🌏🌍🌎ஆயுள் விருத்தி தரும் ஸ்ரீவாஞ்சியம் பெருமான்!🌏🌍🌎

 

🌏🌍🌎ஆயுள் விருத்தி தரும் ஸ்ரீவாஞ்சியம் பெருமான்!🌏🌍🌎

திருமகளைத் தினையளவு காலமும் பிரியாதிருக்க விரும்பிய செய்து பேறு திருத்தலமே ஸ்ரீவாஞ்சியம் திருத்தலமாகும். திருமாலைப் பிரியாதிருக்க திருமகள் வணங்கிய தலம் ஸ்ரீவாஞ்சியம் என்றும் பொருள் கொள்ளப்படுகின்றது.

தான் நடத்திய யாகத்திற்கு தன் மருகன் ஈசனை தட்சன் அழைக்கவில்லை. அவிர்பாகத்தையும் அளிக்கவில்லை. நியாயத்தை எடுத்துரைக்க அழையா விருந்தாளியாகச் சென்ற தன் மகள் தாட்சாயணியையும் அவமதித்தான் தட்சன். கோபம் கொண்ட ஈசன், தன்னை மதியாது நடக்கும் யாகத்தை அழிக்கத் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார்.

வேள்வியில் புகுந்து அனைவரையும் வதம் செய்தார் வீரபத்திரர். தப்பித்த சூரிய பகவான் தன் ஒளி குறைந்து, பலமிழந்துவாடினார். தன் தவறை உணர்ந்து, இழந்த ஒளியை மீண்டும் பெற பிரம்மதேவனின் உதவியை நாடினார் சூரிய பகவான். நான்முகனின் ஆலோசனைப்படி, ஸ்ரீயை வாஞ்சித்து (மஹா லக்ஷ்மியை அடைய விரும்பி) திருமால் தவமிருந்த ஸ்ரீவாஞ் சியம் திருத்தலம் சென்று அங்குள்ள குப்த கங்கை என்னும் புனித தீர்த்தத்தில் நீராடி ஈசனைக் குறித்து கடும் தவம்செய்தார் சூரிய பகவான். இவரது தவத்தில் மகிழ்ந்த ஈசன், சூரியனுக்குத் திருக்காட்சி தந்து இழந்த ஒளியை மீண்டும் வழங்கி திருவருள் புரிந்தார்.

கங்கையின் பாவம் தீர்த்த குப்த கங்கை! கங்கையைத் தன் பிறையில் சூடிய கங்காதரனிடம்

சென்ற கங்காதேவி அவரது திருவடிகளில் பணிந்து, "சுவாமி! இப்பூவுலக மக்கள் அனைவரும் என்னிடம் (கங்கையில்) நீராடி தங்களது பாவங்களைப் போக்குகின்றனர். இதனால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதனைப் போக்க தாங்கள் தான் எனக்கு ஒரு வழி கூறியருள வேண்டும்" என்று வேண்டினார்.

கங்கையின் வேண்டுதலை ஏற்ற ஈசன், "ஸ்ரீவாஞ்சியம் திருத்தலம் சென்று அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடி எம்மை வணங்க உமது மனக்குறை அகலும்” என திருவாய் மலர்ந்தார்.

ஈசன் வாக்கினை ஏற்று மகிழ்ந்த கங்காதேவி அவ்வாறே செய்து தன் பாவம் நீங்கப்பெற்றதாக இத்தலத்தின் வரலாறு தெரிவிக்கின்றது. இதனால் இந்த தீர்த்த்திற்கு "குப்த கங்கை” என்ற திருநாமம் ஏற்பட்டது. கங்காதேவி தன்னிடமுள்ள 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு இதர 999 அம்சங்களுடன் இத்தலத்தில் உள்ள குப்த கங்கையில் உறைந்தி ருப்பதாக ஐதீகம். இதனால் இத்தலம் காசியிலும் வீசம் வாய்ந்ததாகப் போற்றி வணங்கப்படுகின்றது.

தற்போது இந்த தீர்த்தம் முனி தீர்த்தம் என்று


அழைக்கப்படுகின்றது. மாசி மகத்தன்று அன்பர்கள் பலர் இந்த தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீவாஞ்சிநாதப் பெருமானை வழிபட்டு மகிழ்கின்றனர்.

ஸ்ரீ மஹாவிஷ்ணுவும் மஹாலக்ஷ்மியும் எப்போதும் சேர்ந்திருக்க இத்தல ஈசனை வழிபட்டபோது அவர்கள் நீராடுவதற்காக கங்கை இத்தலத்தில், குப்த கங்கையாகப் பொங்கி எழுந்தாள் என்பதும் ஐதீகமாக உள்ளது. திருமாலும் திருமகளும் இந்த தீர்த்தத்தில் நீராடியதால் கங்கை இத்தலத்தில் மிகவும் பவித்ரமாக விளங்குவதாக இத்தலத்தின் வரலாறு தெரிவிக்கின்றது.

எமதர்மராஜனின் வாட்டம் போக்கிய வாஞ்சிநாதர்!

உயிர்களைப் பறிக்கும் கொடூர செயல் புரியும் எமனுக்குத் தன் தொழிலின் நிலைகண்டு தீர்க்க முடியாத மனக்குறை ஏற்பட்டது. உலக மாந்தர்கள் தம்மைக் கண்டு அஞ்சும்படியான இந்நிலையை ஈசன் ஏன் தனக்கு அளித்தார் என்று தன்னை நினைத்து வருந்தினார் எமதர்மர்.

ஓம்..

தன் மனக்குறை தீர கமலாலயத் திருக்குளத்தில் நீராடி ஆரூர் தியாகேசனை உள்ளம் உருக வணங்கினார். அப்போது, வான் ஒலியாக வந்த அசரீரி, 'ஸ்ரீவாஞ்சியம் சென்று வாஞ் சிநாதப் பெருமானை வழிபட மனக்குறை அகலும்' என எமதர்மனுக்குக் கூறியது.

ஸ்ரீவாஞ்சியம் வந்த எமதர்மர், வாஞ்சிநாதப் பெருமானைக் குறித்து நீண்ட நாட்கள் கடுந்தவம் மேற்கொண்டார். இவரது தவத்தில் மகிழ்ந்த ஈசன், மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் எமதர்மருக்குத் திருக்காட்சி தந்து "வேண்டும் வரம் கேள்!” என்று திருவாய் மலர்ந்தார்.

உலக மாந்தர்களின் உயிர் போக்கும் தொழிலால் தனக்கு மன அமைதி ஏற்படவில்லை என்றும் உலக மக்கள் அனைவரும் தன்னை நிந்தனை செய்வதால் நிம்மதி இழந்து தவிப்பதாக ஈசனிடம் தெரிவித்தார் எமதர்மர்.

அவரது மன நிலையை உணர்ந்த ஈசன், “கவலை வேண்டாம்! இத்தலத்தில் வந்து உம்மை வணங்குபவர்களுக்கு இனி அகால மரணம் நேராது. இதனால் உமக்கு வீண் பழியும் ஏற்படாது. மேலும் நீ தவமிருந்த இத்தலத்திற்குப் பல பிறவிகளில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வரக்கூடிய பேறினை யாம் அளிக்கிறோம். மேலும் இத்தலத்தில் வழிபாடுகள் செய்யும் அன்பர்களுக்கு வருங்காலம் நலமுடன் அமைவதோடு பிறவிப்பிணியும் அகல அருள்பாலிக்கின் றேன். இத்தலத்தின் க்ஷேத்திர பாலகராக நீர் அருள்வதோடு, இத்தலத்தில் முதலில் உமை தரிசனம் செய்த பின்னரே எம்மைத் தரிசிக்கவும் அருள் செய்கிறேன்" என்று திருவாய் மலர்ந்தார். அதன்படி இத்தலத்தில் முதல் வழிபாடு க்ஷேத்திர பாலகரான எமதர்மராஜனுக்கே நடைபெறுகின்றது. எமதர்மராஜருடன் சித்ரகுப்தரும் அமர்ந்த திருக்கோலத்தில் தனிச்சந்நிதியில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கின்றனர். எமதர்மராஜர் யோக நிலையில் அருள்பாலிப்பதால் இவரைத் தரிசிப்பவர்களுக்கு மரணபயம் நீங்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.

அருளாளர்கள் போற்றிய வாஞ்சிநாதர்!

சமயக்குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்ற ஒரு சில சிவாலயங்களில் சிறப்பு பெற்று விளங்குவது ஸ்ரீவாஞ்சியம் தலமாகும். ஞானசம்பந்தப் பெருமான் தான் அருளிய

திருக்கடைக்காப்பில், 'வன்னி கொன்றை மதமத்தம்

எருக்கொடு கூவிளம்

பொன்னி என்ற சடையில்

பொலிவித்த புராணனார்

தென்ன என்று வரிவண்டிசை செய்

திருவாஞ்சியம்

என்னையாளுடை யானிடமாக

உகந்ததே

என்று வாஞ்சிநாதப் பெருமானைப் போற்றியுள்ளார். அப்பர் பெருமான் எமதர்மராஜர் வணங்கிய பெருமான்

இவர் என்பதை,

"அருக்கன் அங்கி யமனொடு

தேவர்கள்

திருத்துஞ் சேவடியான் திகழும் நகர்

ஒருத்தி பாகமுகந்தவன் வாஞ்சியம்

அருத்தியால் அடைவார்க்கு இல்லை அல்லலே."

என்று நெஞ்சம் நெகிழ்ந்துள்ளார். சுந்தரர் பெருமான் தமது ஏழாம் திருமுறையில்,

"பொருவனார் புரிநூலர்

புணர்முலை உமையவளோடு

மருவனார் மருவார்பால் வருவதும்

இல்லை நம்மடிகள்

திருவனார் பணிந்தேத்தும் திகழ் திருவாஞ்சியத்துறையும்

ஒருவனாரடியாரை ஊழ்வினை நலியவொட்டாரே.'

என்று வாஞ்சிநாதப் பெருமானைப் பாடியுள்ளார்.

"திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்" என்று ஸ்ரீவாஞ்சிநாதப் பெருமானையும் மருவார்குழலி அம்மையையும் (மங்களாம்பிகை) தமது கீர்த்தித் திருவகலில் போற்றுகின்றார் மாணிக்கவாசகப் பெருமான்.

திருக்கோவையாரும், அருணகிரிநாதப்பெருமானின் திருப்புகழும், களந்தைக் குமரன் இயற்றிய தலபுராணமும், சிவராமசுந்தரம் பிள்ளையின் மங்களாம்பிகை பிள்ளைத்தமிழும், இராமலிங்க சுவாமிகள் பாடலும், முத்துசாமி தீக்ஷிதர் கீர்த்தனையும், குருஞான சம்பந்தரின் சிவபோக சாரமும் ஸ்ரீவாஞ்சியம் தலத்தைப் போற்றி இயற்றிய பிற நூல்கள் ஆகும். திருத்தல அமைப்பு மற்றும் வழிபடும் முறை!

ஸ்ரீவாஞ்சியம் திருத்தலத்திற்கு நாம் தரிசிக்கச் சென்றதும் கிழக்கு நோக்கிய அழகிய ஐந்து நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கின்றது. இராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும் வடபுறத்தில் குப்த கங்கை என்று வணங்கப்படும் இக்கோயிலின் புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடியபின் குளத்தின் தென்கரையில் அருள்பாலிக்கும் கங்கை விநாயகரை வழிபட வேண்டும்.

பின்னர், இராஜகோபுரத்தின் உள்ளே தென்கிழக்கு மூலையில் தெற்கு நோக்கி அருளும் இத்தலத்தின் “க்ஷேத்திர பாலகரான" எமதர்மராஜரை வழிபடவேண்டும். இத்தலத்தில் முதல் வழிபாட்டுக்குரியவர் இவரே ஆவார்.

அடுத்து மூன்று நிலைகளுடைய இரண்டாம் கோபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅபயங்கர விக்னேஸ்வரப்பெருமானையும் பாலமுருகனையும் வழிபட்ட பின்னர் திருக்கோயிலுக்குள் செல்லவேண்டும்.

திருக்கோயிலின் உள்ளே சென்றதும் ஸ்ரீவாஞ்சிநாதப் பெருமானை வழிபட்ட பின்னர் பரிவார தெய்வங்களையும் அருள்மிகு ஸ்ரீமங்களாம்பிகையையும் வழிபட வேண்டும்.

மங்களாம்பிகை இத்தலத்தில் தனிச்சந்நிதியில் தெற்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். இந்த அம்பிகைஅழகு தமிழில் மருவார்குழலி என்று வணங்கப்படுகின்றார். இந்த அன்னையை வணங்கும் அன்பர்களுக்கு சகல பாக்யங்களையும் தருவதால் பாக்யாப்தநாயகி என்றும் மங்களங்கள் அருள்வதால் மங்களாம்பிகை எனவும் தானே விரும்பி இத்திருத்தலத்தில் விச்வேச்வரப் பெருமானை மணந்ததால் வாழ வந்த நாயகி என்றும் பல திருநாமங்களில் வணங்கப்படுகின்றார் அம்பிகை. காலையில் அம்பிகைக்கு துர்க்கா தேவியாகவும் மதியத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியாகவும் மாலையில் அம்பிகைக்கு வெண் பட்டு உடுத்தி சரஸ்வதியின் அம்சமாகவும் வழிபடுகின்றனர். இந்த மூன்று திருக்கோலங்களில் அம்பிகையை வழிபட தைரியமும், செல்வமும், கல்வியும், மங்காப் புகழும் ஏற்படும் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

அடுத்து ஆடிப்பூர அம்மனையும், அலங்கார மண்டபத்தையும் கொடி மரத்தையும் நந்தியையும் பலிபீடத்தையும் கண்குளிரக்கண்டு நட்டுவன் பிள்ளையாரை வணங்கி விட்டு மூன்றாம் கோபுர வாயிலைக் கடந்து செல்லும்போது கோபுர வாயிலின் குடைவரையில் எழுந்தருளியுள்ள அதிகார நந்திதேவரையும் வணங்கியபின் உள்பிராகாரத்தை அடையலாம்.

இங்கு வெண்ணெய் விநாயகர், அறுபத்து மூவர். தனிச்சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், கன்னி விநாயகர், சந்திர மௌலீஸ்வரர், பைரவர், வள்ளி, தெய்வானையுடன் திருக்காட்சி தரும் முருகப்பெருமான், கிழக்கு நோக்கிய கோயிலில் மகிஷாசுரன் மீது ஒரு காலை ஊன்றி ஆயுதம் தாங்கிய அஷ்ட புஜங்களுடன் அருள்பாலிக்கும் அஷ்டபுஜதுர்க்கை, ஈசான்ய மூலையில் எழுந்தருளியிருக்கும் நடராஜர், கிழக்கிலிருக்கும் யோக பைரவர், சூரியன், ராகு, கேது ஆகியோரை வணங்கி அருள்பெறலாம். ராகு, கேது ஆகிய இரு கிரகங்களும் தனித்தனி மூர்த்தியாக இணைந்து அருள்பாலிப்பதால் ராகு மற்றும் கேது கிரகங்களுக்குரிய பரிகார பூஜைகளை இத்தலத்தில் செய்யலாம். இந்த அமைப்பு "சண்ட ராகுஞ்" என்று வழங்கப்படுகின்றது.

ஓம்..


ஸ்ரீவாஞ்சிநாதப் பெருமான்.

கருவறையில் அருள்பாலிக்கும் சுயம்பு மூர்த்தியான ஸ்ரீவாஞ்சிநாதப் பெருமானின் லிங்கத் திருமேனி மிகவும் பிரம்மாண்டத் திருமேனியாக அமைந்துள்ளது. இம்மையில் மட்டுமல்லாது மறுமையிலும் இன்பங்களை அளிக்கவல்ல ஈசன் இவர் என்று சாம்போப புராணம் போற்றுகின்றது.

ஈசனைத் தரிசிக்கும்போதே நம் மனம் அமைதியடைந்து பிறவிப் பிணி நீங்கியதைப் போன்ற அற்புத உணர்வு அன்பர்களுக்கு ஏற்படுவது ஆனந்த அனுபவம். பல பிறவிகளில் புண்ணியம் செய்து சேர்த்து வைத்த நற்பலன்களால் மட்டுமே ஒருவருக்கு ஸ்ரீவாஞ்சிநாதப் பெருமானை வழிபடக்கூடிய பேறு ஏற்படும் என்பது இத்தலத்தின் வரலாறு கூறும் அரிய தகவல் ஆகும்.

சந்தன மரங்கள் அடர்ந்த பகுதியாக இத்தலம் இருந்ததால் கந்தாரண்யம் என வழங்கப்பட்டுள்ளது. இந்த கந்தாரண்யத்தில் உலகின் நன்மைக்காக ஏழு பாதாள உலகிலிருந்து தானே தோன்றியதாக (சுயம்புவாக) அருளும் இச்சிவலிங்கத் திருமேனி பிரளய காலத்தில் தேயு வடிவமாகவும் கிருதயுகத்தில் இரத்தினமயமாகவும் திரேதாயுகத்தில் பொன் மயமாகவும் துவாபரயுகத்தில் வெள்ளிமயமாகவும் கலியுகத்தில் கல்லிலான திருமேனியாகவும் திருக்காட்சி தருவதாக சாம்போப புராணம் திருவாஞ்சிய லிங்க மகிமையில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீவாஞ்சியம், வாஞ்சியம்பதி, சந்தனவனம், ஜாந்தாரண்யம், பூகயிலாயம், திருவறையூர், திருவிழைஆர், இராஜகம்பீரச் சதுர்வேதி மங்கலம் என்று பல திருநாமங்களோடு போற்றி வணங்கப்படுகின்றது இத்தலம்.

புராதனக் கல்வெட்டுகள்!

ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் தொல்லியல் துறையினரால் 35 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.
இத்தலத்தில் காணப்படும் கல்வெட்டுகளில் முதலாம் குலோத்துங்கனது கல்வெட்டுகளே காலத்தால் முந்தியவை ஆகும். இதனை ஆதாரமாகக் கொண்டு இத்தலம் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கற்றளியாகத் திருப்பணி செய்யப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் உள்ள முதலாம் குலோத்துங்க சோழனது கல்வெட்டு, இக்கோயிலில் திருவரங்கமுடையான் என்பவர் திருப்பள்ளியறை அம்மனை எழுந்தருளிச் செய்த செய்தியைத் தெரிவிக்கின்றது. மேலும் இந்த அம்மனுக்கு ஸ்ரீவாஞ்சியம் பிரமதேயத்து சபையினர் இறையிலியாக காலரை மா நிலத்தினை வழங்கினர் என்ற செய்தியையும் மேற்படிக் கல்வெட்டு தெரிவிக்கின்றது. பவித்திர மாணிக்கவதி, இராசேந்திர சோழ வாய்க்கால், செம்பியன் மாதேவிப் பேராறு, குலோத்துங்க சோழப் பேராறு ஆகிய ஆறுகளின் அருகில் இந்த நிலம் இருந்ததையும் மேற்படிக் கல்வெட்டின் மூலம் அறியமுடிகின்றது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இப்பகுதியில் நீர்ப்பாசனத் திட்டங்கள் மிகச்சிறப்பான வகையில் அமைந்திருந்ததை இக்கல்வெட்டுகள் தெளிவாக்குகின்றன.

இரண்டாம் அல்லது மூன்றாம் இராஜராஜ சோழனது ஆட்சிக் காலத்தில் திருக்காமக் கோட்டமுடைய பெரியநாச்சியார் கோயில் ஏற்படுத்தப்பட்டதையும் அம்மனுக்கு உற்சவர் திருமேனி செய்து அளிக்கப்பட்டதையும் கல்வெட்டு தெரிவிக்கின்றது.

சாகானை அவிமுக்தீஸ்வரமுடையான் பட்டரான வெள்ளைப்பிள்ளை ஆண்டார் என்பவர் ஸ்ரீதட்சிணா மூர்த்தியை எழுந்தருளச் செய்ததும் இப்பெருமானுக்கு அமுதுபடிக்காக இவ்வூரின் பிடாகையான ஆவூரில் நிலம் வழங்கப்பட்டதையும் ஒரு கல்வெட்டு தெரிவிக்கின்றது.

ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு இராஜகம்பீரச் சதுர்வேதி மங்கலம் என்ற பெயர் வழங்கியிருப்பதால் இரண்டாம் இராஜராஜன் காலத்தில் இச்சிவாலயம் முழுமையாகத்திருப்பணி செய்யப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆசிரியர் திரு எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இத்தலத்தில் அருளும் சுப்ரமணியப்பெருமானை புனவாயிலுடையார் சீராளதேவர் என்பவர் எழுந்தருளச்செய்து இவரது பூஜைக்காக நிலம் வாங்கி அளித்ததையும் ஒரு கல்வெட்டு தெரிவிக்கின்றது. மற்றொரு கல்வெட்டு திருவாஞ் சியம் கோயிலுக்குப் பெறப்பட்ட நிலங்கள் சிலவற்றைக் குறிப்பிடுவதோடு ஒரு நிலத்திற்கு குதிரை வட்டம் என்றும், மற்றொரு நிலத்திற்கு உய்யக்கொண்டான் வாய்க்கால் என்றும் பெயர் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் 13, 14 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டுகள் பல உள்ளன. இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனுடைய கல்வெட்டு திருவாஞ் சியமுடைய நாயனார்க்கு, ஒரு மா நிலம் திருநாமத்துக்காணியாக வழங்கப்பட்டதைத் தெரிவிக்கின்றது. இதே கல்வெட்டு, திருவாஞ்சியத்தில் இராஜகம்பீரச் சதுர்வேதி மங்கலம் என்ற அக்ரஹாரம் இருந்ததையும், ஸ்ரீவாஞ்சியம் ஈசன் திருப்பெயரால் திருவாஞ்சிய தேவன் வாய்க்கால் இருந்ததையும் தெரியப்படுத்துகின்றது.

நான்காம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டில் (கி.பி.1325) சிறுமன்றூர் கிழான் திருவாஞ்சிமுடையான் என்பவர், ஸ்ரீவாஞ்சிநாதர் கோயிலுக்கு ஏழு மா வரை நிலத்தினை விற்று விலைப் பிரமாணம் செய்து கொடுத்த செய்தி காணப்படுகின்றது.

சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெயர் தாங்கிய மற்றொரு கல்வெட்டில் இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்த காரம்புச் செட்டி ஸ்ரீதரபட்டன் என்பவர் ஆணங்கி சாலி என்ற தனது தாயின் ஒரு வேலி நிலத்தை திருவாஞ் சியமுடையார் கோயிலுக்கு விற்று விலைப்பிரமாணம் செய்து கொடுத்தது பற்றி கூறப்பட்டுள்ளது. இந்தப் பெண்மணி திருவாஞ்சியமாகிய இராஜகம்பீரச் சதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்த மணவாள பட்டனுடைய மனைவி என்பதும் மேற்படி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓம்..

சைவ, வைணவ வேறுபாடின்றி திருக்கோயில்களுக்குப் பல திருப்பணிகள் செய்த விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் ஸ்ரீவாஞ்சியம் கோயிலுக்கும் திருப்பணி செய்துள்ளதை நடராஜர் சந்நிதியில் கிழக்குப்புற அதிஷ்டானத்தில் உள்ள சிதைந்த ஒரு கல்வெட்டிலிருந்து அறிய முடிகின்றது.

தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் இரகுநாத நாயக்கரின் பிரதிநிதியாக விளங்கிய மாதைய நாயக்க மல்லப்ப நாயக்கர் என்பவர் மன்னனுக்காக வேண்டிக் கொண்டு, ஸ்ரீவாஞ்சியம் தேவரடியார்களுக்குத் திருநாள் வரியினை சர்வமானியமாக்கினார் என்ற செய்தியை ஒரு கல்வெட்டு தெரிவிக்கின்றது.

சிதம்பரம் பிட்சா மடத்தைச் சார்ந்த அகோர சிவாச்சாரியாரின் மாணவரான அச்சுதமங்கலத்தைச் சேர்ந்த பெருமானயினார் பண்டாரம் என்பவர், குந்துவாச்சேரியில் ஒரு வேலி நிலத்தினை மடப் புறமாக வழங்கிய செய்தி கி.பி. 1579 ஆம் ஆண்டினைச் சார்ந்த ஒரு கல்வெட்டிலிருந்து அறியமுடிகின்றது. இக்கல்வெட்டு தனிக்கல்வெட்டாக ஸ்ரீவாஞ் சியம் வயல்வெளியில் நடப்பட்டுள்ளது.

ஸ்ரீவாஞ்சியம் கோயிலின் இரண்டாம் திருச்சுற்றின் தென்புறச் சுவரில் உள்ள ஒரு கல்வெட்டு, இராகவன் பிள்ளை என்பவரின் அதிகாரியான தாமல் அப்பநாயன் என்பவர் மண்டபம் கட்டிய செய்தியைத் தெரிவிக்கின்றது.

ஸ்ரீவாஞ்சியம் திருத்தலப் பெருமைகள்!

ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் ஸ்ரீவாஞ்சிநாதப்பெருமானையும் ஸ்ரீமங்களாம்பிகையையும் வணங்கி ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்கின்றவர்கள் தங்களது வாழ்நாளில் எல்லா வளமும் பெறுவதோடு இவர்களது பூர்வஜென்ம பாவங்களும் உடனடியாக நீங்கிவிடும் என்பது நிதர்சனமாகும்.

பால், தயிர், நெய், தேன் மற்றும் பஞ்சாமிர்தத்தோடு அபிஷேகம் செய்து வாஞ்சிநாதரையும் மங்களாம்பிகையையும் வழிபட அவர்கள் அரசனுக்கு நிகரான புகழைப் பெறுவதோடு இப்பூவுலகில் என்றும் மங்காப் புகழ் பெற்று மேன்மை பெறுவார்கள்.







இத்திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்பவர்கள் மற்றும் குப்த கங்கை தீர்த்தத்தை தூர்வாரி சுத்தம் செய்பவர்கள் கல்பகோடி காலம் மனித உருவத்தோடு இத்தல இறைவன் முன் வசிக்கும் பேறு பெறுவார்கள். இத்தலம் நான்கு யுகங்களிலும் சிறப்பு பெற்று விளங்கியிருந்ததாக புராணங்கள் போற்றுகின்றன. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே சிறப்புப் பெற்ற திருத்தலமாக ஸ்ரீவாஞ்சியம் விளங் குகின்றது. நான்முகன், திருமால், மஹாலக்ஷ்மி மற்றும் தேவர்கள் பலர் வழிபட்டு பேறுபெற்ற இத்தலம் பிரளய காலத்திலும் அழிவற்று விளங்கியது என்பதோடு காசிக்கு நிகரான புண்ணியம் அளிக்கும் தலமாகப் போற்றப்படு கின்றது.

இத்தலத்திற்கு வந்து வாஞ்சிநாதர், மங்களாம்பிகை மற்றும் எமதர்மராஜரை வழிபட அவர்களுக்கு மரண வேதனை மற்றும் எமபயம் எப்போதும் ஏற்படாது. கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் குப்த கங்கையில் நீராடியவர்களின் பஞ்சமாபாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

ஸ்ரீவாஞ்சியம் தல மகிமைகளைப் படிப்போரும் காதால் கேட்போரும் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் துய்த்து எளிதில் முக்தி அடைவார்கள் என்று ஸ்கந்த புராணம் சனத்குமார ஸம்ஹிதை 58 ஆம் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது. பிரம்மாண்ட புராணமும் இத்தலப் பெருமைகளைப் போற்றுகின்றது. மஹா பிரளயத்திலும் அழியாத தலம் ஸ்ரீவாஞ்சியம் என ஈசனே அம்பிகையிடம் கூறியதால், அம்பிகை இத்தலத்தில் ஞானசக்தியாக வாழவந்த நாயகியாய் அருள் பாலிக்கின்றாள்.

ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் பைரவர் தனது திருக்கோலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் யோக பைரவராக அருள்பாலிக்கின்றார். பைரவர் இத்தலத்தில் பொன்வண்டின் உருவெடுத்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து வழிபட்டுள்ளார். இதனால் இத்தலத்தில் உள்ளவர்களுக்கு பைரவ உபாதையே கிடையாது என்று மகரிஷிகள் அருளியுள்ளனர். இந்த யோக பைரவருக்குஅபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் விலகுவதோடு மனநிம்மதி கிடைக்கும் என்பது உறுதி.

மார்கழி மாத திருவாதிரையில் குப்த கங்கையில் நீராடி ஸ்ரீநடராஜப் பெருமானை வழிபட சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

மாசி மாதம் குடந்தைத் தலத்தில் மகாமக உற்சவம் நடைபெறுவது போன்று ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தின்போது குப்த கங்கையில் நீராடி ஈசனை தரிசிக்க நமது நியாயமான பிரார்த்தனைகள் நிறைவேறி சுகமான வாழ்வு அமையும் என்பதை அன்பர்கள் பக்தியோடு தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீவாஞ்சியம் தல மகிஷாசுரமர்த்தினியை (துர்க்கை) 108 தாமரை மலர்களால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட திருஷ்டி தோஷம், பில்லி, சூனியம், பய உணர்வு மற்றும் திருமணத் தடைகள் விலகும். குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதியர் சிவப்பு அரளி மலரால் அர்ச்சனை செய்து வழிபட மகப்பேறு வாய்க்கும். அமாவாசை நாட்களில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம்.

காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய இராஜராஜ சோழ மன்னனின் 11, 13, 14, மற்றும் 18 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளில் இத்தலம் பற்றி உள்ளதாக தலவரலாற்று புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. மிகச்சிறந்த பரிகாரத்தலம்!

பிறவியில் மரணத்தைக் கண்டு அஞ்சாத மனிதர் எவரும் இல்லை. உயிரினும் மேலானது உலகில் வேறு எதுவும் இல்லை. இதனால் மனிதப்பிறவி எடுத்த ஒவ்வொருவருக்கும் அதிமுக்கியமானது ஆயுட் காலம். இந்த ஆயுள் ஸ்தானத்திற்கு தோஷம் ஏதும் இருப்பின் அதனை நீக்கி ஆயுள் வளர்க்கும் திருத்தலமாக ஸ்ரீவாஞ்சியம் விளங்குகின்றது.

நோய்களையும் அது தொடர்பான உபாதைகளையும் தீர்க்கக்கூடிய அதர்வண வேதத்தில் உள்ள பல மந்திரங்கள் ஸ்ரீவாஞ்சிநாத ஸ்வாமியின் பீடத்திற்கு அடியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முன்னரே நமது மகரிஷிகளால் சக்தி வாய்ந்த யந்திரங்கள் மூலம் ப்ராண ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனாலேயே இத்தலம் பல கொடிய நோய்களையும் நொடியில் தீர்த்து வைக்கும் சக்தி வாய்ந்த பரிகாரத் தலமாகத் திகழ்கின்றது.

உடல்நிலை சரியில்லாத அன்பர்கள் அல்லது அவர்களால் வரமுடியாத நிலையில் அவர்களது உறவினர்கள் இத்தலத்திற்குச் சென்று ஸ்ரீ எமதர்மராஜரையும் ஸ்ரீவாஞ்சிநாதப் பெருமானையும் ஸ்ரீமங்களாம்பிகையையும் அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபட அந்த அன்பர்களின் உடல்நிலையில் அதிசயத்தக்க வகையில் முன்னேற்றம் ஏற்படுவது இத்தலத்தில் கண்கூடாக நடைபெறும் நிகழ்வாகும். உடல்நிலை சரியில்லாத அன்பர்களும் அவர்களது உறவினர்களும் ஸ்ரீவாஞ்சியம் தலமிருக்கும் திசையை நோக்கி மானசீகமாக தலத்திற்கு வருவதாகப் பிரார்த்தித்துக் கொண்டாலே வாஞ்சிநாதப் பெருமானின் திருவருள் அந்த நொடியிலேயே நமக்குக் கிடைத்து விடும்.

உடல்நலம் குன்றியவர்கள் உடனடியாக இத்தலத்திற்குச் செல்ல இயலாத நிலையில் இத்தலத்தின் அர்ச்சகரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அர்ச்சனைக்கு மட்டும் பணம் அனுப்பிவைக்க, உடல்நலம் குன்றியவருக்காக அவரே அர்ச்சனை செய்து பிரார்த்தித்துக் கொண்டு விபூதி பிரசாதம் அனுப்பி வைப்பார். மந்திரமும் தந்திரமும் மருந்துமாகிய அந்த விபூதி பிரசாதத்தை உடல்நலம் சரியில்லா தவர்கள பக்தியுடன் தங்கள் நெற்றியில் அணிந்து வர உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

புதுமணத் தம்பதிகள் ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு வந்து நீராடி ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை ஸ்ரீவாஞ்சி நாதப்பெருமானை வழிபட அவர்களது இல்லறம் நல்லறமாக அமைந்து நன்மக்கட்பேறினை அடைவர் என்பது ஆன்றோர் வாக்கு.

ஓம்..

ஸ்ரீவாஞ்சிநாதப் பெருமானின் திருப்பாதங்களை வாஞ் சையோடு பற்றிக்கொள்ளும் அடியவர்களை என்றுமே கைவிட்டதில்லை அந்த அம்பிகைபாகன்!

ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை ஸ்ரீவாஞ் சிநாத சுவாமி திருத்தலம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது.

கும்பகோணத்திலிருந்து 31 கி.மீ. தொலைவில் உள்ள நன்னிலம் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பேருந்து மார்க்கத்தில் அச்சுதமங்கலம் பேருந்து நிறுத்தத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் ஸ்ரீவாஞ்சியம் தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்து மார்க்கம் வழியாகவும் ஸ்ரீவாஞ்சியம் திருத்தலம் செல்லலாம். காலை 5.30 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும்

மாலை 3.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும்

திருக்கோயில் நடை திறந்திருக்கும்.

இத்தலத்தின் தலைமை அர்ச்சகரான சர்வசாதகம் ஸ்ரீ. G. ராஜராஜ குருக்கள் அவர்களை 9442403926 மற்றும் 9788759330 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘