🌏🌍🌎தத்துவ நாயகன் வித்தக கணபதி🌏🌍🌎 🌹வளமான வாழ்வளிக்கும் வேதங்கள் 🌹
🌏🌍🌎தத்துவ நாயகன் வித்தக கணபதி🌏🌍🌎
🌹வளமான வாழ்வளிக்கும் வேதங்கள் 🌹
நாயகன் என்றாலே அதிபதி என்றுதான் பொருள் அதிபதி, தலைவன், உடையவன், மையமானவன் ஆகிய அனைத்துப் பொருள்களுமே நாயகன் என்ற ஒரே சொல்லைத்தான் குறிக்கும். விநாயகன் என்றால் 'தன்னிலும் தலைமகன் இல்லாத தலைவன்' என்றே பொருள்படும். கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும், விக்னங்கள் (இடையூறுகள்) நீக்குவதால் விக்னேசுவரன் என்றும் எண்ணற்ற பெயர்களால் வணங்கப்படுபவர் விநாயகர்.ஆதியில் பாரத நாடு முழுவதும் உயிர்ப் பலியிடுதல் உக்ரமான உருவங்களை வழிபடுதல் என்று இருந்த காலத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குறுக்கிலும் நெடுக்கிலுமாக ஐந்து முறை யாத்திரை சென்று, நடைபயணமாகவே எல்லா இடங்களுக்கும் விஜயம் செய்து அத்வைதத்தை நிலைநாட்டியவர் ஆதிசங்கரர். ஆறு வகையான வழிபாடுகளாக ஷண்மத ஸ்தாபனம் செய்தவர் அவர்.
காணபத்யம், கௌமாரம், சைவம், வைணவம், சாக்தம், சௌரம் என்னும் அறுவகை வழிபாடுகள் இதில் இடம் பெற்றன. இதில் முதன்மை வழிபாடாக இடம் பெற்றது கணபதியை வணங்கும் காணபத்ய வழிபாடுதான்.
ஓம்..
வளமான வாழ்விற்கு வழிகாட்டும் வேதங்கள்
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பலவகை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. நமது தமிழ்நாட்டில் பெரும்பாலும் முருகக் கடவுள் வழிபாடுதான் சிறப்பானது ஆந்திர மாநிலத்தில் வெங்கடாஜலபதியை வணங்குபவர்கள்தான் அதிகம். கேரளத்தின் சபரிமலை ஐயப்பன் வழிபாடு உலகப் பிரசித்தி பெற்றது.
மேற்கு வங்கத்தில் கல்கத்தா காளி வழிபாடும். உத்திரப் பிரதேசத்தில் ராமர் வழிபாடும், பீகாரில் கிருஷ்ணர் வழிபாடும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன எனினும், இந்தியா முழுவதும் சைவமும், வைணவமும், சாக்தமுமே பெருமளவு ஆட்சி செலுத்து கின்றன.
சிவனும், விஷ்ணுவும், சக்தியும் எல்லா கோயில்களிலுமே பெரும்பாலும் இடம்பெற்றிருப்பதை நாம் காணலாம். எனினும், சிவனை வணங்குபவர்களானாலும், சக்தியை வழிபடுபவர்களா னாலும் அவர்கள் முதலில் கணபதியை வழிபட்ட பின்பே இதர வழிபாடுகளைத் தொடங்குவார்கள்.
எந்த ஹோமம், யாகம், வேள்விகள் தொடங்குவதானாலும், புதிய தொழில்கள், திட்டங்கள் தொடங்குவதாயினும், சுப நிகழ்ச்சிகள், குடும்ப விசேஷங்களை ஆரம்பிப்பதானாலும் ஏன், அந்நாட்களில் மன்னர்கள் போருக்குப் புறப்படுவதானாலும், முதலில் விநாயகரை வழிப்பட்டுவிட்டு அதைத் தொடங்குவதே மரபாக இருந்து வருகிறது.
கணபதி வழிபாட்டை அமைத்தவர் அல்லது நெறிமுறைப் படுத்தியவர் ஆதிசங்கரர் என்றபோதிலும், தமிழ்நாட்டில் கணபதி வழிபாடு பரவக் காரணமாக இருந்தவர் பரஞ்சோதிதான். பல்லவ சேனாதிபதியாக விளங்கிய இவர், பின்னாளில் 'சிறுத்தொண்ட நாயனார்' என்று பெயர் பெற்று அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக உயர்ந்தவர்.
பல்லவ மன்னரான மகேந்திரவர்மர் கலைகளின் மீது அழியாத தாகம் கொண்டவராக இருந்தார். சிற்பம், ஓவியம், இசை, நாட்டியம் என சகல கலைத் துறைகளிலும் நிபுணராக விளங்கிய அவர் போர்த் தொழிலில் அவ்வளவாக நாட்டம் இல்லாமல் இருந்தார். கலைகளில் மூழ்கி படை பலத்தைப் பெருக்காத அந்த மன்னரின் ஆட்சியில் நாட்டின் வலிமை குன்றியது.
ஓம்..
அப்போதைய இந்தியா வடக்கு, மத்திய, தெற்கு என மூன்றாகப் பிரிந்து இருந்தது. அப்போது உத்தர பாரத சக்கரவர்த்தியாக ஹர்ஷ வர்த்தனர் புகழுடன் விளங்கினார். அதேநேரத்தில் மத்திய பாரத சக்கரவர்த்தியாக சாளுக்கிய மன்னரான சத்யாச்ரய புலிகேசியும். தட்சிண பாரத சக்கரவர்த்தியாக மகேந்திர வர்ம பல்லவனும் விளங்கினார்கள்.
பல்லவப் பேரரசின் படை பலம் குன்றியுள்ளதை அறிந்த புலிகேசி திடீரென பெரும் படையுடன் காஞ்சியை நோக்கிப் புறப்பட்டான். வழி முழுவதும் சாளுக்கியப் படைகள் ஊர்களைக் கொளுத்தியும், பெண்களைச் சிறைப்பிடித்தும், கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டும் ஏராளமான அட்டூழியங்களைச் செய்தன.
இதனால் மனம் உடைந்த மகேந்திர பல்லவர் சிறிது காலத்திலேயே உடல்நலம் குன்றி உயிர் துறந்தார். அதன் பின்னர் பட்டத்துக்கு வந்த மாமல்ல நரசிம்மவர்மர், பல்லவ சாம்ராஜ்யத்துக்கு ஏற்பட்ட அவமானத்துக்குப் பழிக்குப் பழி வாங்க முடிவு செய்தார். பல்லவ நாட்டின் மானம் காக்கப்பட வேண்டுமானால் புலிகேசியின் தலைநகரான வாதாபியைத் தீ வைத்துக் கொளுத்தவேண்டும் என்று சேனாதிபதி பரஞ்சோதியுடன் சேர்ந்துகொண்டு திட்டமிட்ட நரசிம்ம வர்மர் முழு மூச்சாக படை திரட்ட முற்படுகிறார்.
தமிழகத்தில் இருந்து பல நூறு மைல்கள் படையெடுத்துச் சென்று ஒரு பெரும் சாம்ராஜ்யத்தையே கைப்பற்றுவது என்பது சாதாரண விஷயமா? அதற்குப் பெரும் படையைத் திரட்ட வேண்டும். எத்தனையோ நதிகள், காடுகள், மலைகளைத் தாண்ட வேண்டும். வாதாபி கோட்டை வலுவானது. எனவே நீண்ட கால முற்றுகையை சமாளிக்கக்கூடிய வகையில் உணவு, மருந்துகள், தளவாடங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு ஒன்பது ஆண்டுகள் படை திரட்டுவதில் செலவிட்டதுடன் அப்படைக்குக் கடுமையான பயிற்சியும் அளித்த பல்லவ மன்னர் நரசிம்மவர்மர் வாதாபியை நோக்கி அந்தப் பெரும் படையுடன் புறப்படுகிறார். பல மாதங்கள் நகர்ந்து சென்ற அந்தப் பெரும் படை வடபெண்ணை நதியைக் கடந்து வாதாபியை நெருங்குகிறார்.
ஓம்..
வளமான வாழ்விற்கு வழிகாட்டும் வேதங்கள்
பிரம்மாண்டமான அந்தக் கோட்டையையும் வானளாவ ஓங்கி நிற்கும் அதன் மதில் சுவர்களையும் கண்டபின்பே எப்பேர்ப்பட்ட பெரிய காரியத்தில் தாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்பதை அவர்கள் உணர்ந்தனர். அந்தக் கோட்டையின் பரப்பும், வலிமையும் அவர்களுக்கு சாளுக்கியர் களால் பல ஆண்டுகளுக்குத் தங்களின் முற்றுகையை எதிர்த்து தாக்குப் பிடிக்க முடியும் என்பதை உணர்த்தியது.
வாதாபிக் கோட்டையை முற்றுகையிட்டு படைகள் முகாமிட்ட பின்னரே நிலைமையின் இந்தக் கடுமையை அவர்கள் உணர்ந்தனர். மாதக் கணக்கில் முற்றுகை நீடித்தால் உணவும், குடிநீரும் தீர்ந்துபோய் பல்லவ வீரர்கள் திண்டாடுவார்கள். அந்தச் சமயத்தில் போர் தொடுத்தால் கோட்டைச் சுவரின் பாதுகாப்பில் இருந்தபடி வெட்ட வெளியில் இருக்கும் இவர்கள் மீது சாளுக்கியப் படை ஆயுத மழை பொழியும். வெற்றியோ, தோல்வியோ பல்லவர்ப் படையின் பெரும்பகுதி நாசமாகி விடும்.
மெய்க்காவலர் சிலருடன் கோட்டையை ஆராய்ந்தபடி சுற்றி வந்த பரஞ்சோதி, பிரதான வாசலின் முன்பு வந்ததும் நின்றார். அதன் உச்சியில் இருந்த விநோத வடிவம் அவரை ஈர்த்தது. தன் வீரர்களை அழைத்து, ''அது என்ன?” என்று கேட்டார்.
'அது கணபதி விக்ரகம். அதுதான் இந்தக் கோட்டையின் காவல் தெய்வம்" என்றான் ஒரு வீரன்.
வீரனின் பதிலை அடுத்து அவர் மனதில் சட்டென்று ஒரு சிந்தனை ஓடிற்று, பாரதப் போருக்கு முன்பாக தருமன் எதிரிப் படையிலிருந்த பீஷ்மர், துரோணர் போன்றவர்களிடம் அனுமதி வேண்டினார். இலங்கைப் போருக்கு முன்பாக ராமர் சூரிய பகவானிடம் அனுமதி கோரினார். இருவரும் தர்மத்தின் பெயரால் ஆசியும் அனுமதியும் கோரினர். ஆசீர்வதிக்கப்பட்டு வெற்றியும் பெற்றனர்.
கணபதி முன்பு தொலைவில் நின்றபடி கண் மூடி, "வாதாபி கணபதிப் பெருமானே! இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகப் பழி தீர்த்துக் கொள்ளவே நாங்கள் போரிடுகிறோம். தர்மம் எங்களிடம் உள்ளது என்று கருதுவீராயின் எங்கள் பக்கம் நின்று வெற்றியை அருள்வீராக. போர் முடிந்த பின்னர் உங்களை எடுத்துச் சென்று
தமிழ்நாட்டில் பிரதிஷ்டை செய்து உங்களுக்கென்று தனி ஊரே ஸ்தாபிப்பேன். இது சத்தியம்" என்று பரஞ்சோதி வேண்டினார். கணபதியை இவ்வாறு வேண்டிக்கொண்டு கடும் போர் தொடுத்தார் பரஞ்சோதி. போரின் முடிவில் சாளுக்கியப் படைகள்
அடியோடு அழிந்து, புலிகேசியும் கொல்லப்பட்டு, வாதாபி நக*
தீக்கிரையாக்கப்பட்டது. உலக வரலாற்றில் இவ்வாறு போரின்போது எரிக்கப்பட்டவை நான்கு நகரங்கள் மட்டுமே. ராவணனை எதிர்த்து அனுமார் நடத்தியது வரலாற்றில் 'லங்காதகனம்' என்று பெயர் பெற்றது சிறு படையுடன் பாரசீகப் பேரரசை வென்ற அலெக்சாண்டர் அதன் தலைநகரான 'பெர்சிபோலிஸ்' பட்டணத்தை தீயிட்டு எரித்தான். பாமினி சுல்தானால் விஜயநகரம் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப் பட்டது. பல்லவ நரசிம்மன் 'வாதாபி தகனம்' நடத்தி வரலாற்றில் அழியா இடம் பிடித்தான்.
போர் முடிந்ததும் பரஞ்சோதி தனது சேனைத் தலைவர் பதவியை உதறினார். கணபதி விக்ரகத்தை தனது சொந்த ஊரான 'திருச்செங் காட்டாங்குடிக்குக் கொண்டு சென்று, அங்கு ஒரு பெரிய கோயிலை எழுப்பினார். அந்த ஊர் இப்போது 'பிள்ளையார்பட்டி என்ற பெயருடன் வழங்கி வருகிறது
வாதாபியிலிருந்து வந்ததால் 'வாதாபி கணபதி' என்றும். பரஞ்சோதிக்கு அருள் புரிந்ததால் 'பரஞ்சோதி விநாயகர்' என்றும். கேட்டதைக் கொடுத்ததால் 'கற்பக விநாயகர்' என்றும் பல பெயர்களால் அங்குள்ள விநாயகர் இன்றளவும் போற்றப்படுகிறார்.
அன்று முதல், விநாயகர் வழிபாடு தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் பரவியது. எந்த ஒரு விசேஷத்திலும் முதலில் விநாயக வழிபாடு செய்வதும், கச்சேரிகளில்கூட 'வாதாபி கணபதிம் பஜே' என்று தொடங்குவதும் அன்றிலிருந்து வாடிக்கையாகவே ஆகிவிட்டது.
வரலாற்று ஆசிரியர்கள் பலரும் வாதாபி போருக்குப் பின்னரே கணபதி வழிபாடு தமிழ்நாட்டில் பரவியது என்று குறிப்பிடுகின்றனர். கணபதி வழிபாடு புகழ் பெற்று முதல் இடம் பிடித்தது பரஞ்சோதி வாதாபியை வென்ற பிறகுதான் என்றாலும், அதற்கு முன்பிருந்தே விநாயகர் வழிபாடு நாடு முழுவதும் இருந்துதான் வந்தது.
ஓம்..
வளமான வாழ்விற்கு வழிகாட்டும் வேதங்கள்
சங்க காலப் புலவர்களில் முதன்மை பெற்ற பெண்பால் புலவரால அருந்தமிழ் மூதாட்டி ஒளவையார் தலைசிறந்த விநாயகர் பக்தையாக விளங்கியவர்தான்.
அணுகுவதற்கு எளியவர் என்றே ஆகமங்கள் விநாயகரைப் பற்றி குறிப்பிடுகின்றன. மற்ற தெய்வங்களை ஆவாகனம் செய்வது போல கடுமையான நிபந்தனைகள் எதுவும் கணபதி பூஜையில் இல்லை. அரிசி மாவு, மஞ்சள், செம்மண், பசுஞ்சாணம் என்று எது. கிடைக்கிறதோ அதைக் கொண்டு கையினால் பிள்ளையாரைப் பிடித்து வைத்து பூஜை செய்து விடலாம்.
'வெச்சா பிள்ளையார். வழிச்சு எறிஞ்சா சாணி என்பது கிராமப்புற பழமொழி 'வெல்லப் பிள்ளையாரை கிள்ளி அவருக்கே படையலா?" என்பதும், 'பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காக முடிந்தது' என்பதும் காலம் காலமாக வழங்கி வரும் பழமொழிகள் அல்லவா!
தேவர்களும்,அகரர்களும் பாற்கடலைக் கடைத்தபோது, திடீரென மலை கடலினுள் மூழ்கியது. மகாவிஷ்ணு ஆமையாக வடிவம் எடுத்து வந்து மலையைத் தாங்குகிறார். அடுத்து ஆலகால விஷம் வெளிப்படுகிறது. சிவபெருமான் தோன்றி அதை விழுங்கி விடுகிறார். இப்படி அடுத்தடுத்து இடையூறுகள் ஏற்படுவது கண்டு தேவேந்திரன் கலங்கி நிற்கிறான்.
அப்போது அங்கு வந்த நாரதர், "இந்திரா! கணங்களுக்கெல்லாம் அதிபதி விநாயகர், எந்த ஒரு நல்ல காரியம் செய்வதானாலும் முதலில் விநாயகரைப் பூஜித்துவிட்டுத்தாள் தொடங்க வேண்டும். உங்கள் பரபரப்பில் நீங்கள் அதனை மறந்து விட்டீர்கள்" என்று தினைவுபடுத்துகிறார்.
கடற்கரையில் நின்று கொண்டிருக்கையில் பூஜை சாமான்களுக்கு எங்கே போவது? சட்டென்று தேடிய தேவராஜன் அங்கிருந்த கடல் நுரையைத் திரட்டி ஒரு உருண்டையாக்கி அதிலேயே பிள்ளையார் பிடித்து வழிபட்டான். அதன் பின்னரே பாற்கடல் முழுமையாகக் கடையப்பட்டு அமிர்தம் வெளிப்பட்டது.
காவிரியாறு வலப்புறமாக சுழித்துக் கொண்டு ஓடுவதால் திருவலஞ்சுழி என்ற பெயரால் பிரசித்தி பெற்று விளங்கும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள விநாயகர் வெறும் கடல் நுரையால் ஆனவர். அதனால், இவருக்கு இங்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. இவருக்கு வெறும் பச்சைக் கற்பூரம்தான் சார்த்தப்படும். பச்சைக் கற்பூரத்தைத் தூளாக்கி கையினால் மேலாக தூவுவார்களே தவிர தொட்டு சார்த்துவது கிடையாது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் அருகே கேரளபுரம் என்ற ஊரில் நிறம் மாறும் விநாயகர்" என்ற தொன்மையான கோயில் ஒன்று உண்டு இக்கோயிலில் உள்ள கணபதி விக்ரகம் ஆவணி முதல் தை வரை ஆறு மாதங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். மாசி முதல் ஆடி வரையில் ஆறு மாதங்கள் கறுப்பு நிறத்தில் இருக்கும். நமது முன்னோர்களின் படைப்புத் திறனுக்குச் சான்றாக விளங்கும் இந்த விக்ரகத்தைக் காண நாடு முழுவதும் இருந்தும் ஏராளமானவர்கள் வருகின்றனர்.
ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தவர் திருநாரையூர் நம்பி எனப்படும் நம்பியாண்டார் நம்பி. இவர்தான் ஊர் ஊராக அலைந்து தேடி தேவார, திருவாசக ஓலைச் சுவடிகளைத் தொகுத்தவர். பிறவியிலேயே வாய் பேச முடியாத ஊமையாய்ப் பிறந்த இவர், சிறு வயது முதல் அவ்வூரில் உள்ள விநாயகரை வலம் வந்து அவர் அருளால் பேசும் திறனும், கவிபாடும் ஆற்றலும் பெற்றவர்.
"பொல்லாப் பிள்ளையார் அருள் பெற்ற திருநாரையூர் நம்பி" என்றே இவரைப் பற்றி வரலாறு குறிப்பிடுகிறது. அந்தத் திருக்கோயில் இப்போதும் பொல்லாப் பிள்ளையார் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.
உண்மையில் அதன் பெயர் 'பொல்லாப் பிள்ளையார்' என்பது அல்ல கல்லில் உளி மூலம் செதுக்குவதைப் பொளித்தல் என்கிறோம். அப்படி பாறையில் பொளிக்கப்படாமல் தானாக வடிவம் அமைந்ததால் அவருக்கு 'பொள்ளாப் பிள்ளையார்' என்ற பெயர் ஏற்பட்டது. இது மக்களிடையே காலப்போக்கில் மருவி 'பொல்லாப் பிள்ளையார்' என்று வழங்குகிறது.
ஓம்..
இந்தியா முழுவதுமே கணபதி வழிபாடு உள்ளபோதிலும் இதில் முதன்மை இடம் வகிப்பது மகாராஷ்டிர மாநிலம்தான். வெள்ளையர் நம் நாட்டை ஆண்டபோது அவர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டி பாலகங்காதர திலகர், வீர விக்னேஷ்வரர் வழிபாட்டைத் தொடங்கினார். இன்று தமிழகம் முழுவதும் 30 அடி, 50 அடி உயர விநாயகர் சிலைகள் எழுப்பப்பட்டு ஊர்வலமாகச் சென்று கடலில்
கரைக்கப்படும் பழக்கம் உள்ளது. இது திலகரால்தான் தொடங்கப்பட்டு நாடு முழுவதும் பரவியது. சுதந்திரப் போரிலும் கணபதிவழிபாடு இதன் மூலம் முக்கியப் பங்காற்றி உள்ளதை அறிய முடியும்.
வளமான வாழ்விற்கு வழிகாட்டும் வேதங்கள்
மராட்டிய மாநிலம் புனே அருகில் உள்ளது புகழ் பெற்ற மயூரேசஸ்தலம். இதற்கு இப்போது 'மோர்தாம்' என்பது பெயர்.
புதுவையில் ஆண்டின் 365 நாட்களைக் குறிக்கும் 365 கோயில்கள் உண்டு அதில் கணபதி கோயில்கள்தான் அதிகம். பிரெஞ்சு கவர்னராக இருந்த டியூப்ளே காலம் முதற்கொண்டு புகழ் பெற்று விளங்குவது புதுவையில் உள்ள 'மணக்குள விநாயகர் ஆலயம்'. இதன் அருகே உள்ள குளம் நீரின்றி வறண்டு மணலாகக் காணப்படுவதால் இதனை மணல்குளம் என்றழைத்தனர் என்றும். அதன் கரையில் உள்ளதால் இவர் மணக்குள விநாயகர் ஆனார். என்பதும் செவிவழிச் செய்திகள்.
பிரெஞ்சு கவர்னராக இருந்த மார்ட்டின் என்பவர் இந்தக் கோயிலில் வழிபாட்டுக்குத் தடை விதித்தார். இதனால் கோபம் கொண்ட நெசவாளர்கள் கும்பலாக ஊரை விட்டே வெளியேறவும் ஒட்டு மொத்த வியாபாரமும் படுத்து விட்டது. மிரண்டு போன கவர்னர் அவசர அவசரமாக தடை உத்தரவை நீக்கியதுடன் அவரே முன் நின்று திருவிழாவை நடத்தி வைத்தார்.
திருச்சி மலைக்கோட்டையில் உள்ள உச்சிப் பிள்ளையார், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள 30 அடி உயர முக்குறுணிப் பிள்ளையார் ஆகியவை உலகப் பிரசித்தி பெற்றவை.
ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரம்மாண்டமான 'கடலே காளு விநாயகர்' வரலாற்றுப் பிரசித்தி பெற்றவர். கடலை, சுண்டல் நைவேத்யம் இவருக்குப் படைக்கப்படுவதால் இந்தப் பெயர் இவருக்கு ஏற்பட்டது. இவரது ஆலயத்தில்தான் விஜய நகரம் சிற்றரசாக இருந்த சமயத்தில் நரச நாயக்கனின் தளபதியாக இருந்த கிருஷ்ண தேவனை ரங்க தீட்சிதர் வரவழைத்து ஒரு குறிப்பிட்ட நாளில் விநாயகர் முன்பு ராசிக் கட்டம் வரைந்து நவக்கிரகங்களை ஆவாகனம் செய்து மூலிகைகளாலான முடியைச் சூட்டினார்.
''கிருஷ்ண தேவா! மணி மகுட ஆசையில் அரச வம்சத்தினர் ஒருவரை யொருவர் கொலை செய்யவும் துணிந்து விட்டனர்.
வம்சம் ரத்தக்கறை பட்டுவிட்டது. இனி அது ஆட்சியில் நீடிக்காது. இந்த ஆட்சி மாற வேண்டும் கிரகங்கள் இன்று முதல் உனக்கு சார்பாக வேலை செய்யத் தொடங்கி விட்டன. இன்னும் ஒரே ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நீ அரசனாவாய். உன் தர்மராஜ்யத்தில் இந்த அரசு பேரரசாக விரிவடையும்." -இவ்வாறு ரங்க தீட்சதரால் வாழ்த்தப்பட்ட கிருஷ்ணதேவன் ஒரே ஆண்டில் விஜயநகர அரசர் ஆனார். கிருஷ்ணதேவராயர் என்ற பெயருடன் அவரது கீர்த்தி பாரதம் முழுவதும் பரவியது. தென்னிந்தியா முழுவதும் அவரது கொடி பட்டொளி வீசி பறந்தது.
ஸ்வஸ்திக் (H) எனப்படும் சின்னம் விநாயகரின் சின்னமாகும். இது ஓம் எனப்படும் பிரணவச் சொல்லின் திரிபு உருவம் என்பாரும் உண்டு. பின்னாளில் சமணரும். பௌத்தரும்கூட இதனைக் கையாண்டுள்ளனர். எனினும், இரண்டாவது உலகப் போரின் காரண கர்த்தாவான சர்வாதிகாரி ஹிட்லர் இதனைத் தனது கொடியாகவே வைத்திருந்தான்.
விநாயக புராணத்தில் ஏராளமான கதைகள் உண்டு. அவற்றை யெல்லாம் சொல்லப் புகுந்தால் பெருங்கதையாக நீண்டு விடும். முருகப் பெருமான் வள்ளியை மணக்கப் பேருதவி செய்தவர் விநாயகர் என்பதாலேயே கல்யாணம் ஆகாதவர்கள் விநாயகப் பெருமானை வணங்கினால் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நமது மக்களின் தொன்றுதொட்ட நம்பிக்கையாகிவிட்டது.
சிரியா நாட்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழ் வாராய்ச்சி செய்தபோது கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர் சிலை ஒன்று கிடைத்துள்ளது. இதனால் நெடுங் காலத்திற்கு முன்பு இப்பகுதியில் விநாயகர் வழிபாடு நடைபெற்றிருக்கலாம். அல்லது தரை மார்க்கமாக இந்தியாவிலிருந்து வாணிகம் செய்வதற்கு வந்தவர்கள் இதனை நிறுவி இருக்கலாம் என்பது அவர்களின் கணக்கு.
விநாயகர் வழிப்பாட்டிலும் பல்வேறு வகைகள் உண்டு. கருங்கல், பொன், வெள்ளி, செம்பு இவற்றால் ஆன வடிவங்கள் அபிஷேக. ஆராதனைகளுக்கு ஏற்றவை. மரம், சுதையாலான உருவங்கள் மற்றும் படங்கள் மலர்களால் அர்ச்சிக்கவும், வழிபடவும் ஏற்றவை. மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் ஆனவை வழிபட்ட பின்னர் நீரில்இட ஏற்றவை, வெள்ளெருக்கம் வேரில் செய்யப்பட்ட விநாயகர் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவர் என்பது சாஸ்திரம் கூறும் தகவல்
வளமான வாழ்விற்கு வழிகாட்டும் வேதங்கள்
ஆவணி மாதம், ஹஸ்த நட்சத்திரம், வளர்பிறை நான்காம் நாள். (சதுர்த்தி) அன்று விநாயகர் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
அதனாலேயே ஆண்டுதோறும் இந்த தினம் விநாயகர் சதுர்த்தி
விழாவாக கொண்டாடப் படுகிறது.
விரதம் இருப்பவர்கள் மாதந்தோறும் வளர்பிறை சதுர்த்தி தினங்களில் விரதம் இருப்பார்கள் ஆனால், மாதந்தோறும் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தியே 'சங்கடஹர சதுர்த்தி" எனப்படுகிறது. அந்த நாளில்தான் ஓய்வாக இருந்து பக்தர்களின் குறைகளை விநாயகர் விசாரிப்பாராம்.
பிள்ளையாரை வழிபட தனியாக எதுவும் தேவையில்லை. எந்த
செலவும் இன்றி எங்கும் கிடைக்கும் அருகம்புல். எருக்கம் பூ இவற்றை அவருக்குப் படைத்தாலே போதும் எல்லா மரத்தடிகளும் அவருக்கு உகந்தவைதாள் என்றாலும் வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் விநாயகரே மிக விசேஷமானவர். திருவண்ணாமலையில் அண்ணாமலையார் ஆலயத்தில் கோபுரத்து இளையனார் சந்நிதிக்குப் பக்கவாட்டில் உள்ளடங்கி
உள்ளது வன்னி மரத்துப் பிள்ளையார் சந்நிதி. மொத்தமே 3, 4
இடங்களிலேதான் இப்படிப்பட்ட வகையில் பிள்ளையார் உள்ளார்.
ஆந்திராவில் ஸ்ரீசைலத்தில் புல்லாங்குழலுடன் கூடிய விநாயகர் சந்நிதி உள்ளது கர்நாடக மாநிலம் துவார சமுத்திரத்தில் பொய்சளேசுவரர் கோயிலில் நடனமாடும் விநாயகர் (நர்த்தன கணபதி) ஆலயம் உள்ளது.
திருச்சி மாவட்டம், உத்தமர் கோயில் அருகே உள்ள பிட்சாண்டார். கோயில் நகரில் உள்ள பாண்டுரங்கள் சந்நிதியில் நெற்றியில் நாமத்துடன் இருப்பார் விநாயகர். இத்தகைய வடிவம் 'தும்பிக்கை ஆழ்வார்' என்ற பெயருடன் வைணவர்களால் வணங்கப்படுகிறது.
மராட்டிய மாநிலம், மோர்நாம் நகரில் மயில் வாகனத்துடனும், திருவொற்றியூரில் சிம்ம வாகனத்துடன் பஞ்சமுக கணபதியாகவும், கடலூர் மாவட்டம் சென்னப்ப நாயக்கன் பாளையத்தில் குதிரை வாகனத்துடனும் காணப்படும் இவர். சுசீந்திரத்தில் இரட்டைஎலிகளை வாகனமாகக் கொண்ட நீலகண்ட விநாயகராக விளங்கு கிறார். வித்தியாசமான விநாயகரின் தோற்றங்களுக்கு இவை சில உதாரணங்கள்.
விநாயகரை வழிபட தனி விரதங்களோ, நியமங்களோ தேவை இல்லை. அதனாலேயே ஏராளமான மக்களை இவரால் ஈர்க்க முடிந்தது. தலையில் குட்டிக் கொள்வதும், தோப்புக்கரணம் போடு வதும் என சின்னச் சின்ன வழிபாடுகளே இவருக்குப் போதுமானவை.
இன்னல் நீக்கும் இறைவன் என வேதங்களாலேயே போற்றப் பட்டவர் இவர். மகாபாரதம் இயற்றிய வேதவியாசர் அதனை எழுதக் கணபதியின் உதவியை நாடினார் என்பதும், விநாயகர் அதன் சிறப்பினை உலகறியச் செய்ய தமது ஒரு தந்தத்தையே ஒடித்து எடுத்து அதைக் கொண்டு பாரதத்தை எழுதினார் என்பதும் புராணங்கள் கூறும் சுவையான தகவல்கள்.
பொன்னி நதி அகத்தியரை அவமானப்படுத்தவே, கடும் சினம் கொண்ட அந்தக் குறுமுனி தனது கமண்டலத்திலேயே காவிரியை அடக்கி விடுகிறார். இதனை அறிந்த கணபதி காக்கையாக வடிவம் எடுத்து வந்து தட்டி விட்டாராம் கமண்டலத்தை. அதன் பின்னரே காவிரி முன்போல பெருகி ஓடியதாம்.
இப்படி ஏராளமான கதைகள் இந்த முழு முதற் பொருளான ஓங்கார கணபதியைப் பற்றி உண்டு. ஆதிசங்கரர், ஒளவையார் முதல் இப்போதைய காலகட்டம் வரை எதைத் தொடங்கினாலும் முதலில் விநாயகரை வணங்கிவிட்டு தொடங்குவதே மரபாக இருந்து வருகிறது.
நாமும் அதனைப் பின்பற்றி இந்த முதல் அத்தியாயத்தையே விநாயகருக்கு அர்ப்பணித்துள்ளோம். அவரைப் பற்றிய ருசிகரமான தகவல்களையே வழிபாடாக எண்ணிப் படித்துவிட்டு அடுத்த அத்தியாயத்திற்குச் செல்வோம்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக