🌏🌎🌍நமக்குள் ஒரு ஞானி🌏🌎🌍
🌏🌎🌍நமக்குள் ஒரு ஞானி பாகம்: 01🌏🌎🌍
அவனே ஆதி, அவனே அந்தம்; அவனே ரகசியம், அவனே பகிரங்கம். அனைத்தையும் அறிந்தவன் அவனே. திருக்குர்'ஆன் 57:3 (தமிழாக்கம் எனது)
இதென்ன தலைப்பு என்று யோசிக்கிறீர்களா? இந்தத் தலைப்பு, ஓர் அடிப்படையான உண்மையைச் சொல்லவருகிறது. தன்னை அறிந்துகொண்ட மனிதன் ஞானியாகிறான். ஆனால், அவன் அப்படி ஆவதற்கு முன்பே, பிறக்கும்போதே அவனுக்குள் ஒரு ஞானி இருக் கிறார். அவர்தான் மரியாதைக்குரிய நமது உடலார்!
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
என்று, திருமூலர் சும்மாவா பாடினார்!
ஆமாம். நம் உடலுக்குள் கோடிக்கணக்கான உயிரணுக்கள் உள்ளன. இல்லை, இப்படிச் சொல்வதுகூடத் தவறுதான். பாத்திரத்தில் பால் நிரம்பியுள்ளது என்றால், பாத்திரமும் பாலும் வேறுவேறுதானே? ஆனால், உடலும் உயிரணுக் களும் அப்படியல்ல. பாத்திரமே பாலாகவும், பாலே பாத்திரமாகவும் உள்ளது இங்கே!
ஓம்..
ஆமாம். கோடிக்கணக்கான உயிரணுக்களால் நாம் ஆக்கப் பட்டுள்ளோம். நாம் வேறு, அவை வேறு அல்ல. நம் உடலில் உள்ள ஒரேயொரு உயிரணுவுக்கு இருக்கும் அறிவு, ஞான மெல்லாம், ஒட்டுமொத்தமாக இருக்கும் நமக்கு இல்லை என்பதே அறிவியல் காட்டும் உண்மை! அது எப்படி என்று தெரிந்துகொண்டால், நமக்குள் இருக்கும் ஞானம் நம்மை வியப்பில் ஆழ்த்துவது மட்டுமின்றி, நோயின்றி வாழும் வழியையும் நமக்குக் கற்றுக்கொடுக்கும்.
ஆம். நாம் நோயில்லாமல் வாழ வேண்டுமெனில், முதலில் நம் உடலைப் புரிந்துகொள்ள வேண்டும். உடலைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், கோடிக்கணக்கான உயிரணுக் களைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும். கோடிக்கணக்கான உயிரணுக்களைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், முதலில் ஒரேயொரு அணுவின் தன்மையை, செயல்பாடுகளை, அதன் உள்ளார்ந்த ஞானத்தையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் புரிந்துகொண்டுவிட்டால், நமக்கும் இருக்கும் ஆதி ஞானியை அடையாளம் கண்டுகொள்ளலாம். சரி, இப்போது ஆதிஞானியை சந்திக்கச் செல்லலாமா?
டார்வினியக் கோட்பாடு
உயிரணு, அதன் அமைப்பு, தன்மைகள், செயல்பாடுகள் பற்றியெல்லாம், 19-ம் நூற்றாண்டின் மத்தியகாலம் வரை அவ்வளவாக அறியப்படவில்லை. எலக்ட்ரான் மைக்ராஸ் கோப் அதுவரை உருவாக்கப்படவில்லை. ஒரு பாக்டீரி யாவைக்கூட எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் கண்களால் பார்த்து அறியப்படாத காலம் அது. இதையெல்லாம் ஏன் சொல்கிறேன்? காரணம் உள்ளது.
அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் எதுவும் இல்லாமல் இருந்த அந்தக் காலத்தில், உயிரணு பற்றிய புரிதலும் ரொம்ப எளிமையானதாகத்தான் இருந்தது. டார்வினுடைய கோட் பாடு கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டம் அது. உயிரணு ஒன்றின் அமைப்பு ரொம்ப எளிமையானது என்று தவறாகப் புரிந்துவைக்கப்பட்டிருந்தது. எளிய அமைப்பு கொண்ட உயிரணுக்கள், தாமாகவே பரிணாம வளர்ச்சியில் ஒன்று வேறொன்றாக மாறுவது சாத்தியம் என்று குரங்குகள்நம்பிக்கொண்டிருந்த காலம் அது! உண்மையில், ஓர் உயிரணுவின் பாகங்கள் என்னென்ன, அதன் வேலைகள் எத்தகையது என்று தெரிந்திருந்தால் ஆடிப்போயிருப்பார்கள் டார்வின்வாதிகள்! பார்க்கத்தானே போகிறோம்!
ஓம்...
அணு அணுவாய்
மனிதனின் கற்பனைக்கு எட்டமுடியாத சிக்கலான அமைப்பும், செயல்பாடுகளும் கொண்டதாக உள்ளது ஓர் உயிரணு.ஓர் உயிரணுவின் உண்மையான தன்மை என்ன, அது எவ்வளவு சிக்கலான அமைப்பு கொண்டது என்பதையெல்லாம், இன்று அணுத்திரண்ம உயிரியல் (molecular biology) வெளிக்கொண்டு வந்துள்ளது.
ஓர் உயிரணுவை, ஆயிரம் மில்லியன் மடங்கு பெரிதாக்கிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியும். அப்போது, ஓர் உயிரணுவானது இருபது கிலோமீட்டர்கள் குறுக்களவு கொண்ட, நியூயார்க் அல்லது லண்டன் மாநகரை மூடவல்ல ராட்சத விமானம்போல் இருக்கும். அப்போது பார்த்தால், உயிரணுவின் மேற்பரப்பில் லட்சக்கணக்கான குட்டிக் குட்டித் திறப்புகள் தெரியும். அவற்றின் வழியாக, பல சமாசாரங்கள் உள்ளே போய்க்கொண்டும். வெளியே வந்துகொண்டும் இருக்கும். அந்தத் திறப்பு ஒன்றின் வழியாக நாம் உள்ளே செல்ல முடிந்தால் எவ்வளவு அட்டகாசமான, சிக்கலான தொழில்நுட்ப உலகுக்குள் போயிருக்கிறோம் என்பது விளங்கும் என்று, தன் Evolution: A Theory in Crisis என்ற நூலில் பேரா. மைக்கேல் டெண்டன் (Michael Denton) கூறுகிறார்! அந்த புத்தகத்தைப் படித்தால், நம் ஒவ்வொரு உயிரணுவும் ஒரு Miniature masterpiece of God என்பது புரியும்!
செல்/உயிரணுவின் இயக்கம்
நம் உடலில் உள்ள எல்லா உயிரணுக்களும், பிரிந்து பிரிந்து பல்கிப் பெருகுகின்றன என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், ரொம்பத் தெரிந்த ஒன்றில், தெரியாத ஒன்று எப்போதுமே இருக்கும்! ஆமாம், தெரிந்ததுதானே என்று முக்கியமான விஷயத்தைக் கோட்டை விட்டுவிடுவோம். உயிரணுக்களின் விஷயத்திலும் அப்படியொரு விஷயம்உள்ளது. அது என்ன? அதுதான் செல்கள் பிரிந்து பல்கிப் பெருகும் விதம்.
இந்தப் பிரிதலை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மனிதனை, இரண்டாகச் சரிபாதியாக வெட்டிப் பிரித் தால் என்ன ஆகும்? ஒரு கை, ஒரு கால், ஒரு கண் என்று பிரிந்துபோகும் அல்லவா? அதோடு உயிரும் போய்விடும்! ஆனால், உயிரணுக்கள் பிரிவது அப்படியல்ல. ஒரு உயிரணு இரண்டாகப் பிரியும்போது, முதலில் ஒன்றாக இருந்தபோது என்னென்ன பாகங்கள் இருந்தனவோ, அவை அனைத்தும் இரண்டாம் உயிரணுவிலும் இருக்கும்! இம்மிகூடக் கூடா மலும் குறையாமலும்! ஒரு மனிதனை குளோனிங் செய்து இரண்டாக்கியதுபோல! ஒரு நூறை இரண்டு ஐம்பதாக்கியது மாதிரி அல்ல. ஒரு நூறை இரண்டு நூறுகளாக்கியது மாதிரி. பிரிகிறதா, சாரி, புரிகிறதா?
இப்படிப் பிரியும்போது, ஒரு உயிரணுவின் நியூக்ளியஸுக்குள் இருக்கும் டி.என்.ஏ.வும் பிரதியெடுக்கப்பட வேண்டும். பகீரதப்பிரயத்தனம் என்று கூறுவார்கள். ஆனால், எத்தனை ஆயிரம் பகீரதர்கள் ஒன்று சேர்ந்தாலும் செய்யமுடியாத ஒரு காரியத்தை, உட உள்ள ஒவ்வொரு உயிரணுவும் செய்கிறது! .
டி.என்.ஏ. என்ற அற்புதம்
ஒவ்வொரு டி.என்.ஏ. மாலிக்யூலுக்குள்ளும், முந்நூறு கோடி எழுத்துகளில் அடக்கவல்ல தகவல்கள் பதிவாகியுள்ளன என்கிறது, நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பு! இது, மனித கற்பனைக்கு எட்டாத விஷயமாக உள்ளது. நான், ஹோமரின் 'இலியட்' காவியத்தை தமிழாக்கம் செய்தேன். என் புத்தகங் களிலேயே அதுதான் மிகப்பெரியது. 534 பக்கங்களும், 1,27,021 எழுத்துகளும் கொண்ட புத்தகம்! அச்சில் 800 பக்கங்களுக்கு மேல் வந்தது! ஆனால், ஒரு டி.என்.ஏ.வுக்குள் முந்நூறு கோடி எழுத்துகள் கொண்ட தகவல்கள் உள்ளன! ஒவ்வொரு டி.என்.ஏ.வுக்குள்ளும்! அப்படியானால், கோடிக் கணக்கான உயிரணுக்களுக்குள், கோடிக்கணக்கான டி.என்.ஏ.க்களுக்குள்?! தலை சுற்றி மயக்கம் வரும்போல் இருக்கிறது!
டி.என்.ஏ.வுக்குள் இருக்கும் முந்நூறு கோடி எழுத்துகளில் அடங்கியுள்ள தகவல்களை ஒரு புத்தகமாகக் கொண்டுவருவ தானால், பத்து லட்சம் பக்கங்களும், ஆயிரம் பாகங்களும் கொண்ட ஒரு கலைக்களஞ்சியமாக அது இருக்கும் என்கிறது விஞ்ஞானிகளின் கணக்கு!
முந்நூறு கோடி தகவல்கள் கொண்ட அந்தக் கலைக்களஞ்
சிய டி.என்.ஏ.வானது, ஹீலிக்ஸ் (helix) எனப்படும் இரட்டை
இழைகளால் ஆன, திருகு சுழல் ஏணிபோல் காட்சியளிக்கும்.
இந்த இரட்டை இழை திருகு சுழல் ஏணி டி.என்.ஏ.வை இரண்டாகப் பிரித்தெடுக்க வேண்டும். அதற்காக வருபவர் தான், ஹெலிகேஸ் என்ற ஒரு என்ஸைம் (helicase enzyme).
இந்த ஹெல்கேஸ், டி.என்.ஏ.யின் ஒரு இழையை மட்டும் கவனமாகக் கழற்றிப் பிரித்தெடுக்கும். எந்தத் தவறோ, குழப்பமோ இல்லாமலும், டி.என்.ஏ.வுக்கு எந்தப் பாதிப்பும் வரமாலும் பிரித்தெடுக்க வேண்டும். அப்படிப் பிரித்தெடுத்த பிறகு, பிரித்தெடுத்த ஏணியின் ஒரு பகுதியோடு, புதிய இழையை இணைத்து மீண்டும் ஒரு இரட்டை இழை ஏணியை உருவாக்க வேண்டும். அதைச் செய்ய வருபவரின் பெயர்,டி.என்.ஏ. பாலிமெரேஸ் (DNA Polymerase). பிரிக்காத டி.என்.ஏ. இழையில் இருந்த முந்நூறு கோடி எழுத்துகளில் பதிவான தகவல்கள் அனைத்தையும், ஒன்றுகூட விடாமல், ஒவ்வொன்றாகச் சரிபார்த்து பிரதி எடுத்துக்கொண்டுவந்து, புதிய இழையில் சேர்க்க வேண்டும்! ஒரேயொரு தவறுகூட நடக்காமல், அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கிறது, பாலிமெரேஸ்!
இந்தக் காரியமெல்லாம் நடக்கும்போது, பிரிந்துபோன காதலர்கள் ஒன்று சேர்வது மாதிரி, பிரித்தெடுக்கப்பட்ட இரண்டு இழைகளும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிடாமலும் இவை பார்த்துக்கொள்கின்றன! முந்நூறு கோடி எழுத்துகள் கொண்ட ஒரு புத்தகத்தை நாம் 'டைப்' அடித்து உள்ளிட வேண்டும் என்றால், எத்தனை தவறுகள் ஏற்படும்! ஆனால், டி.என்.ஏ.வைப் பிரதியெடுக்கும் வேலையில் ஒரு சின்ன தவறைக்கூட பாலிமெரேஸ் செய்வதில்லை! ஒரு டி.என்.ஏ.வைப் பிரதியெடுப்பதும், பத்து லட்சம் பக்கங்களைக் கொண்ட ஒருகலைக்களஞ்சியத்தைப் பிரதியெடுப்பதும் ஒரே மாதிரியான வேலை! ஆனால், இந்த மகா வேலை, 20 நிமிடங்களிலிருந்து அதிகபட்சமாக 80 நிமிடங்களுக்குள் ஒரு சின்ன தவறுகூட இல்லாமல் பரிபூரணமாகச் செய்து முடிக்கப்படுகிறது!
பிரக்ஞை, நுண்ணறிவு இவையெல்லாம் இல்லாமல், எப்படி ஒரு என்ஸைமால் இந்தக் காரியத்தைச் செய்ய முடியும்! ஒரு உயிரணு பிரியும்போது, அதன் டி.என்.ஏ. பிரதியெடுக்கப் பட வேண்டும் என்று அதற்கு யார் சொன்னது? அதற்கு எப்படி அது தெரியும்? எப்படிப் பிரித்தெடுப்பது என்று அதற்கு யார் பயிற்சி கொடுத்தது?
கை நிறைய சொற்களை அள்ளித்தெளித்துவிட்டால், அவை கீழே விழும்போது அர்த்தமுள்ள வாக்கியங்களாக விழுமா? இது என்ன அபத்தமான கேள்வி என்பீர்கள்.
உண்மைதான். அர்த்தமுள்ள ஒரு வாக்கியத்தை அமைக்க வேண்டுமெனில், நாம்தான் அவற்றை ஒவ்வொன்றாகப் பொருள் பொதிந்த வகையில் சேர்க்க வேண்டும். நாம் ஒரு பைத்தியக்காரனாக இருந்தால் அப்படிச் செய்யமுடியுமா? முடியாது. அப்படியானால், வார்த்தைகளைக் கோர்த்து அர்த்தம் உண்டாக்க, வாக்கியம் அமைக்க, கட்டுரை, கவிதை காவியமெல்லாம் எழுத, அதீத அறிவும் திறனும் இருக்க வேண்டும் அல்லவா? அப்படியானால், பத்து லட்சம் பக்கங் களைக் கொண்ட ஒரு என்சைக்ளோபீடியாவை உருவாக்க, அதைப் பிரதியெடுக்க எவ்வளவு அறிவு வேண்டும்?! அந்த வேலையை ஒரு சின்ன தப்புகூட ஏற்படாமல் செய்யும் உயிரணுக்களுக்கு எவ்வளவு ஞானம் வேண்டும்?! எனில், ஒவ்வொரு உயிரணுவும் ஒரு மேதை என்று சொல்வது எந்தவிதத்திலும் மிகையாகாது. அந்த மேதை, இறைவன்தான். எல்லாவற்றிலும் நிறைந்திருப்பவன் அவனே. உள்ளேயும் வெளியேயும் இருப்பவன் அவனே. இந்த உண்மையைத்தான், இக்கட்டுரையில் ஆரம்பத்தில் உள்ள திருமறை வசனம் கூறுகிறது!
ஆனால், இந்த மேதாவித்தனத்தைத்தான் தற்செயல் என்று நினைக்கிறது டார்வினிய கோட்பாடு! எறும்பிலிருந்து எருமை மாடு வரை, பூனையிலிருந்து யானை வரை, பூ. பழம், தாவரம், மிருகம், கோளங்கள், நட்சத்திரங்கள், மனிதன்எல்லாமே, தற்செயலாக இவ்வுலகுக்கு வந்தவை என்கின்ற அவர்களது வாதம், அபத்தமாக இருப்பது மட்டும் தற்செயலான விஷயமல்ல! போகட்டும். உயிரணுவுக்குள் மீண்டும் செல்வோம் வாருங்கள்.
உயிரணுக்களின் வகைகள்
ஏறக்குறைய, 200 வகையான உயிரணுக்கள் சேர்ந்து நம் உடலாக மாறியுள்ளன. ஆயினும், அவற்றுக்குள் உள்ள வேறுபாடு மிகவும் நுட்பமானது மட்டுமே. நரம்புகள், தசைகள், ரத்தம் ஆகியவற்றுக்கான உயிரணுக்களில், டி.என்.ஏ. ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். உதாரணமாக, நரம்பு உயிரணுக்கள் கொஞ்சம் நீளவாக்கில் இருக்கும். மனிதர்களைப் பொருத்தவரை, முதுகுத்தண்டிலிருந்து பாதம் வரை அவை கிட்டத்தட்ட ஒரு மீட்டர் நீளம் இருக்கும். அவற்றுக்கு 'ஆக்ஸான்' என்று பெயர். அவை நீளமாக இருப்பதால், கிடைக்கும் செய்திகளை, புலனுணர்வுத் தூண்டுதல்களையெல்லாம் தாமதமின்றித் தேவையான இடத்துக்குக் கடத்த உதவியாக உள்ளது.
ஆனால், எரித்ரோசைட் எனப்படும் ரத்த உயிரணுக்கள் அளவில் மிகமிகச் சிறியதாக இருக்கும். ஒரு மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பங்குதான் இதன் அளவு! அவை, அவ்வளவு குட்டியாக இருப்பதால், தந்துகி எனப்படும் ரத்த நுண் குழாய்கள் வழியாகச் செல்ல ஏதுவாக இருக்கும். மேலும் கீழும் நடுவிலும் கொஞ்சம் பள்ளமாக இருப்பதால், அந்த இடம் வழியாக கார்பன்-டை- ஆக்சைடு சென்று, ஆக்ஸிஜன் உள்ளே வர வசதியாக இருக்கும்.
கண்கள், காதுகளில் உள்ள உயிரணுக்கள், கொஞ்சம் வேறு மாதிரியாக இருக்கும். உதாரணமாக, காதுக்குள் இருக்கும் கோக்லியா (cochlea) என்ற உயிரணுவுக்கு, சப்த அதிர்வுகளை வாங்கி அனுப்புவதற்கு ஏதுவாக முடிமுடியாக இருக்கும். கண்களில் ரெட்டினா எனும் விழித்திரையில் இருக்கும் கூம்பு வடிவ உயிரணுக்கள், ஒளியை உள்வாங்கும் கூர் உணர்வு கொண்டவையாக இருக்கும்.
சிறுகுடலின் உள்வரிப்பூச்சைச் சுற்றி, உணவை உள்வாங்கு வதற்கும் செரிப்பதற்கும் உதவும் வகையில், வில்லி (villi) எனப்படும் லட்சக்கணக்கான உயிரணுக்கள் உள்ளன.
இத்தனை வகையான கோடிக்கணக்கான குட்டி உயிரணுக்கள் எல்லாமே, ஆணின் விந்து பெண்ணின் கருமுட்டை இரண்டின் இணைப்பில் உருவான ஸைகோட் (zygote) என்ற ஒரேயொரு உயிரணுவிலிருந்து வந்தவை! இப்படி, ஒரேயொரு உயிரணுவிலிருந்து உருவான இத்தனை கோடி உயிரணுக்களும், தங்களுக்கான வடிவத்தையும் வேலையையும் தாங்களே தற்செயலாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டன என்று சொன் னால், நம்பினால், நம்மைவிட முட்டாள் இந்தப் பிரபஞ் சத்தில் வேறு யாரும் இருக்க முடியாதுதானே?
நீங்கள் யார் என்று தெரிந்துகொள்வதுதான், இந்த உலகுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவையாகும் என்றார் ரமண மகரிஷி. நம் உடலைப் பற்றித் தெரிந்துகொள்வதும் அதற்கு நிச்சயம் உதவும்.
நமது உடலில் உள்ள உயிரணுக்களின் தோற்றத்தில், அமைப்பில், செயல்பாடுகளில் எப்படி ஒரு தெய்விக ஏற்பாடு உள்ளது என்பதைப் பற்றிக் கொஞ்சம் பார்த்தோம்.கருவாக நாம் அம்மாவின் வயிற்றினுள் இருந்தபோது, உருவம் எதுவும் நமக்குக் கிடையாது. உருவமற்ற திசுவாக நாம் இருந்தோம். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக சில உயிரணுக்கள் கைகளாக, சில கால்களாக, சில மூளையாக -இப்படியாகக் கொஞ்ச நாளில் நமக்கு உருவம் கிடைக்கிறது. ஒவ்வொரு உயிரணுவுக்கும், தான் 'எங்கே' போக வேண்டும் என்று ரொம்ப தெளிவாகத் தெரிந்திருக்கிறது! வாய்க்குப் போக வேண்டியது வயிற்றுக்கோ, நாக்குக்குப் போக வேண்டியது மூக்குக்கோ, தப்பித்தவறிக்கூடப் போவதில்லை. இதில் இன்னொரு ஆச்சரியம் உண்டு. அது என்ன? ஓராயிரம் பார்வையிலே
அஹ்மத் நோயன் என்பவர் எழுதிய Physiology in Life and Medicine என்ற நூலில், 40-வது பக்கத்தில் ஒரு தகவலைக் கூறுகிறார். அது ஆச்சரியத்தின் உச்சகட்டம் என்று சொல்ல லாம். கருவில் உடல் உறுப்புகள் உருவாகிக்கொண்டிருக்கும் வேளையில், அங்குள்ள உயிரணுக்களையெல்லாம் பிரித் தெடுத்து வேறு ஒரு சூழலில் வைத்து, பின்னர் கொஞ்சகாலம் கழித்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்தால்கூட, கண் உருவாக வேண்டிய உயிரணுக்கள் தங்கள் கூட்டாளி களையும், மூக்கு உருவாக வேண்டிய உயிரணுக்கள் தங்கள் கூட்டாளிகளையும் அடையாளம் கண்டு, 'என் இனம், என் மக்கள்' என்று அவர்களோடு போய் சேர்ந்துகொள்கிறதாம்! மூளையோ, நரம்பு மண்டலமோ, கண்ணோ இல்லாத உயிரணுக்களுக்கு, 'இது நம்ம ஆளு' என்று எப்படி அடை யாளம் காணமுடிகிறது?! 'ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்' என்ற பாடலைப்போலத்தான்!
மிக முக்கியமான கேள்வி என்னவெனில், இந்த உயிரணுக் களெல்லாம் தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளைக் கற்றுக்கொண்டு செய்யுமா? இல்லை. அவை உருவாகும்போதே, தான் செய்ய வேண்டிய வேலைக்குத் தேவையான அறிவுடனும், கடமையை நிறைவேற்றும் தகுதியுடனும்தான் உருவாகின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால், ஒவ்வொரு செல்லும் ஒரு ஞானியாகவே பிறக்கிறது.வாழும் காலமெல்லாம், ஞானியாகவே வாழ்கிறது. கோடிக்கணக்கான ஞானிகளின் கூட்டமைப்புதான் மனித உடல் என்று சொன்னால் அது மிகையில்லை.
நாம் உண்ணும் உணவிலிருந்து நமக்குத் தேவையான ஆற்றல் நமக்குக் கிடைக்கிறது என்று நமக்குத் தெரியும். ஆனால், அதில் நமக்குத் தெரியாத ஒரு விஷயமும் இருக்கிறது. அது என்ன? நம் உணவிலிருந்து கிடைக்கும் ஆற்றலை, நம் உயிரணுக்கள் நேரடியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது!
ஆமாம். முதலில் எல்லா ஆற்றலும், ஒரு ஆற்றல் பொட்டல மாக சேமித்துவைக்கப்படுகிறது. அந்த ஆற்றல் பொட்டலத்தின் பெயர்தான் ATP. அதில் மூன்று அடுக்குகளாக, மூன்று வகை பாஸ்ஃபேட்டுகளாக ஆற்றல்கள் சேமிக்கப்பட்டிருக்கும். அவற்றை, AMP, ADP, ATP என்று விஞ்ஞானம் கூறுகிறது. ஒவ்வொன்றுக்கும் நீளமான பெயர்கள் உண்டு. நான் வேண்டுமென்றே அவற்றைத் தவிர்த்துவிட்டேன். இம்மூன்று பெயர்களிலும் உள்ள P என்பது பாஸ்ஃபேட்டைக் (phosphate) குறிக்கும் என்று புரிந்துகொண்டால் போதும்.
நமது உடல், ஒரு நாளைக்கு 48 கிலோ ATP-யை பயன்படுத்து கிறது. ஆனாலும், ஒரு நாளின் எந்த ஒரு கணத்திலும், நம் உடலில் ஒரு கிராமுக்கு மேல் ATP இருக்காது. ஏனெனில், ATP ஒட்டுமொத்தமாக சேமித்துவைக்கப்படுவதில்லை. அவ்வப்போது, தேவைக்கேற்ப உருவாக்கிக்கொள்ளப்படுகிறது! ஒவ்வொரு விநாடியும், கோடிக்கணக்கான உயிரணுக்களும் சுமார் ஒரு கோடி அளவு ATP ஆற்றலை சாப்பிடுகிறது. உருவாக்குகிறது!
நம் ATP ஆற்றல், மூன்று வகை ஃபாஸ்ஃபேட்டுகளாக சேமிக்கப்பட்டிருக்கும் என்று ஏற்கெனவே பார்த்தோம். நம் உயிரணுக்களுக்குச் சக்தி தேவைப்படும்போதெல்லாம், அது ATP-ஐ பொட்டலத்தைப் பிரிக்கும். அல்லது உடைக்கும். அப்போது ஆற்றல் வெளியாகும். ஒரேயொரு ஃபாஸ்ஃபேட் இணைப்பு உடைந்தால் ADP உருவாகும். இரண்டு இணைப்புகள் உடைந்தால் அவிக உருவாகும். உடைந்ததுபோக மீதி இருக்கும் ஆற்றல், உயிரணுக்களின் வேலைக்கு சக்தியூட்டுகின்றன. இதெல்லாமே படுவேகமாக, தவறே இல்லாமல் கணந்தோறும் நடந்தேறுகின்றன!
எப்படி நம் கல்லீரல், அதற்குள் வந்து சேரும் குளுக்கோஸை யெல்லாம் கிளைக்கோஜனாக மாற்றுகிறது என்பதைப் பற்றியெல்லாம், சர்க்கரை நோய் பற்றிய கட்டுரைகளில் ஏற்கெனவே பார்த்தோம். இங்கே நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, நமது கல்லீரலில் உள்ள ஒவ்வொரு உயிரணு விலும், ஐநூறு வகையான வேறுபட்ட காரியங்கள் நடை பெறுகின்றன என்பதைத்தான்! அவ்வளவும், ஒரு விநாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்துக்குள்ளேயே!
நம் உணவு, நாம் உள்வாங்கும் காற்று - இப்படி பல வழி களில் நம் உடலுக்குள் புகும் கெட்ட பாக்டீரியாக்களை, நம் கல்லீரலுக்குள் இருக்கும் குப்ளர் செல்கள் என்ற பெயர் கொண்ட செல்கள் அழித்தொழிக்கின்றன! அது என்ன குப்ளர் என்று ஒரு பெயர்? அது ஒன்றுமில்லை, குப்ளர் என்ற ஜெர்மன்காரர் அதைக் கண்டுபிடித்ததால், அதற்குஅதற்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டது! இதில் விசேஷம்என்னவென்றால், எல்லா பாக்டீரியாக்களும் தீமை செய்வ தில்லை. இதுபற்றி ஏற்கெனவே விரிவாகப் பார்த்தோம். குப்ளர் செல்களின் விசேஷம் என்னவெனில், எந்த பாக் டீரியா கெட்டது என்று கண்டுபிடித்து, அவற்றை மட்டுமே கொல்லும்! எது நல்லது, எது கெட்டது என்று அதற்கு எப்படித் தெரியும்? எல்லாக் கேள்விகளுக்கும் பதில் ஒன்று தான். எல்லா அறிவையும் கொடுத்தே ஆண்டவன் அவற்றை அனுப்பியிருக்கிறான்!
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக