🌎🌍🌏 மனம் ஒரு சேமிப்பகம்🌎🌍🌏

 

🌎🌍🌏 மனம் ஒரு சேமிப்பகம்🌎🌍🌏


நினைவாற்றல் என்றால் என்ன? நாம் மறதி வசப்படாமல் நல்ல தெளிவான நினைவாற்றலோடு இருப்பதற்கு உதவும் அமைப்புகள் யாவை? கற்றதை மீண்டும் தேவையான போது நினைவுகூர்தல் எப்படி? கேட்டவற்றையும் கண்டவற்றையும் மனத்திரையிலே மீண்டும் கொண்டுவருவதற்கு நாம் என்ன செய்யலாம்? பலருக்கு, இது மிகப்பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது.

இவை எல்லாம், ஒரு காலத்தில், யாருக்கும் சரியாகப் புரியாத புதிராகவேதான் இருந்தன 'உளவியல்' ஆராய்ச்சிகள் ஆழ்மனத்தின் சக்திகள் பற்றி எல்லாம் அறியத் தொடங்கிய போது, இந்தப் புதிர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடத் தொடங்கி விட்டன. இதிலேயுள்ள மனத்தின் பங்கும் புரியலாயிற்று.

மேல்மனமும் ஆழ்மனமும்

மனம், தான் அறிந்ததை எல்லாம், தன்னிடத்தே முறையாகப் பதியவைத்துக் கொள்ளும் இயல்பையும், மீண்டும் அவற்றை நினைவு மண்டிலத்துக்குக் கொண்டுதரும் வல்லமை யையும் படைத்துள்ளது என்று முன்னர்க் கூறிவந்தார்கள்.

அறிவுலக முன்னேற்றமும், ஆழ்மனத்தின் நினைவுப் பதிவுகளே மீண்டும் அவற்றை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்ற உண்மையை, இப்போது உணர்த்து கின்றது. உணர்வோடு செய்யும் செயல்கள் பலவற்றிற்கும் உணர்வு கடந்த நம் ஆழ்மனமே அடிப்படை என்பதும் இப்போது ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.

உணர்வுமனத்தின் பின்னணியிலேயே, பரந்த சக்தி படைத்த, உணர்வுகடந்த உள்மனம் என்பதும் இருக்கிறது. அது மிகவும் அதிசயமானது; அபரிமிதமான சக்தி கொண்டது. சொல்லப்போனால், நாம் செய்யும் செயல்களில் நூற்றுக்குப் பத்தே மேலாகத் தோன்றும் மனவுணர்வு மட்டத்திலே நிகழ்பவை; எஞ்சிய 90 பங்கையும் ஆழ்மனமே ஏவி நடத்தி வருகின்றது.


கடல் மலை, காட்டு வெளி 

கடல்நடுவே தோன்றும் மலையுச்சி போன்றது நம்உணர்வுமனம், அதற்குக் கீழேயுள்ள பிரமாண்டமான மலை, கடலுள் மறைந்து கிடந்து, நமக்குச் சாதாரணமாகத் தோன்றா திருப்பது போல, ஆழ்மனமும் மறைவாக உள்ளடங்கியதாகப் புலப்படாமல் விளங்குகின்றது.

இருள் நிறைந்த காட்டின் நடுவே ஒரு விளக்கினை ஏற்றுகின்றோம் நாம் ஏற்றியுள்ள அந்த விளக்கின் ஒளியால் நாம் காண்பது மிகக் கொஞ்சமான இடப்பாப்பே அதைச் சூழ்ந்துகிடக்கும் பாந்து விரிந்த இருளடர்ந்த அகன்ற பெருங் காட்டைப் போலவே, ஆழ்மனமும் விரிந்து பாந்த சக்திகளைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு மறைவாக இருக்கிறது விளக்கொளி படருகின்ற இடத்தை மட்டுமே நாம் காணுவது போலவே, மேலாக வெளிப்பட்டுத் தோன்றும் உணர்வுப் புறமனத்தை மட்டுமே நாம் எப்போதும் காண்கின்றோம். அதையே நாம் மயங்குகின்றோம். ‘மனம்’ என்றும் கருதிக் கொண்டு

நினைவாற்றல் எதன் வேலை?

நினைவாற்றல் என்பது. ஆழ்மனத்தின் வேலைதான். நினைவுக் கருவூலக் காப்பறையானது அங்குத்தான் இருக்கிறது. ஒரு தொழில்துறை நிறுவனத்தின், பலவருட ரிக்கார்டுகளைச் சேமித்து வைத்துள்ள ஆவணங்களின் சேமிப்புக் கிடங்குபோல, பலவாண்டு நினைவுகளின் சேமிப்பு அறையாக ஆழ்மனம் அமைந்து செயற்படுகின்றது. ஆவணக் கிடங்கில், ஆவணங் களைத் தொகுத்து வகைப்படுத்தி, எந்த வேளையில் மேலிடத்து உத்தாவு வந்தாலும் எடுத்துத் தருவதற்கு வசதியாக ஒழுங்கு படுத்தி வைத்திருப்பது போலவே, ஆழ்மனமும் வருகின்ற நினைவுகளை எல்லாம் தொகுத்து ஒழுங்குபடுத்திப் பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ளுகின்றது. தலைவர் உத்தாவிட்டதும் ஆவணக் கிடங்கின் பொறுப்பிலேயுள்ள அலுவலர்கள். உடனே தலைவர்வேண்டிய ஆவணத்தைத் தேடி எடுத்துத் தருவது போலவே, சித்தம் ஏவியதும். ஆழ்மனத்தின் பதிவுகள் உணர்வுமனத்திற்கு உடனே அனுப்பப்படுகின்றன இப்படி விரைவாகவும், சரியாகவும் பல நினைவுகளும், பிழையற்றும் தெளிவாகவும் எழுந்துவந்து மேல்மனமட்டத்திலே புலப்படுவதைத்தான் 'நினைவாற்றல்' என்று சொல்லுகின்றோம். இது இல்லாத நிலையை 'மறதி' என்போம். நினைவாற்றல் குறைவு என்றும் சொல்லலாம்.


மேல்மனமும் உணர்வும்

மனத்தோடு, உணர்வுகள் ஒன்றுபட்டே அமைந்து, கலந்து நிலவுகின்றன என்று சொல்வதும் முழுக்கச் சரியல்ல. ஓர் எண்ணம் எழும்போது, மனம் அந்த எண்ணத்தைச் சார்ந்த உணர்வுகளை மட்டுமே ஊன்றிப் பார்க்கிறது, பிற நினைவுகள் உணர்வுகள் அந்த நேரத்தில் அதனளவில் இல்லாமற் போனது போலவே, முற்றவும் இல்லாமலேயே அதன் பின்னரும் மறைந்து விடுகின்றன.

தொலைநோக்குக் கண்ணாடியின் வழியாக வான மண்டிலத்தைப் பார்க்கிறான் ஒருவன். அந்தக் கண்ணாடியின் மூலம் பார்க்கும் பார்வை அகண்ட வானவெளியில் ஒரு பகுதியான சிறு வட்டத்தையே அவனுக்குத் தெளிவாகக் காட்டு கின்றது. அவன் அதை மட்டுமேதான் அப்போது பார்க் கின்றான். வானத்திலே பிறவெல்லாம் இருந்தபோதும், அவை அவன் கண்ணுக்கு புலப்பட்டுத் தோன்றுவதில்லை. ஆனால், அவை இல்லை என்றோ, இல்லாமற் போனதாகவோ யாரும் சொல்ல முடியுமா? அதுவும் முடியாது! அவை இருக்கவே செய்கின்றன; தோற்றத்துக்கு உட்படவில்லை; அவ்வளவுதான்!

இப்படித்தான் ஒன்றைப்பற்றிய நினைவு சித்தத்தால் ஏவப்படும்போது, ஆழ்மனம் அந்த வட்டத்திற்குள் மட்டுமே சுற்றிச்சுற்றி இயங்குகின்றது. அந்த நினைவுகளை மட்டுமே மேல்மனத்திலே அலையலையாகப் படர விட்டுவிட்டுப் பிறவற்றையெல்லாம் தன்னிடமே தடுத்து நிறுத்திக் கொள்ளுகின்றது. இப்படி, மேல் மனவுணர்வுகள் எப்போதும் ஓர் எல்லைக்கு உட்பட்டே தோன்றிவந்து இயங்குகின்றன.

கவனமும் பொறுப்பும்

நாம் பெறும் கருத்துக்கள், நாம் உருவாக்கும் எண்ணங்கள் நாம் செய்யும் செயல்களின் நினைவுகள் எல்லாம், ஆழ்மனத்தின் நினைவுச் சேமிப்புக்கிடங்கிலே மிகமிகப் பத்திரமாகச் சேமித்து முறைப்படுத்தி வைக்கப்படுகின்றன எந்த ஒன்றையும் மனம் முழுவதுமாக மறந்து விடுவது என்பதே கிடையாது. அத்தனை கவனமும் பொறுப்பும் அதற்கு நிரம்ப உண்டு.

பல வருடங்களாக மறந்துவிட்டதாகக் கருதிய ஒருசில செய்திகள் கூட, சில தொடர்புகள், ஆசைகள், தேவைகள், சலனங்கள் நம்மிடம் ஒருசமயம் ஏற்படும்போது, திடுமென மேல் மனத்திலே எழுந்துவந்து தோன்றிவிடுகின்றன. தேவையற்ற பல நினைவுப்பதிவுகள் ஒருபோதும் மேலெழுந்து தோன்றாமலே


போகின்றன. ஆனால் அவையும், ஆழ்மனத்திலே மட்டும், அழியாமல் நம்முடைய சிந்தனைகளையும் கருத்துக்களையும் செயல்களையும் சக்தியோடு உருவாக்கி வைக்கும் வேலையைச் செய்கின்றன. மற்றவை தாம் வெளிப்படவேண்டிய காலத்தை எதிர்நோக்கி ஒளிந்திருக்கும்; மீண்டும் வெளிப்படுத்தக்கூடிய காலம் என்பது வந்தால் தாமே தோன்றி வந்து மேல்மனத் திரையிலே வெளிப்படும்.

நிலக்கரியின் தன்மை

நிலக்கரியானது பூமிக்கடியிலே மறைந்து கிடக்கிறது. சுரங்கம் தோண்டி அதை எடுத்துப் பயன்படுத்தும்போது அது நமக்கு ஒளியும் வெப்பமும் தருகின்றது. யாராவது எடுத்துப் பயன்படுத்தப்படும்வரை ஒளியையும் வெப்பத்தையும் தன்னுள்ளேயே அடக்கிவைத்துக் கொண்டு, தான் முழுதும் செயலற்றுக் கரிபோலக் கிடக்கின்றது. ஆழ்மனத்தின் நினைவுகளும் இப்படித்தான் ஒடுங்கியபடி அடங்கிக் கிடக்கின்றன. பயன்படக் கூடிய சரியான சந்தர்ப்பம் வரும் போது மேல்மன மட்டத்திலே எழுந்துவந்து பிரகாசமாக வெளிப்பட்டு அவை நமக்கு உதவும்; ஒளியேற்றி வளமாக்கும். நம் சிந்தனையை

தொட்டதும் சுடரும்

சில சமயங்களிலே, நாம் ஒருசிலவற்றைச் சார்ந்த நினைவுகளை, நம் மேல்மனத்திற்குச் கொண்டு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு முயல்கின்றோம். ஆனால் அது நம்மால் முடியாமலேயே போகின்றது. இதே நினைவுகள், சில நேரங்களில், நாம் அவற்றை விரும்பாதபோது, தாமாகவே மேலெழுந்து வந்து தோன்றி விடுவதையும் நாம் காண்கிறோம். முயன்று முயன்று முடியாமற் சோர்ந்து போய், முயற்சியையே கைவிட்டு விடும்போது, ஒளிவீச்சுப் போல அந்த நினைவுகள் தோன்றுவதையும் கண்டிருக்கின்றோம்.

ஏதோ ஒரு சொல்லைக் கேட்டவுடன், ஆழ்மனத்திலே யுள்ள நினைவுச் சேமிப்பறையிலிருந்து, அது சம்பந்தமான எண்ணற்ற பல நினைவுகளும் எண்ணங்களும் விமரிசனங்களும் அலையலையாக எழுந்து மேலே படர்ந்து வருவதையும் நாம் அநுபவித்திருக்கிறோம்.

கனவில் காண்பது

சில சமயங்களில், நாம் நெடுங்காலமாக மறந்துவிட்டவர் களின் முகங்களையும் குரல்களையும் கனவிலே பார்க்கவும்


கேட்கவும் செய்கின்றோம். அதிதமான சில தூண்டுதல்கள், நெடுங்காலமாக நாம் அறவே மறந்துவிட்ட நினைவுகளை மேல்மட்டத்திற்குக் கொண்டுவந்து, நம்மைத் திகைக்க வைத்து, வியப்பு உண்டாக்கியும் விடுகின்றன.

செய்தியைக் கேட்டதும் ஐம்பது அறுபது

ஒரு வருடங்களுக்கு முன்பாக, அதுபோல் கேள்விப்பட்ட செய்தியின் நினைவானது, நம் மேல்மனத்திலே தானே எழுந்து விடுகின்றது. அதை, அப்படியே உணர்ச்சியோடு சில பெரியவர்கள் சொல்வது போலவே, விவரமாகக் கேட்கின்றோம். இதுவும், ஆழ்மனத்தின் தூண்டுதலால் நிகழும் அற்புதச் செயல்தான்.

சன்னிப் பிதற்றல்

காய்ச்சலில், சன்னி வந்தால், மனவடக்கம் வலுவற்றுத் தளர்ந்து போகும் இப்படிப் போகும்போது, அவர்கள் என்னென்னவோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். இவற்றில் ஒன்றைக்கூடச் சுயநினைவுக்கு வந்தபின்னால் அவர்களால் நினைவுகூறவே முடியாது. ஆனால், அந்தப் பிதற்றல்களைக் கவனமாக ஆராய்ந்தால், அவை நெடுங் காலத்திற்கு முன்னர் மனத்திற்பதிந்து, பின்னர் மறக்கப்பட்டுப் போன பல சம்பவங்களின் நினைவுகளாகவோ, அல்லது கேட்டு மறந்துவிட்ட செய்திகளாகவோ இருப்பதைக் காணலாம். மனநோயாளிகளின் பிதற்றல்களிற்கூட, இப்படி ஆழ்மனப் பதிவுகள் மேலெழுந்து வருகின்றன என்று கூறப்படுகின்றது.

நீரில் மூழ்கும்போது

'நீரிலே அமிழ்ந்துபோகும் ஒருவருக்குத் தம்முடைய கடந்த வாழ்வின் நினைவுகள் பலவும் அலையலையாக மனத் திரையிலே எழுந்து தோன்றும்' என்று சொல்லப் படுகின்றது. சர் பிரான்சிஸ் போவார்ட் என்பவர் நீரில் ஆழ்ந்து நினைவிழந்த நிலையிலே காப்பாற்றப்பட்டார். அவர் மீண்டும் தம் நினைவு திரும்பியதும், தம் வாழ்நாளில் நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பின்னோக்கிய முறையில், ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக, மிகத் தெளிவாகத் தம் மனத்திரையில் கண்டதாகக் கூறினார். சினிமாப்படம் ஒன்றைப் பார்ப்பது போல அவற்றைத் தொடர்பாகவும் தெளிவாகவும் கண்டதாகவும் சொன்னார். அவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தின் படம் போல அவை தோன்றிப் பிரமிப்பளித்ததாயும் கூறினார்.


கோலரிட்ஜ் சொல்வது

கோலரிட்ஜ் ஒரு இளம்பெண்ணின் கதையைச் சொல்கிறார். அந்தப் பெண்ணுக்கு எழுதவோ படிக்கவோ கொஞ்சங்கூடத் தெரியாதாம். ஆனால், அவள் காய்ச்சலில் நினைவிழந்து பிதற்றும்போது லத்தீன், கிரேக்கம், ஈப்ரு ஆகிய மொழிகளில், வேகமாக எதைஎதையோ தொடர்ந்து பேசத் தொடங்கிவிட்டாளாம். அப் பேச்சுக்களை எல்லாம் கேட்டு அருகிருந்தவர்கள் எழுதிக் கொண்டார்களாம். அவ் வாக்கியங்களிற் பல பொருள் புரியாமல் குழப்பமாகவும் இருந்தன. அவளுடைய ஈப்ரூப் பேச்சுக்கள் மிகப் பழங் காலத்திய ரபிமார்களின் பேச்சுக்களைப்போல் விளங்கின. அவளைப் பிசாசு பிடித்திருப்பதாகப் பலரும் நினைக்க லானார்கள். அதுதான், அவள்மூலம் பேசுவதாகவும் பலர் நம்பினார்கள். அப்படிவந்து

அவளுக்குச் சிகிச்சை செய்துவந்த டாக்டர், பேய் பிசாசுகளை அறவே நம்பாதவர் அவர் அவளுடைய பழைய வாழ்க்கையைப் பற்றித் தீவிரமாக அக்கம்பக்கங்களிலே விசாரித்தார். அவளுடைய ஒன்பதாவது வயது நடக்கும் காலத்தில், அவள் ஒரு கிறிஸ்தவ மதகுருவின் ஆதரவில் இருந்து வளர்ந்து வந்தாளாம். அந்த மதகுரு, சமையலறைப் பக்கமிருந்த நடைவழியில் காலார நடந்துகொண்டே, ரபிமார்களின் அருள் வாக்குசுளையும், கிரேக்க லத்தீனப் பாதிரிமார்களின் அருள் வாக்குகளையும் வாயார உரக்கச் சொல்லிக்கொண்டே உலவிக் கொண்டிருப்பது வழக்கமாம். அவருடைய புத்தகங்களைத் தேடிப்பெற்று ஆராய்ந்தபோது, அந்தப் பெண் சொன்ன ஒவ்வொரு வாக்கியமும், அங்கே அப்படி அப்படியே காணப்பட்டதாம். அவளை அறியாமலேயே, அவள் ஆழ்மனம் அந்த வாக்குகளைத் தான் உற்றுக்கேட்டுப் பதிவுசெய்து காப்பாற்றி வைத்துக் கெண்டிருந்திருக்கிறது. காய்ச்சல் வேகம், ஆழ்மனச் சேமிப்பிலிருந்து அந்தப் புதையல்களைக் கிளப்பி, மேலே புறமன மட்டத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. இவ்வாறு அவள் பேச்சுகளுக்கு அந்த டாக்டர் சரியான விளக்கம் எதுவென்று தெளிவாகக் கண்டார்.

பாதிரியார் அநுபவம்

ஒரு ஆங்கிலப் பாதிரியாரின் வாழ்விலே நிகழ்ந்த சம்பவம் ஒன்றைப் பற்றிக் கார்ப்பென்டர் என்பவர் தம் நூலிலே குறிப்பிடுகின்றார். அந்தப் பாதிரியார் ஒரு அரண்மனைக்குச் சென்றாராம். அதை அவர் அதற்கு முன்னர் ஒருபோதும்
கண்டதே இல்லையாம். ஆனால் அந்த மாளிகை வாசலை அவர் அடைந்தபோது, அதை முன்பே பலமுறை கண்டிருப்பதாகத் தோன்றியதாம். அங்குள்ள ஒவ்வொரு பொருளும் அவருக்கு முன்பே தெரிந்ததாகக் காணப்பட்டதாம். அவர் மிகவும் வியப்படைந்தார். அது குறித்துத் தம் தாயிடம்போய் அவர் கேட்டபோது, அவள், அவர் பதினெட்டு மாதக் குழந்தையாக இருந்தபோது, தான் அந்த மாளிகையில் நடந்த விருந்து ஒன்றுக்குப் போனதாகவும், அவரை அங்குள்ள வாசலுக்கு அருகிலிருந்த கழுதைகளைக் காப்பவர்களின் பொறுப்பிலே விட்டுவிட்டு, தாம் மட்டும் சென்றிருந்ததாகவும் கூறினாளாம். பதினெட்டு மாதக் உள்ளே குழந்தையின் மனத்திலே அப்போது தாமாகவே பதிந்த நினவுகள், பல வருடங்களுக்குப் பின், அந்தக் குழந்தை வளர்ந்து ஒரு பாதிரியாராகி அங்கு மீண்டும் போகும்போது, அப்படியே தெளிவாக நினைவுமட்டத்திலே வெளிப்பட்டுத் தோன்றி யிருக்கின்றன. ஆழ்மனத்தின் அபூர்வமான கிரகிக்கும் சக்திக்கும், மீண்டும் எப்போதாவது தூண்டுதல் வரும்போது, பழைய நினைவுகளை மேல்மனத் திரையிலேயே வெளிப்படத் தெளிவாகக் காட்டும் சக்திக்கும், இது ஒரு நல்ல உதாரணம் அல்லவா!

முன்னே பார்த்திருக்கிறேன்

அபர் கோம்பி என்னும் ஆசிரியர், மற்றொரு சம்பவம் பற்றிக் குறிப்பிடுகின்றார். கிராமப்புறம் ஒன்றில் ஒரு பெண்மணி மரணப்படுக்கையில் இருந்தாள். அவளுடைய சின்னஞ்சிறு வயது மகள் இலண்டனில் படித்து வந்தவள், தாயாரிடம் கொண்டு வரப்பட்டாள். தாயுடன் சிறிது நேரம் அக் குழந்தையை இருக்க வைத்தபின், மீண்டும் அதனை இலண்டனுக்கே உறவினர் கொண்டுபோய்விட்டனர். தாயாரும் மரணமடைந்தார். அந்தச் சிறுபெண்ணும் தன் தாயைப் பற்றி, நினைவுகள் எதுவும் அழுத்தமாக இல்லாமலே வளர்ந்து, காலப்போக்கில் பெரியவளானாள்.

அவள் நடுத்தர வயதினை அடைந்தபோது, மீண்டும் அந்தக் கிராமத்துக்குச் செல்ல நேர்ந்தது. தன் தாயிருந்த வீட்டிற்குச் சென்று அந்தத் தாய் நோயுற்றுப் படுத்திருந்த அறையையும் அவள் அடைந்தாள். அவளுக்கு அந்த அறையில்தான் தன் தாயார் இறந்துபோனாள் என்பதே தெரியாது. அந்த அறைக்குள் நுழையும்போது, அவள் ஏனோ மிகவும் தடுமாற்றம் அடைந்தாள். அவளுடன் வந்த தோழி திகைப்படைந்து, அதுபற்றிக் கேட்டாள்.


இந்த அறைக்கு இதற்கு முன்பே நான் வந்திருப்பது போலத் தோன்றுகின்றது. அந்த மூலையில் படுத்திருந்த மிகமிக நோயாளியான ஒரு பெண்மணி, என் மேலாகக் குனிந்தபடி, என்றாள் என்னைக் கட்டிக்கொண்டு சுதறிக் கதறி அழுதாள். அது என் நினைவிலே இப்போது மிகத் தெளிவாகத் தெரிகிறது” அவள்.

அந்தச் சின்னக் குழந்தையின் மூளையிலே பதிந்த அந்த நினைவு, அது வளர்ந்து பெரியவளாகும் வரைக்கும் உள்ளேயே மறைந்திருந்து, அவள் நடுத்தர வயதில் அந்த அறைக்குள் மீண்டும் வந்து நுழையும்போது, தெளிவாகவே மேலெழுந்து வெளிப்பட்டுத் தோன்றுகின்றது அவளுடைய வாழ்க்கையின் பழைய இரகசியத்தையும் அப்போது அங்கே அவளுக்கு அது புலப்படுத்துகின்றது,

மறையாத நினைவுகள்

மனத்தில் பதிந்த நினைவுப்பதிவுகள் முழுக்க முழுக்க ஒருபோதுமே மறைவதில்லை. ஒருமுறை பதிவான எந்த நினைவுகளும் பின் அடியோடு கரைந்து இல்லாமற் போவது மில்லை அவை சாதாரண நினைவுமண்டல எல்லையிலிருந்து ஆழத்தில் ஒதுங்கிப் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டே இருக்கின்றன. எப்பொழுதோ சித்தத்தின் செயலாலோ, சிலபல தொடர்புகளாலோ அந்த நினைவுகள் வேகமாகத் தூண்டப்படும்போது, அவை தம் ஒதுங்கிய மோனத் தூக்க நிலையிலிருந்து விழித்தெழுந்து வெளிப்பட்டு, நினைவு மண்டலத்திலே தோன்றித் தெளிவாகப் புலப்படுகின்றன.

ஆழ்மனத்தின் சேமிப்பறையுள்ளே, அதன் ஆழத்தினுள்ளே, நாம் சென்றடைய முடியுமானால், ஒவ்வொரு நினைவுப் பதிவையும் மேல்மனத்து நினைவு மண்டலத்திற்கு, நாம் வேண்டும்போது எளிதாகவே கொண்டு வரலாம். நாம் பிறந்த நாளிலிருந்து சந்தித்த, நிகழ்ந்த பலப்பல சம்பவங்கள், செய்திகள் பற்றியெல்லாம் நாம் விரும்பும்போது தெளிவாகவே அறிந்து கொள்ளலாம்.

எண்ணப்படியே நாம்!

"நாம் முன் காலத்தில் என்ன நினைத்தோமோ, என்ன சொன்னோமோ, என்ன உணர்ந்தோமோ, செய்தோமோ, அவற்றின் ஒருமித்த கூட்டுச் சேர்க்கையின் என்ன வடிவாகவேதான், இன்று நாம் அமைந்து விளங்குகின்றோம்.நம் இன்றைய அறிவையும் ஒழுக்கத்தையும் வாழ்வையும் பாதிக்காத


எண்ணமோ, நினைவோ ஒன்றுகூட நம்மிடம் நிச்சயமாக இல்லை. ஒவ்வொன்றும் கூடிச்சேர்ந்தே நம்மை இந்த நிலைக்கு ஒரு கூட்டுச் -சரக்காக உருவாக்கியிருக்கிறது. உண்மையான நம் நிலைமை ஆகும். இதுவே

நம் கருத்துக்களும், எண்ணங்களும், திட்டங்களும், முடிவுகளும் கடந்த காலங்களின் தொடர்ந்த அனுபவங்களின் உருவாக்கத்தினாலே விளைந்த விளைவுகளேயாகும். அவை மேலாகப் பார்க்கும்போது மறக்கப்பட்டனவா யிருந்தாலும், நம் நினைவிலே எழாதபடி ஒதுங்கி மறைந்து இருந்தாலும், அவை தாம், உள்ளே மனஆழத்தில் உயிர்ப்போடே ஒளிந்திருந்து, நம்மை இப்படியாகவெல்லாம் உருவாக்கியுள்ளன. பலபிறவி நினைவுகளின் உருவாக்கமே நம் நினைவுப்போக்கை உருவாக்குவதாகத் தத்துவங்களும் இதையே கூறுகின்றன. பழக்கிப் பயனடைவோம்

ஆழ்மனத்தின் இந்தத் திறமைகளை எப்படி, நமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது என்று இனித் தெரிந்துகொள்ள முயல்வோம். கவனமாகச் சேமிக்கவும், அந்தச் சேமிப்பு எந்த இடத்தில் உள்ளது என்பதை எப்போதும் மறவாதிருக்கவும், விரைவாக வேண்டும்போது மேலே அதைக் கொண்டுவரவும் தெரிந்து கொள்வோம். இது நமக்கு வாழ்க்கை நலனுக்கு மிகவும் உதவும். நினைவாற்றல் தொடர்ந்து வளர்ந்து வளப்படுத்தக் கூடிய சக்திதான், பழக்கிப் பண்படுத்தக்கூடிய ஒரு சக்திதான் என்பதை, நாம் ஒருபோதும் மறக்கவே கூடாது.

நம்மால் முடியும்

ஆழ்மனத்திலே, எந்த நினைவையும் கவனமாகப் பதித்து வைக்கவும், முறைப்படுத்தி வைக்கவும் வேண்டிய மனஉறுதியை, நாம் நம் சித்தத்தால் உண்டாக்கமுடியும். இதன் பயனாக எந்தப் பழைய நினைவையும் வேண்டியபோது மேல்மன மட்டத்துக்குக் கொண்டு வரவும் நம்மால் முடியும்.

தொழிலகத்து மேலாண்மையிலே இருப்பவர் ஒருவர், தன் தொழிற்சாலையின் ஒவ்வொரு துறையிலுள்ள பணியாளர் களையும், எப்படி ஒழுங்காகத் தம் வேலைகளைச் செய்யவும், தான் விரும்பிய விவரங்களை உடனே தனக்குத் தரவும் கூடியவர்களாகத் தன் நிர்வாக அமைப்பினை முறைப்படுத்தி வைத்துள்ளாரோ, அப்படியே நாமும், நம் மனத்தின் ஒவ்வொரு துறையையும் முறையாகச் செயல்பட்டு, நம் சித்தத்தின் ஆணைப்படியே தவறாமல் நமக்கு உதவியாக நடக்குமாறு செய்துகொள்ள முடியும்; செய்துகொள்ளவும் வேண்டும்.

எப்படி இதைச் செய்துகொள்ளலாம் என்பதுபற்றி, இனி அடுத்துவரும் பகுதிகளில் கவனமாகப் படியுங்கள்.

மணிமேகலையின் பீடிகைகண்டு பிறப்பு உணர்ந்த காதை, முற்பிறப்பு நினைவுகளை உணர்த்துவது பற்றிய நல்ல விளக்கமாகும். ஹிப்னாடிசத்தால் உணர்விழந்த ஆழ்தூக்க நிலைக்கு உட்படுத்தப்பட்டோர் சிலரின், மனத்தாழத்திலிருந்து அவர்களின் முற்பிறவிச் சம்பவ நினைவுகள் வெளிப்பட்டன என்பதையும், அவை ஆராய்ந்தபோது உண்மையாகவே விளங்கின என்பதையும், மனோசக்தி பற்றிய நூல்கள் கூறுகின்றன. ஆகவே, நினைவாற்றலால் இந்தப் பிறவியிலே அறிந்தவைகளை மட்டும் அல்லாமல், முன் பலபிறவிகளில் அறிந்தவைகளையும் மனத்தாழத்திலேயிருந்து நினைவு மண்டலத்துக்குக் கொண்டு வரமுடியும் என்பதையும் நாம் அறிய வேண்டும்.

ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘