வெந்ததும் வாணலியை அடுப்பிலிருந்து இறக்கி வெச்சுடுங்க.." "அவ்ளோதானா?" தீபா அவசரப்பட்டாள்.

இரு, இரு...' மாமி அவளை அமைதிப்படுத்தினாள். "நிதானமாகக் காரியம் பண்ணிக்க இப்பவே பழகிக்கணும்... சாரி மாமி, நீங்க சொல்லுங்க,"தீபா தன் தவறை உணர்ந்தாள்.

"ஒரு சின்ன வாழையிலையை எடுத்து அதிலே லேசா எண்ணெயோ, நெய்யோ தடவிக்கோங்க. ஆறின மாவை தேவையான அளவு உருட்டி எடுத்துகிட்டு, வாழையிலையிலே போட்டுத் தட்டி, சின்ன அடைபோல பண்ணிக்கோங்க. இந்த அடைகளை இட்லி பாத்திரத்திலே இட்லி வேகவைக்கற மாதிரி வேக வையுங்க. வெந்துச்சா... எடுத்து வெச்சுக்கோங்க...அப்படியே ஆவி பரக்க உங்க நாக்கிலே தண்ணி ஊறச் செய்யும். வெல்ல அடை, உப்பு அடைன்னு ரெண்டு வகையா நைவேத்யத்தைத் தயார் பண்ணிக்கறது வழக்கம்."

"மாமி, நீங்க சொன்ன விதமே ரொம்ப ருசியா இருந்தது," கிருத்திகா சொன்னாள். "நம்ப பண்டிகைகள்லதான் எவ்வளவு மனிதாபிமானம்! தீபா

வியந்தாள்.

"என்னடி சொல்றே?" புவனேஸ்வரிக்கு ஒன்றும் புரியவில்லை.

"ஆமாம்மா. இனிப்பு அடை, உப்பு அடைன்னு ரெண்டு

பலகாரம். டயபடீஸ்காரங்களுக்கு வெல்லம் சரிப்படாது.

அவங்களுக்கு உப்பு அடை. எவ்ளோ கரிசனம்..."

"பரவாயில்லையே நீ." மாமி வியந்தாள்.

சரி மாமி. உப்பு அடை செய்யறது எப்படின்னு சொல்லுங்க,'' புவனேஸ்வரி கேட்டாள்.

"வெல்ல அடைக்கான அதே பொருட்கள்தான். ஆனா, வெல்லத்துக்கு பதிலாக இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கடுகு, உளுந்து, உப்பு எல்லாம் தேவை..."

"ஓஹோ, சரி. அப்புறம்?"

"வழக்கமா தாளிச்சுக்கறா மாதிரி கடுகு உளுந்தைத் தாளிச்சுக்கோங்க. இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடிப்பொடியா நறுக்கிக்கோங்க. ஒரு வாணலி எடுத்து அதிலே நறுக்கின இந்தத் துண்டுகளைப் போட்டு வதக்கிக்கோங்க. தண்ணீர் விட்டு, அரிசிமாவைக் கொட்டிக் கிளறிக்கோங்க. தாளிச்சு வெச்சிருக்கற கடுகு உளுந்தையும் போட்டு, மாவு கட்டி பிடிச்சுக்காம விடாம கிளறிகிட்டிருங்க. கூடவே காராமணியையும் தேங்காய்த்


துண்டுகளையும், தேவையான அளவு உப்பையும் போட்டு நல்லா கிளறி எடுத்துக்கோங்க. வெல்ல அடைக்குப் பண்ணினது போலவே ஆறினப்புறம் அடையாகத் தட்டி எடுத்து இட்லி பாத்திரத்தில் போட்டு வேகவெச்சு எடுத்துக்கோங்க."

"இப்பவே, அந்த அடையைப் பண்ணி சாப்பிடணும்போல இருக்கு," தீபா நாக்கை சப்புக் கொட்டினாள். "அம்மா, காரடையான் நோன்பு வர்றவரைக்கும் காத்திருக்க வேண்டாம்மா. உடனே, நாளைக்கே பண்ணிக்கொடும்மா..."

"சரி,சரி. மாமிகிட்ட மீதி விஷயங்களையும் கேட்டுக்கலாம். தீனின்னா மிச்சமெல்லாம் மறந்திடுமே உனக்கு," புவனேஸ்வரி மகளைக் கடிந்துகொண்டாள்." "விடு. குழந்தைதானே அவ..." மாமி தீபாவுக்கு ஆதரவாகப்

பேசினாள். "ஆமாம். காலேஜ் படிக்கற குழந்தை," கேலி செய்தாள் கிருத்திகா.

"ஆச்சா,"மாமி தொடர்ந்தாள், 'இப்படித் தயார் பண்ணின வெல்ல அடை, உப்பு அடை இரண்டையும் ஒரு வாழை இலையில் வைத்து அந்த கும்பத்துக்கு முன்னால வெச்சு அந்த அடைகளுக்கு மேலே கொஞ்சம் கெட்டி வெண்ணெயையும் வைக்கணும். கூடவே, வெற்றிலை-பாக்கு, பழம், பூ, மஞ்சள் சரடு எல்லாத்தையும் வைத்து கும்பத்தில் ஆவாகனமாயிருக்கற அம்மனை வேண்டிக்கோங்க.''

"என்னன்னு வேண்டிக்கணும் மாமி?" கிருத்திகா கேட்டாள். "உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் வைத்தேன். ஒரு நாளும் என் கணவன் எனைப் பிரியாத வரம் தருவாய் தேவின்னு வேண்டிக்கணும். அது மட்டுமில்லே, உங்களுக்கு என்னென்ன ஸ்லோகமெல்லாம் தெரியுமோ, அந்த அம்மன் ஸ்லோகம் எல்லாம் சொல்லலாம்."

"அப்புறம் மாமி?"

"இப்படி ஸ்லோகம் சொல்லி, நிவேதனம் பண்ணி, தீபாராதனை காட்டி, பூஜையை முடிச்சதும், இந்த கும்பத்துக்கு எல்லாரும் நமஸ்காரம் பண்ணுங்க. மஞ்சள் சரடை எடுத்துக் கழுத்திலே கட்டிக்கோங்க. அப்புறமா காரடை பிரசாதத்தை வெண்ணெயோடு சேர்த்து சாப்பிடுங்க..."

"அவ்வளவுதானா? ரொம்ப சிம்பிளா பூஜை முடிஞ்சுட்டுதே!" தீபா ஆச்சரியப்பட்டாள். அப்போதே பிரசாதத்தையும் கற்பனையாக அவள் சாப்பிட்டுவிட்டாள்!

ஓம்..

"அப்புறமா உங்க வீட்டுக்கு வரக்கூடிய சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கைத் துண்டு, காரடைன்னு கொடுத்து உபசாரம் பண்ணுங்க. அவங்களோட மன சந்தோஷம் உங்களோட மாங்கல்யத்தை பலமுள்ளதாக்கும்."

"அப்படியே செய்யறோம் மாமி." புவனேஸ்வரி நிறைவுடன்

எழுந்துகொண்டாள்.

“இன்னும் இருக்கு புவனேஸ்வரி," மாமி அவளை அமர்த்தினாள். இந்த விரதத்தை ஒட்டி, 'மாசிக் கயிறு பாசி படியும்'னு சொல்வாங்க. அதாவது, மாசி மாசத்திலே வர்ற இந்த காரடையான் நோன்பு விரதத்தன்னிக்கு உங்களோட பழைய தாலிச் சரடுக்கு பதிலாகப் புது தாலிச்சரடை மாத்திக்கலாம். மாங்கல்ய பலத்தை அதிகரிக்கக்கூடிய விரதத்தை மேற்கொள்ளற இந்த நாளைவிட, தாலியை புதுப்பிச்சு மாத்திக்கறதுக்கு வேற நல்ல நாள் இருக்க முடியுமா என்ன?"

ஆமாம் மாமி, சரியாச் சொன்னீங்க,'' புவனேஸ்வரி

நெகிழ்ந்தாள்.

"இதோட விரதம் பூர்த்தியாயிடலம்மா,"மாமி சொன்னாள். நைவேத்யம் பண்ணின அடைகளைக் கொஞ்சம் எடுத்து வெச்சுக்கோங்க. மறுநாள் ஒரு பசுமாட்டுக்கு அந்த அடையைக் கொடுத்து, அதையே அம்மனாக நினைச்சு வழிபடுங்க." "அம்மா..." பசுமாடுபோல தீபா குரல் கொடுத்தாள்.

மாமியிடமிருந்து பெண்கள் விடைபெற்றுக் கொண்டார்கள். "காரடையான் நோன்பு விரதம் இருந்து, பூஜை பண்ணிட்டு, எனக்கும் நீங்க செய்திருக்கற காரடையைக் கொண்டுவந்து தா புவனேஸ்வரி." மாமி அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பினாள்.

"மாமி, ஒரு டவுட்டு," படியிறங்கிய புவனேஸ்வரி திரும்பி

மாமியைப் பார்த்துக் கேட்டாள். "இந்த காரடையான் நோன்பு

என்னிக்கு வரும்?"

"மாசி மாதம் முடிந்து பங்குனி மாசம் பிறக்கற அந்த சமயத்திலே இந்த விரத பூஜையை மேற்கொள்ளறது வழக்கம். இந்த நோன்பை காமாட்சி நோன்புன்னும் சொல்வாங்க. அனேகமாக மார்ச் மாசம் நடுவிலே வரும்," என்றாள் மாமி.

"ரொம்ப தாங்க்ஸ் மாமி."

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘