🌏🌎🌍சித்தர் பிரபஞ்ச ரகசியம்🌏🌎🌍
🌏🌎🌍சித்தர் பிரபஞ்ச ரகசியம்🌏🌎🌍
சித்தர் கண்ட பேருண்மைக்கான வெளிச்சத்தின்முன் இன்றைய அதிநவீன விஞ்ஞானம் மெய்யாகவே மருண்டு விழிக்கிறது.
'சந்ததமும் இளமையோடு இருக்கலாம் மற்றொரு சரீரத்திலும் புகலாம்
சலம் மேல் நடக்கலாம்
கனல் மேல் இருக்கலாம்
தன்னிகரில்லா சித்திபெறலாம்'
என சித்தர் அறிந்த ரகஸ்யத்தினை நம்மில் யார் 2 ரியதாக்கிக் கொண்டு உள்ளோம்?
மனஇருளைப் போக்கி ஞான ஒளி பரப்பி தம்மைஉயர்த்திக்கொண்டதோடு நில்லாது உலக மக்களையும் உயர்த்துவதற்கும் தவம் புரிந்த எண்ணற்ற சித்தர்களின் அற்புத சித்திகள் எனும் புதையல் ரகஸ்யத்தை மானுடர் ஒவ்வொருவரும் திறந்து பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.
சித்தன் என்பவன் பரத்தோடு சேர்ந்து பரப்பிரும்ம மாய் ஆகின்றான். சிவபெருமான் உட்பட அனைத்து தேவகணங்களுமே மனித நிலையிலிருந்து உயர்ந்த சித்தர்கள்தான் என்பதை சித்தர்களின் வாய்மொழிக் கூற்றிலிருந்து அறியும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.
அழிந்து போகக்கூடிய உடலை அழியாத கல்ப தேகமாக்கிக் காலம் கடந்து வாழ்ந்த சித்தர்களின் அருட்கொடையாக நமக்கு எண்ணற்ற வைத்திய நூல்களும் வாழ்க்கை நெறியும் கிடைத்திருக்கின்றன.
அறிவைப் பகிர்ந்து கொள்வது போல ஆனந்தமான ஒன்று வேறில்லை. எல்லாம் அறிந்தவனும் ஓர் அறியாதவன் துணையில் ஆனந்தம் கொள்கிறான். அறிந்ததை சொல்வதற்கும் ஓர் ஆள் வேண்டாமா?
அறிவாகட்டும், அனுபவமாகட்டும், அவை உடையவனோடு நின்று போயிருந்தால் இந்நேரம் உலகம்இருண்டுபோயிருக்கும்.
அறிவும் அனுபவமும் அறுந்து போகாத சங்கிலிகளின் தொடர், அதனால் அது எல்லாக் காலங்களிலும் ஒளி ஏந்தி வந்திருக்கிறது.
சித்தர்களின் அற்புத சித்திகளும் மூலிகை ரகஸ்யங் களும் சித்தர்களோடு நின்று போகவில்லை. சீடர்களுக்கும் பகிர்ந்தே அளிக்கப்பட்டு வந்திருக்கிறது.
விழியால் புனல் சிந்தி விம்மியழுது சிந்தையை, சிவனுக்கு பள்ளியறையாக்கி அதன் போகத்தில் திளைத்தவர்கள் சித்தர்கள்.
ஓம்.
வேரற்றவைகள் மீதான வெற்றுப் பற்றை வெறுத்த வர்கள் சித்தர்கள். வெறுப்பிலிருந்து விருப்பு. நாகத்தின் நஞ்சிலிருந்து உயிர் காக்கும் மருந்து உருவாதல் போல துறவிலிருந்து பற்றுதலைத் தூண்டியவர் பட்டினத்தார் என்பதை உற்று நோக்கினால் இதனை உணர முடியும்.
தன்னையறிந்து தன்னை வசப்படுத்திய 'சித்தன்' உலகை அறிந்து அதனை வசப்படுத்திய நிலையில் அவனது வார்த்தைகள் வெறும் சாமான்யப் பொருளடக்கம் கொண்டதாக இராது என்பதை நாம் மனதினில் கொள்ள வேண்டும்.சித்தர்களின் பாடல்கள் அனைத்துமே ஒரு சீர்திருத்தப் பகுத்தறிவுப் பெட்டகமாக ஒளிர்கிறது.
குறிக்கோளற்ற சித்தி ஞானத்திற்குப் பதிலாக கர்வமே தரும். முக்தியை விரும்புபவனுக்கு சித்தியால் பயனில்லை என்பார்கள்.
தனி மனிதனின் தவ ஆற்றல் அவனுக்கு மட்டுமே நன்மை பயப்பதாயின் யோகத்தால் உண்டாகும் அஷ்டமா சித்திகள் அதலபாதாளத்தில் அவனைத் தள்ளிவிடும். அது யோக மார்க்கத்தில் அடங்காது.
கண்காணா கானகத்திலிருந்து யோகிகள் தவம் செய்தபோதிலும் அவர்கள் தவத்தின் கண்ணிலிருந்து எழும்பும் தபோவலைகள் நாடெங்கும் பரவி எல்லா மக்களுக்கும் மன சாந்தியை அளிக்க வல்லதாக இருக்க வேண்டும். அதுவே நல் யோகநெறியாகும்.
மானுட சிருஷ்டியின் மகத்தான மர்ம முடிச்சுகளை அறிந்தவர்கள் இந்தச் சித்தர்கள். பிரபஞ்சமெங்கும்
ஜனன-மரணத்தின் ஓயாத அழைப்பில் வாழ்வின் ரகஸ்யங்களை மனஇருள் நீக்கி, ஞான ஒளி பரப்பி நம் முன் உணர்த்தியவர்கள் சித்தர்களே.
புவிமண்டலத்தை இயக்கும் ஆற்றல் படைத்தவர் களாய் நம்மிடை யே வாழ்ந்த சித்தர்களின் அற்புத சித்திகள் அனைத்தும் பிரமன் ஊன்றிய அழியாத கற்பக வித்துக் களாகும். அவைகள் விருட்சமாகி, விதையுமாகி யுகாந்திரச் சங்கிலியாகத் தொடர்வதற்குரிய வரங்களுமாகும்.
வேதங்களை சித்தர்கள் 'மறைபொருள்' என்று குறிப்பிடுகின்றனர், நமது உடலில் சில முக்கிய உறுப்புகள் மறைந்து கிடக்கின்றன. இந்த முக்கிய உறுப்புக்களை சுவாசப் பயிற்சி மூலமும் மந்திரங்களை உச்சரிப்பதன் மூலமும் அறிந்து அதன் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்றனர் சித்தர்கள்.
நமது உடலில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை என ஆறு ஆதாரங்கள் உள்ளன. இந்த ஆறு ஆதாரங்களும் நமது உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளைக் குறிப்பதாகும். நாளமில்லாச் சுரப்பிகளைச் சித்தர்கள் எப்பொழுதும் சுரக்கச் செய்வதால் என்றும் இளமையாக வாழ்கிறார்கள். இதுவே இவர்கள் முதுமைப் பருவம் அடையாததன் காரணமாகும்
உலகமே இன்று கொண்டாடும் யோகக் கலையின் பிதாமகன்கள் நமது சித்தபுருஷர்கள். மூவாயிரம்ஆண்டுகள் ஒரு சித்தர் வாழ்ந்ததும் உண்மை. வாழ
முடியும் என்பதும் உண்மை! ரசவாதம் செய்து இரும்பைப் பொன்னாக்கும் கலையைக் கண்டறிந்த பெரிய ஞானியர் இருந்திருக் கிறார்கள் என்பதும் உண்மை. அது சாத்தியம் என்பதும்
உண்மை!
உடலை விட்டு உயிரைப் பிரித்து கூடு விட்டுக் கூடு பாய்ந்த மகா யோகிகள் இருந்தார்கள் என்பது இறவா உண்மை!
மூச்சடக்கி உடலைப் பறவையாக்கி சித்தர் பற்றியும் அவர் தம் நெறிபற்றியும் பல்வேறு கருத்துக்கள் உலகில் நிலவுகின்றன. அவரவர் உணர்திறனுக்கேற்ப ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமாகக் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.
சித்தி என்ற சொல்லுக்கு தன்னை உணர்தல், வெற்றி, விடுதலை, இறுதி விடுதலை என்று பொருள் தரப்படுகிறது. தேவாரம்,சித்தி என்பதற்கு கடவுளை அடைதல் எனக் குறிப்பிடுகிறது. ஜென் புத்தமதப்பிரிவில் ‘ஆன்மத் தெளிவடைதல்' என்று பொருள் கூறப்படுகிறது.
அறிவுருவாக ஒளிரும் சிவத்தையும் அது உறைந் திருக்கும் சிவலோகத்தையும் தமக்குள்ளே கண்டு சிவமயமாய் உருமாறி ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலத்தையும் வென்ற வீரர்களே சித்தர்கள்.
சித்தர்களுடைய குறிக்கோள் யோக சாதனைகள் மூலம் காயசித்தியை அடைவதுவே. சித்தர்கள் தங்களுடைய உடலை தூல தேகம், யோக தேகம், சித்த
தேகம், பிரணவ தேகம் அல்லது மந்திர தேகம், ஞான தேகம் அல்லது திவ்ய தேகம் என்று வகைப்படுத்திக் கொண்டார்கள்.
கருவறையிலிருந்து வெளிவந்த சீவனுக்கு மீண்டும்
கருவறைக்குள் செல்லாத நிலையை - அதாவது, பிறப்பு- இறப்பு அற்ற நிலையை உலகத்துக்கு எடுத்துக்காட்டிய தெய்வக் கொள்கை சித்தர்களுடையதே.
அசையாப் பெருவெளியில் நின்றொளிரும்
ஆதியாகிய சிவ பரம்பொருளை நினைந்து நினைந்து அதனுடன் இணைந்து இணைந்து அசைவற்ற நிலையில் இன்புற்றவர்களே சாயுச்சிய முக்தி பெற்றவர்கள். இவர்களே 'சித்தர்கள்' எனப்பட்டனர்.
'உய்யவல்லார்கட்கு உயிர் சிவஞானமே
உய்யவல்லார்கட்கு உயிர் சிவதெய்வமே
உய்யவல்லார்கட்கு ஒடுக்கம் பிரணவம்
உய்யவல்லார் அறிவுள் அறிவாமே
என்கிறார் திருமூலர்.
அறிவாக, பிரணவமாக, ஞானமாக, தெய்வமாக, சிவமாக தன் உள்ளத்து உள்ளே ஒளிர்வது தன் உயிரே என்பதை உணர்ந்து தெளிந்தவர் உய்ய வல்லார். அவரே சித்தர்.
தன்னுள்ளே ஜீவனாக ஒளிவீசிக் கொண்டிருக்கும் உயிரே சிவம். அந்தச் சிவத்தை அறிந்தவர்களே சித்தர்கள். அதற்கு சித்தர் நெறியை உணர்ந்து தெளிய வேண்டும். தன்னுடைய இருதய கமலத்திலுள்ள அருட்பெருஞ் ஜோதியாய் ஒளிர்ந்து கொண்டிருக்கும் பேரறிவுப் பெரும்
பொருளான ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சுடரைக் கண்டு தெளிந்து உய்ய வேண்டும்.
சித்தர்கள் மனிதன் கற்பித்துக்கொண்ட வரம்புகளை யும், வரையறைகளையும், சடங்கு சம்பிரதாயங்களையும்,
பாகுபாடுகளையும், பாரபட்சங்களையும் கடந்தவர்கள்.
'சாதி பேதங்கள் அனைத்தும் மெய்யறிவினை அறி யாத மக்கட்கேயாம். அனைத்துயிர்களையும் ஒன்றென உணர்கின்ற சித்தர்களுக்கில்லை' என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.
முக்தி தரும் 'போகர்' என்ற சித்தர் தக்க ஒரு கன்னியை மூவுலகும் தேடிக்காணாது தவித்து இறுதியில் கொங் கணரைப் பார்த்து இப்பணியைத் தர, அவரும் பத்து கோடி தேசமும் தேடி அலைந்து இறுதியில் ஒரு மண்டபத்தில் அழகிய கற்சிலையைக்கண்டு அதனை அழை என்று கூறினார்.
'கற்சிலையை அழை' என்று கொங்கணச் சித்தர் கூறியதும் கருவூர் சித்தர் 'வா... வா' என்று அழைத்தார்.
கற்சிலையும் கருவூர் சித்தரின் குரலுக்கு வந்தது. அதனைக் கொண்டு போய் போக சித்தர் முன்பு நிறுத்தி னார்கள் கொங்கணரும் கருவூர் சித்தரும்.
மிகுந்த காமம் கொண்டிருந்த போகர் சித்தர் அம் மெல்லியலாளுடன் இன்பம் துய்த்தபோது எதிர் விருப் பமோ, வாய்ச்சொல்லோ, எதுவும் இல்லாதிருப்பதைக் கண்டு 'இது வந்த வழி என்னவென்று தெரியவில்லையே' என்று வியந்து நின்றார்.
என்ன விபரம் என்று தெரியவில்லையே என போகர் இயம்பி நின்றபோது கொங்கணச் சித்தரும் கருவூர் சித்தரும் அவரது பாதத்தில் வீழ்ந்து வணங்கி நின்றனர்.
"மகா சித்தரே, நாங்கள் தாங்கள் விரும்பிய கன்னியைத் தேடி உலகனைத்தும் தேடிப் பார்த்து கால் கடுத்ததால் ஒரு மண்டபத்திற்கு வந்து நின்றோம். அங்கிருந்த ஒரு சிலை மிக அழகாக இருக்கக் கண்டு இதனை அழைத்துப் போய் நம் குரு முன்னே விடுவோம்" என்றுரைக்க, நானும் வண்டலரும் பூங்கூந்தல் சிலையை 'வா' என்றபோது எம் பின்னால் அது வந்தது' என்று கூறினர்.
விபரம் அனைத்தையும் தெரிவித்து 'எமது குருவே,நாங்கள் செய்த இத் தீய காரியத்தைப் பொறுத்தருளும்'எனப் பாதத்தில் விழுந்தனர். 'கற்சிலையைப் பெண் என்று.அழைத்து வந்தீர்கள். இந்தத் திறமை யாருக்கு உண்டு.
இந்த வகையில் சித்தருக்கு உள்ள சாமர்த்தியம்கொஞ்சமோ?' என்று பாராட்டினார் போகர்.
முத்திதரும் போகருக்கு கன்னிதேடி
மூவுலகு மாராய்ந்து கண்டிடாமல்
வைத்தார்காண் கொங்கணரை நோக்கிப் பார்த்து
மருவியென்ன வாடித்தம்மில் தம்மில்
பத்தாகும் வெகுகோடி நாடுபார்த்து
பாவையரைக் காணாமலிளைத்தே னென்றெண்ணிக்
கொத்தாக மண்டபத்தில் சிலைதானொன்று
கூறாக கண்டதனை யழையென்றாரே.
அழையென்று அண்ணர் சொல்லப் பரிசித்தாரோ
அய்யரே அழைக்கிறேன் வாருமென்று
இழைவொன்று மின்றியே வாவாவென்றேன்
கூர்ந்துவரக் குருமுன்னே விட்டோமப்பா!
சமாதியினை ஐந்து வகையாக இவர் குறிப்பிடு கின்றார். தத்துவாலய சமாதி, சவிகற்ப சமாதி, நிர்விகற்ப சமாதி, சஞ்சார சமாதி, ஆரூட சமாதி என்பனவாகும்.
யோகப் பயிற்சியால் பாரமார்த்திகப் பிரமநிலையை அடைவதை 'தத்துவாலய சமாதி' குறிக்கிறது. சட்டை முனி 'அதிட்டான சைதன்யம்' என்ற தொடரைக் கையாளு கின்றார். இத்தொடர் உண்மையை உண்மையாக உணர்வதைக் குறிக்கும். இந்நிலையில் குகைக்குள் இருக்கும் தீபம் போல மாறுவர். அதனால் அசையாமல் எரிவதைப் போலிருப்பர். தான் என்னும் பேரண்டமாக மாறுவர், தோற்றமிலா உடலை அடைவர்.
தத்துவாலய சமாதியில் இருக்கும்போது யோகப் பயிற்சியோடு மட்டுமே தொடர்பு இருக்கும். இதிலிருந்து தெளிந்தால் அந்நிலை சவிகற்ப சமாதி நிலையாகும். இதனைத் 'திரிசாணு வித்தை' எனக் குறிப்பர்.
நிர்விகற்ப சமாதியில் தத்துவங்களை மறந்து கவலையற்று இருந்தால் புற ஒலி கேட்காது. உள் இருக்கும் எல்லாம் அற்புதமாயிருக்கும். எந்நினைவுமின்றி இருக்குங் கால் சித்தம் உண்மை வடிவில் நுழையும். இதுவே 'பூரணத்தில் நிர்விகற்பமாகும்.
சமாதியில் தடுமாறும்போது பாசம் பற்றும்.
அப்போது சடங்குகளையும் உலகையும் கனவாக எண்ணி பாசத்தை நசுக்கினால் ஏகமாக நிற்கலாம். பிரபஞ்ச விகற்பம் இதழ்த்தாமரை எனப்படும் உச்சிக்குமேல் துவாதசாந்தப் பெருவெளியில் நிலைபெறுதலைக் குறிக்கும். அந்நிலையில் அளப்பறிய அகலிடம் ஆகிய வெட்டவெளி அனுபவம் ஆகும்.
மேலும் அளப்பரிய பிரகாசமும் அளப்பரிய சக்தியும் யோகச் சமாதியில் அனுபவம் ஆகும். இத்தகைய யோக சமாதியை உவந்து அடைந்தவர்களே சித்தர்கள் எனப்படும் யோகியர் என்பது இம்மந்திரத்தின் பொருளாகும்.
சமாதியில் இருப்பவர்கள் மீண்டும் எப்பொழுது வேண்டுமானாலும் வெளியில் வரலாம். இறப்பில் அனுபவங்கள் கிட்டுவதில்லை. முற்பிறவி என்ன என்பது கூட அறிய முடிவதில்லை. சமாதியில் உயர் அனுபவங்கள் கிட்டுகின்றன. ஞானம் பெறப்படுகின்றது. எனவே சமாதியில் இருப்பதையே சித்தர்கள் விரும்புவர்.
கொங்கணச் சித்தரும் முழுப்பானை, சூல்மாடு எனச் சமாதியின் நிலையினைக் குறியீட்டில் குறிக்கிறார். 'முழுப் பானைக்கு வாயில்லை' என்பது சமாதியில் புற உலகத்தின் தொடர்பு இன்றி உள்ளுள் வாழ்வதைக் குறிக்கும்.
சமாதி நிலை என்பது பானைக்குள் பானை இருக்கும் நிலையாகும். தனக்குள் தான் வாழ்வதை 'சூல் மாடு' என்னும் சொல்லால் குறிக்கின்றார்.
'அம்மானைக்குப் பானைக்குநிற்கு மேல்சூல்
மாட்டுக்கு காலில்லை என்று சொன்னேன்
எனும் பாடல் இதனையே குறிப்பிடுகின்றது.
ஆணவ மலத்தை ஓட்டினால் யோக திருவிகற்ப சமாதியை அடையலாம்.
ஓம்..
யோக சாதனையால் மகாகாச திருவிகற்ப வாழ்க்கை உண்டானது. அதனால் ஆணவம் நீங்கியது. சகளாதீதம் கடந்து கனாதீதத்தில் இணைந்தேன். மனமும் அதனுள் சேர்ந்தது. பகலிருளில்லாத வெளிக்கப்பால் சென்றேன். பந்தமற்ற மா மோட்சப் பதம் பெற்றேன்' என்று காகபுசுண்டரும் குறிப்பிடுகிறார்.
'நான் ஏகம். என்னுள் எல்லாம் உள்ளது. இதற்கு மேல் ஏதும் இல்லை' என்ற கருத்துடன் ஒருவர் இருக்க வேண்டும். இன்ப-துன்பங்களை ஒன்றாகக் கருதி நீக்க வேண்டும். மனத்தை வலிவுடையதாக்கி 'தான்' என்பதில் நிலைபெற்று இருப்பதே சஞ்சார சமாதியாகும்.
சஞ்சார சமாதியில் இருக்கும்போது தொய்தல் தோன்றும். இதை உணர்ந்து மலைபோல் உறுதியாக இருக்க வேண்டும். கற்பம் பிடர்க்கண்டத்தை அடையும். இந்நிலையில் வாசனை என்ற உலக அனுபவங்களைப் பிரித்து விடலாம்.
கன்மம், ஆசை, மோகம் மூன்றும் சமாதியைத் தகர்ப்பவை. யோகப் பயிற்சியை இவை அழிக்கும். யோகப் பயிற்சி தொடர்ந்து இல்லையெனில் இந்திரி யங்கள் சமாதிக்கு எதிராக நடக்கத் தொடங்கும். சமாதிப் பாதையை அவை மூடும் என்கிறார் சட்டை முனி. இதுவே ஆரூட சமாதி நிலை என்கிறார் இச் சித்தர்.
அறிவும் அனுபவமும் அறுந்து போகாத சங்கிலிகளின் தொடர். அதனால்தான் அது எல்லாக் காலங்களிலும் ஒளி ஏந்தி வந்திருக்கிறது.
அறிவாகட்டும்... அனுபவமாகட்டும்... அவை உடையவனோடு நின்றுபோயிருந்தால் இந்நேரம் உலகம் இருண்டு போயிருக்கும்.
சித்தர்களின் அற்புத சித்திகளும் மூலிகை ரகஸ்யங் களும் சித்தர்களோடு நின்றுபோகவில்லை. அவை சீடர்களுக்கும் பகிர்ந்தே அளிக்கப்பட்டு வந்திருக்கிறது.
மனித வாழ்வினை மகத்துவம் பெறச் செய்யவே சித்தர்கள் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து வாழ்வின் ரகஸ்யம் யாவற்றையும் அம்பலப்படுத்தியுள்ளனர்.
குறிக்கோளற்ற சித்தி ஞானத்திற்குப் பதிலாக கர்வமே தரும். முக்தியை விரும்புபவனுக்கு சித்தியால் பயனில்லை என்பார்கள்.
தனிமனிதனின் தவ ஆற்றல் அவனுக்கு மட்டுமே
நன்மை பயப்பதாயின் யோகத்தால் உண்டாகும் அஷ்டமா
சித்திகள் அதலபாதாளத்தில் அவனைத் தள்ளிவிடும். அது
யோக மார்க்கத்தில் அடங்காது.
பற்றற்றவர்கள் சித்தர்கள். அதன் காரணமாகவே யோகங்களில் நல்லவை அனைத்தும் அவர்களைப் பற்றிக் கொண்டன.
சரீரத்தை இத்தனை வெறியுடன் நேசிக்க சித்தர்களால் மட்டுமே முடிந்திருக்கிறது. அது சுய நேசிப்பு என்று பொருளாகாது. இங்கு சரீரம் என்பது சித்தர்களின் சரீரம் அல்ல. மானுட ஒட்டுமொத்த சரீரம் என்பதுவே சரியாகும்.
யுகம்தாண்டி வாழ்ந்த அவர்களின் சரீரப்பாதுகாப்பு ரகசியங்களை நாம் அறியாது போனது துரதிர்ஷ்டமே.
சித்தத்தை வென்றவர்கள் சித்தர்கள். சித்து என்னும் சொல் 'சித்தம்' என்ற சொல்லோடு தொடர்புடையது.
இறைவனைச் 'சத்து சித்து-ஆனந்தம்' என்பர். இதில்
சித்து என்ற பேரறிவினை பெற்றவர்கள் சித்தர்கள். தெளிந்த ஞானத்தைப்
பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கும் கோடானு கோடி ரகஸ்யங்களை அறிந்தவர்கள் சித்தர்கள். இன்றைக்கு விஞ்ஞான ரீதியாக மனித உடற்காற்றை சோதித்தறிந்த உண்மைகளைப் பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பே எத்தகைய உபகரணத் துணையுமின்றி படம் வரைந்து காட்டியதுபோல இந்தத் திரிகாய ஞானச்சித்தர்கள் தங்கள் பாடல்களில் சொல்லியிருக்கும் தன்மை நம்மை மலைக்கச் செய்கிறது.
உயிருக்கும் உடலுக்குமிடையேயான பிணைப்பு பற்றி சித்தர்கள் அறிந்து கூறும்போது சிலிர்ப்பு ஏற்படுகிறது.
சித்தன் என்பவன் பரத்தோடு சேர்ந்து பரப்பிரும்ம மாய் ஆகின்றான். அஷ்டமா சித்தியனைத்தும் பெற்றிருந் தாலும் தன்னை உணராதவன் சித்தன் ஆகமாட்டான். சிவபெருமான் உள்பட அனைத்து தேவகணங்களுமே மனித நிலையிலிருந்து உயர்ந்த சித்தர்கள்தான்.
சித்தர்கள் நித்திய ஒளி பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். வேதாந்தத்தையும் சித்தாந்தத்தையும்ஒன்றாக நோக்கிய மிக உயர்ந்த ஞானிகள் அவர்கள். தங்கள் காலத்து சமய முறைகளோடு ஒத்துப்போகாத புரட்சியாளர் கூட்டம் என்று கூடக் கூறலாம்.
அனைத்து சித்தர்களுமே உடம்பினையே ஆதார மாகக் கொண்டு பேசுகின்றனர். பிண்டத்தை உணர்ந்தால் அண்டத்தையும் உணரலாம். அண்டத்தையும் அதில் அடங்கியுள்ள கோள்களையும் அசைத்து இயக்கிக் கொண்டிருக்கும் ஆதிப் புள்ளியையும் அறியலாம்.
கடவுளர்களின் தூதுவர்களாகவே இவ்வுலகில் இவர்களின் அவதாரங்கள் நிலைபெற்றிருக்கின்றன.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் ஒரு மெய்விளக்கு எரிந்துகொண்டே இருக்கிறது. அந்த விளக்கைப் பயன்படுத்தி வரும்போது அஞ்ஞான இருளே கூடும். இந்தச் சடலத்தை விட்டு மெய்ஞானம் பெறுவதற்கே அனைத்து சித்தர்களும் தங்களின் ஓயாத சிந்தனையைச் செலவிட்டிருக்கின்றனர்.
இந்திரிய ஒழுக்கமும், கரண ஒழுக்கமும், சீவ ஒழுக் கமும், ஆன்ம ஒழுக்கமும் கொண்டு சாதனக்கலைக்காண பயிற்சியின் மூலம் இறவா நிலையினை சித்தர்கள் அடைந்திருக்கின்றனர்.
சித்தர்கள் யார்? என்ற வினாவைப் போன்றே சித்தர்கள் எத்தனை பேர்? என்ற வினாவும் எப்போதும் விமர்சனத்திற்குரியதாகவே இருந்து வருகிறது.
'நந்தியகத்தியர் மூலர் புண்ணாக்கீசர் நற்றவத்துப் புலத்தியரும் பூனைக் கண்ணர்
கந்திடைக்காடரும் போகர் புலிக்கையீசர் கருவூரார் கொங்கணவர் மாகாலாங்கி சிந்தியழு கண்ணரகப்பையர் பாம்பாட்டித் தேரையரும் குதம்பைச் சட்டச்சித்தர் செந்தமிழ்ச்சீர் சித்தர் பதினெண்மர் பாதம் சிந்தித்தே அணியாகச் சேர்த்து வாழ்வாம்
இவ்வாறு சித்தர்களை பதினெண்மர் என வழங்கினாலும் அவர்களின் அடங்காது. இப்பதினெட்டுக்குள்
எண்ணிக்கை
சித்தர் பாடல் தொகுப்பு நூல்களாலும் சித்தர் பற்றிய ஆய்வுகளிலும் பல்வேறு பட்டியல்கள் காணப்படு கின்றன. அவையனைத்தும் ஒன்றோடொன்று முரண்படு கின்றன.
சித்தர்கள் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர் களாக விளங்குவதால் அவர்களது கருத்துக்களின் அடிப்படையிலும் அவற்றுக்கு அடிப்படைகளாக அமையக்கூடிய பிற பின்புலங்களின் அடிப்படையிலும் அவர்களைச் சில பிரிவுகளாகப் பகுத்துப் பார்க்கின்றனர் ஆய்வாளர்கள்.
மந்திரம், மாந்திரீகம் போன்ற அதர்வண வேத நெறிகளை அதிகம் பின்பற்றும் சித்தர்கள் 'அதர்வண சித்தர்'களென மிரட்டும் பிரிவுகளாக இருக்கின்றனர்.
சித்தர்களின் கொள்கைகள் 'ஞானச் சித்தர்கள்' என்றும், 'காயச் சித்தர்கள்' என்றும் பிரித்துக் காண்பிக்கப் படுகின்றன.
ஓம்...
ஞானச் சித்தர்கள் வரிசையில் பட்டினத்தார். பத்திரகிரியார், சிவவாக்கியர், பாம்பாட்டிச் சித்தர், அகப்பேய் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கடுவெளிச் சித்தர் ஆகியோர் குறிப்பாக வரிசையில் நிற்கின்றனர்.
'சன்மார்க்க சித்தர்கள்' என்று பேசும்போது திருமூலரின் ‘திருமந்திரம்' கொள்கை நூலாகவும் திருமூலர் பிரதானமாகவும் பேசப்படுகிறார்.
ஞானச் சித்தர்கள் மனித உடம்பை அழியக்கூடிய தென்றும், இவ்வுலகத்தைப் பொய்யானதென்றும் கருதுபவர்கள்.
யோக நெறிகளின் மூலமாக இறைவனோடு ஒன்றி நிற்கும் நிலைக்காக ஏங்கும் இவர்கள் சிவவழிபாடு செய்பவர்கள் ஆவர்.
'காய சித்தர்கள்' என்பவர்கள் சக்தியைப் பல்வேறு பெயர்களால் வழிபடுபவர்கள். இவர்கள் ஞானச் சித்தர் களைப் போலன்றி இந்த உடம்பை அழியாமல் நிலை நிறுத்துவதிலும், இளமையைப் போற்றிக் காப்பதிலும், பல்வேறு சித்திகளாகிய ஆற்றல்களைப் பெறுவதிலும் விருப்பமுடையவர்கள். அதற்காக யோக வைத்திய இரசவாத மற்றும் மாய வித்தைகளைப் பயின்று நிற்பவர்கள்.
உடலை அழியாது காக்கும் காய கற்பத்தை உண்டாக்க முனைந்தவர்கள் தாயாகிய சக்தித் தெய்வத்தை பல்வேறு சடங்குகள் மூலம் வழிபட்டவர்கள்.
ஓம்..
சித்தர்களைப் பொது நிலையில் நோக்கும்போது அவர்களும் பிற சமயவாதிகள் போல ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டிருந்த ஒரு கூட்டத்தினரே. ஆனால் அந்த தேடல் முயற்சிகளிலும் தேடிக்கண்ட உண்மைகளை வெளியிட்ட முயற்சிகளிலும் பிறரினும் வேறுபட்டு நிற்கின்றனர்.
சமயவாதிகள் தத்தம் சமய விதிமுறைகளுக்கும் வரையறைகளுக்கும் கட்டுப்பட்டவர்கள். சித்தர்களோ தம்மைக் கட்டுப்படுத்தக்கூடிய எந்தச் சமய அமைப்பு களையும் சாராது நின்றவர்கள்.
சித்தர்கள் பலரும் ஓரிறைக் கோட்பாடு உடையவர் களாய் இருந்திருக்கின்றனர். 'ஒன்றென்றிரு, தெய்வம் உண்டென்றிரு' என்று பட்டினத்தார் பாடியுள்ளார்.
'அங்கும் இங்குமாக நின்ற ஆதி மூர்த்தி ஒன்றல்லா'
என்ற 'சிவவாக்கியர்' கூற்றும் இதற்கான சான்றாகும்.
சித்தர்கள் சமயத் துறையில் பெரும் சீர்திருத்தங்கள் செய்தவர்கள் என்றபோதிலும் அவர்கள் சிவனை வழிபடுபவர்கள் என்பதும் உண்மையே.
உருவ வழிப்பாட்டை மறுத்துக் குரல் கொடுத்த சித்தர்களும் உண்டு.
உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி?' என்ற பாம்பாட்டிச்சித்தர் பாடலும், 'நட்ட கல்லும் பேசுமோ? என்ற சிவவாக்கியர் பாடலும் 'உளிபட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும்' என்று பட்டினத்தார் பாடிய பாடலும் 'கடவுள் மறுப்பு' சிந்தனைக்கு சான்றாக விளங்குகின்றன.
ஆகமங்களையும் வேதங்களையும் பல்வகைச் சாத்திரங்களையும் இறைவனை அறிவதற்கு உதவும் வழிகளாகச் சுட்டும் சமயவாதிகள் செய்கையைச் சிவவாக்கியர் பெரிதும் மறுத்துப் பாடுகிறார்.
ஞான ஒளி பரப்பிய சித்தர்கள் வரும் வாரம் பார்ப்போம்!!!!
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக