🌍🌏🌎மகத்தான வாழ்வளிக்கும் மகாசக்தி பீடங்கள் 51🌍🌏🌎

 

🌍🌏🌎மகத்தான வாழ்வளிக்கும் மகாசக்தி பீடங்கள் 51🌍🌏🌎

11 பீடம்அட்டஹாசம்

பீடத்தின் பெயர்

அட்டஹாசம்

அங்கு விழுந்த தேவியின் உடல் பகுதி பீட சக்தியின் நாமம்

கீழ் உத புல்லரா

க்ஷேத்திரத்தைக் காக்கும் பைரவர் விஸ்வேசர் க்ஷேத்திரம் உள்ள இடம் அஹமத் பூர் கட்வாலாப்பூர் (Maldah

Shalidah) பாதை மால்டாவிலிருந்து ஷாய்டா ரயில் மார்க்கத்தில் உள்ளது.

அக்ஷர சக்தியின் நாமம் ஏம்(Yem) ஏகபாதா தேவி எனும் ரேவதி தேவ்யை நமஹ.



த்யானம்

ஏகாராக்யா ரேவதீ ஸ்யாத் தசாஸ்யா குண்டமாலினீ ரக்தா விம்ஸத்புஜா ஸிம்ஹவாஹ்னா பால லோசநா கரைர்தத்தே சக்ர சூல பாச கட்க கமண்டலாந் அக்ஷஸுத்ரம் ச சிந்முத்ராம் புகண்டீம் முத்ராம்வரம் வாமே தத்தே கரைச்சங்கம் பிண்டீந்தும்ருக கேடகாந் கபாலம் தஹநம் சோஷம் தண்டம் சைவ கதாபயெள்

ஏகார தேவி(Yem) பத்து திருமுகங்களுடன் அருள்பவள்.கபாலஓடுகளையும்,எலும்புகளையும் மாலையாக அணிந்தவள். சிவந்தநிறத்தினள்.நெற்றிக்கண்ணோடு அருள்பவள். தன் இருபதுகரங்களிலும் பல்வேறு வகையான ஆயுதங்களை தரித்தருளுவாள். சிம்மவாஹினி.

இந்த ஏம்(Yem) பீஜ த்யானத்தாலும் மானஸீகமாக வெண்ணிற மலர்களால் அர்ச்சித்தாலும் வாக்ஸித்தி ஏற்படும். அனைத்துக் பகலைகளும் கற்க வாய்ப்பு கிட்டும். உள்ளம் அதற்குத்தான் எத்தகைய ஆற்றல்! எத்தகைய வலிமை!

உள்ளம் எண்ணாது, சிந்திக்காது, அமைதியாக இருக்கும் நேரமேது? உடல் உறங்கும்போதும் அது விழித்திருக்கும். அத்தகைய ஆற்றல் படைத்த உள்ளத்தில் எப்பொழுதும் அந்த மகா சக்தியை தியானம் செய்யும் எண்ணம் உதித்தால் பேரின்பம்தான். அன்னை அணு முதல் அண்டம் வரையுள்ள அனைத்திலும் நிறைந்திருக்கிறாள். அண்டத்தை ஆளும் பராசக்தி போகத்தையும், முக்தியையும் அளிப்பவள். நம் எண்ணம் போல வாழ்வளிப்பவள். போகத்தை நுகர விழையும் அவாவுள்ள வரையில் பிறவிகளையும், பின்னர் முக்தி வேண்டுவோர்க்கு சிவகதிக்கு வழியும் காட்டி அருள்கிறாள். சக்தியின் வடிவங்கள் எண்ணிறந்தவை. இந்த பீடசக்தியானவள் அட்டஹாச பீடத்தில் 'புல்லரா சக்தி' என்ற பெயரில் அழகுடன் காட்சி தருகின்றாள்.

மகாமாயே!விஸ்வேசரின் மனைவியே!பட்டுப்போன்று ஒளிவீசும் உன் அழகிய திருமுகத்திற்கு அழகு செய்வது போல தோன்றும் புன்சிரிப்பிற்கு உவமை கூறிட முடியுமோ? உன் பெருங்கருணை அட்டகாசம் செய்யும் கொடிய பகைவரையும் வெற்றி கொண்டு வெட்கித் தலைகுனியச் செய்யும். கட்டுக்கு அடங்காது அலையும் மனதை ஒருமுகப்படுத்தும். அட்ட மா சித்திகளையும் அடைய வல்ல பெருநிலை தரும். அளவற்ற பேரானந்தத்தை அளித்து. அதனையும் கடக்க வல்ல ஞானாமுதம்பொழியும்! ஆடம்பரமான மாய வாழ்வில் ஒரு கணமும் பற்றில்லாது நின் திருவடிகள் இருக்கச் செய்யும் பெரும் பாக்கியத்தை அருள்க!

உலகில் எங்கும் சக்தி; எதிலும் சக்தி: உலகப் பொருள்கள் அனைத்தும் சக்தியின் வடிவங்கள், உலகெலாம் நிறைந்து நின்று இயக்கும் சக்தியே அன்னை, அந்த அன்னையே சிவசக்தி. அவளைப் பணிந்து போற்றி அருள் பெறுவோமாக!

ஓம்..


ஞானமருளும் ஞானப்ரசூனாம்பிகை.

 ஸ்வர்ணமுகி என்றழைக்கப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில்
அமைந்துள்ள திருத்தலம் திருக்காளத்தி! கண்ணப்பர் அப்பிய கண் தாங்கி, சிவபெருமான் திருக்கோலம் காட்டும் திருக்காளத்தி! பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாக, வாயுலிங்கத் தலமாக ஒளிரும் திருக்காளத்தி! ஸ்ரீ எனும் சிலந்தியும், காளம்எனும் பாம்பும், ஹஸ்தி எனும் யானையும் வழிபட்டு உய்வு பெற்ற திருக்காளத்தி! உத்தரவாகினியாகப் பொன்முகலி ஆறு பாயும் திருக்காளத்தி! ராகு,கேது ஆகிய சாயா கிரகங்கள் தீமை அடக்கப்பட்டு, நல்ல கிரகங்களாக நன்மை வழங்கும் திருக்காளத்தி ஞானம் தரும் நாயகியாக அம்மன் அருள் வழங்கும் திருக்காளத்தி சைவ நால்வரும் பாடிப் பரவி வழிபட்ட திருக்காளத்தி! 'கயிலை பாதி; காளத்தி பாதி' என்று நக்கீரர் பெருமையுடன் போற்றிய
திருக்காளத்தி!




கார்த்திகைத் தீபத் திருநாள் சிவபெருமானுக்கான நாள். அன்று எல்லா சிவன் கோயில்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்படும் உயரமான இடத்தில் தீபமேற்றினால் ஊருக்கெல்லாம் தெரியும் என்பதற்காக, பனை மரத் தண்டு நட்டு அல்லது உயரமான தண்டு நட்டு, அதன் மீது தீபம் ஏற்றுவார்கள். சொக்கனுக்கான பனை சொக்கப்பனை. இது காலப்போக்கில் சொக்கப்பானை என்று ஆகிவிட்டது).திருக்காளத்தியிலும் சொக்கப்பனை கொளுத்தப்படும் இடமே, நாம்பார்க்கும் மண் பள்ளம்.எள்ளை இடித்துப் பொடியாக்கி, அதையே நீர்விட்டுப் பிசைந்து அசுல் தீபமாக்கி, அதில் எண்ணெய்த் திரியிட்டு, பனைமரம் நட்டு. அதன் மீது வைத்து ஏற்றுவார்கள். அகல் விளக்கும் சேர்ந்து எரிந்துபோகும். அந்தக் கரியை எடுத்து சுவாமிக்குக் கறுப்புப் பொட்டாக அணிவிப்பது வெகு விசேஷம். ஐயனுக்கு வலப்புறத்தில் அம்மன் எழுந்தருளியிருக்கும் ஒரு சில கோயில்களில் இதுவும் ஒன்றாகிறது.

ஞானப்பூங்கோதை ஞானக்கொழுந்து, ஞானசுந்தரி, ஞானப் பேரொளி, சிற்புட்கேசி, வண்டார் குழலாள் என்று பற்பல பெயர்களில் அழைக்கப்படும் அம்பிகையின் சந்நிதி. உள்ளே நுழையும் இடத்தில் உயரமான அலங்காரத் திருவிளக்கு. சிம்ம வாகனம். இதைத் தொட்டு வணங்கச் சொல்கிறார்கள். ஈசனின் சந்நதியில் நந்திதேவரைத் தொடக்கூடாது. ஆனால், அம்பாள் சந்நதி சிம்மத்தைத் தொட்டு வணங்க வேண்டும். இவ்வாறு வணங்கினால், நினைத்த காரியம் கைகூடும் என்று நம்பிக்கை.

அம்பாள் சந்நதிக்குள் நுழைகிறோம். நின்ற திருக்கோலத்தில் ஞானப்ரசூனாம்பிகை. இரண்டு திருக்கரங்கள். அம்பிகையின் இடுப்பில் ஒட்டியாண மாகக் கட்டப்பட்டிருக்கும் கேது. அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் தங்கப் பாவாடை சாத்தப்பெறும். அம்பாளுக்கு முன்னால், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்த மேரு. ஞானப்ரசூனாம்பிகை, ஞானமும் அறிவும் வடிவானவள். இவளை வணங்கினால், கிரக தோஷங்கள் தீரும்; அறிவு கூடும்.

அம்பிகை இங்கே ஞானப்ரசூனாம்பிகை ஆனது எப்படி? 

கயிலாயத்தில் ஒரு நாள். சிவ பஞ்சாட்சர மந்திரத்தைத் தனக்கு உபதேசிக்கும்படி,ஐயனிடம் தேவி வேண்டி நின்றாள். ஒப்புக்கொண்ட ஐயனும், அம்மையை மௌன நிலைமைக்குப் போகச்செய்தார். ஆனால், ராஜசகுணம் தலைதூக்கத் தன் பணிப்பெண் மாலினியிடம் தான் உபதேசம் பெற இருப்பதை அம்பிகை கூறிவிட்டாள். இதனால் மானுடப் பெண்ணாகும்படி சபிக்கப்பட்டு பூமிக்கு வந்தாள். நாரத ரிஷி சொன்னதற்கேற்ப, ஸ்வர்ணமுகி நதி தீரத்தை அடைந்து வாயுலிங்கத்துக்கு அருகில் அமர்ந்து தவம் செய்தாள். காற்றைமட்டுமே சுவாசித்து, அகன்ற வில்வ இலைகளால் பூஜித்து, தவம் செய்தாள். தனது தவத்தைக் காக்க, துர்க்கையைக் காவல் வைத்தாள். வேண்டுமென்றே இறையனார் பிரளய வெள்ளத்தை ஏற்படுத்த. துர்க்கை அந்த நீர் முழுவதையும் தன் உள்ளங்கையில் ஏந்திக் குடித்தாள் அம்பாள் கடுந்தவம்புரிய, தை மாதப் பௌர்ணமி அன்று இறையனார் பிரத்தியட்சமாகி, சாத்விக குணம் நிரம்பப் பெற்றிருந்ததன் நாயகிக்குப் பஞ்சாட்சரியை உபதேசித்தார். அம்பிகை, மானுடப் பெண்ணாக, இரண்டு கரங்களுடனே, ஞானப்ரசூனாம்பிகா ஆனாள் ஹஸ்தஸ்த ஸாகர என்றழைக்கப் படும் துர்க்கை (பிரளய சமுத்திரத்தைக் கரத்தால் குடித்தவள்), கருமை நிறம் மாறித் தங்க நிறம் பெற்றாள் அதனாலேயே, கனகதுர்க்கா ஆனாள். அம்பாளை வணங்கித்தொழுகிறோம். சந்நதியைத் தனியாக உள் வலம் வரலாம். கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை.




சந்நதியை விட்டு வெளியே வந்து, மீண்டும் பிராகாரத்தை அடைகிறோம். சந்நிதிக்கு நேர் எதிரில், பிராகாரக் கூரையில் ராசிச் சக்கரம் ஓவியம். அம்பாள் எதிரில் நின்றுகொண்டு, அவரவர் ராசியைப் பார்த்து, அம்பாள் பாதங்களைப் பணிந்து வழிபடுதல் மரபு. அம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாகத் தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூலை இடத்தில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தினடியில் சக்தி வாய்ந்த யந்த்ரம் இருப்பதால் இங்கு அமர்ந்து ஜபம் செய்வது

மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. சிவன் மீது மிகுந்த பக்திகொண்டிருந்த அந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும்பூஜை செய்தது. பாம்பு பூஜை செய்து முடித்த பின்னர் அங்கு வரும் யானை, மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள், தண்ணீர், வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது.

தான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார் என்பதை அறிய ஒரு நாள் அந்த பாம்பு பூஜைக்கு பின்னரும் அங்கேயே காத்திருந்தது. வழக்கம்போல் வந்த யானை, மாணிக்கங்களை தள்ளிவிட்டு பூஜை செய்தது. கோபம் கொண்ட பாம்பு, யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்து, யானை மூச்சு விட முடியாதபடி செய்தது. பரிதவித்த யானை துதிக்கையால் சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்துவிட்டு, பாறையில் மோதி இறந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி இருந்தது.

சிலந்தி கதை : இதேபோன்று, சிவன் மீது பக்தி கொண்டிருந்த சிலந்தி ஒன்றும் அதே சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலினால் சிவனுக்கு கோவில் கோபுரம், பிரகாரம் கட்டி பூஜித்து வந்தது. காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் கட்டியது.

ஒரு முறை சிலந்தி கட்டிய நூல்கோபுரத்தை எரிந்து சாம்பலாகும்படி செய்தார் சிவபெருமான். கோபம்கொண்ட சிலந்தி, எரிந்து கொண்டிருந்த தீபத்தை விழுங்கச் சென்றது. சிலந்தியின் பக்தியை கண்டு வியந்த சிவபெருமான், அதனிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டிய அந்த சிலந்திக்கு முக்தி கொடுத்த
தன்னுடன் ஐக்கியமாக்கிக்கொண்டார் சிவன். இதேபோன்று, தன் மீது கொண்டிருந்த அபரிமித பக்தியால் இறந்த போன யானை, பாம்பு ஆகியவற்றுக்கும் முக்தி அளித்தார் சிவன். இந்த அற்புதங்கள் நிகழ்ந்த தலம்தான் ஸ்ரீ காளஹஸ்தி. இங்கு

லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியை கூர்ந்து கவனித்தால், கீழ்ப்பாகத்தில் யானைத் தந்தங்கள் நடுவில் பாம்பு. பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம்.. ஸ்ரீகாளஹஸ்தி எவ்வாறு உருவானது என்பதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. சிவபெருமான் ஆணைப்படி பிரம்மன் கயிலாயத்தை படைத்த போது அதிலிருந்து ஒரு பகுதி பூமியில் தவறி விழுந்து விட்டது. அந்த

இடமே சீகாளத்தி என்ற இப்போதைய ஸ்ரீகாளஹஸ்தி என்கிறார்கள். சீகாளத்தி என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது என்கிறார்கள்.

கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பாதாள கணபதிகோயில் உள்ளது. ஒரு சமயம் அகத்தியர் சிவபெருமானையும், விநாயகரையும் வழிபட மறந்தார். இதனால் விநாயகரின் கோபத்தால் ஸ்ரீகாளஹஸ்தியை யொட்டி ஓடும் பொன்முகலி என்ற சொர்ணமுகி ஆறு வற்றிவிட்டது. தன் தவறை உணர்ந்த அகத்தியர் விநாயகரை பூஜை செய்து வழிபட்டு விநாயகரின் அருளுக்கு உரியவர் ஆனார் என இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.

காலப்போக்கில் விநாயகர் கோயில் இருந்த பகுதியை விட அதை சுற்றியிருந்த பகுதிகள் எல்லாம் உயர்ந்து விட்டன. அதனால் விநாயகர் கோயில் பாதாளத்திற்கு போய்விட்டது. இதனால் இங்குள்ள விநாயகர், பாதாள கணபதி என்று அழைக்கப்படுகிறார். படிக்கட்டுகள் வழியே 20 அடி கீழே இறங்கிச் சென்று இந்த விநாயகரை வழிபட வேண்டும்.ஸ்ரீகாளஹஸ்தி காளஹஸ்தீஸ்வரர் கோவில் ராகுகேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. ராகு, கேது கிரகதோஷம்,சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள். நீண்டகாலம் தீராத பிரச்னையில் சிக்கி திண்டாடுபவர்கள் இங்கு வந்து ராகுகேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து கொண்டால், பிரச்சினையிலிருந்து விடுபடுகின்றனர். தேவியின் இடுப்பில் காணப்படும் ஒட்டியாணத்தில் கேதுவின் உருவத்தை தரிசிக்கலாம். இத்திருத்தலத்திலுள்ள மூலவருக்கு அருகிலுள்ள விளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டேயிருக்கும். சிவனின் உடலிலேயே பாம்பிற்கு இடமளிக்கப்பட்டுள்ளதால், ராகு கேது



மகத்தான வாழ்வருளும் மஹாசக்தி பீடங்கள்

தோஷம் நீங்க இங்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்படுகின்றது. வாயுப்பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து ஓர் இரவு தங்கி, மறுநாள் காலை பூஜைகள் செய்து வழிபட்டால் அப்படிப்பட்ட நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்.

இக்கோயிலின் மற்றொரு தனிச்சிறப்பு, பொதுவாக சூரிய, சந்திர கிரகண காலங்களில் எல்லா கோயில்களும் மூடப்படும். ஆனால் இத்திருத்தலத்தில் மட்டும்தான் அப்பொழுது சிறப்புப்பூஜைகள் செய்யப்படும்.

'காளஹஸ்தீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் இத்தலம் அப்பிரதக்ஷண வலமுறையில் அமைந்துள்ளது. 2 கால்களை நிறுத்தி சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய மண்டபம் சுவரோரமாகவுள்ளது; கவனித்தால்தான் தெரியும். பலபேர், 'காளத்தி சென்று வந்தேன்' என்று சொன்னால், 'இரண்டு கால் மண்டபம் பார்த்தாயா? என்று கேட்கும் வழக்கம் உள்ளது. இரு கொடிமரங்களில் ஒன்று கவசமிட்டது; மற்றொன்று ஒரே கல்லால் ஆன 60 அடி உயரமுள்ள கொடி மரமாகும். இங்குள்ள சரஸ்வதி தீர்த்தத்தை, இயற்கையில் பேசவராத குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்கு பேச வரும் என்ற நம்பிக்கை உள்ளது. சுவாமி மீது தங்கக் கவசம் (பார்ப்பதற்கு பட்டைகளாகத் தெரிவது) சார்த்தும்போதும் எடுக்கும்போதும் கூட சுவாமியைக் கரம் தீண்டக்கூடாது. இக்கவசத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத் திருமேனி மிகவும் உயரமானது; இதன் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இரு தந்தங்களும், மேற்புறத்தில் ஐந்துதலை பாம்பு வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அழகுற அமைந்துள்ளன. சிவலிங்கத்தின் மேற்புறம் ஐந்து தலை நாகம் போலவே காட்சி தருகிறது. கருவறை அகழி அமைப்புடையது. மூலவர் எதிரில் கதவருகில் உள்ள இரு தீபங்கள் காற்றினால் மோதப்பெற்றதுபோல் எப்போதும் அசைந்துகொண்டு; இது வாயுத்தலம் என்பதை நிதர்சனமாகக் காட்டிக்கொண்டிருக்கிறது.

கண்ணப்பரால் அபிஷேகம் செய்யப்பெற்ற மூர்த்தியாதலின் இச்சந்நிதியில் திருநீறு தரும் மரபில்லையாம்; பச்சைக்கற்பூரத்தைப் பன்னீர்விட்டு அரைத்துத் தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்து தரிசிப்போருக்கு தருகின்றனர். (நாம் திருநீற்றுப் பொட்டலம் வாங்கித் தந்தால் அதை சுவாமி பாதத்தில் வைத்து தருகிறார்கள்.) மூலவருக்கு கங்கைநீரை தவிர (சுவாமிக்கு மேலே தாராபாத்திரமுள்ளது) வேறெதுவும் மேனியில் படக்கூடாது. பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே. சர்ப்ப தோஷம் முதலியவை நீங்கும் தலமாதலின் இங்கு ராகுகால தரிசனம், ராகுகால சாந்தி முதலியனவிசேஷமாகச் சொல்லப்படுகிறது.இக்கோயிலில் உச்சிகாலம் முடித்து நடைசார்த்தும் வழக்கமில்லை; காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கின்றது. நாள்தோறும் நான்கு கால பூஜைகளே உள்ளன. அர்த்தஜாமப் பூஜை இல்லையாதலின், சாயரட்சை பூஜையுடன் முடித்து, இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாளை பள்ளியறையில் அப்படியே எடுத்துக்கொண்டுபோய்ச் சேர்ப்பித்துவிடுகிறார்கள்.

கிருஷ்ணதேவராயர், அவருடைய மனைவி, சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் சப்தரிஷிகள், சித்திரகுப்தர், யமன், தருமர், வியாசர் முதலியோர் பிரதிஷ்டை செய்ததாக பல சிவலிங்கங்களும், பூரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்ததாக பெரிய ஸ்படிகலிங்கமும் உள்ளது.

இத்தலம் கிரகதோஷ நிவர்த்தித் தலமாதலால், இங்கு நவக்கிரகங்கள் இல்லை. சனிபகவான் மட்டும் உள்ளார். பொங்கல் விழாவில் ஒரு நாளிலும், பெருவிழாவில் ஒரு நாளிலுமாக ஆண்டில் இரு நாள்களில் சுவாமி இம்மலையை வலம் வருகிறார்; அவ்வாறு வரும்போது மக்களும் மூவாயிரம் பேருக்குக் குறையாமல் உடன் செல்வார்களாம். இவ்வலம் காலை தொடங்கி மறுநாள் முடிவுறுமாம். சுவாமியின் திருக்கல்யாண விழாவின்போது பொது மக்கள் திரளாகக் கூடித் தத்தம் திருமணங்களைச் சந்நதியில் செய்து கொள்ளும் வழக்கம் இத்தலத்தில் உள்ளது. தட்சிண கைலாசம், அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம் என்றெல்லாம் புகழப்படும் இத்தலத்தில் பிரவேசிப்பதே முக்தி எனப்படுகிறது.

சித்தூர் மாவட்டம். ரேணிகுண்டா கூடூர் இரயில் மார்க்கத்தில் உள்ள இருப்புப்பாதை நிலையம். திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 110கி. மீ. தொலைவிலும் உள்ள சிறந்த தலம்

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘