🌎🌏🌍வைணவம் போற்றும் சைவ வேந்தன்🌎🌏🌍
🌎🌏🌍வைணவம் போற்றும் சைவ வேந்தன்🌎🌏🌍
இந்திய சரித்திரத்தில் இமயமாய் உயர்ந்து நிற்பவன் மாமன்னன் 1 அசோகன். அவனுக்கு இணையாகத் தமிழர் சரித்திரத்தில் ஒரு மன்னனைக் குறிப்பிட வேண்டுமெனில், முதலில் நிற்பவன் கோச்செங்கணான்தான். முற்காலச் சோழர்களில் முதன்மைபெற்ற புகழுக்குச் சொந்தக்காரனான கோச்செங்கட் சோழன்' எனப்படும் கோச்செங்கணானின் வீர வரலாறு, சங்ககாலப் புலவர் பொய்கையார் பாடிய, 'களவழி நாற்பது' என்னும் அற்புதமான நூலினுள் பொதிந்து கிடக்கிறது. மேலும் புறநானூற்றின் எழுபத்து நான்காம் பாடலும் இப்பெருவேந்தனின் வரலாற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
வரலாறு வாழ்த்துவதே போன்று, புராணமும் போற்றிப் புகழ்பாடும் புகழ்ச் சரிதத்திற்கு உரியவன் கோச்செங்கணான். சுபதேவச் சோழனும் கமலவதி ராணியும் பெற்றெடுத்த இந்த அருந் தவப் புதல்வனின் வரலாறுதான் திருவானைக்காவல் திருத்தலத்தின் மகிமைச் சரித்திரமாகப் போற்றப்படுகிறது. கோச்செங்கணான், சேரன் கணைக்காலனைச் சிறைப்படுத்தினான் என்பதும், அங்கு ஆவி தவிக்க அம்மன்னன் குடிநீர் கேட்க, அதைக் காவலன் தரக் காலதாமதம் செய்த சினம் தாளாமல், சேரன் கணைக்காலன் எழுதி வைத்த பாடல்தான் 'புறநானூற்றின்' எழுபத்து நான்காம் பாடல் என்பதும் அனைவரும் அறிந்த செய்திதான்.
கோச்செங்கட் சோழனின் காலத்தை கி.பி.மூன்றாம் நூற்றாண்டி. லிருந்து, ஐந்தாம் நூற்றாண்டு வரை அலசியும் நிர்ணயம் செய்ய முடியாமல் விட்டுவிடுகின்றன, வரலாற்று நூல்கள். களப்பிரர் கால இருள் கிழித்து எழுந்த இளஞ்சூரியனாகத் திகழ்கிறான் இச்சோழ மாமன்னன். சேர, சோழ, பல்லவ முக்கோண மோதல்கள் கொண்ட வரலாறு இம்மாமன்னனுடையது. இந்த வரலாறுகள் எல்லாம்ஒருபுறம் இருக்க, அசோகனைப் போற்றுகிற அளவு நாம் நிம்மாமன்னனைப் போற்ற ஏன் மறந்துபோனோம் என்பது என்றும் புரியாத புதிராக உள்ளது. "ச்சக்கரவர்த்தி, மனுநீதிச் சோழன் போன்றோரை நாம் எந்த அளவு உச்சிமீது ஏந்தி, மெச்சி மகிழ்கிறோமோ அந்த அளவு கொண்டாடத்தக்க மாமன்னன் கோச்செங்கணான் என்பதில்
எள்ளளவும் ஐயமில்லை. அவன் கீர்த்தி எவ்வகையில் குறைந்தது? ஒருவேளை நம் கோச்செங்கணான் பல போர்க்களம் கண்டவன் என்பதால் இருக்குமோ? எனில், அன்பைப் பரப்ப அவதாரம் எடுத்த வன் போன்று பேசப்படும் அசோக மாமன்னனும் புத்தன் வழியை ஏற்குமுன் கலிங்க பூமியில் களம் கண்டு, ஊழிக் கூத்தாடியவன்தானே? அம்மட் டோ... உடன் பிறந்தாருக்கெல்லாம் கொடும் கூற்றாக அவனிருந்த வரலாறும் அறிந்ததுதானே? கோச்செங்கணான் அத்தகு பிழைகள் ஏதும் இழைத்தவளில்லையே ! போரையே நீதி இலக்கணம் வழுவாமல் நடத்திய புனிதன் இவன். இதைப் பொய்கைப் புலவனின் களவழிப்பாடல் ஒவ்வொன்றும் எடுத்தியம்புகின்றது.
"சரி, போர் என்ன அன்புப் பிரசாரம் செய்யவா நிகழ்த்தப்படுகிறது?' என்று கேட்கலாம். போரும், காதலும் தமிழரின் பண்டைச் சிறப்புகளாகப் பேசப்படுவதைத்தானே அகதானூறும் புறநானூறும் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கின்றன! மேலும் போர் இருவகைப்பட்டவையாக அமைந்திருக்கின்றன. ஒன்று நாடு விரி வாக்கம் என்ற பெயரில், திரட்டிவைத்த சேனைக்குத் தீனி போட நிகழ்த்தப்படுவது. மற்றொன்று, நாட்டைக் கபளீகரம் செய்ய எண்ணிப் பாய்ந்து வரும் மாற்றான் சேனையைத் தடுத்து நிறுத்தி, தற்காப்புப் போர் தொடங்கி கொப்பளிக்கும் வீரத்தால் மாற்றானைப் புறமுதுகிட்டு ஓடஓட விரட்டுவது இதில் முதல் வகையை 'அசைவம்' எனில், அடுத்ததைச் 'சைவம்' எனலாம். போரிலும் சைவப்போர் உண்டுதான்!
இந்த இரண்டாம் வகைப் போரை நிகழ்த்தியவனாகவே சோழ மாமன்னன் கோச்செங்கணான் திகழ்ந்துள்ளான். அது மட்டுமல்லாது, போர் தொடுத்து வந்த சேரன் கணைக்காலன், மூன்று முறை தோற்றுச் சிறைப்பட்ட போதும், அவளை மன்னித்து விடுதலை செய்தான் சோழன் என்பது வரலாறு. பின்னும் அடாத செயல் செய்து, மீண்டும் தோற்றுச் சிறைப்பட்ட போதே ஆவி தவிக்க நீர்கேட்டு, அவமான முற்றுச் சிறைக்கோட்டத்தில் மடிந்தான் சேரன். அப்போது அவன் எழுதிவைத்த பாட்டுதான்:
குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
'ஆள் அன்று'' என்று வாளின் தப்பார்;
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல்கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி, வயிற்றுத் தீத்தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
சன்மரோ இவ்வுலகத்தானே?
(புறம்:74)
போரை விலக்கி, தமிழ் மன்னர்கள் நட்பால் ஒன்றி வாழத் தடம் அமைக்க எண்ணி முயன்றவன் கோச்செங்கணான். சோழ பூமியைச் சோறுடைத்த வளநாடாக மாற்ற அரும்பாடுபட்டு, காவிரிக்கு வழி கண்டும், கரை அமைத்தும், கல்லணை கட்டியும் தொண்டாற்றிய சோழகுல முன்னோர்களான கவேரனும், கரிகாலனும் சொர்க்கத் திலிருந்து வாழ்த்த, காவிரிக்கரை நெடுக எழுபது சிவாலயங்களை எழுப்பிய இணையற்ற வேந்தன் கோச்செங்கணான். அன்றைய காலகட்டத்தில் அவை, "மக்கட் பணியே மகேசன் பணி" என்று சமூக மேம்பாட்டுக்குப் பாடுபட்ட அன்பாலயங்களாகவே திகழ்ந்தன. 'அன்பே சிவம்' என்னும் கொள்கை பரப்பின. அன்று ஆலயங்களை யொட்டியே மருத்துவம் பேணும் ஆதூர சாலைகள் இருந்தன. மூலிகைச் செடிகள், மருத்துவ குணம்கொண்ட மலர்கள் நிறைந்த நந்தவனங்கள் இருந்தன. அற்றார் அழி பசி தீர்க்கும் அன்ன சத்திரங்கள்
திகழ்ந்தன. ஆலயங்களே ஊர்ப் பொதுமன்றங்களாக விளங்கின. பூர்வஜென்மப் புராணக் கதை ஒன்று, செங்கணான் யானை ஏறமுடியாத ஆலயங்களை எழுப்பியது பற்றி சுவாரஸ்யமான செய்தி ஒன்றைக் கூறுகிறது.
சுபதேவச் சோழருக்கும் பட்டத்து அரசி கமலவதி தேவியாருக்கும் நெடுநாட்கள் புத்திரப்பேறு வாய்க்கவில்லை. அவர்கள் சிவாலயங்கள் பலவற்றைத் தரிசித்துப் புண்ணிய நதிகளில் நீராடி வந்து, விரதங்கள் பல இருந்தனர். பிறகு கமலவதி தேவியார் கருவுற்றார். பிரசவ காலமும் தெருங்கிற்று. சோழநாட்டுச் சோதிடர்கள் சிலர், ஒரு குறிப்பிட்ட நல்லோரை பற்றிக்கூறி, அவ்வேளையில் மகவு ஜனனம் எய்தினால், உலகம் போற்றும் உன்னதச் செயல்கள் புரிந்து, மாவீரராகத் திகழ்ந்து, சோழர் குடிக்கே பெருமை சேர்ப்பார் என்றும், அதற்கு முன்னும் பின்னும் அமைத்துள்ள ஓரைகள் அவ்வளவு சிறப்பானவை அல்ல என்பதோடு, தீங்கு விளைவிப்பதாகவும் இருப்பதாக உரைத்தனர்.
கணிப்பில் வல்லவர்களான அச்சோதிடர்கள் கூறிய நல்லோரை யிலேயே பிரசவம் நிகழவேண்டும் என்பதற்காகச் சோழ மகாராணி, பிரசவ வலி ஏற்பட்டதும் தம்மைத் தூக்கித் தலைகீழாகக்கட்டித் தொங்க விட உத்தரவிட்டார். பணிப் பெண்களும் அவ்வாறே செய்த னர். குறிப் பிட்ட 'நல்லோரை' வந்ததும் சோழராணி தரையில் இறக்கி விடப் பட்டார். உடனே சோழகுமாரன் பிறந்தான். அக்குழந்தை விழிகளைத் திறந்ததும் கண்ட மகாராணி திடுக்கிட்டார். காரணம், குழந்தையின் கண்கள் கோவைப் பழங்கள் போன்று சிவந்து காணப் பட்டன. 'என் கோ செங்கண்ணனோ?' என்ற ராணி, தலைகீழாகக் கட்டித் தொங்க விடப்பட்டதன் விளைவு அது என்பதையும் உணர்ந்தான். ஆயினும்,சோழநாட்டை ஏன் தமிழ் நிலத்தையே கப்பிக் கிடக்கும் களப்பிரக் கலியிருளைப் போக்க வந்த கருணைத் தீபங்கள் இக்கண் 'கள்' எனக் கூறி, மகிழவும் செய்தார்.” கோச்செங்கணானின் முற்பிறப்பு பற்றி, பெரிய புராணம் எழுதிய
சேக்கிழார் ஒரு கதையைக் குறிப்பிடுகிறார். காவிரி நதி இரண்டாகப் பிரிந்து, ஒருபுறம் காவிரியாகவும் இன்னொரு புறம் கொள்ளிடமாகவும் ஓட, இடைப்பட்ட அழகிய தீவினில் முன்னொரு காலத்தில் வெண்ணாவல் மரம் ஒன்றின் கீழே ஒரு சிவலிங்கம் இருந்தது.யானை ஒன்று தினமும் தன் துதிக்கையில் காவிரி நீரை உறிஞ்சி வந்து, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும். பிறகு மலர்களைப் பறித்துப் போட்டு பக்தியுடன் வழிபடும். நாவல் மரத்தின் மீதிருந்த சிலந்தி ஒன்றிற்கு இது பிடிக்கவில்லை. ஒட்டடை படிந்த இடத்தைப் பாழ டைந்த இடம் என்றல்லவா சொல்வார்கள் ? இறைவன் இருக்குமிடம் தூய்மையாக இருக்க வேண்டுமல்லவா? எனவே தினமும் அது அச்சிலந்தி வலையை அகற்றிவிட்டே தன் வழிபாட்டை நிகழ்த்தும்.
இந்த பக்தி யுத்தம் தினம்தோறும் நடந்துவந்தது. சிலந்திக்கு யானை மீது கோபம் வந்தது. ஒரு நாள் அது யானையின் துதிக்கைக் குள் புகுந்து கடித்து இம்சை செய்தது. வலியால் துடித்த யானை, தன் துதிக்கையைத் தரையில் ஓங்கி ஓங்கி அடித்தது. விளைவு, சிலந்தி மாண்டது. அது கடித்த நஞ்சு பரவியதால் அடுத்த சில கணங்களில் யானையும் மாண்டது. இறைவன் இந்த இரு ஜீவன்களின் பக்தியை யும் மெச்சி, யானைக்கு உடனே சிவபதம் அளித்தார். சிலந்திக்கு, "நீ எனக்கு ஆலயம் எழுப்ப ஆசைப்பட்டு அது நிறைவேறாத சினத் தில் தினமும் வருந்திக் கிடந்ததால், சோழ மன்னனாகப் பிறந்து, உன் ஆசைதீரச் சிவாலயங்களை எழுப்பியபின் சிவபதம் அடைவாய்' என்று கூறி, அருள்புரிந்தார்.
அச்சிலந்திதான் நம் கோச்செங்கட் சோழ மன்னனாகப் பிறப் பெடுத்தது. அவருக்குப் பூர்வ ஜென்ம வாசனையால் இப்போதும் யானைகள் மீது கோபம் இருந்தது. எந்த யானையும் ஏறமுடியாதபடி மாபெரும் மாடக் கோயில்களாக அமைத்தார். திருவானைக்கா முதல் திருஅம்பர்வரை காவிரிக்கரை நெடுக எழுபது சிவாலயங்களை எழுப்பிய இம்மாமன்னனை,
இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோளீசற்கு
எழில்மாடம் எழுபது செய்துலகமாண்ட திருக்குலத்து வளச்சோழன்'
என்று திருமங்கையாழ்வார், தம் பாசுரங்களில் குறிப்பிடுகின்றார். செங்கணான் பிறவிச்சைவன் என்றபோதிலும், எட்டுத் திருமால் ஆலயங்களையும் எழுப்பியுள்ளான் என்பது வரலாறு. அதனால்தான் திருமங்கையாழ்வார்' இம்மாமன்னனை, 'செம்பியன் கோச்செங்கணான், கோச்சோழன், தென்றமிழன் வடபுலக்கோன்சோழன், தென்னாடன் குடகொங்கன், தெய்வ வாள் வலங்கொண்ட சோழன்' என்றெல்லாம் புகழ் பாடிப் பரவசப்படுகின்றார். செங்கணானின் போராற்றல் பற்றியும், 'விறல் மன்னர் திறல் ஒழிய வெம்மாவுய்த்த செங்கணான் என்றும், படை மன்னர் உடல் துணியப் பரிமாவுய்த்த தேராளன்' என்றும் கூறுகிறார். 'களவழிக் கவிதை பொய்கை உரைசெய்ய உதியன்
கால்வழித் தளைவெட்டி அரசிட்ட பரிசும்’
என்று கலிங்கத்துப்பரணி போற்றுகிறது. இன்னும் விக்கிரமசோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராஜராஜசோழனுலா போன்ற இலங்கியங்களும் கோச்செங்செங்கணான் புகழைப் பாடிப் பரவுகின்றன.
எதிரியை மிகக் கடுமையான போரில் வென்று சிறைப்படுத்தி, ஒரு தமிழ்ப் புலவனின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து, மும்முறை விடுதலை செய்த இம்மாமன்னனின் பண்பை எண்ணுகையில் தேகம் சிலிர்க்கிறது. காவிரிக்கரை நெடுக இவன் சிவ-வைணவ ஆலயங்களை எழுப்பியதன் காரணம், ஆன்மிக நோக்கு மட்டுமல்ல. காவிரியில் வெள்ளம் வந்து அடிக்கடி சோழநாட்டு மக்கள் இன்னலுற்றனர். வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு விடும். மக்களும் பலியாக நேரும். அதுபோன்ற வெள்ளக் காலங்களில் மக்கள் பாதுகாப்பாக வந்து தங்கு புகலிடங்களாகவும் பயன்படும் நோக்கிலேயே இச்சோழ மாமன்னன் தான் எழுப்பிய ஆலயங்களை மாடக்கோயில்களாக அமைத்துள்ளான். கஜபிருஷ்டம், தூங்கானை மாடம் என்றெல்லாம் இந்த ஆலயக் கட்டுமானத்திற்குப் பெயர் சொல்லப்படுகின்றன. ஒரு பிரமாண்டமான யானை படுத்திருப்பது போன்று தோற்றமளிக்குமாம் இத்திருக்கோயில்கள். இதுவும் பூர்வ ஜென்ம வாசனைதானோ என்னவோ? சிவபூஜை செய்த அந்த யானையாகப் பெயர் விளங்குமாறும் தன் கோயில்களில் வழிகண்டிருக்கிறான் கோச்செங்கணான்.
இவனுடைய வீரநெஞ்சும், ஈரநெஞ்சும் ஆயிரம் காவியங்களில் போற்றத்தக்க பெருமையுடையவை என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்கவியலாது. இவன் மட்டும் வடக்கே பிறந்திருந்தால், அசோக சக்கரவர்த்தி, கனிஷ்கன், ஹர்ஷன் போன்ற மாமன்னர்களுக்கு இணையாகப் போற்றப்பட்டிருப்பான்.
அரசர்கள் வளர்த்தஆன்மிகம்
ஓம்..
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக