🌏🌎🌍மரணம் என்றால் என்ன?🌏🌎🌍

 

🌏🌎🌍மரணம் என்றால் என்ன?🌏🌎🌍

இது என்ன வேடிக்கையான கேள்வி. இது தெரியாது என்று சிலர் கோபப்படலாம். கூடவா இதைப் பற்றி சற்று விளக்கமாகத் தெரிந்து கொள்வோம். உடலில் இருந்து உயிரானது பிரிந்து சென்று விடுவது மரணம்.

ஆயுள் என்பது என்ன என்றால் இந்த உடம்புக்குள் அடைபட்டு நிற்கும் உயிரானது எத்தனை காலத்திற்கு அதை விட்டுப் பிரியாமல் இருக்கிறதோ அதுவே அந்த உடலின் ஆயுள். அதாவது அதுதான் அந்த மனிதனின் ஆயுள்காலம்.

வாயுவினால் ஆய உடம்பின் பயனே ஆயுளின் எல்லை அது

என்று ஒளவைக்குறள் இதனை விளக்குகிறது.

பிராணவாயுவினால் நிலைபெற்று இருப்பது இந்த உடல்,ஆயுளின் எல்லைவரையில்தான் இந்த உடம்பு பயன்படும். இதுதான் ஆயுளுக்கும், நமது உடலுக்கும் இருக்கும் உறவு.

நமது உடம்பு ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம் என்று இருவகைப்படும். வெளியே தெரிவது ஸ்தூல உடம்பு. கண்ணுக்குத் தெரியாமல் உள்ளே இருப்பது சூக்கும உடம்பு. இந்த உடம்பில் இருந்து உயிர் பிரிந்து செல்லும்போது ஸ்தூல உடம்பு விழுந்து விடும். அதே நேரத்தில் இதுநாள் வரையில் உள்ளே இருந்த சூக்கும உடம்பும் வெளியே புறப்பட்டு விடும். இந்த நிலைதான் மரணம் எனப்படுகிறது.

ஓம்.

இந்தக் குழந்தை வேண்டாம்:-

மரணம் என்பது மனிதர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று உயிர்கள் அடையும் துன்பங்களில் மிகவும் கொடுமையானதும் இதுதான். மரணத்தை யாராலும் தவிர்க்க முடியாது என்பது தெரிந்தும் கூட ஒவ்வொரு மனிதனும் தனது மரணத்தை தள்ளிப்போடவே விரும்புகிறான். இது குறித்த நாட்டுப்புறக் கதை ஒன்று உண்டு.

அந்தக் காலத்தில் எமதருமன் மக்களின் கண்ணுக்குத் தெரிவான். அவன் யாருக்கு ஆயுள் முடிந்து விட்டதோ அவர்கள் எதிரில் எருமைக்கடாவின் மீது வருவான்.

பட்டிக்கடாவில் வரும் அந்தகா என்பார் அருணகிரிநாதர்.

கையில் பாசக்கயிற்றோடு அவன் தெருவில் வருவதைக் கண்டதும்

எல்லோரும் ஒடிப்போய் ஒளிந்துகொள்வார்கள். ஏன் என்றால் சாவதற்கு

யாருமே விரும்பமாட்டார்கள் இல்லையா?

அப்படித்தான் ஆயுள் முடிந்து விட்டதை அறிந்து ஒரு குழந்தையின் உயிரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் யமன். அவனைச் சுற்றி நின்று அந்தக் குழந்தையின் பெற்றோரும், உற்றாரும் அந்தக் குழந்தையின் உயிரைத் தந்துவிடுமாறு கெஞ்சி அழுதனர். பழுத்த இலை நான் இன்னமும் இருக்கேன் பச்சைத் துளிரை

அந்த எமன் எடுத்துக்கிட்டுப் போயிட்டானே அவனுக்கு

கண்ணில்லையா? என்று புலம்பினாள் பாட்டி.

ஐயோ நான் பத்து மாசம் சுமந்துபெத்த அருமை மகனை சுடுகாட்டில் வெச்சிட்டு நான் எப்படி உயிரோடு இருக்கப்போறேன் என்று அழுதாள் தாய்.

என் ஆயுசை எடுத்துக்கிட்டு என் குழந்தைக்கு உயிர் கொடுக்கக் கூடாதா? என்று விம்மினார் தந்தை.

அவர்களது அழுகையும், கண்ணீரும் எமதருமனை கலங்க வைத்துவிட்டது. நான் பூலோகத்திற்கு வருவது மனிதர்களின் உயிரைப் பறிப்பதற்காகத்தான். அப்படியிருக்க இந்தக் குழந்தையின் உயிரை மீண்டும் கொடுத்துவிட்டு நான் எமலோகம் செல்ல முடியாது. ஆகவே உங்களுக்கு ஒரு சலுகை தருகிறேன் என்று சொல்லி நிறுத்தினான் எமன்.

அவன் என்ன சொல்லப்போகிறான் என்று கூட்டம் அவன் வாயைப் பார்த்துக் கொண்டு நின்றது.


உங்களில் யாராவது அவர்களது ஆயுளை இந்தக் குழந்தைக்கு கொடுத்துவிடுவதாக இருந்தால் குழந்தையை உயிர்ப்பித்து கொடுத்து விடுகிறேன். ஆயுளைக் கொடுத்து இந்தக் குழந்தையை உயிர்ப்பித்த பாட்டி உனக்கு சம்மதமா? என்று கேட்டான்.

இதுவரையில் புலம்பிய பாட்டி இப்போ என் மகளுக்கு பொண்ணு பொறந்திருக்கு, அந்தக் குழந்தையை நான்தான் வளக்கணும் பத்து வருசம் கழிச்சு நானே சொல்லி அனுப்பறேன் என்றாள்.

எமதருமன் இப்போது தாயைப் பார்த்தான், அவள் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன். நான் போயிட்டா இருக்குற மத்த குழந்தைகளை யாரு காப்பாத்துவா என்று எமனிடம் எதிர்க்கேள்வி கேட்டாள்.

சரி, நீதானே இந்தக் குழந்தைக்கு அப்பா, நீயாவது உன் ஆயுசைக் கொடுத்து இந்தக் குழந்தைக்கு உயிர்ப் பிச்சைக் கொடு என்றான் எமன்.

நான்தான் இந்தக் குடும்பத்துக்குத் தலைவன். மாலுமி இல்லாத கப்பல் கடலில் மூழ்கி விடும், அதுபோல நான் இல்லேன்னா இந்தக் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும். நாங்க கொடுத்து வைச்சது அவ்வளவுதான். நீ அந்தக் குழந்தையின் உயிரை எடுத்துக்கிட்டு போ என்றான் தகப்பன்.

எமன் மனிதர்களின் போலியான பாசத்தைப் பார்த்து கிண்டலாக சிரித்துக்கொண்டே குழந்தையின் உயிரை எடுத்துப் போனான் என்று முடிகிறது அந்தக் கதை.

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் எத்தனை கஷ்டம் வந்தாலும், எத்தனை நெருக்கமானவர் இறந்து போனாலும் நாம் செத்துப்போக விரும்புவதில்லை. மரணத்தை மனிதர்கள் அந்த அளவுக்கு வெறுக்கிறார்கள் என்பதுதான்.

மனிதர்கள் மரணத்தை வெறுப்பதற்குக் காரணம் என்ன? உலகத்தில் தாம் அனுபவிக்கும் இன்பங்களைப் பெரிதாகக் கருதுவதும், தன் மனைவி, குழந்தைகள் என்ற பாசத்திற்கு கட்டுப்பட்டு இருப்பதும், சேர்த்து வைத்த சொத்துக்களை இழக்க விரும்பாததுமே ஆகும்.

பல வருடங்களாக இந்த உடற்கூட்டிற்குள் சிறைப்பட்டுக் கிடைக்கும் உயிர் அத்தனை எளிதாக அந்தக் கூட்டைப் பிரித்து தனியே செல்ல விரும்புவதில்லை. மனிதர்களாகிய நாம் பலவருடங்களாக வசித்த வீட்டை, நெருங்கிப் பழகிய நண்பர்களை விட்டுப் பிரிந்துவேறு ஒரு நகரத்திற்குச் செல்வதற்கு பிரியப்படமாட்டோம். வேலையில் பிரமோஷன் கிடைத்தபோது தலைநகரமான தில்லிக்குப் போய் வேலையில் புதிய பதவியில் சேரவேண்டும் என்றால் எத்தனை பேர் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் செல்கிறார்கள்? யோசித்துப் பாருங்கள் ஒருவர் இருவரைத் தவிர மற்ற அத்தனை பேரும் பயப்படு வார்கள், தயங்குவார்கள். அந்த ஊரின் பாஷை தெரியாதே, அங்கே யாருமே எனக்கு நண்பர்கள் இல்லையே, அந்த ஊர் சாப்பாடு எனக்கு ஒத்துக் கொள்ளாதே என்றெல்லாம் காரணங்களை அடுக்குவார்கள்.

சில வருடங்கள் பழகிய இடத்தை விட்டுப்போவதற்கே இப்படி என்றால், பிறந்தது முதலாக இந்த உடலிலேயே பிரியாமல் தங்கி இருக்கும் உயிர் அவ்வளவு எளிதாக இந்த உடம்பை விட்டுப் போய்விடுமா? நிச்சயமாகப் போகாது. அது தான் மரணத்தின் மீது ஏற்படும் பயம், வெறுப்பு.

எல்லாவற்றையும் துறந்த வள்ளல்பெருமானே மரணபயத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, கரணம் எல்லாம் நடுங்க வரும் மரணமும் சம்மதமோ? என்று கேட்கிறார். மரணத்தை நினைத்தாலே கருவி கரணங்கள் நடுங்குவதே இதற்குக் காரணம்.

வானோக்கி வளரும் திருக்கழுக்குன்றத்தில் எழுந்தருளி இருக் கின்ற ஈசனே, உன்னுடைய அடிமையான என்னுடைய உடம்பு எந்த இடத்தில் விழுந்து உயிர் விடுமோ? காட்டிலா, மரநிழலிலா, கடற்புரத்திலா, நாட்டிலா, நகரத்திலா, வீட்டிலா,அல்லது வீட்டின் வெளிப்புறத் திண்ணையிலா எந்த இடத்தில் உயிர் உடலைவிட்டுப் பிரியும் என்று என்னால் அறிய முடியவில்லை. ஆனாலும் எம்பெருமானே உன்னுடைய திருவடி நிழலையே நான் துணையாக நம்பி இருக்கிறேன்.

காடோ செடியோ கடற்புறமோ கனமேமிகுந்த

நாடோநகரோ நகர் நடுவோ நலமே மிகுந்த

 வீடோ புறந்திண்ணையோ தமியேன் உடல் வீழுமிடம் 

நீடோய் கழுக்குன்றின் ஈசாஉயிர்துணை நின்பதமே.

என்று பட்டினத்தார் பாடுவதைப் பாருங்கள். மரணம் எப்படி வரும்? எங்கே வரும்? எப்போது வரும்? என்பதையெல்லாம் முன்கூட்டியே அறியமுடியாது. அதானல்தான் பயம் வருகிறது. அது எப்போது வேண்டுமானாலும் வந்துவிட்டுப் போகட்டும். நீங்கள் இறைவன் திருப்பாதங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அப்படிச் செய்துவிட்டால் மரண பயம் ஏற்படாது என்று நமக்கு அறிவுரை கூறுகிறார்கள் மகான்கள்.


மரணத்தை உயிருள்ள மனிதர்கள் வெறுப்பதற்கு ஒருபுறம் இருக்க, இறந்து போன உடலை உற்றார் உறவினரும், தாலிகட்டிக் கொண்ட மனைவியும், பிறந்த பிள்ளைகளும்கூட வெறுக்க ஆரம்பித்து விடுகின்றனர். என்னைப் பெற்று வளர்த்த தந்தை இவர், இவரது உயிர் போனால் என்ன? உடல் இங்கேயே இருக்கட்டும். நாங்கள் அதை பத்திரமாகப் பாதுகாக்கிறோம் என்று யாருமே சொல்வதில்லை. உயிர் போன உடலை தொடுவதற்கும், வீட்டிலேயே வைத்திருக்கவும் மனிதர்கள் பயப்படுகின்றனர். இதனை பட்டினத்தார்.

என்பெற்ற தாயும் என்னைப் பிணம் என்று இகழ்ந்து விட்டார்


பொன்பெற்ற மைந்தரும் போவென்று சொல்லிப்புலம்பிவிட்டார்

கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம் உடைத்தார் என்கிறார் /

 இறைவனே இந்த உலகத்தில் வாழுகின்ற காலத்தில் சகலத் 'தையும் நான் அடிமைகொண்ட எஜமானனாக வாழ்ந்திருந்தேன். ஆனால் உடலை விட்டு உயிர் போனதுமே, என்னை பத்து மாசம் சுமந்து, பெற்று, பாலூட்டி, சீராட்டி வளர்த்த தாயும் பிணம் என்று சொல்லி வெறுத்து விட்டாள். மனைவியும் அருகில் இருக்க பயப்படுகிறாள், பலசாலிகளான பிள்ளைகளும் பிணத்தை சுற்றி வந்து தண்ணீர் குடத்தை உடைத்து தன் கடமையை முடித்துக் கொண்டனர். இதுதான் உலகில் மனிதனின் நிலை, உயிருள்ள வரையில் அவனுக்குக் கிடைக்கின்ற அத்தனை மரியாதையும், அன்பும், பாசமும் உயிர்பிரிந்த பின்னர் கிடைப்பதில்லை என்பதை இந்தப் பாடல் மிக அருமையாக விளக்குகிறது.

தங்கி சௌகரியமாக வாழ்வதற்கு வீடு இருக்கிறது, அன்போடு உபசரித்து உணவு தருவதற்கு அன்னை இருக்கிறாள். இனிய இல்லறம் நடத்த மனைவி இருக்கிறாள், நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற வசதிகள் இருக்கின்றன, பிள்ளைகளும் இருக்கின்றனர். இது போதாது என்று செல்வ வசதிக்காக மாடு - கன்றுகள், நிலபுலன்கள் இருக்கின்றன. உற்றார் உறவினர். உடன் பிறந்தவர்கள் இருக் கின்றனர். இவைகளோடு உயிரே நீ நன்றாகத் தங்கி வாழ்வதற்கு இனிமையான மனித உடலானது இருக்கவும் நீ அதனை விட்டுப் பிரிந்து சென்ற அதிசயம் என்ன?

வீடு இருக்கத்தானிருக்க வேண்டும் மனையாளிருக்க பீடிருக்க 

ஊணிருக்கப் பிள்ளைகளும் தாமிருக்க

மாடிருக்கக் கன்று இருக்க வைத்த பொருளிருக்கக்

கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமே என்பது பட்டினத்தாரின் அருமையான பாடல்.

இவ்வாறு எத்தனை இருந்தாலும் போகும் நேரம் வந்துவிட்டால் உடலை விட்டு உயிரானது பிரிந்து சென்று விடுகிறது. அதுதான் மரணம். மரண பயம்:-

எதிர்காலத்தை நினைத்தால் எனக்கு பயமாக இருக்கு என்று சொல்லாதவர்கள் மிகவும் குறைவு. இப்படிச் சொல்பவர்கள் எதைக் குறித்து பயப்படுகிறார்கள் என்று பார்த்தால் அது அவரவர் விருப்பப்படி இருக்கும். சிவருக்கு மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டுமே அதற்குத் தேவையான பொருள் வசதி இல்லையே என்ற பயம். வேறு சிலருக்கு படித்தவர்களுக்கே நல்ல சம்பளத்தில் சரியான வேலை கிடைக்காத இந்தக் காலத்தில் அதிகம் படிப்பு ஏறாத மகனுடைய எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற பயம்.

கை கால் நன்றாகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும் போதே மருமகள் மதிக்க மாட்டேன் என்கிறாள். வயதான காலத்தில் கண்பார்வை போய்விட்டால் யார் பாதுகாப்பு தருவார்கள் என்ற பயம் பல மாமியார்களிடம் இருக்கிறது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு பயம் இருந்தாலும் மரண பயம் என்பது எல்லோரிடமும் நீக்கமற நிறைந்த வஸ்துவாக இருக்கிறது. இந்த பயத்திற்கு நடுங்காதவர்கள் யாருமே இல்லை.

எதை நினைச்சு பயப்படறீங்க என்று கேட்டால், சாவை நினைச்சாத்தான் பயமா இருக்கு என்று சிலர் பளிச்சென்று சொல் வார்கள். வேறு சிலர் அந்தப் பெயரைக்கூட உச்சரிக்க பயந்து கொண்டு சொல்லமாட்டார்கள்.

ஆனால் இதுலே பயப்பட என்ன இருக்கிறது? என்று கேட்டால், அட உங்களுக்கு சாகறத்துக்கு பயமே இல்லையா என்று ஆச்சரிய மாகக் கேட்பார்கள்.

மரணம் என்பது என்ன என்று யோசித்துப்பார்த்தால் அது நம்மை இந்த உலகத்தில் இருந்து வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் வாயில்தான். மரணம் என்பது நமது உடலில் குடிகொண்டு வாழ்ந்த ஆன்மா, இந்த உடலில் இருந்து கிளம்பி வேறு ஒரு உடலில் தன் பயணத்தைத் தொடரப்போகிறது அவ்வளவுதான். இதற்கு ஏன் பயப்படவேண்டும்?


நாம் இந்த உடலோடு இருக்கின்ற வரையில்தான் இன்பம், துன்பம், சூடு, குளிர்ச்சி, கவலை, பயம், இரவு, பகல் என்பது எல்லாம். இந்த உலகை விட்டு வேறு உலகம் போய்விட்டால் அவை எல்லாம் ஆத்மாவைப் பாதிக்காது.

அதுமட்டும் அல்ல, இந்த வாழ்க்கையில் பல நிறைவேறாத ஆசைகள் இருந்து அவற்றை எண்ணி ஏங்குபவர்கள் அடுத்த பிறவி எடுத்து தங்கள் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது.

ஒரே வாசலில் முட்டிக்கொண்டு அது எப்போது திறக்கும் என்று காத்துக் கிடப்பதைவிட திறந்திருக்கும் மற்றொரு வாசல் வழியாக வெளியேறி நல்ல காற்றை சுவாசிப்பதை விரும்புவதைப் போன்றதே இது. இந்த ஜென்மத்தில் ஒருவருக்கு இசையில் நிறைய ஆர்வம் இருக்கிறது. ஆனால் அதில் பெரிய சாதனை எதுவும் செய்வதற்கோ புகழ் பெறுவதற்கோ வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்டவர்கள் மறுஜென்மம் எடுத்து அடுத்த பிறவியில் சிறிய வயதிலேயே இசையில் புகழ் பெற்று விளங்குவார்கள். இதுதான் விட்ட குறை, தொட்ட குறை என்று பெரியவர்கள் சொல்லி வைத்தது.

மரணத்தை மறக்காதே:-

மரணம் என்றால் பலரும் நடுங்குகின்றனர். ஆனால், ஆசார்ய வினோபாஜியோ மறக்காதே மரணத்தை என்கிறார். அவர் சொல்கிறார் நாம் மரணத்தை எண்ணி எண்ணி பயப்படக்கூடாது. காரணம் நாம் இந்த ஜென்மத்தில் மட்டுமா மரணமடையப்போகிறோம். இதற்கு முன்னால் எடுத்த அத்தனை ஜென்மங்களிலும் அல்லவா இறந்திருக் கிறோம். இன்னும் எத்தனையோ ஜென்மங்கள் பிறந்தும் இறந்தும் செக்கு மாடு சுற்றிவருவதைப்போல இந்தப் பிறவி என்னும் சக்கரத்தில் மேலும், கீழும் சுற்றிவரப் போகிறோம்.

ஆகவே இந்த குறுகிய காலகட்டமான இப்பிறவியில் நாம் யார் மனத்தையும் புண்படுத்தாமல் நடந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். நமக்கு சாவு இருக்கிறது, அதைப்போலவே எல்லோருக்கும் சாவு நிச்சயம் என்பதை அடிக்கடி நாம் மறந்து விடுகிறோம். இதை மறக்காமல் இருந்தால் யார் எப்போது போவார்களோ என்ற பயத்தில் யாரையும் புண்படுத்த மாட்டோம்.

ஓம்..


பலபேர் தான தருமங்களைச் செய்கிறார்கள். அவைகள் நல்ல காரியங்கள்தான், இருந்தாலும் அதைவிட முக்கியமானது பிறருடைய மனதை புண்படுத்தாமல்இருப்பது. அதைத்தான் அகிம்சை என்கிறோம்.

மரணத்தை எப்போதும் நாம் மறக்காமல் இருப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. நாடகங்களுக்கு ஒத்திகை பார்ப்பதைப்போல மரணத் திற்கும் ஒத்திகை பார்க்க வேண்டும். இது சாத்தியமா? சிலர் கேட்கலாம். ஆனால் இறைவனே இந்த ஏற்பாட்டை செய்து வைத்திருக்கிறான் என்கிறார் திருவள்ளுவர்.நாம் தினம் தூங்குகிறோமே அது ஒருவகை மரணம்தான். இதை

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு

என்கிறார் அவர்.

மரணத்தின்போது பகவானை நினைக்க வேண்டும். அப்போது தான் நல்லகதி கிடைக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு நாளும் இறப்பதற்கு ஒத்திகை பார்க்கிறோம் அல்லவா? அதாவது தூக்கத்திற்குப் போகிறோம் அல்லவா அதற்கு முன்னால் இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் நாடக தினத்தன்று அதாவது மரண தினத்தன்று நமக்கு பகவான் நினைவு தானாகவே வந்துவிடும் என்கிறார் வினோபா.

இந்த மரண பயம் வராமல் காக்க எத்தனையோ மந்திரங்கள், ஸ்லோகங்கள், தேவார திருவாசகப் பாடல்கள், திவ்வியப் பிரபந்தப் பாசுரங்கள் நமது முன்னோர்களினால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றை மட்டும் இங்கே தருகிறேன். இது மரணத்தில் இருந்து நம்மை விடுவிக்கும் என்ற நம்பிக்கையோடு நம் முன்னோர்களினால் சொல்லப்பட்டு இன்றும் பலரால் ஜபம் செய்யப்படுகிறது. மகா மிருத்யுஞ்ஜய மந்திரம் என்ற பெயருடையது இது.

ஓம் திரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷ்ய மாம்ருதாத்

நறுமணம் நிறைந்தவரும், உயிர்கள் அனைத்தையும் நன்றாகப் பாதுகாப்பவரும், முக்கண்களை உடையவருமான சிவபெருமானை நாம் வணங்குகிறோம். எவ்வாறு காம்பில் இருந்து துன்பமேயில்லாமல் கனிந்த வெள்ளரிப்பழம் விடுபடுகிறதோ அதைப்போலவே அவர் நம்மை மரணபயத்திலிருந்து விடுபடச் செய்து அழிவற்ற முத்தியை அருள்வாராக என்பது இதன் பொருள்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘