🌏🌍🌎மஹான் விசிறி சுவாமிகள்🌏🌍🌎
🌏🌍🌎மஹான் விசிறி சுவாமிகள்🌏🌍🌎
யோகிகள் சிலர் காவி உடுத்தி சன்னியாசியாக வேட்டிக் இருப்பார்கள். சிலர் கௌபீனதாரியாக இருப்பார்கள்.சிலர் வெள்ளை காரர்களாகவும் பச்சை வேட்டிக்காரர் களாக வும் இருப்பார்கள் ஆனால் யோகி குமார் எல்லா பகவாள் ராம் சுரத் அவர்கள் வகையான உடைகளையும் தரித்துக் கொண்டிருப் பார்கள். இடுப்பில் மூல கச்சமாகக் கட்டிய வெள்ளை வேட்டி, மேலே ஒரு சட்டை; அதன் மேலே ஒரு சிவப்பு அல்லது பச்சை வண்ண சால்வை; தலையில் சரிகை கலந்த சிவப்பு நிற முண்டாசு அணிந்திருப்பார். வலது கையில் ஒரு விசிறியையும், இடதுகையில் ஒரு கொட்டா குச்சியையும் பிடித்திருப்பார். இவர் கைவிசிறி நம்முடை மனத்தை அலைக்கழிக்கும் தீய குணங்களை ஓட்டு இவருடைய முண்டாசு,நம்முடையபொறுப்புகளையெல்லாசுமந்து, நமக்கு ஒரு பாரமும் வைக்காமல் வாழ்க்கையை லேசாக்கிவிடும்,
இவர் மரத்தடியிலும், கோயில் மண்டபங்களிலும், கடை வாசலிலும் தேர்முட்டியிலும் தங்கி, இன்ன இடத்தில் தரிசிக்கலாம் என்ற வரையரையே இல்லாமல் திரிந்து உலவுவார். இவரைச் சுற்றி பழைய பத்திரிகைத் தாள்கள் பரவிக் கிடக்கும். ஓரிடத்தில் கற்கண்டு பொட்டலம் இருக்கும். பழங்கள் கிதறிக்கிடக்கும். வேரோரிடத்தில் ஏதாவது மருந்து இருக்கும். சுவரெல்லாம் காய்ந்து போன மாலைகள் தொங்கும். இவருடைய தோற்றத்தையும் தங்கும் இடங்களையும் கண்டவர்களுக்கு இந்தக் குப்பைக்கூளங்களுக்கு இடையிலே ஒரு ஞானச்சுடர் புதைந்திருக்கிறது என்ற உண்மை, உடனே தெரியவராது. அந்த அழுக்கான ஆடைகளினூடே உள்ளத்தின் அழுக்கைப் போக்கும் ஞானகங்கை இருப்பதை, சிலரே உணர்ந்துகொள்வார்கள். தம்மைத் தரிசிக்க வரும் அன்பர்களுடன் இவர் ஆங்கிலத்திலே பேசுவார்; இந்தியிலே பேசுவார்; தமிழிலும் பேசுவார்.
இவர் தன்னை ஒரு 'பிச்சைக்காரன்' என்றே குறிப்பிடுவார். ஆம், இவர் அருட்பிச்சை தரும் பிச்சைக்காரர். இணையில்லாத அருட்செல்வத்திற்கு அதிபதியாக இருக்கும் ஏழை! உண்மையான பக்தர்களை அருட்பைத்தியமாக்கும் பைத்தியக்காரர், பிறர் பாவத்தைப் போக்குவதற்கு, தம்மை பாவி என்று சொல்லிக்கொள்ளும் புண்ணிய மூர்த்தி, வண்ண வண்ண ஆடைகளினூடே எந்தவண்ணமும் சுத்த சத்துவ மயமான வெண்தாடி ஞானவேந்தர். முதிய உருவில் தோன்றும் புதிய இளைஞர். இவரிடம் பேச்சை விட மௌனமே அதிகம். அதைவிட சிரிப்பு அதிகம். நடந்தால் வேகமாக நடப்பார். நின்றால் அப்படியே நிற்பார். உட்கார்ந்தால் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பார். இவருடன் இருந்தால் சில நேரங்களில் நிறைய உணவுகள் கிடைக்கும். சில நேரங்களில் வெகுநேரமாக ஒன்றும் உண்ணாமல் இருக்கும்படி நேரும். மலர்களிலே ராஜாவாக ரோஜா இருப்பது போல இவர் ஞானிகளிலே ராஜாவாக இருக்கிறார்.
ஓம்..
பகவான் யோகி ராம்சுரத்குமார், காசிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் 1.12.1918ல் அவதரித்தார். இளமைப் பருவத்தில் தமது தந்தையார் மடியில் அமர்ந்து இராமாயணம் மகாபாரதம் முதலிய இதிகாசங்கள் யாவையும், வெகு கவனமாகக் கேட்டு இன்புறுவார். கங்கை நதியின் புனிதத் தன்மையில் ஈடுபாடு கொண்டு உலவுவார். இரவு நேரங்களில் அங்கேயே தங்கிவிடுவார். கங்கைக் கரையிலிருந்த சாதுக்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொண்டார்.
1937ம் ஆண்டு தமது பள்ளிப் படிப்பையும், 1941ல் தமது கல்லூரிப் படிப்பையும் வெற்றிகரமாக முடித்தார். அதேசமயம் அவரது மனம் ஆன்மீகத்தையே அதிகம் நாடியது. எனவே 1947ம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்து யோகி அரவிந்தரை தரிசித்தார். அத்துடன் திருவண்ணாமலையில் பகவான் ரமண மகரிஷிகளையும் தரிசித்தார்.
1952ம் ஆண்டு கன்னட நாட்டில் இருந்த, சுவாமி ராமதாஸ் அவர்களிடம் சென்றார். ராமதாசரிடம் உபதேசம் பெற வேண்டும் என்ற ஆர்வம் பெருகியது. இதை உணர்ந்த அந்தக் குருநாதர் ராமதாஸ், இவருக்கு 'ஓம் ஸ்ரீராம்! ஜயராம்! ஜயஜயராம்!" என்ற மந்திரத்தை உபதேசித்தார். இவர் உணவு உறக்கம் இல்லாமல் இரவும் பகலுமாக இந்த மந்திரத்தைத் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இருந்தார். அதனால் ஞானவெளிப் பயணத்தில் உயர உயரச் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பூரணமான தெளிவு உண்டாயிற்று. சாதகராக இருக்கும் நிலை மாறி, சாத்தியத்தை அடைந்த அனுபூதிமானாகிவிட்டார். அங்கிருந்து புறப்பட்டு 7 ஆண்டுகள், வடக்கே இமாலயம் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை ஞான சிங்கமாக உலா வந்தார்.
ஞானதபோதனர்களை, 'வா'வென்று அழைக்கும் கருணை மலை திருவண்ணாமலை! குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர், சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷிகள், ஈஸ்வர சுவாமிகள், காட்டுசிவா முதலிய ஞானிகளைத் தன்னகத்தே கொண்டுள்ள, புனிதமிகு பேருருவே 'திருவண்ணாமலை! இந்த அருள் மலை 1957ம் ஆண்டு, தெய்வமகன் யோகி ராம்சுரத் குமார் அவர்களையும், தன்பால்
ஈர்த்துக்கொண்டது. அதுமுதல், சித்தியடைந்த 2001 வரை, யோகி ராம்சுரத்குமார் அவர்கள் அருணையிலேயே தங்கியிருந்து அருள்மழை பொழிந்து வந்தார்கள்.
ஆரம்ப காலத்தில், திருவண்ணாமலையில் இவரை சிலர், சிறுக்கன் என்றும், கோமாளி என்றும் அலட்சியமாகப் பரிகாசம் செய்தார்கள். சிலர் கல்லாலும், முள்ளாலும் அடித்தார்கள், சில சமூக விரோதிகளோ, இவரைத் துன்புறுத்தி பலவிதமான இன்னல்களை விளைவித்ததுடன், இவரது உயிருக்கே ஆபத்து உண்டாக்கவும் எத்தனித்தார்கள். ஆனால் இந்த ஞானமலையோ எதற்கும் தளராமல், இருந்தபடி இருந்தது.
இந்த நிலைமைகளை, ஞானகுரு ஞானானந்தகிரி சுவாமிகள், திருக்கோவிலூர் தபோவனத்திற்குத் தம்மை தரிசிக்க வந்திருந்த தமிழகக் காவல்துறைத் தலைவர் பொன்.பரமகுரு அவர்களிடம் தெரிவித்தார்கள். உடனே அவர், திருவண்ணா மலை காவல்துறை கண்காணிப்பாளருடன் தொடர்பு கொண்டு, யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்குத் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தார். மேலும், அருளாளர் பொன்.பரமகுரு அவர்கள், அடிக்கடி திருவண்ணாமலைக்கு வந்து, யோகி ராம்சுரத்குமார் அவர்கள் வழக்கமாய் தங்கும் ரெயிலடி, புஞ்சைப் பொட்டல், மலையடிவாரம், புன்னை மரம், கடைவாசல், தேரடிப்படிக்கட்டு, கோவில் பிரகாரங்கள், சுடுகாட்டு வெட்டவெளி ஆகிய இடங்களுக்கும் நேரில் சென்று, சுவாமிகளைத் தரிசித்து அருளாசி பெற்று வந்தார்
இத்தகைய நடவடிக்கைகளால், யோகி ராம்ஜிக்கு இருந்துவந்த தொல்லைகள் அத்தனையும் அறவே அகன்றன நாளடைவில் இவரது பெருமைகளை யாவரும் உணர்ந்தனர் வெளியூர்களிலிருந்து மக்கள் வந்து தரிசித்தார்கள். பி மாநிலங்களிலிருந்தும் அயல் நாடுகளிலிருந்தும் ஆர்வலர்கள் வந்தவண்ணம் இருந்தனர்.
ஒருநாள் திருவண்ணாமலையில் ஆண்களும், பெண்க மாகப் பலபேர் ஆற்றிலே குளித்துக்கொண்டும் துவைத்து கொண்டும் இருந்தார்கள். படித்துறையில் துவைத்துகொண்டிருந்த ஒரு பெண்ணின் குழந்தை, ஆற்றின் ஆழமான பகுதியிலே இறங்கிவிட்டது. ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை, ஆற்றின் நடுவில் இருந்த ஒரு பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டது. தலை மட்டும் தண்ணீருக்கு மேல் தெரிகிறது. குழந்தை வீறிட்டு அழுவதும் கேட்கிறது.
குழந்தையை மீட்பதற்கு நீந்திச் சென்றவர்களால், பாதை இடுக்கிலிருந்து குழந்தையை மேலே எடுக்க இயலவில்லை. பலவிதமான முயற்சிகள் செய்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அப்போது யோகி ராம்சுரத்குமார் சுவாமிகள். கரையோரம் நடந்து வந்துகொண்டிருந்தார். சுவாமிகளைப் பார்த்துவிட்ட அந்தத் தாய், ஓடிப்போய் சுவாமிகளின் கால்களிலே விழுந்து கதறி அழுது, குழந்தையைக் காத்தருளு மாறு கரம் குவித்து மன்றாடினாள். பகவான் பார்த்தார். அனைவரையும் விலகி நிற்கச் செய்தார். எல்லோரும், 'ராம், ராம், ராம்' என்று தொடர்ந்து ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கும்படிக் கூறினார்.
அவர்கள் சொல்லச் சொல்ல அந்தப் பாறை மெல்ல மெல்ல இடம் பெயர்ந்து நகர்ந்து தண்ணீருக்குள் மூழ்கி மறைந்தது. அதனால் நீருக்கு மேலே மிதக்கத் தொடங்கிய குழந்தையை சுவாமிகள், தம் நீண்ட கரங்களால் எடுத்து உயிரோடு நலமாக உற்ற தாயிடம் ஒப்படைத்தார். கருணையே திருவுருவான சுவாமிகளின் திருவடிகளை, கண்ணீரால் கழுவினாள் அந்த அன்னை.
சன்னதித் தெருவிலே அன்பர்கள் ஏற்பாடு செய்திருந்த இல்லத்திலே பகவான் வீற்றிருந்தார். அன்பர்கள் சூழ்ந்து அமர்ந்திருந்தார்கள். பேசிக்கொண்டே இருந்த பகவானுடைய முகம் திடீரென்று மாறியது. விருட்டென்று எழுந்தார். வேகமாக வெளியிலே நடந்தார். கொஞ்ச தூரத்திலுள்ள ஒரு தோட்டத்தின் கிணற்றைச் சுற்றி மக்கள் பரபரப்புடன் ஓடிக் கொண்டிருந்தார்கள். பகவான் விரைந்து சென்று கிணற்று மேட்டில் நின்று உள்ளே பார்த்தார். ஆழமான தண்ணீரில், ஒரு குதிரை விழுந்து, வெகுநேரம் நீந்தி நீந்திக் களைத்துப் போய் உயிருக்குப் போராடி தத்தளித்துக் கொண்டிருந்தது.
ஓம்...
சுவாமிகள் தம் கண்களை மூடினார். கனிந்த குரலில், ராமநாமத்தைத் திரும்பத் திரும்ப தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருந்தார். அதை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கிணற்றுக்குள் இருந்த நீர் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர்ந்து உயர்ந்து கிணற்றின் மேல் கரையைத் தொட்டு வழிந்தது. அந்த தண்ணீருடனேயே சேர்ந்து மேலே மிதந்து வந்த குதிரை, தரையிலே கால் வைத்து, எகிறிக் குதித்து ஓட்டம் பிடித்தது!
நீதிபதி டி.எஸ்.அருணாசலம் அவர்களது சென்னை நீதிமன்ற அலுவலகத்திற்கு, திருவண்ணாமலையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பேசியவர் ஆசிரமத்தின் அறங்காவலர்! அவர் ஒரு தேதியைக் குறிப்பிட்டு, பகவான் முன்னிலையில் அன்று, ஆசிரமத்திற்காக வாங்கியிருக்கும் நிலத்தில் வேலி போடும் தொடக்க விழா நடக்கவிருப்பதாகவும், அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டும் எனவும் அழைப்புச் செய்தார். அறங்காவலர் குறிப்பிட்ட அந்த நாளிலோ, நீதிபதி டி.எஸ்.அருணாசலம் அவர்கள், சென்னையை விட்டு நகர முடியாத சூழ்நிலை. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட வர்கள் விசாரணைக் கைதிகளாக அப்போது பூந்தமல்லி சிறையிலிருந்தவர்கள், சிறையின் குறைகள் பற்றித் தாக்கல் செய்திருந்த ரிட்மனுவின் விசாரணைக்காக, இவரது தலைமையில் இயங்கிய டிவிசன் பெஞ்ச் அதே நாளை, முன்கூட்டியே அறிவித்திருந்தது. விசாரணையைத் தள்ளி வைக்க இவரது மனம் ஒப்பவில்லை.
அதனால் இவருக்கு ஏற்பட்ட பெரும் ஏமாற்றத்தில், இவரது அலுவலக அறை முழுவதிலும் படங்களாகக் கொலுவீற்றிருக்கும் பகவானைப் பார்த்து, "என்னை ஏமாற்றிவிட்டீர்கள்" என உரிமையுடன் கடிந்து, மனம் வெதும்பி, குழந்தையைப் போல் விக்கிவிக்கி வெகுநேரம் அழுதுகொண்டே இருந்தார். இப்பிரயோகம் இவரது குருவிற்கும், இவருக்கும் தனிமையில் நடந்த ஆத்மார்த்து தொடர்பு என்பது பின்பு அறிய முடிந்தது. நீதிபதி அந்த தேதிக்குப் போகவில்லை.
ஓம்..
சில நாட்கள் கழித்து மறுபடியும் அதே அறங்காவல தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஏதோ காரணத்திற்காக, அவ்விழாவை சிலநாட்கள் தள்ளிப் போட்டு, வரும் வைகுண்ட ஏகாதசியன்று ஏற்பாடு செய்யும்படி பகவான் கட்டளையிட்டார் என்று கூறினார். இதனைக் கேட்ட நீதிபதியின் நெஞ்சம் மகிழ்ச்சியால் துள்ளியது! இவரது மனப்போக்கினையும் பக்தியையும் அங்கிருந்தே அறிந்த பகவான், இவருக்காகவே அம்மாற்றம் செய்துவிட்டார் என. இவரது உள் உணர்வு கோடிட்டது. இவர் தமது அலுவலக அறையில் அன்று பகவானிடம் கடுமையாகச் சாடியதை நினைத்து வருந்தி, அவமான நாணத்துடன் மன்னிப்புக்கோரி, சிரித்து, பிரார்த்தித்து, பகவானின் படங்களை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டே தன்னை மறந்த ஒரு தனி இன்பத்தில் லயித்துவிட்டார்.
நீதிபதி அவர்கள், மாற்றியமைக்கப்பட்ட அந்தப் புதிய தேதியில் திருவண்ணாமலைக்கு மகிழ்ச்சியுடன் சென்று, விழாவில் கலந்து கொண்டார். விழா முடிந்தவுடன், காலை 7.30 மணிக்கு சென்னைக்கு அவசரமாகக் கிளம்பினார். அப்போது பகவான், "நீ இப்போது கிளம்புவதை தந்தை விரும்பவில்லை. நீ இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்" என்று ஆணையிட்டார். பகவானின் உத்தரவை நீதிபதி ஏற்றார். பகவான் மகிழ்ந்தார். ஒரு மணி நேரம் கடந்தது. மணி 8.30 ஆகும்போது சுவாமிகள் நீதிபதியிடம், "நீ இப்போது கிளம்பலாம். தந்தை உனக்கு அனுமதி அளித்து விட்டார்" எனக் கூறிக்கொண்டே பிரசாதம் அருளி வழியனுப்பி வைத்தார்.
சாதாரணமாக, கோர்ட் தொடங்குவதற்கு 30 நிமிடங்கள் முன்பு சென்னை கடற்கரைச் சாலையில், மாநிலக் கல்லூரி யைக் கடப்பது இவரது வழக்கம். அன்றோ, அக்கடப்பு, பகல் 10.40 மணிக்கு அவ்விடத்தில் 2 கார்கள் சேதங்களுடன் கண்ணாடிகள் சிதறிக் கிடப்பதைக் கண்டார். நீதிபதி. விசாரித்தபோது, பிரபல சென்னை ரவுடியின் ஆட்கள் ஒரு பஸ் தான் இச்செயலை 30 நிமிடங்களுக்கு முன்பு செய்தார்கள் எனத் தெரியவந்தது. தன் ஞான திருஷ்டியால் இதனை அறிந்த பகவான், நீதிபதியை திருவண்ணாமலையிலிருந்து
தாமதமாகக் கிளப்பி, அவ்விபத்திலிருந்து காப்பாற்றி விட்டார். இதன் முக்கியம் என்னவென்றால், அதே ரவுடிக்கு எதிராக இவர் 3 நாட்களுக்கு முன் தீர்ப்பளித்திருந்தார்.
மேலூர் அரசினர் கலைக்கல்லூரியின் முதல்வராகவும். கல்லூரிக் கல்வி இணை இயக்குநராகவும், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் பதிவாளராகவும் பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ளவர், பேராசிரியர் கோ.சங்கரராசுலு அவர்கள். முன்பு இவர் செய்யாற்றிலிருந்து திருவண்ணாமலை கல்லூரிக்கு மாறுதலாகி வந்து முதல்வராகப் பணியேற்றிருந் தார். கல்லூரி வேலை நேரம் போக மீதி நேரமெல்லாம் இவர் யோகி ராம்சுரத்குமார் அவர்களுடனேயே இருப்பார். வழியில் போவோர், பிச்சைக்காரனுக்குத்தான் பைத்தியம்னா, இந்தப் பிரின்ஸ்பாலுக்கும் பைத்தியமா என்று கேலி பேசிச் செல்வார்கள். ஒருநாள் சுவாமி முதல்வரைப் பார்த்து, பி.எச்.டி. ஆய்வுக்கு என்ன பொருள் எடுத்துக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு முதல்வர், திருமங்கையாழ்வார் பாடல்களை எடுத்திருக்கிறேன் என்று கூறினார். அதில் ஒன்றைச் சொல்லு என்றார் சுவாமி.
"இராமன் சீதையை மீட்க இலங்கைக்குப் போய்க் கொண்டிருக்கிறான், வழியிலே பரத்வாச முனிவர் ஆஸ்ரமம் இருக்கிறது. இராமனை முனிவர் உணவுகொள்ள அழைக்கிறார். அதற்கு இராமன், "போரிலே இராவணனை வென்று, சீதையை மீட்டுத் திரும்பும்போது வருகிறேன்" என்று சொல்லிச் சென்றுவிடுகிறார். சென்றவர் வென்றார்; சீதையுடன் திரும்பினார். வழியில் மீண்டும் முனிவர் அழைத்தார். அதனால் தானும் தன்னுடன் வந்திருந்தவர்களு மாக விருந்திற்கு அமர்கிறார்கள். எல்லோருக்கும் இலை போடப்படுகிறது. ஒரே ஒருவருக்கு மட்டும் இலை இல்லை அந்த ஒருவர் அனுமன்! போடப்பட்ட இலைகளிலே சுவையாக உணவுகள் பரிமாறப்படுகின்றன. ஓரத்தில் தூரத்தில் ஒதுங்கி நின்றான் அனுமன்.
அமுதை அள்ளி உண்ண நிமிர்ந்த இராமன் அனுமனைப் பார்த்துவிடுகிறார். பார்த்த இராமன், உண்பன அப்படியே நிறுத்திவிட்டு அனுமனைப் பார்த்து, “வா” என்று
அழைக்கின்றார். பக்தியின் மொத்த உருவான அனுமன் கைகட்டி, வாய் பொத்தி இராமன் முன் வந்து கூனிக் குறு நிற்கின்றார். இராமபிரான் தனது திருக்கரத்தால் அனுமனது கையைப் பிடித்து தன்னுடன் இலையில் உட்காரச் செய்து ஒரே இலையில் இருவரும் சாப்பிடுவோம் என்கிறார். பதற் நடுங்குகிறான் அனுமன்.
கருணையுடன் அணைத்து கனிவுடன் அமுதுண்ண வைக்கிறார் இராமன், சீதை, லட்சுமணன், மற்றும் உடல் இருந்தவர்கள் அனைவரும், உணர்ச்சிபூர்வமான இக்காட்சியைக் கண்டு மெய்சிலிர்த்து நிற்கிறார்கள்." முதல்வர் இப்படிச் சொல்லி முடித்ததும், சுவாமிகள் உணர்ச்சிப் பெருக்குடன், இதை வால்மீகியும் சொல்லவில்லை, துளசியும் சொல்லாமல் விட்டான்" என்று அழுத்தம் திருத்தமாகச் கூறிக்கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில் ஒரு அம்மையார், பகவானுக்கு உணவு கொண்டு வந்து வைத்தார்கள். எல்லோருக்கும் இலைபோடு என்றார் பகவான். அப்படியே போட்டார் அந்த அம்மையார். ஒருத்தருக்கு மட்டும் இலை இல்லை. போட்ட இலைகளில் உணவுகள் பரிமாறப்பட்டன. அப்போது இலை இல்லாமல் ஒதுங்கி நின்றவர் முதல்வர். முதல்வரை அழைத்து, கையைப் பிடித்துத் தன் இலையில் உட்கார வைத்து, "ஒரே இலையில் இருவரும் சாப்பிடுவோம் சாப்பிடு" என்றார் பகவான். பதறி மறுத்தார் முதல்வர். கருணையுடன் அமுதூட்டினார். பகவான். அன்று அனுமனுக்கு உணவூட்டிய ராமபிரானின் அவதாரமே, தான் என்பதை, இப்படி நுட்பமாக உணர்த்துகின்றாரோ என்று சிந்தித்தார் முதல்வர்.
மதுரை திருநகர் ஆனந்தா மெட்ரிகுலேஷன் பள்ளியிலிருந்து 80 பேர், பேருந்து மூலமாக, 'கல்விச் சுற்றுலா சென்றார்கள். திருவண்ணாமலை நாடார் சத்திரத்தில் தங்கியிருந்தார்கள். அவர்கள் பகவானைத் தரிசிக்க ஆவலுற்றார்கள். அப்பள்ளியின் பொறுப்பாளர் அவர்கள், சுவாமிகளிடம் அனுமதி வேண்டினார்.
அதற்கு பகவான், "80 பேருக்கு இங்கே இடமில்லை கரண்டும் இல்லை. அதனாலே இந்தப் பிச்சைக்காரன் அந்தச்லசத்திரத்திற்கே வருகிறேன்" என்று கூறி சத்திரத்திற்கு வந்திருந்து, அவர்களுடன் உணவும் உண்டு, அனைவருக்கும் வழங்கினார்கள். அருளாசி
பசுவான் யோகி ராம்சுரத் குமார் அவர்களைத் தரிசனம் செய்வதற்காக, சென்னையிலிருந்து ஒரு பக்தை, திருவண்ணா மலைக்கு வந்திருந்தார். அவர் சுவாமிகளிடம், "சுவாமி, எனக்கு உபதேசம் பண்ணுங்க சாமி" என்று வேண்டினாள். அதற்கு சுவாமிகள், "பிச்சைக்காரருக்கு அன்னம் இடு" என்று கூறியருளினார்கள். அதுதான் உபதேசம்! மறுநாள் அந்த அம்மாள் சென்னைக்குப் போய் விட்டாள்.
ஒருநாள் அந்த அம்மாவின் வீட்டு வாசலில் ஒரு பிச்சைக்காரனின் குரல் கேட்டது. வெளியில் வந்து பார்த்தார். வற்றி வதங்கிப் போன ஒரு பிச்சைக்காரன் நின்றிருந்தான். "தாயே! ரொம்ப பசியாய் இருக்கிறேன் ! பசி தாங்கல! சோறு போடு தாயே" என்று கும்பிட்டான். அப்போது போடுவதற்கு வீட்டில் சோறு இல்லை. அதனால் ஒரு 25 பைசா காசை அந்த பிச்சைக்காரனுக்குப் போட்டு அனுப்பிவிட்டாள்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு அந்த பக்தை, பகவான்
யோகி ராம்சுரத்குமார் அவர்களைத் தரிசனம் பண்ண,
மீண்டும் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்தார்.
சுவாமிகளைத் தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் கூட்டம்,
நீண்ட வரிசையில் நின்று மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.
அவர்களுடன் இந்த அம்மாவும் வரிசையில் நின்று சென்றார்.
சுவாமிகளைத் தரிசனம் செய்து வணங்கினார்.
அப்போது சுவாமிகள் புன்முறுவலுடன் அந்த அம்மையாரைப் பார்த்து கேட்டார். சென்னையிலே எந்த ஓட்டலிலே 25 பைசாவுக்கு சோறு போடுறான்.
தூக்கி வாரிப் போட்டது அந்த அம்மாளுக்கு. வியந்து அதிர்ந்து போனாள். பிச்சைக்காரனாக அன்று வந்ததுயாரென்று தெளிவாகப் புரிந்தது. "பகவானே” என்று கதறி கொண்டே சுவாமிகளின் திருவடிகளை இறுகப பற்றிக் கொண்டாள்.
மிக நெருங்கிய கிருஷ்ணகிரி பெருமாள்ராசு அவர்கள் மிக நல்ல ஓவியர்: சிறந்த கவிஞர்! இவர் சுவாமிகளின் அன்பர்களில் ஒருவர். ஒருநாள் இவர் திருவண்ணாமலை வந்து பகவானைப் பணிந்தார். சுவாமி பக்தர்கள் பலர் சேர்ந்து திருப்பதிக்குப் போகிறார்கள். அவர்களுடன் நானும் சென்றுவா விரும்புகிறேன். சுவாமிகளிடம் அனுமதி பெற்றுச் செல்லலாம். என்று வந்திருக்கிறேன் என்று அருள் அனுமதி வேண்டி நின்றார். அனுமதி அருளினார் பகவான். அப்போது பகவான் பெருமாள்ராசை அருகில் அழைத்து, ஒரு 10 பைசா காசை கொடுத்தார். கொடுத்து, "இந்த காசை திருப்பதி உண்டியலில் போடு, போட்டுவிட்டு, திருவண்ணாமலைப் பிச்சைக்காரள் யார் என்று கேள்" என்று கூறியனுப்பினார்.
எல்லோரும் திருப்பதிக்குச் சென்று, முறையாக சுவாமி தரிசனம் செய்து கொண்டு ஊருக்குத் திரும்பினார்கள். பகவான் சொல்லியனுப்பியதை பெருமாள்ராஜ் மறந்து விட்டார். ஊருக்குப் புறப்படும்போது, "பகவான் சொன்னதை மறந்து விட்டோமே" என்று பதறி, வேகமாக ஓடி,பகவான் கொடுத்தனுப்பிய 10 காசை உண்டியலுக்குள் போட்டார். போட்டு விட்டு, பகவான் சொல்லியனுப்பிய படி, கரம் கூப்பி சிரம்தாழ்த்தி, "திருவண்ணாமலை பிச்சைக்காரன் யார்?" என்று கேட்டார். கேட்டவுடனே, அங்கே ஒரு பெரிய ஜோதி சுழன்று எழுந்தது. நான்தான், நான்தான், நானே தான்" கோவிலே அதிரும்படியான இடிமுழக்கம் போல "நான்தான் நான்தான்' என்று அசரீரி ஒலி மீண்டும் முழங்கியது. அதிர்ச்சியும் வியப்பும் அடைந்த பெருமாள்ராசு, கண்ணீர் பெருக்குடன் கரம் குவித்து, திருவண்ணாமலை இருக்கும் திசை நோக்கி தொழுது நின்றார். அன்று உலகம் உணர்ந்து கொண்ட ஒரு பேருண்மை இது! சுவாமிகள் யோகி அல்ல. சித்தனல்ல! முனிவன் அல்ல! அவர் ஒரு அவதாரம்! ஆம்!
"திருவண்ணாமலையின் பிச்சைக்காரன்! திருப்பதிமலையின் உச்சிக்காரன்!'
ஓம்..
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக