🌎🌍🌏வாழ்வை வளமாக்கும்ஸ்ரீவராகி சித்தர்🌎🌍🌏
🌎🌍🌏வாழ்வை வளமாக்கும்ஸ்ரீவராகி சித்தர்🌎🌍🌏
ஸ்ரீவராகிஸ்ரீஇராஜராஜேஸ்வரியினுடைய பெரும் படையின் மூத்த தலைவி! வராக முகத்தைக் கொண்டிருப்ப தால்,வராகி என்று அழைக்கப்படுகின்றாள். இவள் மகிஷ வாகனத்தில் வரும் கோலத்தில், மகிஷாரூடவராகி என்றும், சிங்கத்தின் மீது வரும் கோலத்தில், சிம்ஹாரூட வராகி என்றும், புலியின் மீது வரும் கோலத்தில், வியாக்கிராரூட வராகி என்றும் போற்றப்படுகிறாள். கிரகங்களாலும், பகைவர்களாலும் வரும் துன்பங்களை ஒருசேரத் தீர்த்து வைத்து, எல்லா நலன்களையும் வாரி வழங்கி, வளமுடன் வாழ வைப்பவள். பூர்வ புண்ணியம் வழிபாடே அமையும்! உள்ளவர்களுக்குத்தான், ஸ்ரீவராகி
ஸ்ரீவராகி என்ற பெயரில் மூன்று தெய்வங்கள் இருக்கின் றன. முதலாவது தெய்வம், வேதகாலத்தில் வழிபடப்பட்டது. அதர்வணவேதம், இந்த வராகிக்குப் புகழாரம் சூட்டுகிறது. மாந்திரீக சாஸ்திரமே, ஸ்ரீவராகி உபாசனையை மையப் பொருளாகக் கொண்டுதான் திகழ்கின்றது. ஸ்ரீவராகி பூஜை உடனே பலன் அளிக்கக்கூடியது. இரண்டாவது ஸ்ரீவராகி என்பவள், பாடல் பெற்ற சிவன் கோயில்களின் பிரகாரங்களில் உள்ள பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைணவி, வராகி இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகிய சப்தமாதர்கள் எனப்படும் 7 கன்னியர்களில் ஒருத்தி. வராக அவதாரம் கொண்டு மோளல் முகம் கொண்டவள். கலப்பை, முசலசம், வரதம்;அபயம் ஆகியவற்றைத் திருக்கரங்களிலே ஏந்தியுள்ளவன். கருநிறமுடையவள். இவளது அரவணைப்பில் உள்ளவர்கள், எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். முறையான பயிற்சியுடனும், தீவிர வைராக்கியத்துடனும் வழிபட்டால் பக்தர்கள் வேண்டியதை விரைவாகக் கொடுப்பாள். ஆனால் முறைதவறி வழிபட்டால், மிகவும் கடுமையான தண்டனையும் கொடுப்பாள்.
இவள் தாருகாரசுரன் சண்டையில் காளிக்கும், சம்பாசுரன் சண்டையில் சண்டிகாதேவிக்கும், பண்டாசுரன் சண்டையில் வனிதா தேவிக்கும் உதவியாக இருந்திருக்கிறாள். ஸ்ரீவராகி பற்றி 'வராகிமாலை' என்னும் நூல் மேலும் சிறப்பித்துச் சொல்லுகிறது. ஸ்ரீவராகிமாலை நூலின் ஆசிரியர், சோழ மன்னர்களின் படைத் தளபதியும், மதுரைக்கு அருகில் வீரசோழன் கிராமத்தில் ஜீவசமாதி கொண்டுள்ளவருமான சுந்தரேச சர்மா என்பவராவார். இந்தியாவில் ஸ்ரீவராகிக்கு என ஒரே இடத்தில்தான், பழமையான கோயில் இருக்கின்றது. அதாவது தஞ்சைப் பெரிய கோவிலில்தான் ஸ்ரீ வராகிக்கென தனிக்கோயில் இருக்கின்றது. கி.பி.1010ம் ஆண்டுக்கு முன்பாக, தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்படும் முன்பே அங்கு வராகிக்குக் கோவில் இருந்ததாகக் கர்ண பரம்பரைச் செய்தி கூறுகின்றது. மூன்றாவது ஸ்ரீவராகி, வராக அவதாரம் எடுத்த திருமாலான ஸ்ரீவராக மூர்த்திக்குத் துணையாக, சங்கு சக்கரத்துடன் இருப்பவள். இப்படி எல்லாம் வல்ல அன்னை ஸ்ரீவராகியின் அருளினை, பூரணமாகக் கைவரப்பெற்றவர். சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகு சுவாமிகள்!
இவர் இராமநாதபுரம் சேதுபதி மகாராஜாவின் மகள் வழிப்பேரன்! செம்பிநாட்டு மன்னன் பூவலவத் தேவனுக்கும் பட்டத்தரசி குமராயி அம்மையாருக்கும் பிறந்த ஒரே மகன்! பங்காளிகளின் சூழ்ச்சியால் பாலமேட்டில் வளர்ந்தவர். ஆநிரை மேய்த்தவர். உழவுத் தொழிலில் விழுந்து கொண்டு சண்டித்தனம் செய்த எருமைகளைச் சுண்டி எழச் செய்து, அந்தக் கலப்பையின் மேழியை யாரும் பிடிக்காமலேயே, தானே உழுதுவரச் செய்தவர். கருநாகப் பாம்பின் மேல் தலை வைத்து கள்ளிச் செடியின் அடியில் பள்ளி கொண்டவர். ஆசிரியர் நடத்தவிருக்கும் பாடத்தையும் முன்கூட்டியே மொழிந்தவர்.
ஓம்..
ஜெகநாதப் பிள்ளையின் ராஜபிளவையினை முதுகில் புறப்பட்டிருந்த கடைக்கண்ணின் பார்வையாலே கணப்பொழுதில் துடைத்தவர். மக்களைப் பலி கொண்ட பேதி நோயை, ஒரே நாளில் ஒழித்தவர். ஆட்டுக் கிடைகளுக்கு நரிகளையும், ஓநாய்களையும் காவல் காக்கச் செய்தவர். பீதாம்பரைக் கொள்ளையர்களைத் திரும்பிப் பார்க்காமல் ஓடச்செய்து, ஊரைக் காப்பாற்றியவர். பூமிக்குள் புதைக்கப்பட்டிருந்தும், பூலோகத்தில் மிதந்து வந்தவர். செம்பி நாட்டில் அன்று அரசாட்சி செய்யப் பிறந்திருந்தும், சிங்கம்புணரியில் இன்று அருளாட்சி செய்து கொண்டிருப்ப வர். மக்கள் இவரை 'ஐயா' என்று அன்புடன் அழைப்பர். 'சித்தர் ஐயா' என்று சிந்தை மகிழ வணங்குவர். 'வாத்தியார் 'ஐயா' என்றும் வாய் மணக்கப் போற்றுவர்.
சித்தர் முத்துவடுகேசர் தம்மனையுள், பூஜை அறை ஒன்றை அமைத்தார். அதில் தன்னுடைய விருப்ப தெய்வமான அன்னை வராகியை எழுந்தருளச் செய்து, ஆழ்ந்து வழிபட்டார். ஸ்ரீவராகியுடன் விநாயகர், முருகன், திருமால், வீரபத்திரர், பைரவர், மாகாளபைரவர் ஆகிய தெய்வங்களை யும் எழுந்தருளச் செய்து வழிபாடு செய்துவந்தார். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அங்கு தனிமையில் இருந்து, சிறப்புப் பூஜைகள் செய்வார். அப்போது, மண்டை ஓட்டில் ரத்தத்தையும், மதுவையும் ஊற்றி பிசைந்த சோற்று உருண்டை மூன்றுடன், பச்சை ஈரலையும், வராகி முன் படையல் செய்வார். தம் உடலில் ஆடையேதுமின்றி அமர்ந்து கொண்டு, முறையான பயிற்சியுடனும், தீவிர வைராக்கியத்துடனும், தன்னிலை மறந்து, அன்னை வராகியை நினைத்து, தியானம் செய்வார். அப்போது வராகி அன்னை இவரை முழுமையாக ஆட்கொண்டு, அவள் முன் வைத்த அந்தப் படையல்கள் அனைத்தையும் சித்தர் மூலமாக அள்ளி எடுத்து உண்டு மகிழ்வாள். இது வராகியும் சித்தரும் ஒன்றாகிவிட்ட உயர்ந்து நிலை அது!
சித்தர் பெருமான் முத்துவடுகேசர் சிங்கம்புணரியை விட்டு, தன் மாமன் ஊராகிய நெட்டூரை ஒருநாள் சேர்ந்த குறிஞ்சிக்குச் சென்று வந்தார். திரும்பி வரும்போதுசிவகங்கை வழியாக வந்தார். அச்சமயம் அந்நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்த குழந்தாபுரி வேந்தன், மெய்ஞான சாதனம் மிக்கவன்; கௌரிவல்லவு ராஜேந்திரன்! அன்னை பராசக்தியின் மீது அளவற்ற அன்பு கொண்டவன். அவன் தன் அருமை மைந்தனுடன் குதிரைகள் பூட்டிய சாரட்டில் வந்து கொண்டிருந்தான். சித்தா வந்த சாலையிலேயே அந்த சாரட்டு மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. நாடாளும் மன்னன் வந்தால், மக்கள் வழிவிட்டு வணக்கம் செய்வது மரபு. ஆனால் சித்தர் வழிவிட்டு ஒதுங்காமலும், வணக்கம் செய்யாமலும், வந்து கொண்டிருந்ததைக் கண்ட மன்னன், சினத்துடன், சாரட்டை சித்தர் மீது ஏற்றுவதற்காகக் குதிரைகளைத் தட்டி ஏவினாள். விரைவாகப் பாய்ந்த அந்தக் குதிரைகள், சித்தர் பெருமானை நெருங்கியவுடன் திகைத்து நின்றன! திசைமாறி மருண்டு ஓடின! சாரட்டு வண்டி, சாலையின் ஓரத்தில் இருந்த பெரிய பள்ளத்தில் உருண்டு விழுந்து நொறுங்கியது.
மன்னனுக்குப் பலத்த காயங்கள். ஆனால் மன்னனின் மகன் கழுத்தில், சாரட்டின் சக்கரம் ஏறி நசுங்கி, தலை பின்புறமாகத் திரும்பிக் கொண்டது. முயன்று எழுந்த மன்னன், தனது அருமை மகனின் அவல நிலையைக் கண்டு கலங்கித் துடிதுடித்தான். அரண்மனைக்குக் கொண்டு சென்று, ராஜ வைத்தியர்கள் அனைவரும் வெகு விரைவாக சிகிச்சை அளித்தனர். எவ்வளவோ முயற்சிசெய்தும், மைந்தனின் திருகிய தலையை சரிசெய்ய முடியவில்லை. மன்னன் புலம்பிக் கதறியபோது, சித்தர் பெருமான் அரசன் முன் வந்தார். சித்தரைக் கண்ட மன்னன், "சுவாமி, பாவியேனின் பிழையைப் பொறுத்தருள வேண்டும். தாங்கள்தான் குலக்கொழுந்தைக் காப்பாற்றித் தர வேண்டும்" என வேண்டி, சித்தரின் திருவடிகளிலே விழுந்தான்.
அப்போது சித்தர் மன்னனிடம், “நான் செய்யும் வைத்திய முறைக்கு நீ சம்மதித்தால், உன் மகன் கழுத்தை நேராக்கிக் காப்பாற்றுகிறேன்" என்றார். மன்னனும், "தாங்கள் என்ன செய்தாலும், எனக்குச் சம்மதமே" என்று வணங்கினான். அப்போது சித்தர் ஆகாயத்தைப் பார்த்தார்.
ஓம்..
அன்னை வராகியை ஆவேசமாக அழைத்தார். உடனே வராகி, சித்தருக்குள் நிறைந்தாள். சித்தர் மன்னன் மகனை நிலத்தின் மேல் நேராகக் கிடத்தினார். குழந்தையின் உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரைக்கும் செருப்பு அணிந்த தன் காலால் ஏறி, இறங்கி நடந்தார். மைந்தனின் கழுத்தின் மேலே நின்றுகொண்டு, சூலாயுதம் ஏந்திய தேவியென சுழன்று, சுழன்று ஆடினார். பின் இறங்கி, திருநீற்றை அள்ளி, அம்மைந்தன் கழுத்தின் மீது தூவினார்; மெல்லத் தடவினார். என்னே அதிசயம்! பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே திருகி இருந்த கழுத்து திரும்பி மெல்ல நேராகி, சரியானது! தூங்கி விழித்தவன் போல மைந்தன், மகிழ்ச்சியோடு எழுந்து, மன்னனின் மடியிலே, பாய்ந்து அமர்ந்து கொண்டான்.
சிவகங்கை அரசசபை தர்பார் மண்டபத்திலே நடந்த இவ்வற்புதத்தை, கண்முன்னே நேரில் கண்ட மன்னன் ராஜேந்திரபூபதி, சித்தர் வடுகேசரை சிரந்தாழ்த்தி வணங்கிப் போற்றினான். தன் மகனுக்கு உயிர் கொடுத்த அருள் வள்ளலுக்கு ராஜேந்திர பூபதி அரியாசனம் கொடுத்து தக்க சிறப்புக்கள் செய்தான். சித்தரின் பெருமையை மேலும் காண விரும்பினான். சித்தரை நோக்கி, "இவ்வரண்மனையின் மேல் தளத்தில், கொடிய கருநாகம் ஒன்று இருக்கிறது. அதனால் அனைவரும் அச்சப்படுகின்றனர்" என்று மன்னன் கூறத் தொடங்கினான். மன்னன் தன் பேச்சை முடிப்பதற்குள், அந்த மாபெரும் சபையின் நடுவே, மேல்தளத்தில் இருந்த கருநாகம், பொத்தென்று கீழே விழுந்தது. விழுந்தவுடன் பாம்பு பல துண்டங்களாகச் சிதறியது. இதனைக் கண்ட மன்னன், அச்சமுற்றுத் திகைத்தான்."சித்தரின் ஆற்றலைச் சோதித்து அறிய நினைத்தது என் அறியாமையே" என்று தன் மனத்துள் நினைத்துக்கொண்டு, "சுவாமி இந்தத் துண்டுகளை என்ன செய்ய வேண்டும்" என்று பணிந்து கேட்டான். அதற்கு சுவாமிகள், அத்துண்டங்களையெல்லாம் சமைத்துவரச் சொல்லி, அனைத்தையும் சாப்பிட்டும் தீர்த்தார்; அனைவருடைய அச்சத்தையும் அடியோடு போக்கினார். மன்னனின் மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை!
உடனே சிவகங்கை நகர் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூணச் செய்தான். முரசுகள் முழங்க, வெண்
மீது ஏற்றி சங்குகள் ஒலிக்க, மக்களின் வாழ்த்துக்கள் விண்ணைப் பிளக்க, நம்சித்தர் பெருமானை தன் பட்டத்து யானை உடனிருந்து கவரி வீசி பவனி வரச்செய்தான். இவ்வாறு நகர் உலா வந்த நம் சித்தரை, அரண்மனைக்குள் வரவேற்று, பொன்னாசனத்தில் அமர்த்தி, ராஜமரியாதை செய்தான். பின்னர் சித்தரிடம், “இன்றுமுதல் தாங்களே எங்கள் குலதெய்வம்! என் நாடு, நகரம், செல்வங்களை எல்லாம் தங்களின் திருவடிகளிலே ஒப்படைக்கின்றேன். இந்த அரண்மனையிலே தங்கியிருந்து தாங்களே ஆட்சி செய்ய வேண்டும்" என்று மன்னன் கேட்டுக் கொண்டான். அதற்கு நம் சித்தர், நிலையில்லாத இந்தச் செல்வங்களைத் தருவதற்கும், அதனை நான் பெறுவதற்கும், ஒன்றுமில்லை. நான் விரும்புவனவற்றையெல்லாம், எப்போதும் தருவதற்கு, 'சிங்கை வளநாடு' எனக்குள்ளது. நான் சென்று வருகிறேன். எனக்கு விடை கொடு" என்று கூறியபடி பொன்னாசனத் திலிருந்து எழுந்தார். அவருக்கு மறுமொழி கூற இயலாத மன்னன், சித்தரிடம் கொண்ட பக்தியை மட்டும் பரிசாகக் கொடுத்து, விழிநீர் பெருக விடை கொடுத்து, கைகூப்பி நின்றான்.
வாசம் உள்ள ஒரு மலரை, மலர்வேறு வாசனை வேறு என்று எப்படிப் பிரிக்க முடியாதோ, எரியும் நெருப்பினை, நெருப்பு வேறு, ஒளி வேறு என்று எப்படிப் பிரிக்க முடியாதோ; அப்படியே வராகி வேறு சித்தர் வேறு என்று பிரிக்க முடியாத பெருநிலை பிரகாசித்தது. தன் அறை பூஜையின் போது படைக்கப்பட்ட படையல்களையெல்லாம் வாரிவாரி உண்ணும்போதும், மன்னன் மகனது கழுத்தின்மேல் நின்று சூலாயுதம் ஏந்தி சுழன்று சுழன்று ஆடியபோதும், சித்தருக்குள்ளே வராகி நிறைந்து நின்றாள். சித்தரே வராகியானார். வராகியே சித்தரானார். வாழ்வாங்கு வாழ்ந்த நம் வராகி சித்தரின் அருட்புகழ் இன்று, வையகங்மெங்கும் மணக்கின்றது.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக